Dec 21, 2013

GOODBYE..!
ஆகிவிட்டது ஒரு வருடமும், சில மாதங்களும் வலையுலகத்திற்கு வந்து  . அது தான் இதுவென்று தெரியாமலே சில பல பதிவுகளை வாசித்திருக்கின்றேன் . அலுவல் நிமித்தமாக, KNITTING MACHINE DETAILS ஐ கூகிளில் தேடப்போய் அது டாலர் நகரம் என்னும் தொடரில் கொண்டு போய்விட்டது . இமைக்க மறந்து , ஒரே மூச்சில் அதுவரை வந்திருந்த பதினெட்டு அத்தியாயங்களையும் வாசித்து முடித்து , எழுதியவரை தேடுகையில் அது ஜோதிஜியின் தளத்தில் கொண்டுபோய்விட்டது . அதன்பின் ஆர்வக்குறுகுறுப்பில் தளம் ஆரம்பித்து , சீனுவின் உந்துதலில் பதிவெழுதி நானும் ஆகிவிட்டேன் பதிவர் .


வலையை அறிமுகப்படுத்திய ஜோதிஜிக்கும்  ,
எழுத உந்திய சீனுவுக்கும்  ,
வலை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்த DD அவர்களுக்கும் நன்றிகள் ....!


தற்சமயம் நான் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் தான் எனக்கு கணிப்பொறி அறிமுகமானது . உபோயகப்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது . இன்று வரை அலுவலக இணைப்புதான் . அலுவலகத்தில் மிகச் சொற்பமான நபர்களுக்கு மட்டுமே இணைய இணைப்பு தரப்பட்டுள்ளது . அதில் நானும் ஒருவன் .

வேலைகளுக்கு இடயிடையே , அவ்வப்போது வலையில் வாசிக்க ஆரம்பித்து பின் அது ஒரு பழக்கமாகி , தினமும் மாலை வேலை முடிந்து இரண்டு மணி நேரம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன் .தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரம் கணினியில் வேலை அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வலை என கணிப்பொறி பார்த்து, பார்த்து  கண்கள் சீக்கிரமே அயர்ச்சியாகிவிடுகின்றது .போதாக்குறைக்கு , சமீபத்தில்  EDP துறையிலிருந்து ஒரு மின்னஞ்சல் , ஒட்டு மொத்த அலுவலத்திலேயே நான் அதான் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்று . ஆனால் , யாரும் எதுவும் கேட்கவில்லை , மின்னஞ்சலோடு சரி . எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லை ,தண்டனையும் இல்லை . ஆனால் , அதுதான் பயமாக இருக்கிறது .

  
சுதந்திரத்தைக் காட்டிலும் பெரிய கட்டுப்பாடும் இல்லை ,
நம்பிக்கையைக் காட்டிலும் பெரிய தண்டனையுமில்லை .

எட்டு வருட விசுவாசமான உழைப்பும் ,  திறமையும் அந்த நம்பிக்கைக்கும் , சுதந்திரத்திற்கும் காரணமாக இருக்காலம் . அதைத் தக்கவைத்துக்கொள்வது நல்லதென நினைக்கின்றேன் .

இதுவரை , மேம்போக்காக வாசித்தும் , காமாச் சோமாவென்று வலிந்து திணித்து எழுதிய வார்த்தைகளைக் கொண்டு எழுதியும் , வலையில் உலாவந்தேன் . இப்பொழுது விடைபெறுகின்றேன் . அடுத்தடுத்த செலவுகள் அணிவகுத்து நிற்பதினால் அடுத்த ஆறு , ஏழு மாதங்களுக்கு கணினி வாங்குவதற்கான வாய்ப்பு அறவே இல்லை . So சொந்தக்கணினியுடனும் , செறிவான கருத்துக்களுடனும் மீண்டும் வருகின்றேன் .

நிறைய புதிய விசயங்களை வாசிக்கத் தந்த அனைத்து வலைப்பதிவர்களுக்கும் நன்றி ...!


