சமீபத்தில் ஊர்
சென்று வந்தேன் . கிட்டத்தட்ட அறுநூறு கிலோமீட்டர் பயணம் . வீடு வந்து பேக்கை
பிரித்து பார்த்தால், கிட்டத்தட்ட பத்து
பதினைந்து மிட்டாய் . ஆரஞ்சு மிட்டாயில் ஆரம்பித்து , டைரி மில்க் வரை வகை வகையாக, கலர் கலராக
. நாலைந்து முறை ஊர் போய் வந்தால், ஒரு மிட்டாய்க்கடையே வைக்கலாம் போல .
இப்பல்லாம் சூப்பர் மார்க்கெட்டில் ஆரம்பித்து பெட்டிக்கடை வரை, மீதி சில்லறைக்கு
பதிலாக மிட்டாய் தான் தருகிறார்கள் . போனவாரம்
ஒரு மெடிக்கல் ஷாப்பில், ஐந்து ரூபாய் சில்லறைக்கு பதிலாக ஒரு க்ரீம் பிஸ்கட்
பாக்கெட்டை கொடுக்கிறார் கடைக்காரர். நல்ல வியாபார உத்தி . இப்படியே மிட்டாயா
கொடுத்து, கொடுத்து எல்லாரையும் சர்க்கரை வியாதிக்காரங்களா மாத்தீடுவாங்க போல .
அப்ப கூட சர்க்கரை வியாதிகாரர்களுக்கு
சுகர் ஃபிரி மிட்டாய் கொடுத்தாலும் கொடுப்பார்கள் . நல்லா பண்றாங்கடா வியாபாரம் .
அரசுப்பேருந்து
கழகத்துக்கு ஒரு அன்பான வேண்டுகோள் :
ஆளுக்கு ஆள்
மிட்டாய் கொடுக்குறாங்க . நீங்க ஏங்க பாஸ் ட்ரை பண்ணகூடாது..? ஒவ்வொருமுறை பஸ்
ஏறும்போதும் பக்கு பக்குன்னு இருக்கு, சில்லறைக்காக என்னென்ன ஏழரை நடக்கப்போகுதோ
என்று . ஒவ்வொரு கண்டக்டர்கிட்டயும் பணப் பையோட சேர்த்து ஒரு மிட்டாய்ப்பையும்
கொடுத்தனுப்புனீங்கன்னா கசப்பா இருக்க எங்க பயணம் இனிப்பா இருக்கும்ல .
( என்னாது..! ,
அரசுப்பேருந்து கழகத்துக்கு மிட்டாய் வாங்கியதில் ஆயிரம் கோடி முறைகேடா .......?
ஐயா சாமிகளா...! ஆ....ணியே
புடுங்க வேண்டாம்... முடியல ..! )
ஹா..ஹா! அப்படியே சேர்ந்த மிட்டாயை எல்லாம் டிராபிக் ஜாம்ல கடை போட்டுடலாமில்ல..?
ReplyDelete// டிராபிக் ஜாம்ல கடை போட்டுடலாமில்ல// லாம் . ஆனா மாமுலுக்கே பத்தாதே ...!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇப்போதெல்லாம்பல கடைகளில் சில்லறை டப்பாவுக்கு பதிலாக மிட்டாய் சாக்லேட் டப்பா தான் வைத்திருக்கிறார்கள்
ReplyDeleteஅதென்னவோ வாஸ்தவம் தான் . சாக்லேட் டப்பாவோட நிருத்திக்கிட்டாங்கன்னா பரவால்ல..
Delete//ஒவ்வொரு கண்டக்டர்கிட்டயும் பணப் பையோட சேர்த்து ஒரு மிட்டாய்ப்பையும் கொடுத்தனுப்புனீங்கன்னா கசப்பா இருக்க எங்க பயணம் இனிப்பா இருக்கும்ல . //
ReplyDelete:) :)
ஹா ஹா ...!
Delete(சில) கண்டக்டர் : தம்பி, இது நல்லாயில்லே... இதை வைச்சி தான் நைட் கச்சேரி செஞ்சிட்டு வீட்டுக்குப் போறேன்... ஒருத்தரையும் எல்லார் முன்னிலையும் மானம் போற மாதிரி திட்டலேன்னா, எனக்கு பொறுக்காது... இன்னும் நிறைய இருக்கு... வேணாம் தகராறு... சொல்லிபுட்டேன்...
ReplyDelete// இன்னும் நிறைய இருக்கு..// கழுவி கழுவி ஊத்துவாங்களோ ..?
Deleteஇங்கும் சில்லறைக்குப் பதில் மிட்டாய் இருக்கின்றது.
ReplyDelete"அரசுப்பேருந்து கழகத்துக்கு மிட்டாய் வாங்கியதில் ஆயிரம் கோடி முறைகேடா .......?" ஹா...ஹா....
//"அரசுப்பேருந்து கழகத்துக்கு மிட்டாய் வாங்கியதில் ஆயிரம் கோடி முறைகேடா .......?" ஹா...ஹா....// ச்சும்மா ....ஒரு கற்பனை ...
Deleteஇங்கும் - இலங்கையா ?
ஹா ஹா ஹா ரசித்தேன்... சிரித்தேன்..
ReplyDeleteஅனுபவமில்லையோ ...?
Delete