Aug 28, 2013

ரசித்த பாடல் , பதிவு , கவிதை ....!

ரசித்த பாடல் :

இமான் இசையமத்து வெளிவர உள்ள “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தின் “ஊதாக் கலரு ரிப்பன்” செ(ம்)மையா இருக்கு . ரெம்ப லோக்கலான லிரிக்ஸ் , ஜஸ்ட் லைக் தட் மியூசிக் , UNIQUE வாய்ஸ்னு ரெம்ப கலக்கலான காம்பினேசன் ...! இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் ஹரிஹரசுதன் பாடியிருக்கிறார் . ஷ்யூர் ஹிட்  ...!ரசித்த பதிவு :

ஜோசப்” ஜி யோட பணவீக்கம் , ஊக வணிகம்னு இரண்டு பதிவுகள் .ரெம்ப சிக்கலான விசயங்களை , சிம்பிளான லாங்குவேஜ் ல சொல்லியிருக்கின்றார் .  வவ்வால்ஜி  , ஜோதிஜி மாதிரியான விஷயம் தெரிஞ்சவங்க அது தொடர்பான மாற்றுக் கருத்துக்களை  சொல்ல ஆரம்பித்து , ஆரோக்கியமான வாதங்கள் களை கட்டியிருக்கு .

“ஹேமா” ஜி எழுதியிருக்கின்ற , குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கின்ற “நான் நானாக” அட்டகாசமான பதிவு . வாசிக்கையில் நாமும் குழந்தையாகவே  ஆகிவிடுவோம் . அவ்வளவு அழகு.!

ரசித்த கவிதை :

“பிரியா”ஜி யின் - இதுஒரு நதியின் பயணம் – அர்த்தம் நிறைந்த அழகான கவிதை .


இதெல்லாம் நேரம் கிடைத்தால் படிக்க வேண்டிய பதிவுகளல்ல , நேரம் ஒதுக்கி படிக்க வேண்டியவை .    

என்றென்றும் புன்னகையுடன் ...

ஜீவன்சுப்பு .


Aug 26, 2013

ஆதலால் காதல் செய்வீர்...!

முதல் பாதி      – படம் .
இரண்டாம் பாதி – பாடம் .

என்றென்றும் புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு .Aug 23, 2013

தேசிங்கு ராஜா ..!
“தேசிங்கு ராஜா” – “மனம் கொத்திப் பறவைக்கு” பிறகு டி .இமான் மற்றும் எழில் கூட்டணியில் மீண்டுமொரு ஆல்பம் .

நிலாவட்டம் நெத்தியிலே , நெஞ்சுக்குழி மத்தியிலே ,முத்தம் ஒன்னு தந்துவிடு கோசலை “ . கேட்ட மாத்திரத்தில் பிடித்துப்போகும் பாடல். மென் மெலடிகளுக்கு பெயர் பெற்ற உன்னிக்கிருஷ்ணனும் , ஹரிணியும் அட்டகாசமா ஒரு FOLK SONG பாடியிருப்பது ஆச்சர்ய அழகு .

“மலர்களே மலர்களே” பாடுன உன்னி தான் இந்த பாட்ட பாடிருக்காருன்னு சொன்னா  நம்பவே முடியாது . யுகபாரதியின் எளிமையான , நக்கலான அதே சமயம் அழகான வரிகள் . ட்ரைலர் ல பார்க்கும்போது, ஆட்டம் கூட நல்லாத்தான் இருக்கு . அடுத்த சில வாரங்களுக்கு, FM மற்றும் MUSIC CHANNEL களின் FAVOURITE பாடலாக ஒலி(ளி)க்கும் வாய்ப்பு அதிகம் .

அம்மாடி , ஐயோடி” ன்னு நம்ம தானைத்தலைவி ஸ்ரேயா கோஷல் அடுத்தபாடலில் உருகி நம்மையும் உருக்குகிறார் . BUTTER ல பயணிக்கும் கத்தி போல குரல் அவ்ளோ ஸ்மூத். SUSTAIN பண்ணி அடுத்தடுத்த வரிகளை கோர்த்து பாடும்பொழுது நமக்கு மூச்சடைக்குது. ஷ்ரேயா கோஷல் ரசிகர் நற்பணி மன்றம் தாராளமா ஆரம்பிக்கலாம் .ச்...சோ க்யூட் & ச்....ச்..சோ ஸ்வீட்....!

“ஒரு ஓரப் பார்வை” ல் பேவரைட் பாடகர்  பல்ராம் பாடியிருக்கார் . “என்னாடி என்னடி இப்புடி பாக்குற” விஜய் பிரகாஷ் பாடியிருக்கிறார் . ஆஹா வும் இல்ல அய்யோவும் இல்ல ஆவரேஜ் .ரெண்டு பாடல்களும் காட்சியோடு பார்க்கும் பொழுது பிடிக்கலாம் .