புத்தகக் காதலர்களுக்கு ஒரு வேண்டுகோள்...!

நாடி நரம்பெல்லாம் பணக்கார கனவு தெறித்த சமயத்தில் வாங்கிய “வெற்றி நிச்சயம்” , நாங்களும் படிப்போம்னு பெருமைக்காக, புத்தக சந்தை போய் வாங்கிய “கதாவிலாசமும்” ஆக மொத்தம் இதுவரை என் வாழ்க்கையில் மொத்தமிரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே வாங்கியிருக்கின்றேன் . வரும் புத்தாண்டு முதல், மாதம் ஒரு புத்தகம் வாங்கவேண்டுமென்று தீர்மானம் எடுத்திருக்கின்றேன் .( ஒரு நாள் முதல்வர் போலல்லாமல் ஐந்து வருட முதல்வர் போன்று இந்தத் தீர்மானம் உயிர்ப்போடு இருக்குமென்று நம்புகின்றேன் J).

முதல் புத்தகமாக, விருப்பமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “உறுபசி” யைத் தேர்ந்தேடுத்திருக்கின்றேன் . படிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தையும் , புதிய சிந்தனையையும் கொடுக்கும் தமிழ் புத்தகங்களை புத்தகக் காதலர்கள் பின்னூட்டத்தில் சொல்லிச் செல்லவும் . அது , அடுத்தடுத்த மாதங்களுக்கான அனுபவக் கொள்முதலுக்கு உதவியாக இருக்கும் .
  

இப்புத்தாண்டில்
உங்கள் எண்ணங்கள் ஈடேற
வாழ்த்துகிறேன் உளமார ...!

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .  

Dec 16, 2013

சேனல்ஸ் பக்கம் : விஜய் & புதுயுகம்புதுயுகம் : கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு  

தலைப்பை மிகச்சரியாக , மிகச்சிறப்பாக நியாயப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி . தலைப்பிசை , தலைப்பின் வடிவமைப்பு , தொகுத்து வழங்குபவரின் குரல் , விசயங்களை சேகரித்து சுவையாக வழங்குவது என எல்லாமே ரெம்பப் பிரமாதம் . உணவோடு சேர்த்து வரலாற்றையும் ஊட்டுகிறார்கள் . Worth to Watch .


புதுயுகம் : ரிஷி மூலம்

நீயா நானாவின் மற்றுமொரு வடிவம் . என்ன , நீ.நா. வில் எதிரெதிர் வரிசையில் அமர்ந்து ARGUMENT பண்ணுபவர்கள் இங்கே அரைவட்ட வடிவில் உட்கார்ந்து ARGUMENT பண்ணுகிறார்கள் . COAT டையும் , கோபிநாத்தையும் பார்த்துச் சலித்தவர்களுக்கு , பாவாடை சட்டையில் அபிராமி தொகுத்து வழங்குவது ஆறுதல் . J ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளில் விஜய்க்கு நல்ல போட்டி புதுயுகம் .


விஜய் : நீயா நானா

இரண்டு வாரங்களுக்கு முன்பான நீயா நானாவில் அறுபதும், இருபதும் இசைக்காக மோதிக்கொண்டார்கள்  . நீயா நானாவில் இதுபோன்ற அமைவது அரிது . அறுபதினர் அசத்திவிட்டனர் . எவ்வளவு திறமையாக பாடுகிறார்கள் . நம் வீட்டில இருக்கும் பெரியவர்களுக்குள்ளும் இதைப்போல  ஏதேனும் ஒரு திறமை இருக்கலாம் , நமக்குத்தான் நேரமே இல்லையே கேட்பதற்கு . சூப்பர் சிங்கர் சூப்பர் சீனியர் விரைவில் எதிர்பார்க்கலாம் .மூன்றாவது நிமிடத்திலிருந்து ஒன்பதாவது நிமிடம் வரை அட்டகாசம்  .

மேற்படி நிகழ்ச்சியை பார்த்த வகையில் ரெண்டு வருத்தம் ...

முதலில் – பெரியவர்கள் அணியில் ஒரு பெண் கூட கலந்துகொள்ளாதது .

