புதுயுகம்
புதுயுகம் அலைவரிசைக்கான, சீரியல் விளம்பரங்களை நாளிதழ்களில் பார்த்து
சீண்டாமலே இருந்தேன் . சில நாட்களாக பார்க்க ஆரம்பித்துள்ளேன் ... சீரியல்களையும்
தாண்டி சில நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள் . அதிலொன்று “இனியவை இன்று” .
தினமும் காலை எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை ன்னு நினைக்கின்றேன் . FM
STATION CONCEPT- ல் ஆனந்தியும், வருணும் தொகுத்து
வழங்குகிறார்கள் . இருவருக்கும் ரெம்ப நல்ல குரல். பையந்தான் தூங்கி எழுந்து
வந்தது போலவே இருக்கிறான் . பெண்ணின் முகத்தில் பெயரைப்போலவே ஆனந்தம் ... எபொழுதும் புன்னகை
தான் J.
சூரிய வணக்கம் , காலை வணக்கம் மாதிரியான நிகழ்ச்சிதான் .ஆனால் , PRESENTATION
ரெம்ப நல்லாருக்கு . குறிப்பா மாளவிகா
அக்கா PORTION ... அதுக்கான மெனக்கெடல் அதிகம் . ட்ராஸ்கி மருது & குழுவினரின்
CARTOON ANIMATION பெரிய SUPPORT . நேற்று PLASTIC பற்றி சொன்னார்கள் .
கரு.ஆறுமுகத்தமிழன்னு ஒருத்தர் பழந்தமிழ் கவிதைகளையும், அதற்கான பொருளை , கதைகளின்
ஊடாகவும் சொல்கின்றார் . அவரது குரலில் கதை கேட்கும்போது கேட்பவர்களுக்கு குழந்தையின்
குதூகலம் . அப்புறம், வழக்கம் போல ஒரு
புத்தக விமர்சனம் . இடையிடையே, தமிழ் திரைப்படப்பாடல்களில் வரும் சில
வார்த்தைகளுக்கு ஏதாவதொரு பாடலாசிரியர் வந்து விளக்கம் சொல்கிறார்கள் . இரண்டு
நாட்களுக்கு முன்பு “துந்தனா “ ங்குற வார்த்தையைப் பற்றி பாடலாசிரியர் கபிலன்
வைரமுத்து விளக்கினார் . உங்களில்
யாருக்கேனும் துந்தனா என்றால் என்னவென்றும் அதுசார்ந்த மேலதிக தகவல்களும் தெரியுமா
...?
பயணம் – டிக்கெட்
வா.ம சொன்னது போல பெங்களூரு பேருந்துகளில் அந்த கூத்து நடந்து
கொண்டுதானிருக்கின்றது. அதகாப்பட்டது ,
பன்னிரெண்டு ரூபாய் டிக்கெட்டிற்கு இருபது ரூபாய் கொடுத்தீர்களேயானால் பத்து
ரூபாயை திருப்பிக்கொடுத்துவிடுவார்கள் . அதேசமயம் டிக்கெட் தரமாட்டார்கள் . நல்ல
Deal ....! கடந்த பெங்களூர் பயணத்தில் DAY PASS எடுத்து ஊர் சுற்றினோம் . குறைந்த பட்ச
கட்டணமே பன்னிரெண்டு ரூபாய் (?) இருக்கும் ஒரு ஊரில் . மூன்று STOP களுக்கு மேல
ஏறி , இறங்கி பிரயாணிப்பவர்களுக்கும், ஊர் சுற்றிப்பார்ப்பவர்களுக்கும் இந்த DAY PASS வரப்பிரசாதம் .
ஒரு நபருக்கு, முழு நாளைக்கு அறுபது ரூபாய் . நடத்துனர்களிடமே DAY PASS
வாங்கிக்கலாம் . பயண நாள் , மாதம் ,வருடம் , ஆனா பெண்ணா இதையெல்லாம் PASS ல் PUNCH
செய்து தருகிறார்கள் . ஒருசில நடத்துனர்கள் அடையாள அட்டை கேட்கிறார்கள். VOLVO
பேருந்தை தவிர மற்ற எந்த பேருந்துகளில் வேண்டுமானாலும் பயணிக்கலாம் . VALIDITY எவ்வளவுன்னு தமிங்கிலத்தில்
நடத்துனரிடம் கேட்டதற்கு அவர் கன்னங்கிலத்தில் பதிலுரைத்தார். இரவு பத்து மணி வரை பயணிக்கலாம்னு குத்துமதிப்பாக
நானே முடிவு பண்ணிக்கொண்டேன் . மேலதிக தகவல்களுக்கு .
சரியான சில்லறை கொடுக்கலைனா நடத்துனரே காண்டாயி கண்ணா பின்னான்னு திட்டுவாங்க.
இந்த லட்சணத்துல ,பெங்களூரின் சில
பேருந்துகளில் ஓட்டுனரே , நடத்துனர் . சொல்லவும் வேணுமா அர்ச்சனைக்கு ... என்ன சொல்லி
திட்டுராங்கன்னே புரியல J கன்னட மொழி தெரியாதவர்கள் இந்த டிக்கெட் வாங்கி பயணிப்பது உசிதம்.