2013 லருந்து திடீர்னு 1983 க்கு போனமாதிரி ஒரு ஃபீலிங் எஸ்.பி.பி யோட யாருமே கேக்கவே இல்ல பாடலை கேட்கும்போது.

ஒரு சில இடங்கள்ல சின்ன சின்ன இசைக்கோர்வைகள் வேறெங்கேயோ கேட்ட மாதிரியே ஒரு ஃபீலிங் . குறிப்பா “ஒரு ஓர ஓரப் பார்வை” பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை , “அட்டகத்தி”யின் ஒரு பாடலின் இசையை நினைவு”படுத்துகின்றது”. சூப்பர் சிங்கர் குடும்பம் கோரஸ் பாடியிருக்கும் போல , குரல்கள் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு . முதலிரண்டு பாடல்களும் ஷ்யூர் ஹிட் . பின்னது மூணும் கேட்க கேட்க பிடிக்கக்கூடும் . பிடிக்காமலும் போகக்கூடும் . ஆல்பத்தோட ஹைலைட் நிலாவட்டம்.

கும்கி , மைனா மாதிரி செஞ்சுரி அடிக்கலைன்னாலும் , செமி ஃபைனல்ல அம்பது ரன் அடிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்  . படத்துல பாட்டு வரும்போது தம் அடிக்க போறவங்க எண்ணிக்கை குறையலாம்  .

என்றென்றும் புன்னகையுடன் ...

ஜீவன்சுப்பு .


Aug 21, 2013

ஜீவா ...!
“வெளிச்சத்தின் விலாசம் ஜீவா” அப்டிங்குற புத்தகத்தை கொஞ்சம் வருசத்துக்கு  முன்னாடி ஒரு புத்தகச் சந்தையில் வாங்கினேன் . ரெம்ப ஆர்வத்தோடோ , கம்யூனிச பற்று காரணமாகவோ வாங்கவில்லை . விலை ரெம்ப குறைவா இருந்துச்சு அதுனால மட்டும்தான் வாங்குனேன் .

புத்தகத்தை வாசித்ததற்கு பிறகு மிகப்பெரும் மரியாதையும் , பிரியமும் ஜீவா அய்யாவின் மேல் ஏற்பட்டது . அதற்கு முன்பு வரை அய்யாவைப் பற்றி அவ்வளவாக தெரியாது . அன்றிலிருந்து என் ஆதர்ச நாயகர் ஜீவா அவர்கள் தான் . அதன் காரணமாகத்தான் சுப்பு என்ற என் இயற் பெயருடன் ஜீவனை இணைத்துக்கொண்டு ஜீவன்சுப்பு என்கின்ற புனைப் பெயருடன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.


இன்று ஜீவா அய்யாவின் பிறந்தநாள் ...! தலைசிறந்த மனிதருக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்  , வாழ்த்துக்களும்   ....!தோழர் ஜீவாவின் கீதம் .


காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாருக் குழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா! 


குண்டிக்கொரு துண்டுமில்லை
கொல்வறுமை தாளவில்லை
ஒண்டக் குடிசையில்லை - என் தோழனே
உழைத்திளைத்துப் போனோமடா 


கோணல்மானல் திட்டங்களால்
கோடிகோடி யாயிக்குவித்தே
வீணர்சிலர் கொழுக்கக் கண்டோம் - என் தோழனே
வெஞ்சினம் பொங்குதடா!
 

மாடமாளி கையவர்க்கு
மன்னர்மகு டமவர்க்கு
வாடவறு மைநமக்கு - என் தோழனே
வந்திடில் வாழ்வதெற்கு?
 

நன்றி – இணையம்ஸ்தலத்தை நிர்வகிக்கும் திரு. பாண்டூ அவர்களுக்கு நன்றிகள் ...!நண்பரின் விவரம் தெரியவில்லை . அவருக்கும் நன்றிகள் ....!


ஜீ.....! வா ....!
நீ திரும்பி வா ...!
நீ விட்டுசென்ற
இடத்திலேயே நிற்கின்றது அனைத்தும் ...!என்றென்றும் புன்னகையுடன் ...

ஜீவன்சுப்பு .

Aug 5, 2013

மஹா ருத்ராபிஷேக விழா அழைப்பிதழ் ...!


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 11.08.2013 ) அன்று கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள ராஜஸ்தானி சங்கத்தில் நடைபெற இருக்கின்ற “மஹா ருத்ராபிஷேக” விழாவிற்கு ஆன்மிக அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் . விழாவிற்கான அழைப்பிதழ் கீழே ......என்றென்றும் புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு .