Apr 11, 2013

டூ “வீ(ல்)”......லர் பய(ண)ம் .....!


தலப்பு அடப்பு : பால கணேஷ் அண்ணேன் மட்டுந்தேன் வார்த்தைக்குள்ள அடப்பு போடுவாரா? நாங்களும் போடுவோம்ல ....!

                                   டூ “வீ(ல்)”......லர் பய(ண)ம் .....!

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி , பழைய நன்பேண்டாவ பாக்க பீளமேட்டுக்கு போயிருந்தேன். நண்பேன் அப்பத்தான் புது வண்டி வாங்கிருந்தான் , “யமகா ஸ்போர்ட்ஸ் பைக்” . டேய் வாடா , ஒன்னைய வண்டில வச்சு ஒட்டி காமிக்கிறேன்னு சொன்னான் . சரின்னு நம்பி ஏறுனேன். பயபுள்ள நல்லா ஓட்டு ஓட்டுன்னு ஒட்னாங்க . சும்மா கதற கதற ஓட்றான் கண்ணுலருந்து கண்ணீரா வருது நிறுத்தவே இல்ல . அவென்  ஓட்டுன ஓட்டுல எமதர்ம ராசா வீட்டுக்கு எதிர் வீடே வந்துடுச்சு . அப்டியே மயங்கி சரிஞ்சுட்டேன் அவென் மேலயே . அப்றம்தான் எறக்கி விட்டான் . சிரிச்சுகிட்டே கேக்குறான், என்னடா  பயந்துட்டியான்னு..?  . கண்ண கசக்கி பாத்தா எதிர்ல “எமனும்”, “எருமைமாடும்” தான் தெரியுது . இப்பகூட அவனபாக்கும் போதெல்லாம் “எமன” பாக்குற மாதிரியும்,  “யமகா” பைக்க பாக்கும்போதெல்லாம் “எருமமாட்ட” பாக்குறமாதிரியுமே ஒரு பீலிங் .
பில்லியன்ல ஒக்காந்து போறவனுக்குதான் பீதியோட வலி தெரியும் . இப்பவும் பில்லியன்ல ஒக்காந்து போறதுண்டு , சில பல கண்டிசன்களுடன் ...... “ஒட்டுறவேன் ஹெல்மட் போடுறானோ இல்லையோ நா போட்டுக்கணும்” . “வண்டி ஓட்டும் போது போன் பேசப்புடாது”.  “அறுபது கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல போப்புடாது.” முக்கியமா “கட் அடிக்கபுடாது”  . இதுக்கெல்லாம் ஒகேன்னாதான் வண்டிலயே ஏறுவேன் .

இந்த பொண்ணுங்க பில்லியன்ல ஒக்காந்தாவே , வண்டிய “தொட நடுங்குரவனுக்கு(ம்)” கூட தைரியம் வந்துடுதுங்க .... ரேஸ்ல போற மாதிரி போறானுங்கோ ...! போறேனுங்கோ ...!

ஒருமொற இப்டித்தான் பிரியமானவள(!) பில்லியன்ல ஒக்கார வச்சு படத்துக்கு கூட்டினு போனேன். சரியா கருமத்தாம்பட்டி நால் ரோட்ட தொட்டபோது, சைடுல “மண்ணு லாரி”, முன்னாடி “தண்ணி  லாரி” அப்டியே அடிச்சேன் பாருங்க ஒரு “கட்”டு ... ஆஹா...! லைஃப்லேயே அடிச்ச மொத “கட்”டு.
( காலேஜ் கட்ட கணக்குல சேக்கல.) அடடா..! நல்லாத்தான் “கட்”டடிக்குரமே , நாம ஏன் வீலிங் பண்ணக்கூடாதுன்னு  யோசிச்சுட்டு இருக்கும்போதே , பொளேர்ன்னு முதுகுல ஒரு அடி , “பேயடிச்சுடுச்சோன்னு பிரேக்கடிச்சு திரும்பி பாத்தா ...!” “சாட்சாத் .... பொண்டாட்டியேதான் ...!” ( “ஐ நோ.., இந்த சாட்சாத் பக்கத்துல நீங்க என்ன எதிர்பார்த்திருப்பீங்கன்னு ஐ நோ ...!” ஒரு வாட்டிதான் பாஸ் “சொந்த செலவுல ஆப்பு வச்சுக்குவோம் , ஒவ்வொருவாட்டியுமா வச்சுக்குவோம்.”)

அய்யய்யோன்னு பதறி , செதறி எறங்கி பாத்தா ....! பயபுள்ள கண்ணுல ஒரே பீதி . “எமேன் எமஹா”வுலருந்து என்னைய எறக்கி விடும்போது நா என்ன மாதிரியான பீதிய உணர்ந்தேனோ அதே பீதியே இப்ப பொண்டாட்டி கண்ணுல பாத்தேன் . “இப்டியா வண்டி ஓட்டுவீங்க ...? நா படத்துக்கே வல்ல , ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு போறேன் .“ சுசீலா அம்மா” மாதிரி சாந்தமா இருந்தவ “சொர்ணாக்காவா” மாறி கத்த ஆரம்”பிச்சுட்டா” . அய்யய்யோ ..! கொஞ்சம் ஓவராத்தான் ஓட்டிட்டோமோ..? என்ன பண்ணலாம்னு யோசிச்சுனு இருக்கும்போதே வந்துட்டாரு நம்ம “தண்ணி வண்டி” , “ஏண்டா டேய்...!, பொறுமையா வரமாட்டியாடா பொறம்போக்குன்னு தண்ணியோட சேத்து வார்த்தைகளையும் எறச்சுட்டு போயிட்டார்”. இத கேட்டவுடனே  சொர்ணாக்கா சூடாயிட்டா ....!

பின்ன என்ன, சூட்ட தணிக்க பக்கத்துல இருக்க பழகடைக்கு கூட்டினு போயி  ஆப்பிள் ஜூஸ் வாங்கி கொடுத்துட்டே சொன்னேன் , “பயந்துட்டியா செல்லம் ..? அத்தானுக்கு இதெல்லாம் அல்வா சாப்புடுற மாதிரிம்மா” ன்னேன் ....! ஒரு மாதிரியா பாத்தா(ர்ள்)..! “என்னாதான் உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் , கட்டிக்க போறவ முன்னாடியும் , கட்டிக்குனவ முன்னாடியும் பயத்த காட்டிக்க முடியுமா யுவர் ஆனர் ...?”.15 comments:

 1. கட்டிக்க போறவங்க முன்னாடி கண்டிப்பா முடியாது யுவர் ஆனர்... வேறே.... 'ஐ நோ' நம்புவதால்-வேண்டாம்... ஹிஹி...

  ReplyDelete
 2. நல்ல சமாளிப்புதான்!

  ReplyDelete
 3. இளங்கன்று பயமறியாது.ஆனால் கவனம் தேவை

  ReplyDelete
  Replies
  1. // இளங்கன்று // ஃபார் மீ....! ரெம்ப தேங்கஸ்ங்க ...!

   Delete
 4. பைக் நல்ல ஸ்ட்ராங்கு... சுப்புவோட பேஸ்மெண்ட் வீக்குன்னு முதல் தடவையா அடிச்ச கட்லயும், த.லாரி டிரைவர் தந்த அர்ச்சனை(!)லயும் உள்ள உதறிட்டிருந்தது பாவம்... கட்டிக்கிட்டங்களுக்கு எப்படித் தெரியுமாம்? அவிங்கதான் அப்பாவியாச்சே! (மெய்யாலுமே).

  நீங்க பரவால்ல தம்பி! என் நண்பன் ஒருத்தன் அவன் மாமாவப் பின்னால உக்கார வெச்சுக் கூட்டிட்டுப் போனவன், கட் அடிச்சதுல அவர் கீழ விழுந்தது கூடத் தெரியாம போயே போய்ட்டான். அவரை சுத்தியிருந்தவங்க ஆசுவாசப்படுத்தி ரோட்டோரமா உக்கார வெக்க... கால் மணி கழிச்சு ‘ஹி ஹி’யோட திரும்பி வந்தான். (வேணும்னே கண்டுககாம போயிருப்பானோன்னு உள்ள மைல்டா ஒரு டவுட்டு எனக்கு!) ஹி... ஹி...

  அப்புறம்... தலைப்பு வெக்கற விஷயத்துல மட்டும் இந்த அண்ணனை ஃபாலோ பண்ணுங்க தங்கக் கம்பி! எல்லாத்துலயும் ஃபாலோ பண்ணினா என் சங்கத்து ஆளுங்க கான்டாகி செருகிடுவாங்க ஒரு வெங்கலக் கம்பி! ஹா... ஹா...!

  ReplyDelete
  Replies
  1. /கட் அடிச்சதுல அவர் கீழ விழுந்தது கூடத் தெரியாம போயே போய்ட்டான். /

   ROFL :)))

   Delete
  2. ஹா ஹா ..எப்டின்னேன் எல்லாத்துக்கும் ஒரு விஷயம் வச்சுருக்கீங்க ... சூப்பரு .

   // அப்புறம்... தலைப்பு வெக்கற விஷயத்துல மட்டும் இந்த அண்ணனை ஃபாலோ பண்ணுங்க தங்கக் கம்பி! எல்லாத்துலயும் ஃபாலோ பண்ணினா என் சங்கத்து ஆளுங்க கான்டாகி செருகிடுவாங்க ஒரு வெங்கலக் கம்பி! ஹா... ஹா...!//

   செம செம எதுகை மோனையோட பின்னுறீங்க போங்க ...!

   Delete
 5. இதே மாதிரி ‘கட்’ அடிச்சு இதே மாதிரி பலமுறை என் தம்பியும் என்கிட்ட அடி வாங்கியிருக்கான் :)

  நீங்க என்னதான் பைக் ஓட்டுறதுல எக்ஸ்பேர்ட்டா இருந்தாலும் பெண்களைப் பின்னால் வைத்துக்கொண்டு பைக் ஓட்டும்போது கூடுதல் கவனமா இருங்க. ஏன்னா, நீங்க வளையும் போது எங்களுக்கு பேலன்ஸ் பண்றது கஷ்டம். (both physically and mentally)

  ReplyDelete
  Replies
  1. ஓகே மேடம் . யாரங்கே உடனே அமல்படுத்துங்கள் அரச்சனையை சாரி அரசாணையை ..!

   Delete
 6. // பிரியமானவள(!)// யோவ் அடைப்புகுறி மத்த இடத்துல போட்டது எல்லாம் ஓகே அது ஏன் யா இந்த இடத்துல போட்ட... கொக்கா மக்கா... மக்களே கவனிங்க மக்களே... இந்த பய புள்ளி விவரம் படிக்க போனதுல இருந்து போக்கே சரி இல்ல

  ஹா ஹா ஹா இருந்தாலும் மனைவியுடன் செல்லும் பொழுது கவனமாக இருக்கவும்

  ReplyDelete
  Replies
  1. யாருன்னா கவனிக்குராங்களான்னு போட்டேன் . பயபுள்ள பாத்துட்டியே ...!

   Delete
 7. டூ “வீ(ல்)”...... வீல் --லர் பய(ண)ம் .....!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேடம் வாங்க ...! ஒரு ட்ரிப் போகலாமா வீ........ல் பயணம் ....! ஹா ஹா ஹா ..!

   Delete

Related Posts with Thumbnails