இரண்டாவது – இப்பொழுதெல்லாம் முப்பதிலேயே முன் நெற்றி PLOT ஆகிவிடுகின்றது. ஆனால் , நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில பெரியவர்களுக்கு முன் நெற்றி வரை முடி புரளுகின்றது. இளைய சமுதாயம் இழந்தது இசையை மட்டுமல்ல ....சேனல் ட்வீட் :

காம்பியரிங் TO ஸ்டார் – விஜய் டீவி ; ஸ்டார் டூ காம்பியரிங் – புதுயுகம் . Jஎன்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .Dec 7, 2013

இதற்குப் பெயர்தான் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ........மா ?உயர்தர உணவகங்கள் , நட்சத்திர விடுதிகள் , பன்னாட்டு நிறுவனங்கள் இங்கெல்லாம் போகும் என்னைப்போல சாமான்யன்களுக்கு நிறைய அவஸ்தைகள் இருக்கு . அதிலொன்று கழிவறைகளை “பால்” பிரிப்பது . ஆண் , பெண் என்று பலகையும் இருக்காது , புகைப்படமும் இருக்காது . இரண்டிற்கும் பதிலாக, குறியீடாக பொம்மைப்படம் (CLIP ART) போட்டிருப்பார்கள் .

சும்மாவே, குறியீடுகளுக்கும் நமக்கும் வெகுதூரம் . இதில் சோடாப்புட்டிவேறு, சொல்லவும் வேண்டுமா அவஸ்தைகளுக்கு . அடக்கமுடியாத அவசரத்தில் போய்க்கொண்டிருப்பவனை நிறுத்தி, ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொல்வது போலத்தான் இது . தொலையட்டும்... விசயத்திற்கு வருகிறேன் .

போன வாரம் கோவை FUN MALL க்கு ஜன்னல் ஓரம் படத்திற்கு சென்றிருந்தேன் . கடந்த பத்து நாள்களாக மொத்த கோவையுமே FRIDGE ல் வைத்தது போலத்தான் உள்ளது . போதாக்குறைக்கு, மொத்த திரையரங்கமும் குளிரூட்டப்பட்டிருந்ததால் FREEZER ல வைத்தது போல ஆகிவிட்டது. அடுத்த முறை ஜெர்கின் எடுத்துப்போகவேண்டும் .

இடைவேளை விட்ட அடுத்த நொடி முதல் ஆளாக வெளியேறி , கழிவறை தேடுதல் வேட்டையில் இறங்கி , பின் அங்கிருந்த பணியாளரிடம் உறுதி செய்த பின்னே கழிவறைக்குப் போனேன் ...   

ஏற்கனவே ஒருமுறை திசைமாறிப்போய் வசைமாறி வாங்கிய அனுபவம் உண்டென்பதினால், உள்ளே நுழையும் முன் அறிவிப்பு பலகயை ஒருமுறை பார்த்துக்கொண்டேன் . எதிர்பார்த்ததைப்போலவே பொம்மைப்படம் – பக்கத்தில் GENTLEMAN என்று எழுதியிருந்தார்கள்- அப்பாடா .....! அட...! அதற்கு கீழே தமிழிலும் – “மதிப்பிற்குரிய ஆண்கள்” . (நல்லா பெயர்க்குராங்கய்யா மொழிய ..!).

அடக்கமுடியாத அவசரத்திலும் , ஆர்வக்குறுகுறுப்பு மேலோங்க ABOUT TURN அடித்துப்பார்த்தேன் – அங்கேயும் பொம்மை – பக்கத்தில் LADIES , அதற்கும் கீழே “பெண்கள்” – அவ்வளவுதான் .

இதற்குபெயர் தான் ஆஆஆஆஆஆஆஆஆஆ......................மா ?


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
Dec 4, 2013

நிலாச்சோறு – புதுயுகம் – CHANNELS பக்கம் , டிக்கெட் , இசை & ட்வீட் .


புதுயுகம்

புதுயுகம் அலைவரிசைக்கான, சீரியல் விளம்பரங்களை நாளிதழ்களில் பார்த்து சீண்டாமலே இருந்தேன் . சில நாட்களாக பார்க்க ஆரம்பித்துள்ளேன் ... சீரியல்களையும் தாண்டி சில நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள் . அதிலொன்று  “இனியவை இன்று” .

தினமும் காலை எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை ன்னு நினைக்கின்றேன் . FM STATION CONCEPT- ல் ஆனந்தியும், வருணும் தொகுத்து வழங்குகிறார்கள் . இருவருக்கும் ரெம்ப நல்ல குரல். பையந்தான் தூங்கி எழுந்து வந்தது போலவே இருக்கிறான் . பெண்ணின் முகத்தில்  பெயரைப்போலவே ஆனந்தம் ... எபொழுதும் புன்னகை தான் J.

சூரிய வணக்கம் , காலை வணக்கம் மாதிரியான நிகழ்ச்சிதான் .ஆனால் , PRESENTATION ரெம்ப நல்லாருக்கு .  குறிப்பா மாளவிகா அக்கா PORTION ... அதுக்கான மெனக்கெடல் அதிகம் . ட்ராஸ்கி மருது & குழுவினரின் CARTOON ANIMATION பெரிய SUPPORT . நேற்று PLASTIC பற்றி சொன்னார்கள் .

கரு.ஆறுமுகத்தமிழன்னு ஒருத்தர் பழந்தமிழ் கவிதைகளையும், அதற்கான பொருளை , கதைகளின் ஊடாகவும் சொல்கின்றார் . அவரது குரலில் கதை கேட்கும்போது கேட்பவர்களுக்கு குழந்தையின்  குதூகலம் . அப்புறம், வழக்கம் போல ஒரு புத்தக விமர்சனம் . இடையிடையே, தமிழ் திரைப்படப்பாடல்களில் வரும் சில வார்த்தைகளுக்கு ஏதாவதொரு பாடலாசிரியர் வந்து விளக்கம் சொல்கிறார்கள் . இரண்டு நாட்களுக்கு முன்பு “துந்தனா “ ங்குற வார்த்தையைப் பற்றி பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து விளக்கினார்  . உங்களில் யாருக்கேனும் துந்தனா என்றால் என்னவென்றும் அதுசார்ந்த மேலதிக தகவல்களும் தெரியுமா ...?


பயணம் – டிக்கெட்

வா.ம சொன்னது போல பெங்களூரு பேருந்துகளில் அந்த கூத்து நடந்து கொண்டுதானிருக்கின்றது. அதகாப்பட்டது , பன்னிரெண்டு ரூபாய் டிக்கெட்டிற்கு இருபது ரூபாய் கொடுத்தீர்களேயானால் பத்து ரூபாயை திருப்பிக்கொடுத்துவிடுவார்கள் . அதேசமயம் டிக்கெட் தரமாட்டார்கள் . நல்ல Deal ....! கடந்த பெங்களூர் பயணத்தில் DAY PASS எடுத்து ஊர் சுற்றினோம் . குறைந்த பட்ச கட்டணமே பன்னிரெண்டு ரூபாய் (?) இருக்கும் ஒரு ஊரில் . மூன்று STOP களுக்கு மேல ஏறி , இறங்கி பிரயாணிப்பவர்களுக்கும், ஊர் சுற்றிப்பார்ப்பவர்களுக்கும் இந்த  DAY PASS வரப்பிரசாதம் .

ஒரு நபருக்கு, முழு நாளைக்கு அறுபது ரூபாய் . நடத்துனர்களிடமே DAY PASS வாங்கிக்கலாம் . பயண நாள் , மாதம் ,வருடம் , ஆனா பெண்ணா இதையெல்லாம் PASS ல் PUNCH செய்து தருகிறார்கள் . ஒருசில நடத்துனர்கள் அடையாள அட்டை கேட்கிறார்கள். VOLVO பேருந்தை தவிர மற்ற எந்த பேருந்துகளில் வேண்டுமானாலும் பயணிக்கலாம் . VALIDITY எவ்வளவுன்னு தமிங்கிலத்தில் நடத்துனரிடம் கேட்டதற்கு அவர் கன்னங்கிலத்தில் பதிலுரைத்தார்.  இரவு பத்து மணி வரை பயணிக்கலாம்னு குத்துமதிப்பாக நானே முடிவு பண்ணிக்கொண்டேன் . மேலதிக தகவல்களுக்கு .