நாங்க போன பேருந்துல, ஒரு நபர் ஓட்டுனருக்கு பக்கத்துலே
பரிதாபமா நின்னுட்டு இருந்தார் . நான் DAY PASS ஐ ஓட்டுனரிடம் காண்பித்ததை பார்த்தவர்
என்னன்னு என்னிடம் கேட்டார் ...அட நம்மாளு..! விம் போட்டவுடன் விசும்பினார் அடடா எனக்கு
தெரியாமப்போச்சேன்னு . அதுசரி , நீங்க ஏன் இங்க நின்னுட்டு இருக்கீங்கன்னு கேட்டேன்
... 500 ரூபாய் கொடுத்தேன் மீதி சில்லறைக்காக நின்னுட்டுருக்கேன்னார்
(பரவா இல்ல சுப்பு நீ சமத்தன்தான்னு மனசுகுள்ள நானே சொல்லிகிட்டேன் J). SO , இந்தமாதிரி சில்லறைத் தொந்தரவு, அர்ச்சனை இதுலருந்தேல்லாம்
தப்பிக்கணும்னா கண்டிப்பா DAY PASS வாங்கீடுங்க . எந்த STOP ல்
வேண்டுமானாலும் ஏறி எந்த STOP ல்
வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம் , குறைந்த செலவு இதெல்லாம் நன்மைகளில் இன்னும் சில
.
இசை
தடையறத்தாக்க வில் வரும் இந்தப்பாட்டை கேட்டிருக்கிறீர்களா
ரசித்திருகிறீர்களா ...? தமனின் அட்டகாசமான மெலடி , பார்க்கவும் கேட்கவும் அவ்வளவு
பிரமாதமா இருக்கும் . குறிப்பா மம்தா வோட COSTUME , அருண் & மம்தாவோட ELEGANT DANCE MOVEMENTS . கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான ஒளிப்பதிவு , ஆலாப்ராஜ்
ன் அசத்தும் குரல் , கட்சியமைக்கப்பட்ட இடம்னு
எல்லாமே பக்காவா அமைந்த ஒரு பாடல் .
பிளாக்குல ட்வீட்டு
பத்து நிமிசத்துக்கு ஒரு மொற செல்போன் வாங்கலையா ன்னு வந்து படுத்துன , அப்புறம் நக வாங்கலையான்னு படுத்துன , இப்ப வீடு
வாங்கலையான்னு படுத்துற ... யய்யா மாதவா ஒனக்கு என்னதான்யா ப்பிரச்சன ...? // BY பாவப்பட்ட
மிடில்கிளாஸ் மாதவன்கள் //
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
ட்விட் செம கலக்கல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரஷ் ஜி
Deleteவணக்கம்
ReplyDeleteபதிவுத்தொகுப்பு அருமை வாழ்த்துக்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteநிகழ்ச்சிகள் பார்க்க காலை நேரத்தில் மின்சாரம் இருக்கணுமே...! ம்...
ReplyDeleteட்வீட்டு சூப்பரு...!
நன்றி DD
Deleteபுதுயுகம் இதுவரை பார்க்கவேயில்லை. டிவியே பார்க்கிறதில்லைங்கிறது வேற விஷயம். சென்னைல ஐநூறு ரூபாய் கொடுத்தா அடுத்த ஸ்டாப்பிலேயே இறக்கி விட்டிருவாங்க, பெங்களூர்ல என்னடான்னா காசையும் வாங்கி வச்சிக்கிட்டு செல்ல நாய்க்குட்டி மாதிரி கூடவே கூட்டிட்டுப் போறாங்களா... ட்வீட்டு சூப்பரு....
ReplyDeleteஅதானே நமக்கெங்க டீவியெல்லாம் பார்க்க நேரம்!
Deleteஆவி - ஸ்பை ய ஓட்டுறீர் தானே ...?
Deleteபுதுயுகம் - புதிய தொலைகாட்சி அலைவரிசையா.... தில்லியில் [டாடா ஸ்கையில்] இது வரை வந்ததாக தெரிவதில்லை.
ReplyDeleteடே பாஸ் - தில்லியிலும் உண்டு - 40 ரூபாய் சாதாரணப் பேருந்துகளிலும், 50 ரூபாய் குளிரூட்டப்பட்ட பேருந்துகளிலும் செல்லும். எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம். ஆரஞ்சு வண்ணத்தில் Cluster பஸ் என ஒன்று இருக்கும் அதில் இந்த பாஸ் செல்லாது..... சென்னையிலும் இருப்பதாக சொல்கிறார்கள்.... தெரியவில்லை.
நல்ல தொகுப்பு ஜீவன்சுப்பு....
புதிய தலைமுறையினரின் அலைவரிசை . நன்றி வெங்கட் ஜி .
Deleteஜீவன் சுப்பு, நல்ல பதிவு தொகுப்புகள். கீச்சு அருமை, பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteநன்றி கும்மாச்சி .
Deleteசென்னையிலும் டே பாஸ் இருக்காமே! மாதவனுக்கு தெரியுமா மிடில் கிளாஸ் ஏக்கம்!? தடையற தாக்க பாடல் இன்னும் கேக்கலை. டிவி? நமக்கு அவுட் ஆஃப் சப்ஜெக்ட்
ReplyDeleteஇருக்காம் . கோவையிலும் இருக்கு .
Delete//புதுயுகம்// புதிதாய் எதுவும் இருப்பது இல்லையே - ஈர்க்கவில்லை
ReplyDeleteசென்னையில் ஐம்பது ருபாய் தான் டிக்கெட். சென்னை தவிர்த்து திருவள்ளூர் காஞ்சிபுரம் கூட சென்று வரலாம், 40 க்கு மேல் பயணச் செலவு வரப் போகிறது என்றாலே நான் 50 ருபாய் டிக்கட் வாங்கிவிடுவேன்
//40 க்கு மேல் பயணச் செலவு வரப் போகிறது என்றாலே நான் 50 ருபாய் டிக்கட் வாங்கிவிடுவேன்//
Deleteநீ சமத்தன்யா ...!
நிலாச்சோறு சுவை....
ReplyDeleteட்விட்டு அருமை...