Apr 8, 2013

நீயா நானா – பயம் பார்ட் - ஒண்.




வாரா வாரம் நீயா நானா பாக்கலைனா அந்த வாரமே முழுமை பெறாது எனக்கு . சில சமயம் சூப்பராகவும் , சில சமயம் சூர மொக்கையாவும் இருக்கும் . அந்தவகையில் போனவாரம் சூப்பர் எபிசோடு.

பயந்த சுபாவம் கொண்ட ஆண்களும் , தைரியமான சுபாவம் கொண்ட பெண்களும்  பரஸ்பரம் விவாதித்துக்கொண்டார்கள் . பொதுவாகவே நீயா நானாவில் பெண்களின் வாய்(ஸ்) தான் ஓங்கியிருக்கும் . இந்த வாரமோ, பயந்த சுபாவம் கொண்ட ஆண்கள் .. யார் அசத்தியிருப்பாங்கன்னு சொல்லவும் வேணுமா என்ன ....?

நிகழ்ச்சியில்,  நிறைய “அம்பிகளை” பார்க்க முடிந்த அதே சமயம் நிறைய “சொர்ணாக்காக்களை”யும் பார்க்க முடிந்தது . நிகழ்ச்சி முழுவதும் நிறைய சுவராஸ்யங்கள் , சும்மா அதகளம் பண்ணிவிட்டார்கள்  . சிறப்பு விருந்தினராக வந்திருந்த “திருநங்கை” யின் பேச்சு அவ்வளவு சிறப்பு . சிரிக்க சிரிக்க அவர்களின் வலியை சொன்னார் . யூ டியூபில் ய்ப்பாருங்கள் . அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய பகுதி.

ஆண்கள் உங்கள் பயத்தை சொல்லுங்கள், என்று கோபி கேட்டதற்கு கூட பயந்து பம்முகிறார்கள் என் சகோக்கள் . அவர் அங்கு கேட்டுக்கொண்டிருக்கும் போதே, நான் என் பயத்தை பட்டியலிட்டு கொண்டிருந்தேன் . என்னோட பட்டியல படிச்சு பாத்தாவே, பயமா இருக்கு . ஆக்சுவலா விஜய் டிவி காரங்க என்னையதான் குண்டுக்கட்டா கட்டி தூக்கி போயி பேச விட்ருக்கணும் , மிஸ் பண்ணிட்டாங்க .

சரி வாங்க பாக்கலாம் என்னோட பயப்பட்டியல :

லிப்ட் பயம் , எஸ்க்லேட்டேர் பயம் , ஏரோபிளேன் பயம் , ஆட்டோமேட்டிக் செக்போஸ்ட் பயம் , கடல்ல முங்கி குளிப்பது பயம் , மொட்ட மாடி பயம் , ரோலர் கோஸ்டர் பயம், செயின்ட் வீல் பயம் , பேய் படம் பயம் , நடு ராத்திரி போன் அழைப்பு பயம் , டாக்டர் பயம் , லேப் டெஸ்ட் ரிசல்ட் பயம், காரில் முன் சீட்டு பயணம் பயம் , டூ வீலரில் பின் சீட்டு பயணம் பயம் , கியாஸ் பயம், பெண்களிடம் பேசுவது பயம், ட்ரைன் பாத்ரூம் பயம் , சண்டை பயம், மேடைப்பேச்சு பயம்,
சலூனில் ட்ரிம் பண்ணுவது பயம் ... பயம் ...பயம் ...பயம் ....!

என்ன ...? பயந்தீங்களா ...சாரி படிச்சீங்களா ...? “தெனாலி” பயத்தவிட பெருசா இருக்கா ? இது சும்மா ட்ரைலர் தான் ..மெயின் பிச்சர்ல இதவிட பெரிய பயம்லாம்  இருக்கு .! இதுலென்ன பயப்புடுறதுக்கு இருக்குன்னு நீங்க கேக்கலாம் .... மேல படிங்க பாஸ்  ....!

லிப்ட் பயம் :

தனியா லிப்ட் ல போயிட்டு இருக்கும் போது நடு வழில லிப்ட் ரிப்பேர் ஆகிடுச்சுன்னா ...? கரண்ட் கட்டாகிடுச்சுன்னா ? ஆத்தாடி நெனச்சுப்பாத்தாவே குப்புன்னு வேர்த்துக்கொட்டுது . எப்பவுமே கூட்டத்தோடதான் லிப்ட்ல ஏறுவேன் , இல்லாட்டி “டிரைவர்” இருக்குற லிப்டா பாத்துதான் ஏறுவேன் . ரெண்டுமே இல்லனா இருக்கவே இருக்கு நடராஜா சர்வீஸ் . படி..படி..படியா ஏறிடுவேன் அது ஏழு மாடியாவே இருந்தாலும் . 


எஸ்க்லேட்டேர் பயம் :

நாலு வருசத்துக்கு முன்னாடி பெங்களூர்ல , மொத மொதல்ல நான்  எஸ்கலேட்டர் ஏறுனத , நீங்க பாத்ருந்தீங்கன்னா இன்னைக்கு வரைக்கும் நெனச்சு , நெனச்சு சிரிச்சுருப்பீங்க . ஒரு கால மேல் படியிலயும் , இன்னொரு கால கீழ் படியிலையும் வச்சுகிட்டு நான் “பப்பரபான்னு” போனத பாத்து பின்னாடி வந்த பொண்ணுங்கல்லாம் குய்யோ முறையோன்னு சிரிச்சாங்க . ஒரே கேவலமா  போச்சு . இப்பகூட மாலுக்கு போனா , யார்கூட போறனோ அவங்க கைய நல்லா உடும்பு மாதிரி பிடிச்சுட்டு தான் ஏறுவேன் . தனியா போனா சுத்தி முத்தும் பாப்பேன், யாரும் என்ன பாக்குறாங்கலான்னு , குறிப்பா பொண்ணுங்க . யாரும் பாக்கலைங்குறத உறுதிப்படுத்திட்டு தான் ஏறவே ஆரம்பிப்பேன் . அப்பக்கூட ஏதாவது ஒரு புளோர்ல , ஏதாவது செல்போன் ரிங்டோன்  சிரிச்சாக்கூட, என்ன பாத்து யாரோ ஒரு பொண்ணு சிரிக்கிற மாதிரியே ஒரு பீலிங் .

ஏரோபிளேன் பயம் :

பஸ்லயோ , டிரைன்லையோ போகும்போது ஜன்னல் வழியா முழு தலையையும் வெளிய நீட்டி எட்டி பாக்குற மாதிரி, ஏரோபிளைன்லையும் எட்டி பாத்தா என்னாகும்னு என்னோட நண்பேன்டாகிட்ட கேட்டேன் . அதுக்கு அவன் காட்டுன காட்டு இன்னவரைக்கும் பயமா இருக்கு .

ஆட்டோமேட்டிக் செக்போஸ்ட் பயம் :

எங்க கம்பெனில மொத்தம் ரெண்டு கேட்டு அன்ட் ரெண்டு செக் போஸ்டு . உள்ள போறதா இருந்தாலும் சரி வெளிய போறதானாலும் சரி . ரெண்டு செக்போஸ்டையும் தாண்டி தான் போகணும் . ரெண்டுமே தானியங்கி . ஒவ்வொருமொற செக் போஸ்ட்ட கடக்கும் போதும் ஒரு பயம் இருந்துட்டே இருக்கும் . படார்னு தலையில விழுந்துட்டா..? செக்யூரிட்டி வேற அவர் பங்குக்கு பீதிய கெளப்பி விட்டுருந்தாரு தானியங்கி அடிக்கடி ரிப்பேராகிடுதுன்னு . டூ வீலர்ல  செக்போஸ்டை கடக்கும் ஒவ்வொருமுறையும் கண்ண மூடிட்டு அன்னிச்சையாகவே ஆக்சிலேட்டர அழுத்து அழுத்துன்னு அழுத்திடுவேன் . ஒரு மொற ஜெனரல் மேனஜோரோட கார்ல செக் போஸ்ட்ட கடக்கும்போது , நா கண்ண மூடுனத கவனிச்சுட்டார் மேனேஜர் . என்னடா பண்ற..? ன்னு கேட்டார் . இல்ல சார் செக் போஸ்ட்ட தாண்டும்போது , போஸ்ட் தலைல  விழுந்துடுமோன்னு பயமா இருக்கு அதான்னேன் . சும்மா இடி இடின்னு சிரிச்சுட்டு.... மீ டூ ......ன்னு சொன்னாரு பாருங்க அய்யோ அய்யோ...!. அது என்னமோ தெரியலங்க நமக்கு இருக்க பலவீனமோ , பயமோ , நோயோ இன்னொருத்தருக்கும் இருக்குன்னு தெரிஞ்சா அப்டி ஒரு ஒரு இனம் புரியாத சந்தோசம் வந்துடுது எனக்கு .

கடல்ல முங்கி குளிப்பது பயம் :

எனக்கு கல்யாணமே வரமாடிங்குதுன்னு சொல்லி, எங்கம்மா ஜோசியம் பாத்துருக்காங்க . ஜோசியக்காறார் இன்னா சொல்லிருக்காரு ... ஒன்னும் கவலைபடாதீங்க, பய புள்ளய கூட்டிக்கினு போயி ராமேஸ்வரம் கடல்ல முங்கி எந்திரிங்க எல்லாம் கூடி வந்துரும்னு . ( அப்ப முங்குனதுதான் இன்னும்...! ) “சுப்ரீம் கோர்ட்டு சொன்னாகூட எங்கம்மா கேக்காது ஆனா ஜோசியக்காரர் சொன்னா ஒடனே கேட்டுடும்” , மறுபேச்சே கெடையாது. அப்றமென்ன பய(ண)ம் தான் . கடல் தீர்த்தத்துல (?) போயி முங்குற மாதிரி போங்கு காமிச்சுக்கிட்டு இருந்தேன். எங்கம்மா பாத்துடுச்சு , பொளேர்னு  பொடரிலேயே தட்டி , நல்லா முடிய புடிச்சு முங்கி , முங்கி எடுத்துச்சு பாருங்க . முங்குன முங்குல மூச்சு தெணறி , தண்ணியே சூடகிடுச்சு . ஆத்தாடி தண்ணிக்குள்ள அமுக்கி கொல்லவுள்ள போகுது ஆத்தான்னு பயந்துட்டு அப்டியே  புடிச்சு தள்ளிவிட்டுட்டு கரைக்கு ஒடியாந்துட்டேன் . இப்பகூட எங்கயாவது தண்ணில முங்குனா , சூசைட் அட்டன்ட் பண்ணிக்கபோற மாதிரியே ஒரு பீலிங் .

மொட்ட மாடி பயம் :

நாலஞ்சு மாடியெல்லாம் ஏறனும்னு அவசியமில்ல , ஒரு ரெண்டு மாடி இருக்குற பில்டிங் உச்சில ஏறி, அப்டிக்கா ஓரமா வந்து கீழ எட்டி பாத்தேன்னு வைங்க ....சும்மா கால் ரெண்டும் கதகளி ஆடும். இதுக்காகவே கட்டசுவரு இருக்குற மொட்டமாடின்னா ஒரே ஓட்டம் தான் அந்த ஏரியா பக்கமே “கால் வச்சு படுக்குறதில்ல” . அப்டியொரு  அலர்ஜி .