சரியான சில்லறை கொடுக்கலைனா நடத்துனரே காண்டாயி கண்ணா பின்னான்னு திட்டுவாங்க. இந்த லட்சணத்துல ,பெங்களூரின் சில பேருந்துகளில் ஓட்டுனரே , நடத்துனர் . சொல்லவும் வேணுமா அர்ச்சனைக்கு ... என்ன சொல்லி திட்டுராங்கன்னே புரியல J கன்னட மொழி தெரியாதவர்கள்  இந்த டிக்கெட் வாங்கி பயணிப்பது உசிதம்.

நாங்க போன பேருந்துல, ஒரு நபர் ஓட்டுனருக்கு பக்கத்துலே பரிதாபமா நின்னுட்டு இருந்தார் . நான் DAY PASS ஐ ஓட்டுனரிடம் காண்பித்ததை பார்த்தவர் என்னன்னு என்னிடம் கேட்டார் ...அட நம்மாளு..! விம் போட்டவுடன் விசும்பினார் அடடா எனக்கு தெரியாமப்போச்சேன்னு . அதுசரி , நீங்க ஏன் இங்க நின்னுட்டு இருக்கீங்கன்னு கேட்டேன் ... 500 ரூபாய் கொடுத்தேன் மீதி சில்லறைக்காக நின்னுட்டுருக்கேன்னார் (பரவா இல்ல சுப்பு நீ சமத்தன்தான்னு மனசுகுள்ள நானே சொல்லிகிட்டேன் J). SO , இந்தமாதிரி சில்லறைத் தொந்தரவு, அர்ச்சனை இதுலருந்தேல்லாம் தப்பிக்கணும்னா கண்டிப்பா DAY PASS வாங்கீடுங்க . எந்த STOP ல் வேண்டுமானாலும்  ஏறி எந்த STOP ல் வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம் , குறைந்த செலவு இதெல்லாம் நன்மைகளில் இன்னும் சில .


இசை

தடையறத்தாக்க வில் வரும் இந்தப்பாட்டை கேட்டிருக்கிறீர்களா ரசித்திருகிறீர்களா ...? தமனின் அட்டகாசமான மெலடி , பார்க்கவும் கேட்கவும் அவ்வளவு பிரமாதமா இருக்கும் . குறிப்பா மம்தா வோட COSTUME , அருண் & மம்தாவோட ELEGANT DANCE MOVEMENTS  . கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான ஒளிப்பதிவு , ஆலாப்ராஜ் ன் அசத்தும் குரல்  , கட்சியமைக்கப்பட்ட இடம்னு எல்லாமே பக்காவா அமைந்த ஒரு பாடல் .  

பிளாக்குல ட்வீட்டு


பத்து நிமிசத்துக்கு ஒரு மொற செல்போன் வாங்கலையா ன்னு வந்து படுத்துன  , அப்புறம் நக வாங்கலையான்னு படுத்துன , இப்ப வீடு வாங்கலையான்னு படுத்துற ... யய்யா மாதவா ஒனக்கு என்னதான்யா ப்பிரச்சன ...? // BY பாவப்பட்ட மிடில்கிளாஸ் மாதவன்கள் //

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .Dec 2, 2013

ஜன்னல் ஓரம்


நமக்கு மிகப் பிடித்தவர்களின் நிகழ்ச்சிகளுக்கு, எப்படி நேரில் போய் சிறப்பிக்க வேண்டுமென்று நினைப்போமோ அதையொத்த நினைப்பின் காரணமாகத்தான் வெகு நாட்களுக்குப் பிறகு திரையரங்கத்திற்குப் போனேன் . பழனியப்பனின் அனைத்துபடங்களையும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றேன் –. சில படங்களை இரண்டு மூன்று முறைகூட . திரையரங்கில் போய் பார்க்கவேண்டுமென்று நினைத்தது பழனியப்பன் என்ற படைப்பாளிக்கு நான் கொடுக்க நினைத்த மரியாதை .

கதை :

யாரேனும் கதை சொன்னாலோ , எழுதினாலோ கேட்க பார்க்க பிடிக்கும் .மத்தபடி கதை எழுதுவதும் , சொல்வதும் பிடிக்காது & தெரியாது . So , அதை வேறிடங்களில் படித்துக்கொள்ளுங்கள் .

இயக்கம்  :

ரெம்பப் பிரமாதமாக சமைக்கத் தெரிந்தவர் , இம்முறை அடுத்தவர் சமைத்ததை பரிமாறியிருக்கிறார் , தப்பில்லை . பிரச்சனை சமைத்ததிலா இல்லை பரிமாறியதிலா  என்பது தான் எனது சந்தேகம் . ஒரிஜினல் பார்த்தவர்கள் தான் சொல்லவேண்டும்...! பழனியப்பனுக்கு நல்ல வாசிப்பனுபவம் உண்டு .அவரது முந்தைய படங்களும் , பேட்டிகளுமே அதற்கு சாட்சி . பிறகு ஏன் அடுத்தவர் சமைத்ததை  பரிமாறவேண்டும் ..? ஒரிஜினல் ஏதோ ஒரு வகையில் அவரை ஈர்த்திருக்கிறது போல.. என்னைத்தான் ஈர்க்கவில்லை ....!

பேருந்து , மலைப்பயணம் , பண்ணைக்காடு ன்னு அருமையான தளம் . வில்லன் , காமெடியன் , ஹீரோன்னு தனித்தனியாக யாரும் இங்கு இல்லை . எல்லோருக்குள்ளும் எல்லோரும் இருக்கிறார்கள் ங்குற எதார்த்தத்தை பிரதிபலிக்கும் பாத்திரப்படைப்பு . எளிமையான மனிதர்களின் இயல்பான கதை ன்னு அட்டகாசமான அம்சங்கள் . ஆனாலும் , படம் ஈர்க்கவில்லையே ... எங்கே ,எதை தவறவிட்டார்கள் ன்னுதான் தெரியலை . ஈரமான, மண்ணையும் மனிதர்களையும் அப்டியே பார்ப்பவர்களின் மனசுக்குள் புகுத்தியிருக்க வேண்டாமா ...? நம்மையும் பேருந்திற்குள் இருத்தியிருக்க வேண்டாமா... ? பெரும்பாலான காட்சிகளை பார்கும்பொழுது அவுட்டோரில் எடுக்கப்பட்ட நாடகத்தை பார்க்கும் உணர்வு ...!

இப்பொழுதெல்லாம் குடும்பத்தோடு யாரும் படத்திற்கு வருவதில்லை என்கின்ற எண்ணம் மந்திரப்புன்னகையிலேயே இயக்குனருக்கு வந்துவிட்டது . அந்த எண்ணம் இதில்  வலுப்பெற்றுள்ளது தெரிகின்றது . ம.பு யில் பழனியப்பன் தூக்கிய ஆயில் பாட்டிலை ஜ.ஓ வில் பார்த்திபன் , கிருஷ்ண மூர்த்தி , சிங்கம் புலி , விதார்த் ன்னு சிக்கியவர்கள் கையிலெல்லாம் திணித்திருக்கிறார் . பார்த்திபன் ஸ்டியரிங்கை பிடித்திருக்கும் நேரத்தை விட ஆயில் பாட்டிலைத்தன் அதிகம் பிடித்திருக்கிறார் .

பழனியப்பனின் அடையாளமே வசனங்கள் தான் . கவிதை , காதல் , அரசியல்  , நக்கல் ன்னு எல்லாவற்றையும் வசனங்களிலேயே சொல்லிவிடுவார் . இதிலும் வசனங்கள் இருக்கு , பெரும்பாலும்  சந்தானத்திற்கு எழுதியது போலவே .... ஒன்லைனர்ஸ் ....!

