Jul 8, 2013

ஏதேதோ எண்ணங்கள்...!


ஞானும் ஞானி ...!

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தவமிருக்கும் ஒவ்வொரு முறையும் , உறவுகளுடனும் , நட்புகளுடனும் இன்னும் கொஞ்சம் பிரியமாக நடந்துகொள்ளவேண்டும் , கோபத்தைக்குறைத்துக் கொள்ளவேண்டும் , பொறுமையாக இருக்கவேண்டும் , இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், அழகனா, அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நல்ல எண்ணங்கள்  மனத்தில் தோன்றுகின்றது . ஆனால் , உடல் கொஞ்சம் கொஞ்சமாக நலமாக ஆரம்பிக்கும் அதேசமயம் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப்போக ஆரம்பித்துவிடுகின்றது.

அன்னக்கொடியும் அமீரும் ...!

அன்னக்கொடி படம் பார்த்த பின் அகில உலகத்திலேயே அளவில்லா ஆனந்தப்பட்டிருக்கக்கூடிய  ஒரே ஒருவர் – அமீர் . // என்ன மாமா தப்பிச்சுட்டோம்ல ....! //


ஹைய்யோ மானஸி ...!

லீலை படத்தின் ஒருகிளி பாடலில் பார்த்து ரசித்த “மானSEE”யை அதற்கப்புறம் எங்குமே ‘SEE’ர்க்கவில்லை . வெகு நாட்கள் கழித்து இதோ இப்பொழுது நகைக்கடை விளம்பரம் ஒன்றில் .
ஹையோ “மானSEE” ....! எவ்ளோ அழகான எக்ஸ்பிரசன்ஸ் ....! சான்சே இல்ல ....!


பிளாக்குல ட்வீட்டு ...!

சாலையில், நொறுங்கிய கண்ணாடிச்சிதறல்களை பார்க்கும் பொழுதும்  , ஆம்புலன்சின் அலறலை கேட்கும்பொழுதும் ஆக்சிலேட்டரின் வேகம் தானாகவே குறைந்துவிடுகின்றது .  // அன்னிச்சை செயலா ? இல்லை உயிர்பயமா ?  //


வலிக்குது ....!

பகல் பொழுதுகளில் வரும் உடல் உபாதைகளைக்காட்டிலும் , இரவுகளில் வரும் உபாதைகளுக்கு மட்டும் எங்கிருந்துதான் அப்படியொரு வலி வருகின்றதோ . யப்பா ...! முடியலப்பா முடியல...! வலி தாங்க முடியல ...!

பேச்சு எங்கள் மூச்சு ...!

விஜய் டிவியில் விரும்பி பார்த்த ஒரு நிகழ்ச்சி “ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” . அரைகுறை ஆடல் பாடல் நிகழ்ச்சியெல்லாம் ஆறு சீசன் தொடரும்போது, அவசியமான ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக அடுத்தடுத்து தொடரும் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் ஒரே ஒரு சீசனோடு முடித்துக்கொண்டது , ரெம்ப வருத்தமாகவும் , கோவமாகவும் இருந்தது .

கோவம் இப்பொழுது சந்தோசமாக மாறிவிட்டது . இதோ போன வாரத்தில் இருந்து அமர்க்களமாக ஆரம்பித்து விட்டார்கள் அடுத்த சீசனை . ஞாயிறுகளில் காலை பத்து மணி முதல் பதினோருமணி வரை ஒளிபரப்புகின்றார்கள் . தவறவிடக்கூடாத நிகழ்ச்சி , அவசியம் பாருங்கள் .

சென்ற சீசனின் வெற்றியாளர் விஜயன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் , கவித சூர்யா வழங்குகிறார் .நன்றாகவே தொகுக்கின்றார் . என்ன SO தான் பாவம் பாடய்ப்படுத்துகின்றது .


என்ன கொடும சார் இது ...?

மேற்படி நிகழ்ச்சியில் பேசிய ஒரு பேச்சாளர் , இந்திய வரலாற்றிலேயே என்று சொல்லுவதற்குப்பதிலாக , இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே என்று சொல்லிவிட்டார் ....! தொலக்காட்சிபெட்டிகளின் வீரியம் அந்த அளவு இருக்கின்றது ....! இன்னும் கொஞ்ச நாட்களில் மொத்தமாக மழுங்கடித்துவிடுவார்கள் .


என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு .
22 comments:

  1. புன்னகையுடன் அளித்த தொகுப்புகள் அருமை..!

    ReplyDelete
  2. நுண்ணிய கவனிப்பு...! (எண்ணங்கள்)

    ReplyDelete
  3. பேய்க்கும் நோய்க்கும் ராத்திரியானா கொண்டாட்டம்னு சும்மாவா சொன்னாங்க...? நானும் இதை உணர்ந்து/அனுபவிச்சு/கவனிச்சிருக்கேன். துல்லியமா சொல்லிருக்கீங்க தம்பி! அப்புறம்... மானஸிய ரொம்ப நாளா நோ ஸீன்னுட்டு இப்ப நகைக்கடை விளம்பரத்துல பாத்தேன்னு மொட்டையா சொன்ன, உன் நடுமண்டையில குட்டணும் போல வெறியேறுது. என்ன நகைக்கடை விளம்பரம்னு சொன்னா, நாங்களும் ஸீயுவோம்ல... ஹி... ஹி...! அமீரின் மனநிலை நிசம்மாவே இப்படித்தான் இருந்திருக்கும். சபாஷ்யா! அப்புறம்... என்ன ஒரே உடல்நலமின்மை, ஹாஸ்பிடல் புராணமா இருக்கு இந்தத் தடவை? உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல் விசிட் அடிக்க நேர்ந்துச்சா? ஆர் யு ஆல்ரைட்? கவலையா இருக்குது!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே கேள்வி தான், என்ன நகைக்கடை விளம்பரம்? .... நீங்க மட்டும் ரசிச்சா போதுமா?....

      Delete
    2. //பேய்க்கும் நோய்க்கும் ராத்திரியானா கொண்டாட்டம்னு சும்மாவா சொன்னாங்க...? //

      பேய் வேறயா ...?

      //உன் நடுமண்டையில குட்டணும் போல வெறியேறுது.// வாலிப வயசு ...? இருங்க அண்ணிட்ட போட்டுக்கொடுக்குறேன் .

      ஆமாண்ணேன் ஒன்ற மாசமா ஹாஸ்பிட்டல் விசிட்தான் . மீ ரெம்ப பாவம் ...!


      Delete
    3. @ தம்பிஈ ரூபக்கு ....!

      மானசிய லயித்து ரசிச்சதுல கட பேர கவனிக்கல ...! ஹி ஹி ஹி ...! நாங்கல்லாம் காரியத்துல கண்ணா இருப்போமாக்கும் ...!

      Delete
  4. அடப்பாவமே அன்னக்கொடி பார்த்துடீங்களா... :-)

    உயிர்பயத்தால் வரும் அனிச்சை செயல்

    நானும் மூச்சை இழுக்க ஆரம்பிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. டிரைலரே தாங்க முடில இதுல படத்துக்கு வேற யா ...? கிரேட் எஸ்கேப் ...!

      //உயிர்பயத்தால் வரும் அனிச்சை செயல் // அட ஆமா ...!

      நீர் எதுக்குய்யா மூச்ச இழுக்கணும் ...!

      Delete
  5. // , ஆம்புலன்சின் அலறலை கேட்கும்பொழுதும் // எனக்கு சப்தங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. எண்ணங்களை கொஞ்சம் +ve வா ஓட விடுங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமரன் . முயற்ச்சி பண்றேன் பாஸ் ...

      Delete
  6. மான்-அ-SEE.. மான் நிச்சயம் பார்ப்பதற்கு அழகுதான்..

    ReplyDelete
    Replies
    1. மான் --- அட அட என்னே ரசன ....!

      Delete
  7. ஏதோதோ எண்ணங்கள்...

    உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.....

    மான்see - யாருங்க அது.... இப்போ தேடி பார்க்கறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரதர் ...! மானை கண்டீர்களா ...?

      Delete
  8. கலக்கல்...
    அமீர் குதிச்சிருப்பாருல்ல குதிச்சி...

    மானசி.... ஓ மானசி...

    ReplyDelete
  9. அனைத்தும் சிறப்பு! அமீரின் நினைப்பு சிரிக்க வைத்தது. கண்ணாடிசில்லுக்கள் சிந்திக்க வைத்தது! தமிழ்பேச்சு உயிர்மூச்சு நல்ல நிகழ்ச்சி! மீண்டும் துவங்கிவிட்டார்களா? பார்ப்போம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிண்ணா ...! தமிழ்பேச்சு உயிர்மூச்சு நிச்சயம் பாருங்க ...! அட்டகாசமா இருக்கு .

      Delete
  10. மேடம்ஜி

    பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. (புதிய வார்த்தைக்காக)

    ReplyDelete

Related Posts with Thumbnails