Nov 13, 2013

நிலாச்சோறு - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...! , ஹை(ய்யோ)க்கூ..! , பிளாக்குல ட்வீட்டு ...!





இந்தவருட தீபாவளிக்கு வெடிவாங்காத குறையை  விஜய் டீவி பார்த்து நிவர்த்தி செய்தோம் . காலை பத்துமணிக்கு மிஷ்கின் சுட ஆரம்பித்தார் , அடுத்து விஜய் , நிறைவாக கமல் ......! டப் , டுமீல், டமால் ....!

எட்டெட்டில் இருக்கும்  அம்மாவுடனும் , மூவெட்டை தொட்டிருக்கும் மனைவியுடனும் சேர்ந்து இலவசத்தொலைக்காட்சிப்பெட்டியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்தோம். படம் பார்க்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் அம்மா கேட்டார் , தம்பி என்னடா இன்னும் ஆட்டுக்குட்டியையும் காணோம் ,ஓநாயையும் காணோம் ....? தலைப்பை பார்த்து இராம நாராயணன் படமென்று நினைத்துவிட்டார் போல . அப்புறம் ஒருவ(லி)ழியாக புரியவைத்தேன் .

மற்றவர்களுக்கு ஒரு விஷயத்தை புரியவப்பதைப்போல எரிச்சல் வரக்கூடிய ஒரு செயல் வேறதுவும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை . நாற்பதில் தான் நாய் குணம் என்பார்கள் , பாஸ்ட் புட் உலகத்தில் இப்பொழுது முப்பதிலேயே நாய்குணம் போல  . உடனடியாக யோகா வகுப்பு  போகவேண்டும். J

படம் பார்த்து முடித்து அம்மா சொன்னது ...!

இந்த கனமான ஆளு இருக்காப்புளைல, அதேன் ஓநாயி அந்தா ஆளு நல்லா சுமந்துருக்கன்யா ...!

அப்புறம் இந்த ஆட்டுக்குட்டி ரெம்பப் புதுசா , இளசா இருக்குடா தம்பி ... படம் பூரா நல்ல ஓடுறான்யா...!

என்னடா படம் இது ... ஒரு  பாட்டு இல்ல , சிரிப்பு இல்ல , ராத்திரிலேயே எடுத்துருக்காய்ங்க ....?

ஆமா கடசில ஓநாயி செத்துப்போச்சி , அப்ப ஆட்டுக்குட்டி ஓநாயா மாறிடுச்சா ன்னு கேட்டார் ....? நான் பதிலே சொல்லல....! தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா ....!


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ...!




ஷாஜி யோட நடிப்பு . வழக்கமான தமிழ் சினிமா  போலீஸ் இரண்டு வகை . ஒன்று -துணியோட சேர்த்து உடம்புக்கும் கஞ்சி போட்ட மாதிரி விறைப்பாவும்  , பேண்டு ஷிப்பே பெயர்ந்து வந்துர்ற மாதிரி  சல்யூட் அடிச்சுகிட்டும் , நார் உரிச்ச தேங்கா மாதிரி தலைமுடியை வெட்டிக்கிட்டும் திரியும் வகை , மற்றொன்று அதற்கு நேரெதிரா தொடையே தெரியாத மாதிரி தொப்பையோட ஒரு சித்திரம். இப்டிப்பார்த்து பார்த்து சடஞ்சுபோனவனுக்கு ஷாஜி கதாபாத்திரம் அட்டகாசமான ரிலீப் . அவரோட பாடி லாங்க்வேஜ் & பேச்சு எல்லாமே ரெம்பப் பிடிச்சுருந்துச்சு .

மிஸ்கின் – குறிப்பா கல்லறை தோட்டத்தில் இரண்டு மெழுகுவர்த்திகளுடன் சேர்ந்து அவரும் உருகி நம்மையும் உருக்கும் காட்சி . உடல்மொழியை விட குரல் மொழி அபாரம் .

ஸ்ரீ - படம் நெடுக ஓடிக்கொண்டே இருக்கிறார் . சிறப்பான நடிப்பு . குறிப்பா மிஷ்கினை சுமந்து செல்லும் காட்சிகள் – தத்ரூபம் .

ஐயா வென்று சல்யூட் அடித்துக்கொண்டே சாகும் கான்ஸ்டபிள் . மனிதம் நிரம்பிய  பைத்தியம் . திருநங்கை . மருத்துவக்கல்லூரி பேராசிரியர் . நரி போலீஸ் .கிளைமாக்ஸ் காட்சி நடக்கும் காம்ப்ளக்சின் பார்க்கிங் கதவை திறந்துவிடும் அந்த தாத்தா.

பின் பாதியின் பின்னணி இசை & ஒளிப்பதிவு .




முன் பாதியின் பின்னணி இசை . ஒரு சில இடங்களில் அல்ல நிறைய இடங்களில் அதீத ஒலி. பின் பாதியைப்போலவே நிறைய இடங்களில் நிசப்த இசையை பயன்படுத்தி இருக்கலாம் .

உலகத்தரமான படம்னு நிறையப் பேர் எழுதியிருந்தாங்க . உலகத்தரமான படம் ன்ன என்னவென்றும் , அந்த படங்களின் என்னவெல்லாம் இருக்கும் அல்லது இருக்கவேண்டுமென்றும் சொன்னால் பரவாயில்லை .

படம் பார்த்து முடித்த பின் . வேகாத வெயிலில் சுற்றி விட்டு வந்து ஏசி அறையில் நுழைந்த பின் வழக்கமாக வரும் ஒரு சின்ன தலைவலி .

படத்தில் நிறைய குறியீடுகளும் , பின் நவீனத்துவமும் இருப்பாதாக சொல்கின்றார்கள் . எம்மைப்போன்ற C செண்டர் ரசிகர்களுக்கு கோனார் நோட்சே போட்டாலும் புரியாது . யாரவது குறியீடுகளை விளக்கி எழுதியிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிச்செல்லுங்கள்  நானும் A & B சென்டருக்கு மாற முயற்சி செய்கின்றேன் .  

படமோ , எழுத்தோ , ஓவியமோ ஒரு படைப்பை விமர்சிக்கும்பொழுது ரெண்டு விசயங்கள் இருப்பதாக நினைக்கின்றேன் . ஒன்று  : படைத்தவனின் ரசனை சரியில்லை . இரண்டு : விமர்சிப்பவனின் ரசனை சரியில்லை . இங்கே முழுமையான படைப்பாளியும் இல்லை , முழுமையான விமர்சகனும் இல்லை . எல்லோருமே முழுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கும் அரைகுறைகளே . இது என்னுடைய தனிப்புத்தியில் தோன்றியது . ஆகையால் பொதுப்புத்தியாக பாவித்து யாரும் கல்லெடுக்கவேண்டாம். J


ஹை(ய்யோ)க்கூ..!

கண் தெரிந்தும்
தடவுகின்றான்
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவன் ....!


பிளாக்குல ட்வீட்டு ...!

ஜவுளிக்கடை கண்ணாடி முன் புதுத்துணியை போட்டுப் பார்க்கும்பொழுது கேவி.ஆனந்த் பட ஹீரோ மாதிரி தெரியும் நான் , அதே துணியை வீட்டுக்கண்ணாடி முன் போட்டுப்பார்க்கும்பொழுது பாலா பட ஹீரோ மாதிரி தெரிகின்றேன். // கண்ணில் பிரச்சினையா , கண்ணாடியில் பிரச்சினையா ....? //


டிஸ்கி : ஆமா அதென்ன நிலாச்சோறு அப்டின்னு கேட்பவர்களுக்கு , அம்மா தன்  குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காக நிலவை காட்டி கதை , கவிதை , கற்பனை ன்னு  என்னென்னமோ சொல்லுவார் . அவரின் நோக்கம் குழந்தைக்கு எப்படியாவது சோறு ஊட்டிவிடவேண்டுமேன்பதே அதில் தர்க்கம் செய்யவோ , விவாதிக்கவோ ஒன்றும் இருக்காது . அதைப்போலவே ஞானும். என்னுடைய தளத்திற்கும் நாலு பேரு வரணும் என் எழுத்தையும் வாசிக்கனும்ங்க்குற எண்ணத்தைதவிர வேறொன்றுமில்லை பராபரமே ...! J


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .






11 comments:

  1. யோவ், பாப்புலராகனும்னா ஒரு பிரபல பதிவரை திட்டி ஒரு பதிவு எழுத வேண்டியது தானே.. என்னது எழுதினா சண்டைக்கு வருவாங்களா? அடப்போப்பா, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற நம்ம சீனு இருக்கிற போது நமக்கு என்ன கவலை.. 'பட்டைய' கிளப்பும்.

    'டிஸ்கி': ரிசர்ச்ச ஓநாயோட நிறுத்திகிட்டதால தப்பிச்சிங்க மிஸ்டர் சுப்பு.. வேறெங்கயாவது "ஆரம்பம்" செய்திருந்தீங்கன்னா அம்புட்டுதேன்!!

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆஆ"ரம்பத்த" பத்தி எழுதமாட்டேன் ஆவீ ....!

      //எவ்வளவு அடிச்சாலும் தாங்குற நம்ம சீனு // :)

      Delete
  2. உண்மையாவே எனக்கும் ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ....புரியலைங்க....அதை சொன்னா அந்த மாதிரி படங்கள் ரசிக்க தனியா அறிவு வேணுன்னுவாங்க.... நாம அறிவாளி இல்லைங்கறது நம்மளோடவே இருக்கட்டுங்க என்னங்க நாஞ் சொல்றது சரிதானுங்களே?

    ReplyDelete
  3. இன்னும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்க்கலை! தீபாவளி அன்று ஒன்றிரண்டு சீன்கள் மட்டுமே பார்க்க முடிந்தது! ஹைக்கூ சூப்பர்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. ஹைக்கூ அருமை...
    பகிர்வும் அருமை.

    ReplyDelete
  5. எவக்கு அந்த ‘ஓநாய்’ன்னாலே மெத்தவும் பயம். அதுனால படமே பாக்கலையப்பா...! ‘ஊசி’நவீனத்துவம், குறியீடு இதெல்லாம் நம்ம மரமண்டைக்கு எட்டத்தான் மாட்டேங்குது! ஹை(யோ)க்கூ சூப்ப்பரு தம்பீ! அப்புறம்.... பிரபலமாகறதுக்கு வழிய பளிச்சுன்னு சொல்லிட்டாரு பாரு ஆவி! அதை ஃபாலோ பண்ணாட்டா நீ பாவி!

    ReplyDelete
    Replies
    1. //‘ஊசி’நவீனத்துவம்// :)

      //அதை ஃபாலோ பண்ணாட்டா நீ பாவி! //

      நா பிரபலம் ஆகாட்டா கூட பரவா இல்ல பிராப்ளம் ஆகாம இருந்தாச்சரி ... என்ன நான் சொல்றது சரிதானே ...!

      நன்றிண்ணா ...!

      Delete
  6. // கண் தெரிந்தும்
    தடவுகின்றான்
    ஸ்மார்ட் போன் வைத்திருப்பவன் ....!//

    அட நல்லா இருக்குப்பா....

    ReplyDelete

Related Posts with Thumbnails