நீ என்ன கலர் சட்டை போட்டிருக்கேன்னு கேட்டா கீழ குனிஞ்சு பார்க்காம என்னால் சொல்லமுடியாது – இது தான் நம்ம ஞாபகசக்தி ... கொஞ்சம் யோசிச்சு பார்த்த ரெண்டு மூணு வசனங்கள் நினைவிற்கு வருகிறது ....

“வயசானவங்க சொல்றது வார்த்தையில்லை வாழ்க்கை” .

“கஷ்டத்தையே நெனச்சுட்டு இருந்தா கக்காகூட போகமுடியாது”.

கடவுளிடம் வேண்டியது நடப்பதற்கு முன்பே, நேர்த்திகடனை நிவர்த்தி செய்யும் ராஜேஷ் சொல்லும் வசனம் ...

“டீல் முடிஞ்சா பைசல் பண்றதுக்கு நாமென்ன கடவுள்கிட்ட பிசினசா பேசுறம் ... நம்பிக்கைதான்யா ...!”

ஆஆஆஆஅச்சர்யம் !!!! கரு . பழனியப்பன் படங்களில் இத்தனை இரட்டை அர்த்த வசனங்களா .....? முன்னோட்டம் & முன்பதிவு – இதெல்லாம் குறியீடா ....? என்னமோ போங்கண்ணே .....!


நடிகர்கள் :

பிரிக்க முடியாதது ல – நக்கலும் பார்த்திபனும் முக்கியமான ஒன்னு . இதிலும் அஃதே ...! என்ன, ஒரு வித்தியாசத்திற்காக நெல்லை ஸ்லாங்கில் பேசுகிறார் ... எனகென்னமோ பிடிக்கவே இல்ல .

விமல் – விமலுக்கு போட்டி வேறு யாருமில்ல – களவாணி அறிக்கி தான் – . பார்த்து பார்த்து செதுக்கிய ஒரு பாத்திரத்தை விமல் பிரம்மாதமா செய்வார் . சுமாரான பாத்திரங்களை ரெம்ப சுமாராவே செய்வார்  . மோசமாக வீசப்பட்ட பந்தை எல்லைக்கோட்டிற்கு பறக்க விடுவது பெரிய சாதனையில்லை பாஸ்  , துல்லியமாக வீசப்பட்ட பந்தை எல்லைக்கோட்டிற்கு பறக்கவிடணும்..!

விதார்த்– விதார்த் மைனா பார்ட் டூ ..?

மனீஷா – பாவாடை தாவணியில் லோஹிப் காட்டி லோ லோன்னு அலைய வைக்கிறார் முறையே விமலையும் ஓரிரு காட்சிகளில் நம்மையும் J . பழனியப்பண்ணேன் இந்தப் படத்துக்கு இந்தப்பொண்ணு எதுக்குண்ணேன் ....?

பூர்ணா – பரிபூரணம் – சேலையில் அவ்வளவு பாந்தம் .


இசை :
            “என்னடி என்னடி ஓவியமே “ ஏற்கனவே ஹிட் . மற்ற பாடல்களும் படத்தோடு பார்க்கும்போது பரவாயில்லை ...! ஆல்பத்துல இருந்த பொம்மலாட்டம் பாட்டுக்கு கத்திரி  ....!

ஒளிப்பதிவு :
               மலைக்கிராம்ன்னாலே மைனாவும் , கும்கியும் தான் நினைவிற்கு வருகிறது . அது ஒரு Benchmark . அது இன்னும் தொடப்படாமலே உள்ளது ...!வழக்கமா, பழனியப்பனின் படங்கள் பார்த்து முடித்த பின் அருமையானதொரு புத்தகம் வாசித்த உணர்வு ஏற்படும்  . இந்த முறை FACEBOOK STATUS படித்தது போன்றதொரு உணர்வு .


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .