சுயபுராணம்


பேசாத வார்த்தைகள் அழகானவை ...!
எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கின்றது ..!
எழுதாத வார்த்தைகள் அழகானவை ...!
எம் உலகம் எழுதாத வார்த்தைகளால் நிறைந்திருக்கின்றது ..!

ஆம் , எம் உலகம் வெளிப்படுத்தாத அழகியல்களால் நிறைந்தது . ஏதேதோ பேசவேண்டுமென்றும், எழுதவேண்டுமென்றும் எண்ணுகின்றேன் , ஆனால் எதை எதையோ உளறுகின்றேன் பேச்சாக, எதை எதையோ கிறுக்குகின்றேன் எழுத்தாக. எம்மிடம் வெளிப்படுத்தப்படாத உளறல்களும், கிறுக்கல்களும் நிறைந்துகிடக்கின்றன அழகழகாக...!

3 comments: