புதுயுகம் மற்றும் மக்கள் தொலைக்காட்சிகளில் சிலபல நல்ல நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன . போதிய promo இல்லாததினால்
வெகு ஜன பார்வையாளர்களை சென்றடைவதில்லை .
புதுயுகம் தொலைக்காட்சியின் பெரிய minus
என்று பார்த்தால் Galrity & Background settings . என்பது தொன்னூறுகளில் பொதிகை பார்த்த effect . மக்கள்
- ரெம்ப நல்லாவே இருக்கு -குறை சொல்ல ஒண்ணுமில்லை .
புதுயுகம் :
உயிரே உனக்காக படத்தில் வரும்
ஓடோடி விளையாடு பாடலில் நதியாவின் தாத்தாவாக வருவாரே மீசை தாத்தா அவரின் பேட்டியை சமீபத்தில் புதுயுகம்
தொலைக்காட்சியின் கேள்வி பாதி கிண்டால் பாதி நிகழ்ச்சியில் பார்த்தேன் . நேற்றுவரை ஐயாவை ஒரு நடிகராகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் பெரியவர் Instrument வாசிப்பதில் கில்லாடியாம் . Instrument
என்றால் யமகா பியானோ வோ , World class வயலினோ
இன்ன பிற Electronic கருவிகளோ இல்லை . கொட்டாங்குச்சி ,
பழைய தகரம் அவ்வளவு தான் . ச்சும்மா பின்றாருங்க ...! அய்யாவின்
பெயர் மீசை முருகேசனாம் . கலைமாமணி பட்டம் வாங்கியிருக்கிறார் .
ராஜாவின் பார்வை ராணியின் - பாடலில் வரும் குதிரை ஓடும் சத்தம்
அய்யாவின் கொட்டாங்குச்சியில் இருந்து வந்ததாம் . EXCELLENT
! மேற்படி நிகழ்ச்சியின் இணைப்பு இங்கே .
மக்கள் - நொடிக்கு நொடி - சிட்டு
மக்கள் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி
வரை ஒளிபரப்பாகும் நொடிக்கு நொடி நிகழ்ச்சி - one of my favourite . காரணம் சொல்லித்தெரியவேண்டியதில்லை :) . சித்ரா செல்லமா சிட்டு என்னமா
தொகுத்து வழங்குது பொண்ணு . அடேங்கப்பா எவ்வளவு Expression ஸ்
.
தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி - அழகான பொண்ணு , அதைவிட அழகான குரல் & உடல்
மொழி எல்லாவற்றிலும் மேலான பேரழகுத் தமிழ் வார்த்தைகள் . நேரம் கிடைப்பின்
பாருங்கள் .
என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன் சுப்பு .