ரோலர் கோஸ்டர் & செயின்ட் வீல் பயம் :

சின்ன வயசுல ஒரு மொற செயின்ட் வீல் ஏறினது இன்னும் ஞாபகம் இருக்கு . செயின்ட் வீலவிட நா தான் அதிகமா கத்துனேன் வீல் ..வீல்ன்னு ..! நா கதறுன கதறுல. பாதிலேயே நிறுத்தி எறக்கி விட்டுடாய்ங்க . நாலு வருசத்துக்கு முன்னாடி கூட , ஆபிஸ்ல இருந்து வீகாலேன்ட் டூர் கூட்டிட்டு போறோம்னு சர்க்குலர் வந்துச்சு . மலையாள “நன்பேண்டா சேட்டன்ட்ட” கேட்டேன் , ஏன்யா வீகாலேண்ட்ல இன்னாயா இருக்கும்னு ...... . அட உனக்கு தெரியாதா .. ? அடிபொலியுமாக்கும் . எனக்கு வளர இஸ்டம்மான ஸ்தலமாக்கும் . அவ்விட இருக்குற பெரிய ராட்டினத்துல ஏறி  அப்டியே தலகீழா பாத்தா அய்யோடா ... மொத்த கேரளாவும், சொர்க்கமா தெரியுமாக்கும்..! ங்கொய்யால சேட்டனோட எக்ஸ்பிரசனையும் , ராட்டினத்தையும் கேட்ட மாத்திரத்தில எனக்கு மூ.......ரமே வந்துடுச்சு . தலகீழா பாத்தா மொத்த கேரளாவும் சொர்க்கமா தெரியுமா ? நேரா பாத்தாவே எனக்கு நரகமே தெரியும்டா ன்னு சொல்லிட்டு, வீகாலேன்ட் டூரே போகல. விடுப்பெடுத்து வீட்டுல ரூம் போட்டு திட்டுனேன், டூர் ஸ்பாட்டா பிக்ஸ் பண்ணுனவய்ங்கள .

பேய் படம் பயம் :

காஞ்சனா படத்தையே நா கண்ண மூடிட்டு தான் பார்த்தேன்னா பாத்துக்கங்களேன். ஈரம் படம் பாத்து ஈரக்கொலையே நடுங்கிடுத்து . தமிழ் படத்துக்கே இப்டின்னா ,ஹாலிவுட்டுக்கு..? சான்சே இல்ல  இன்னவரைக்கும் ஒரு இங்கிலீஸ் ஹாரர் படம் கூட பாத்ததுல்ல. ஏலியன் பட போஸ்டர பாத்ததுக்கே காய்ச்சல் வந்துடுச்சு .

நடு ராத்திரி போன் அழைப்பு பயம் :

நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது , தந்தி வந்தா எங்க வீடே பீதில ஒறஞ்சு போயிடும் என்னமோ ஏதோன்னு . இப்ப தந்தி எல்லாம் எங்க..? எல்லாமே போன்தானே . நைட்டு நல்லா தூங்கிட்டு இருக்கும்போது பன்னெண்டு  ,ஒரு மணி வாக்குல  என்னமோ ஏதோன்னு ...செல்லு ரிங்காச்சுன்னா ... என்னமோ...!. ஏதோன்னு...! கலவரமாகி, வாரிச்சுருட்டி எந்திரிச்சு ஒரு படப்பிடிப்போட தான் போன எடுப்பேன் . அதுவும் அப்பா , அம்மா இருக்குற கிராமத்துலருந்து போன் வந்தா பீதிக்கு சொல்லவே வேண்டம் .

  
டாக்டர் பயம் :

எதுன்னா ஒடம்பு சரியில்லாம போச்சுன்னா அவ்ளோதான் , வராத  சிம்ப்டம்ஸ வந்ததா நெனச்சு   “கூகுள் கூகுள்” பண்ண ஆரம்பிச்சுடுவேன்  . அதுல எதாவது ஒன்ன படிச்சு , அந்த நோய் தான் வந்திருக்குன்னு பலமா நம்பவே ஆரம்பிச்சுடுவேன் . அப்றமென்ன தமிழ் சினிமா கதாநாயகன் ரேஞ்சுக்கு சோக கீதமா பாடிதிரிவேன் . ஒரு கட்டத்துக்கு மேல என்னோட இன்சை தாங்கமா ஆஸ்பத்திரிக்கு கூட்டினு போயிடுவாங்க . டாக்டருக்காக ஆஸ்பத்திரியில் காத்திருக்கிறதும் , முடிவெட்டுவதற்காக சலூனில் காத்திருப்பதும் எவ்வளவு பெரிய கொடும தெரியுமா ...? டாக்டர் என்ன சொல்ல போறாரோ ன்னு அதுக்கும் ஒரு பயம் . டாக்டர செக் பண்ணி பாத்துட்டு , ஒன்னும் இல்ல , “ஹி இஸ் ஆள் ரைட்டுன்னு” சொல்லுவாரு . ஒடனே சந்தோசமாகிடும். ஆனா எதுக்கும் ஒரு “பிளட் டெஸ்ட்” எடுத்து பாத்திரலாம்னு ஒரு செக்க வப்பாரு பாருங்க . போன செகண்ட்ல இருந்த சந்தோசம்  இப்ப சந்”தோஷம்” ஆகிடும் .

லேப் டெஸ்ட் ரிசல்ட் பயம் :

பதினாலு மணிநேரம் பச்ச தண்ணி கூட குடிக்காம பட்டினி கெடந்து , காலங் காத்தால லேபுக்கு போனா , கொள்ள காச வாங்கிகிட்டு மனசாட்சியே இல்லாம ரத்தத்த உறிஞ்சிப்புடுவாங்க . ரிசல்ட் சாயங்காலம் . போர்டு எக்ஸாம் ரிசல்ட்டு கூட இவ்வளவு பயமுறுத்தாது . ஆனா லேப் டேஸ்ட்டு பயமுறுத்தும் . ரிசல்ட் பாசிட்டிவ்னு சொன்னா பயப்புடனும் , நெகட்டிவ்னு சொன்னா சந்தோசப்படனும் என்னேவொரு முரண்பாடு . உங்களுக்கு ஒன்னும் இல்லா “எவ்ரிதிங் இஸ் ஃபைன் அப்டிங்குற” நர்ஸ் கொரல கேட்டதுக்கப்புறம் தான் தொண்டக்குழியில எச்சியே எறங்கி என் கொரலே வெளில வரும் . நா நல்லாருக்கோம்ங்க்குற சந்தோசம் கொஞ்ச நேரந்தான் . அதுக்கப்புறம் ? ச்சே ..இம்புட்டு காச கொடுத்து , பத்தாததுக்கு ரத்தத்தையும் கொடுத்து கடசில ஒன்னுமில்ல எல்லாம் நல்லாருக்குன்னுட்டாயங்களே , அம்புட்டும் வேஸ்டா போச்சே , அட்லீஸ்ட் எதுனா ஒன்னு கூட கொறைய இருந்துருக்கலமோன்னு மனஸ் அடிச்சுக்குது .

  
யப்பா எழுதுனத படிச்சு பாத்தாவே பயமா இருக்கு . இன்னைக்கு போதுங்க ...முடியல..! “பாக்கி பயத்த” அடுத்த பதிவுல பாக்கலாம் ....! அதுவர இந்த வீடியோவ பாருங்க .





நீயா நானா – பயம் பார்ட் டூ  - விரை....”வீல்:.......!


21 comments:

  1. பயத்தோட பட்டியல் ரொம்ப நீளமாத்தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கேவா இன்னும் இருக்கு பாஸ் .

      Delete
  2. பயப்பட்டியல் பயமுறுத்தியது
    ஆனாலும் சொல்லிச் சென்ற விதம் சுவாரஸ்யம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரசிக்க வைக்கும் எழுத்து நடை...

    எத்தனை எத்தனை...? ஆனா இப்படி சொல்கிறவர்கள் யாரும் பயப்படுவதில்லை... முந்தைய பதிவை விட "சிறந்த பயம்" உண்டோ...? (விட மாட்டாங்க போல...!) ஹிஹி...

    இன்னொரு பதிவு கூட உண்டா...? தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. // ரசிக்க வைக்கும் எழுத்து நடை... //

      அப்டியா சொல்றீங்க ...வஞ்சப்புகழ்ச்சியில்லையே.. ?

      Delete
  4. ஒரு தடவை மதுரை பொருட்காட்சியில மெகா சைஸ் சைக்கிள் டயர் மாதிரி இருந்த ராட்டினத்துல ஏத்தி விட்டுட்டாங்க. மேல போகும்போது அந்த தொட்டில் கழண்டு நம்மைத் தூக்கி வீசிருச்சுன்னா என்னாவறதுன்னு ஒரே பயம். லைஃப்ல அதுக்கப்புறம் அந்த வீலைப் பாத்தாலே ‘வீல்’னு கத்திட்டு ஓடிருவேன். இப்பவும் பேருந்துப் பயணங்கள்ல ‘எங்கேயும் எப்போதும்’ மாதிரி ஆகாம போய்ச் சேரணுமேன்னு தூக்கமே இல்லாம பயந்து பயந்துதான் போறேன். உயரமான கட்டிடங்கள்லருந்து கீழ பாத்தா, நாம விழுந்தா எலும்பும் மிஞ்சாதேன்னு நினைச்சாலே பயம்....

    எத்தனை என்கிட்டயும் ஸ்டாக் இருக்கு தம்பி...! நீங்க தைரியமா பயப்படறியள். நான் பயந்துக்கிட்டே பயப்படறேன். ஹி... ஹி...!

    ReplyDelete
    Replies
    1. // நீங்க தைரியமா பயப்படறியள். நான் பயந்துக்கிட்டே பயப்படறேன். ஹி... ஹி...!// haa ha haa

      Delete
    2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ....!

      எதுக்குடா இப்பூடி சிரிக்கிற ன்னு தானே கேக்குறீங்க .... ஒண்ணுமில்ல பாலகனேஷ் அண்ணன் ‘வீல்’னு கத்திட்டு ஓடுறத கரப்பான பண்ணி பாத்தேன் அதான் ... சி(ரி)ப்பு சி(ரி)ப்பா வருது ....!

      Delete
  5. ரொம்பத்தான் பீதியை கிளப்புரீங்க ...

    ReplyDelete
  6. எனக்குகூட ஒரு பயம் இருக்குது காலையில 9 மனியில் இருந்து சாயந்திரம் 5 மனி வரைக்கும் என் மொபைல் போன் மட்டும் ரிங்கடிச்சாலே பயம். ஒரு தடவ கால் எடுக்காததுக்கே why not i terminate you for not attending customer call அப்படினு mail அனுப்பிட்டான் அந்த HR.

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா சந்தோசமா இருக்கு . நம்மல மாதிரியும் நாலு பேரு இருக்குறத நெனச்சா ...

      Delete
  7. // படி..படி..படியா ஏறிடுவேன்//
    // ஜோசியக்காரர் சொன்னா ஒடனே கேட்டுடும்”//
    //மூ.......ரமே வந்துடுச்சு//

    ஹா ஹா ஹா செம...நல்லாத் தான் பயபடுறீங்க... இந்த எல்லாமே சென்னையில அதிகமா இருக்கு.. சீக்கிரம் சென்னைக்கு வாங்க மொத்த பயத்தையும் போக வச்சிரலாம்

    ReplyDelete
    Replies
    1. // மொத்த பயத்தையும் போக வச்சிரலாம்//

      பேயி வெரட்டுற மாதிரி பயம் வெரட்டுவீங்களோ.

      Delete
  8. யாத்தி படிச்சு முடிக்கவே பயமா இருக்கு
    நாடி கவிதைகள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க . கொஞ்சம் நாடி புடிச்சு பாருங்க பாஸ் .

      Delete
  9. பய புராணம் படித்தேன்! பலது நானும் பயப்படுவதுதான்! சுவாரஸ்யமான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. யூ டூ ....! ஹைய்யா ஹேப்பி ஹேப்பி ....! சேம் பிளட் குரூப் .

      Delete

Related Posts with Thumbnails