Nov 28, 2013

நிலாச்சோறு – பதிவர் சந்திப்பு , நான் ஈ , பண்ணையார் & பத்மினி - இசை , டிக்கெட் & ட்வீட் .

பதிவர் சந்திப்பு :

INDIBLOGGERS அமைப்பின் மூலம் கோவையில், கோவை வாழ் பதிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். நிகழ் தேதி – 15.12.2013 . நிகழ்விடம் – கோவை – ஆர்.எஸ்.புரம். மேலதிக தகவல்களுக்கு .. http://www.indiblogger.in/bloggermeet.php?id=237.

மேற்படி நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவுமில்லை . ஆனால், முன் கூட்டியே இருக்கையை உறுதி செய்யவேண்டும் . நானும் ஒரு துண்டு போட்டிருக்கிறேன்  J .

சினிமா

திரைப்படங்களில், சாகடிக்கப்பதற்காகவே சில கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கும் . முறையே நம்மையும் , சமயங்களில் அந்த கதாபாத்திரத்தையும்.  முதல் வகையை தவிர்த்து இரண்டாம் வகையில் சாகடிக்கப்படும் (கதையின் திருப்பத்திற்காக) கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நம்மை சலனப்படுத்துவதில்லை . ஆனால் , ஒரு சில படங்களின் ஒரு சில சாகடிப்புகள் மட்டும் என்னவோ செய்துவிடும் , எவ்வளவு நாட்களாயினும்  ....! சமீப காலங்களில் அப்படி சலனப்படுத்திய  இரண்டு கதாபத்திரங்கள்  ...

“கோ” படத்தில் பியாவின் சாகடிப்பு – அழுகாச்சியே வந்துடுச்சு ... பாதிலேயே எழுந்து வந்துடலாமான்னுகூட யோசிச்சேன் ....!

மற்றொன்று,

“நான் ஈ” படத்தில் “நானி”யின் சாகடிப்பு – “நான் ஈ” படக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் ஒரே ஒரு எண்ணம் தான் தோன்றும் ....

“நானி”யை சாகடிக்காம அப்படியே ஒரு அழகான காதல் கதையாவே சொல்லியிருக்கலாமே......?


இசை  :

பண்ணையாரும் பத்மினியும் – இரண்டு நாட்களாக கணினியில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது . ஜி.வி.பி , அனிருத் வரிசையில் அடுத்த இசைப்பாலகன் – ஜஸ்டின் பிரபாகரன் . படத்தின் தளத்திற்கும் , படம் நடக்கும் காலத்திற்கும் JUSTICE பண்ணியிருக்கிறார் என்றே தோன்றுகின்றது . பாடல்கள் எல்லாம் அருமை . VINTAGE FEEL SONGS ...!

பிரபாகரனின் குரல், யுவனை நினைவுபடுத்துவதாக பேச்சு – அப்படித்தான் படுத்துகிறது நேக்கும்   . “எங்க ஊரு வண்டியை” SUPER SINGER JUNIORS ஓட்டியிருக்கிறார்கள் – அருமையான பயணம்  . மற்ற அனைத்துப் பாடல்களுக்கும் பெண் பாடகர்களின் குரல் தேர்வு வெகு பொருத்தம் . பாடல் வரிகள் வாலிபக் கவிஞர் .

என் விருப்பப் பாடல் – ஒனக்காக பொறந்தேனே ...!

விமர்சகர் ஆவியின் பார்வையில் பண்ணையாரும் பத்மினியும் - இங்கே

டிக்கெட் டிக்கெட் ...!

தொடர்வண்டியில் இதுநாள் வரை முன்பதிவு செய்து, “படுத்து”க்கொண்டு பயணித்ததே இல்லை . ALWAYS UNRESERVED தான் .வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்ற போனவாரம் ஒரு வாய்ப்பு . வெகு சிரமப்பட்டு irctc யில் கணக்கு துவங்கி , முன்பதிவும் செய்தேன் . பெருமை பீற்றிக்கொண்டிருக்கும்பொழுது நண்பர் போட்டார் தண்டவாளத்தில் குண்டை . நான் பதிவு செய்திருப்பது RLWL லாம். அதாகப்பட்டது , REMOTE LOCATION WAITING LIST . ரயில்வே பட்ஜெட்டுல நாற்பது ரயில் தமிழ்நாட்டிற்கு விட்டிருக்கிறார்கள் என்றால் கூட நம்பலாம் ஆனால் RLWL சீட்டு உறுதியாகும் என்று நம்பிடாதப்பா ... சாமி சத்தியமா உனக்கு உறுதியாகாது இருக்கை ன்னு சொல்லிட்டு போயிட்டார் . வேறென்ன நண்பர் சொன்னதே நடந்தது . ரத்து செய்த மூன்று நாட்களில் பணம் திருப்பி தரப்பட்டது, ரூபாய் நூறு பிடித்தத்தோடு  .  PRACTICE MAKES A MAN PERFECT...! வேற எப்பூடி சப்பகட்டுறது ...!


பிளாக்குல ட்வீட்டு

ஆயிரத்தெட்டு வசதிகள் இருந்தாலும் APARTMENT ல் குடியிருப்பது LODGE ல் குடியிருப்பதுபோலவே இருக்கிறது   // வாழ்வைத் தொலைத்து பிழைப்பைத் தேடுபவன் L //


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
Nov 26, 2013

நிலாச்சோறு – விஜய் TV , டவுட்டு , ட்வீட்டு , ஜன்னல் ஓரம் .
விஜய் TV
  
கனெக்க்ஷன்ஸ்

விஜய் டிவியின் மற்றுமொரு புது ஷோ – “கனெக்க்ஷன்ஸ்” . “நண்டு ஜெகன்” தொகுத்து வழங்குகிறார் . FUN SHOW ன்னு PROMOTE பண்ணுனாலும், நம்மோட Grasping power க்கு சவால் விடும்  நிகழ்ச்சி . பெரும்பாலும் பித்தளை/ அலுமினியத்திரை பிரபலங்கள் தான் பங்கேற்பாளர்கள். போலவே சரிபாதி கேள்விகள் திரைப்படங்கள் சார்ந்ததே . ஆனாலும் சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்ச்சி. குழந்தைகளைக் கூட பார்க்கச்சொல்லலாம் .

உதாரணத்திற்கு மூன்று கேள்விகள் .

1.அடுத்தடுத்து இரண்டு சொட்டைத்தலையர்களின் புகைப்படம், மூன்றாவதாக தாஜ்மகால் – இது ஒரு பாடலின் முதல் வரி . அது என்ன பாடல் ?

2.ஆச்சர்யக்குறி யின் புகைப்படம் – இது ஒரு உணவுப்பொருள். அந்த உணவுப் பொருளின் பெயர் என்ன ?

3.முதல் படத்தில் ஒருவர் குதித்துக் கொண்டிருக்கிறார், இரண்டாவது படத்தில் சிவன் படம் – இது ஒருவரின் பெயர்.  என்ன பெயர் ?

சினிமா விமர்சனம் எழுதுபவர்களும்,சாப்பாட்டுக்கடை எழுதுபவர்களும் முறையே ஒன்று மற்றும் இரண்டாவது கேள்விகளுக்கு பதிலளிக்கவும் . மூன்றாவது கேள்வி open Quota . J
  
மேற்கூறிய நிகழ்ச்சி போலவே மக்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்புகிறார்கள் . But அது பத்தியச்சாப்பாடு மாதிரி.


காஃபி வித் DD .

இதுபோன்ற நிகழ்சிகளை ரசிக்கும்படி கொண்டுபோவதற்கு ஆளுமைத்திறனும் வேண்டும் அதேசமயம் குழந்தைத்தனமும் வேண்டும் . ஆளுமைத்திறனை மட்டும் வைத்து நடத்தினால் அது –செய்திச் சேனல்களின் Interview போலவும் , சின்னப்புள்ளதனமா பண்ணுனா  காமெடி சேனல்களின் நிகழ்ச்சி போலவும் ஆகிவிடும் .

கடந்த காலங்களில் அனுஹாசன் இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக கொண்டு சென்றிருந்தார்  . இப்போ DD Turn...! Only Fun ன்னு முடிவு பண்ணி இறங்கியிருப்பார் போல ...! எப்ப பார்த்தாலும் கெக்கே பிக்கே ன்னு சிரிச்சுட்டே இருக்கார் L.

ரெம்ப முக்கியமா Makeup & Costume . சுவத்துக்கு சுண்ணாம்பு அடிச்ச மாதிரி Makeup அதுக்கு தோதா வெள்ளை கலர்ல Costume ...! pppppppaaaaaaaaa  மிடில L .

சிங்காரம் தெரு

லொள்ளு சபா மாதிரி இருக்கும்னு நெனச்சு நம்பி பார்த்தேன் . ஒவ்வொரு கதாபாத்திரமும் பாத்திரத்த உருட்டுற மாதிரி கத்துறாங்க. கத்திக் கத்தி மொக்க போட்டா , பார்க்குறவங்களும் கத்திக் கத்தி சிரிப்பாங்கன்னு நெனச்சுட்டாங்க போல . கத்திய எடுத்து குத்தனும்போல இருக்கு L.

கேடி பாய்ஸ் –கில்லாடி கேர்ள்ஸ் .

நல்ல TRP போல , நிறைவு நிகழ்ச்சியில் சீசன் ஒண்ணுன்னு சொல்லி . அடுத்த சீசனுக்கு அடி போட்டுருக்காங்க . Title Winner – கில்லாடி கேர்ள்ஸ் – No ஆச்சர்யம் . BGM இல்லாம , நங்கைகள் பைனல்ல பாடிய மெலடி மெட்லி வெகு அருமை .


டவுட்டு

தமிக அரசுப் போக்குவரத்துகழகத்தினர் சில மாதங்களுக்கு முன்பாக 7C ன்னு ஒரு கொரியர் சிஸ்டத்திற்கு விளம்பரப்படுத்தினார்கள் . அதாகப்பட்டது, ஏழு ரூபாயில் கூரியர் . இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டார்களா இல்லையா ...? படுத்திவிட்டார்கள் என்றால் என்ன வழிமுறை ...? தெரிஞ்சவுங்க விம்முங்கோ ப்ப்ப்ளீஸ் ...!


சினிமா

பாண்டிய நாடு போஸ்டர பார்த்து ஹீரோ அருள்நிதின்னு நெனச்சுட்டேன் . பக்கத்துல போயி பார்த்தோன்னதான்  தான் தெரிந்சுது அது விஷால்னு . போலவே தகராறு பட இசை வெளியீட்டு விழாவில் ஹீரோவைப்பார்த்து ஸ்ரீகாந்த்துன்னு நெனச்சேன் ஆனா அது அருள்நிதி ....! ஷப்பா ரெம்பவே கண்ணக்கட்டுது ...! ந.சி.ரா சிரிக்க மாட்டாரு , ம.சி. எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டாரு , இந்த வரிசையில அருள்நிதி பேச மாட்டருன்னு நினச்சேன் . But , மனுஷன் சத்யராஜுக்கு சிஷ்யப்புள்ள மாதிரி ரவுசு பண்றாருப்போய்...!


செய்யகூடாத விசயங்கள் ன்னு மூணு இருக்கு - என்னளவுல.

1.பரீட்சை எழுதிட்டு வந்து, Answer சரிபார்க்கப்புடாது.
2.ஒரு பொருள வாங்கின பொறவு, அடுத்தவன்கிட்ட அபிப்பிராயம் கேக்கப்புடாது,
3.விமர்சனம் படிச்சுட்டு சினிமா பார்க்க போகப்புடாது...!

ஆனா இந்த மூணும் பண்ணாம இருந்தா பைத்தியமே புடிச்சுடும் நமக்கு . இரண்டாம் உலகம் விமர்சனம் படிக்கப்புடாதுன்னு நெனச்சாலும் , கையும் கண்ணும் அரிக்க ... படிச்சுட்டன் J. இனிப்போயி படம் பார்த்தா, எல்லாரும் நல்லாருக்குன்னு சொல்ற முதல் பாதிலேயே கொட்டாவி வந்துடும் . So கு.கா.ஆ – நிராசை .

ஜன்னல் ஓரம்

வழக்கமா கரு.பழ & வித்யாசாகர் கூட்டணில பாடல்கள் அட்டகாசமா இருக்கும் . ஜன்னல் ஓரம் கேட்டவரைக்கும் முந்தைய படங்கள் போல இல்லை . ( இடையிடையே வரும் வசனத்தைத் தவிர்த்து கேட்டால் ) ரெம்பா நாளைக்குப்பிறகு திப்பு பாடிய “என்னடி என்னடி ஓவியமே” – அட்டகாசம் . கண்டிப்பா விமர்சனம் படிக்காம போயி பார்த்துடோனும் படத்தை  .

பிளாக்குல ட்வீட்டு

சூசைட் பண்ணிக்கப்போறேன்னு சொல்பவனையும் , சொந்தத்தொழில் செய்யப்போறேன்னு சொல்பவனையும் இந்தச் சமுதாயம் ஒரே மாதிரியே அணுகுகின்றது . // அடிமையாவே இருந்துடலாம் பாஸ் //என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
Nov 21, 2013

நிலாச்சோறு – விஜய் டீவி , டவுட் , அடடா - அழகு , கு.கா.ஆ , பிளாக்குல ட்வீட்டு ...!


விஜய் டீவி ..!

நடுவுல கொஞ்சம் ... பண்ணுவோம்..!

வாரா வாரம், ஞாயிற்றுக் கிழமை இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வந்த “அறுபது நொடி ஆர் யூ ரெடி” – நிகழ்ச்சி நிறைவடைந்ததை அடுத்து அதே அணி “நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்” என்கின்ற புது நிகழ்ச்சியோடு களமிறங்கியிருக்கின்றது . Very Funny Show ...! யூ டியூப்பில் கிடைத்தால் பார்க்கலாம் .

தமிழ் பேச்சு

“ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” –ஐ அவசர அவதியாக சப்பென்று முடித்ததன் பின்னணி என்னவென்றுதெரியவில்லை . ஒரே ஆறுதல் - நிறைவான நிகழ்ச்சிக்கு நெல்லை கண்ணன் வந்திருந்தது/அழைக்கப்பட்டிருந்தது  .

சரவணன் மீனாட்சி

ஆஹா ஓகோன்னு பேசப்படும் எல்லாம் பிறிதொரு காலம் அய்யோ ராமான்னு சொல்லப்படும் என்பது உண்மைதான் . அய்யோ ராமா .....!

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கரில் இந்த வாரம் கவியின் குரல் . கவிகள் – அரசர் & பேரரசர் . அரசர் தனக்கு டாக்டர் பட்டம் தரவில்லையே என்று தன் குடும்பத்தாரிடம் வருந்தியதாக அவரது புதல்வர் காந்தி கண்ணதாசன் கூறினார்  .  இளைய தளபதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்த எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி அப்பொழுது தொடங்கப்படவில்லையோ...? அது இருக்கட்டும், கவியரசர் – கவிப்பேரரசர் இது சரியா..? சந்தையில் பிரபலமாக இருக்கும் ஒரு பொருளை அடியொற்றி எடுத்து, அதைப்போலவே பெயரிலும் சித்து விளையாட்டு செய்யும் சிறுபிள்ளைத்தனம் போலல்லவா உள்ளது .

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் .
ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் . J 

டவுட்டு

ஒருவேளை ஓஜாவோ , பியூஸ் சாவ்லாவோ அல்ல இன்ன பிற சுழல் வீரர் எவரேனுமோ சென்னை சூப்பர் கிங்க்சில் இடம் பிடித்திருந்தால் இன்று அஸ்வின் இடத்தில் அவர்களில் யாரேனும் ஒருவர் விளையாடிக்கொண்டிருப்பார்களோ ....?


அடடா ... அழகு ...!

எழுத்து

நானோ அளவு விஷயத்தை வைத்துக்கொண்டு கண்டெயினர் அளவுக்கு சுவராஸ்யமாக  கதைப்பது/எழுதுவது எவ்வளவு கடினமோ அதே அளவிற்கு இணையானது கண்டைனர் டு நானோ. நறுக் சுருக் ன்னு நாலு பத்திகளிலோ , நாலு வரிகளிலோ ஒரு விஷயத்தை பளிச்சுன்னு புரியவைக்கும் பதிவுகள் எப்பொழுதுமே என் போன்ற வளரும் வாசிப்பாளர்களின் ஆதர்சம் /விருப்பம் . அப்படியான நறுக் சுருக் பதிவுகளுக்கு சொந்தக்காரர் – ஆனந்த் செல்லையா .

உடல் மொழி 

ஒரு சில படங்களின் ஒரு சில கட்சிகள்/உடல் மொழிகள்  மட்டும் கண்ணை விட்டு அகலாது போலவே சில காட்சிகள் மிகப் பிடித்தமானதாக இருக்கும்  . அப்படியான இரண்டு .....
  
“தலைவா” படத்தின் ஒரு பாடல் காட்சியில் , என்னது தமிழ் பசங்க டீமில் பொண்ணா ...! கங்கிராட்ஸ்-னு விஜய்யை ஒருவர் பாராட்ட அதை ஆமோதித்து ஏற்றுக்கொள்ளும் விதமாக தளபதி காட்டும் உடல் மொழி ....! அடடா அழகு ....!

மற்றொன்று “மரியான்” படத்தின் – “இன்னும் கொஞ்ச நேரம்” பாடலில் – பனிமலர் பார்வதி, மீன் குழம்பையும் , தனுசையும் ஒருசேர பார்க்கும் அந்த ஓரிரு நொடி....! அட்டகாசம் ...! அவ்வளவு நளினம் ....! அழகு ...! “பனிமலர்” என்ற பெயர் வைத்தவருக்கு ஒரு மலர்ச்செண்டு ...!

அதென்னவோ தெரியவில்லை ஒப்பனையோடு வரும் மற்ற படங்களை காட்டிலும் , கடலோரப் பெண்களாக வரும் கதாபாத்திரங்களில் மட்டும் நாயகிகள் அவ்வளவு அழகாக இருக்கின்றார்கள் ஒப்பனை இன்றியும் . உ.ம் – நீர்ப்பறவை – சுனைனா , மரியான் – பார்வதி .


கு.கா.ஆ ..!

சிறுவயதில் “பாதாள பைரவி” , “அலாவூதீனும் அற்புத விளக்கும்” போன்ற FANTASY படங்களை எவ்வளவு குதூகலமாக பார்த்தோமா அதே அளவு குதூகலம் இப்பொழுது இருப்பதில்லை . நிற்க ...! அது போன்ற படங்கள் இப்பொழுதும் வந்து கொண்டுதானிருக்கின்றது .. நாம் தான் நம் ரசனை என்ற அழகியலை தொலைத்து விட்டு , அறிவாளித்தனத்தை வைத்துகொண்டு தர்க்கம் பண்ணிக்கொண்டிருக்கின்றோம் .

“இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்ற Fantasy & Adventure படங்களை போல இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வாரம் “இரண்டாம் உலகத்திற்காகவும்”  . அடுத்த வாரம் பிரியமான வசனகர்த்தா “கரு.பழ”னாவோட “ஜன்னல் ஓர”த்திற்காகவும் திரையரங்கம் போகவேண்டும் . இவை இரண்டும் தான் இப்போதைய கு.கா.ஆ. J


பிளாக்குல ட்வீட்டு

அறிவாளித்தனமாக அறிவுரை கூறுபவன் , முட்டாள்தனமாகவே முடிவெடுக்கின்றான் . // நான் அவன் J //

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .

Nov 13, 2013

நிலாச்சோறு - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...! , ஹை(ய்யோ)க்கூ..! , பிளாக்குல ட்வீட்டு ...!

இந்தவருட தீபாவளிக்கு வெடிவாங்காத குறையை  விஜய் டீவி பார்த்து நிவர்த்தி செய்தோம் . காலை பத்துமணிக்கு மிஷ்கின் சுட ஆரம்பித்தார் , அடுத்து விஜய் , நிறைவாக கமல் ......! டப் , டுமீல், டமால் ....!

எட்டெட்டில் இருக்கும்  அம்மாவுடனும் , மூவெட்டை தொட்டிருக்கும் மனைவியுடனும் சேர்ந்து இலவசத்தொலைக்காட்சிப்பெட்டியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்தோம். படம் பார்க்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் அம்மா கேட்டார் , தம்பி என்னடா இன்னும் ஆட்டுக்குட்டியையும் காணோம் ,ஓநாயையும் காணோம் ....? தலைப்பை பார்த்து இராம நாராயணன் படமென்று நினைத்துவிட்டார் போல . அப்புறம் ஒருவ(லி)ழியாக புரியவைத்தேன் .

மற்றவர்களுக்கு ஒரு விஷயத்தை புரியவப்பதைப்போல எரிச்சல் வரக்கூடிய ஒரு செயல் வேறதுவும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை . நாற்பதில் தான் நாய் குணம் என்பார்கள் , பாஸ்ட் புட் உலகத்தில் இப்பொழுது முப்பதிலேயே நாய்குணம் போல  . உடனடியாக யோகா வகுப்பு  போகவேண்டும். J

படம் பார்த்து முடித்து அம்மா சொன்னது ...!

இந்த கனமான ஆளு இருக்காப்புளைல, அதேன் ஓநாயி அந்தா ஆளு நல்லா சுமந்துருக்கன்யா ...!

அப்புறம் இந்த ஆட்டுக்குட்டி ரெம்பப் புதுசா , இளசா இருக்குடா தம்பி ... படம் பூரா நல்ல ஓடுறான்யா...!

என்னடா படம் இது ... ஒரு  பாட்டு இல்ல , சிரிப்பு இல்ல , ராத்திரிலேயே எடுத்துருக்காய்ங்க ....?

ஆமா கடசில ஓநாயி செத்துப்போச்சி , அப்ப ஆட்டுக்குட்டி ஓநாயா மாறிடுச்சா ன்னு கேட்டார் ....? நான் பதிலே சொல்லல....! தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா ....!


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ...!
ஷாஜி யோட நடிப்பு . வழக்கமான தமிழ் சினிமா  போலீஸ் இரண்டு வகை . ஒன்று -துணியோட சேர்த்து உடம்புக்கும் கஞ்சி போட்ட மாதிரி விறைப்பாவும்  , பேண்டு ஷிப்பே பெயர்ந்து வந்துர்ற மாதிரி  சல்யூட் அடிச்சுகிட்டும் , நார் உரிச்ச தேங்கா மாதிரி தலைமுடியை வெட்டிக்கிட்டும் திரியும் வகை , மற்றொன்று அதற்கு நேரெதிரா தொடையே தெரியாத மாதிரி தொப்பையோட ஒரு சித்திரம். இப்டிப்பார்த்து பார்த்து சடஞ்சுபோனவனுக்கு ஷாஜி கதாபாத்திரம் அட்டகாசமான ரிலீப் . அவரோட பாடி லாங்க்வேஜ் & பேச்சு எல்லாமே ரெம்பப் பிடிச்சுருந்துச்சு .

மிஸ்கின் – குறிப்பா கல்லறை தோட்டத்தில் இரண்டு மெழுகுவர்த்திகளுடன் சேர்ந்து அவரும் உருகி நம்மையும் உருக்கும் காட்சி . உடல்மொழியை விட குரல் மொழி அபாரம் .

ஸ்ரீ - படம் நெடுக ஓடிக்கொண்டே இருக்கிறார் . சிறப்பான நடிப்பு . குறிப்பா மிஷ்கினை சுமந்து செல்லும் காட்சிகள் – தத்ரூபம் .

ஐயா வென்று சல்யூட் அடித்துக்கொண்டே சாகும் கான்ஸ்டபிள் . மனிதம் நிரம்பிய  பைத்தியம் . திருநங்கை . மருத்துவக்கல்லூரி பேராசிரியர் . நரி போலீஸ் .கிளைமாக்ஸ் காட்சி நடக்கும் காம்ப்ளக்சின் பார்க்கிங் கதவை திறந்துவிடும் அந்த தாத்தா.

பின் பாதியின் பின்னணி இசை & ஒளிப்பதிவு .
முன் பாதியின் பின்னணி இசை . ஒரு சில இடங்களில் அல்ல நிறைய இடங்களில் அதீத ஒலி. பின் பாதியைப்போலவே நிறைய இடங்களில் நிசப்த இசையை பயன்படுத்தி இருக்கலாம் .

உலகத்தரமான படம்னு நிறையப் பேர் எழுதியிருந்தாங்க . உலகத்தரமான படம் ன்ன என்னவென்றும் , அந்த படங்களின் என்னவெல்லாம் இருக்கும் அல்லது இருக்கவேண்டுமென்றும் சொன்னால் பரவாயில்லை .

படம் பார்த்து முடித்த பின் . வேகாத வெயிலில் சுற்றி விட்டு வந்து ஏசி அறையில் நுழைந்த பின் வழக்கமாக வரும் ஒரு சின்ன தலைவலி .

படத்தில் நிறைய குறியீடுகளும் , பின் நவீனத்துவமும் இருப்பாதாக சொல்கின்றார்கள் . எம்மைப்போன்ற C செண்டர் ரசிகர்களுக்கு கோனார் நோட்சே போட்டாலும் புரியாது . யாரவது குறியீடுகளை விளக்கி எழுதியிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிச்செல்லுங்கள்  நானும் A & B சென்டருக்கு மாற முயற்சி செய்கின்றேன் .  

படமோ , எழுத்தோ , ஓவியமோ ஒரு படைப்பை விமர்சிக்கும்பொழுது ரெண்டு விசயங்கள் இருப்பதாக நினைக்கின்றேன் . ஒன்று  : படைத்தவனின் ரசனை சரியில்லை . இரண்டு : விமர்சிப்பவனின் ரசனை சரியில்லை . இங்கே முழுமையான படைப்பாளியும் இல்லை , முழுமையான விமர்சகனும் இல்லை . எல்லோருமே முழுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கும் அரைகுறைகளே . இது என்னுடைய தனிப்புத்தியில் தோன்றியது . ஆகையால் பொதுப்புத்தியாக பாவித்து யாரும் கல்லெடுக்கவேண்டாம். J


ஹை(ய்யோ)க்கூ..!

கண் தெரிந்தும்
தடவுகின்றான்
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவன் ....!


பிளாக்குல ட்வீட்டு ...!

ஜவுளிக்கடை கண்ணாடி முன் புதுத்துணியை போட்டுப் பார்க்கும்பொழுது கேவி.ஆனந்த் பட ஹீரோ மாதிரி தெரியும் நான் , அதே துணியை வீட்டுக்கண்ணாடி முன் போட்டுப்பார்க்கும்பொழுது பாலா பட ஹீரோ மாதிரி தெரிகின்றேன். // கண்ணில் பிரச்சினையா , கண்ணாடியில் பிரச்சினையா ....? //


டிஸ்கி : ஆமா அதென்ன நிலாச்சோறு அப்டின்னு கேட்பவர்களுக்கு , அம்மா தன்  குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காக நிலவை காட்டி கதை , கவிதை , கற்பனை ன்னு  என்னென்னமோ சொல்லுவார் . அவரின் நோக்கம் குழந்தைக்கு எப்படியாவது சோறு ஊட்டிவிடவேண்டுமேன்பதே அதில் தர்க்கம் செய்யவோ , விவாதிக்கவோ ஒன்றும் இருக்காது . அதைப்போலவே ஞானும். என்னுடைய தளத்திற்கும் நாலு பேரு வரணும் என் எழுத்தையும் வாசிக்கனும்ங்க்குற எண்ணத்தைதவிர வேறொன்றுமில்லை பராபரமே ...! J


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .


Nov 6, 2013

ரம்மி“இமான்” , “விஜய் சேதுபதி” என்ற இரு சமகால சக்கரவர்த்திகளை தாண்டி “ரம்மி” மீதான பிரியத்திற்கு  காரணம் , படத்தின் பெரும்பாலான காட்சிகள் எம் கிராமத்தில் படமாக்கப்பட்டிருப்பது தான் . எங்கள் கிராமத்தில் இருக்கும்  அரசினர் கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் தான் படத்தின் இயக்குனர் கம் தயாரிப்பாளர் எனக்கேள்வி . 1980 களில் நடக்கும் “டார்க் ரொமாண்டிக் திரில்லர்” கதையாம்.

நாலே சீட்டுல ரம்மில டிக் அடிக்குரமாதிரி , நாலே பாட்டுல நச்சுன்னு மற்றுமொரு ஹிட் அடித்திருக்கின்றார் இமான் . வழக்கமாக இமான் ஆல்பங்களில் வரும் குத்துப்பாடல் இதில் இல்லை . நான்கு டியூனும் கதை நடக்கும் காலத்திற்கும் , தளத்திற்கும் நியாயம் செய்வது போலவே அமைந்துள்ளது .

அடியே என்ன ராகம் :

ஆரம்பத்தில் வரும் கர்நாடக சங்கீதம் போன்ற ஆலாப் கேட்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகிடுச்சு , என்னடா படத்துக்கும் , பாட்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கே என்று . சில நொடிகளுக்கு பின் அபய் குரல் ஆரம்பிக்கும் போது பாட்டும் சும்மா பறக்க ஆரம்பிக்கின்றது . இசைப்புயலின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் அபய் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இருபத்தி இரண்டு  வயது இளைஞர் . குரலை கேட்டால் நம்பவே முடியல அவ்வளவு தெளிவு & கம்பீரம் . கடல் படத்தில் வரும் மூங்கில் தோட்டம் இவர் பாடியதாம் . வளமான எதிர்காலம் அபய்க்கு ...!

கூட மேல கூட வெச்சு :

ரெம்ப நாளைக்குப்பின் பிரசன்னா குரலில் அழகான ஒரு பாடல் . சேர்ந்து பாடியிருக்கின்றார் வந்தனா சீனிவாசன் . தென் மேற்கு பருவக்காற்றின் – ஏடி கள்ளச்சி பாடலை போன்று பிரபலமாவதற்கு அதிக வாய்ப்புள்ள பாடல்கள் . யுகபாரதியின் பாடல்வரிகள் கூடைக்கு பக்க பலம்.

ஒரு நொடி :

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை வரும் வாத்தியக்கருவியின் கோர்வை ரெம்ப நல்லாருக்கு . , திவ்யா ரமணி &  இமானின் குழையும் குரல்களில் மற்றுமொரு அழகான மெலடி . திவ்யா ரமணியின் குரல் திவ்யம் .

எதுக்காக என்ன நீயும் :

சூப்பர் சிங்கர் பூஜாவும் , சந்தோசும் இணைந்து ஏற்ற இறக்கங்களுடன் ரெம்ப நல்லா பாடிருக்கின்றார்கள் .

அழகான , எளிமையான வார்த்தைகளுடன் , விளிப்புகளுடனும் ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி  எழுதியிருக்கின்றார் . அழகு ...!

மினிமம் பட்ஜெட்டில் எடுக்கும் படங்களுக்கு இமான் கொடுத்துக்கொண்டிருப்பது மேக்சிமம் கியாரண்டி ....! வாழ்த்துக்கள் மிஸ்டர் இமான் ...!
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .