Apr 5, 2013

எம்.பி.ஏ – நாங்களும் படிப்போம்ல...!தொலைதூரக்கல்வியில் முதலாமாண்டு எம்.பி.ஏ படிக்கின்றேன் (?) – (ஹா ஹா..ஒரு விளம்பரம் ..!)

முதல்நாள் வகுப்பு ... வழக்கம்போல பத்துமணிக்கே ! போய்விட்டேன்  , எமக்கு முன்னரே குழுமியிருந்த முப்பத்தி சொச்சம் பேருக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் இளம் பேராசிரியை. QUANTITATIVE TECHNIQUES இதுதான் சப்ஜெட் பேராம். ஒண்ணுமே வெளங்கல . இப்ப வரைக்கும் இந்த சப்ஜெட் பேரயே சரியா ப்ரனவுன்ஸ் பண்ண முடியல .

நான் உள்ளே நுழைந்து , தேடிப்பிடித்து முன் பெஞ்சின் ஓரத்தில் உட்கார்வதற்கும் , ஆசிரியை கேள்வி கேட்பதற்கும் சரியாக இருந்தது . கேள்வி இதுதான் ....

STATISTICS” என்றால் என்ன?

மக்கா..! ஒரு புள்ள கூட வாயத் திறக்கல ...

மறுபடியும் கேட்கிறார் .... “STATISTICS” என்றால் என்ன?

“புள்ளி விபரம்” – இது நானு .

ஒட்டு மொத்த வகுப்பும் என்னையவே “குறு குறு” ன்னு பாக்குது ஏதோ “புள்ளிராஜாவ” பாக்குற மாதிரி .

எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. சரியாத்தானே சொன்னோம் , இல்ல ஒருவளே “புள்ளி ராஜான்னு” சொல்லிட்டோமோன்னு  பீதி ஆகிடுச்சு .

கரக்ட் .. “புள்ளி விபரம்” – விஜயகாந்த் தன்னோட படத்துலயெல்லாம் சொல்லுவார்ல அதான் என்றார் ஆசிரியை சிரித்துக்கொண்டே . அதற்கப்புறந்தான் நார்மலாகவே உணர்ந்தேன் .

காலம் போன கடசில காலேஜ் போறது பெரிய கொடும . பெரும்பாலும் சின்ன பசங்க தான் அதுவும் பால்யம் மாறா பசங்க , பாடம் நடத்திட்டு இருக்கும்போதே, பக்கத்து பெஞ்ச் பால்யம் கேக்குது , நீ  என்னடா பண்ற படிக்குறியா  இல்ல வேலைக்கு போறியா ? பின் பெஞ்சுலருந்து...... என்ன மச்சான் எந்த ஊரு ..? ஒட்டவும் முடியல , ஒட்டாமா இருக்கவும் முடியல . அதவிட கொடும பாடம் எடுக்குறவங்க, பெரும்பாலும் லாஸ்ட் இயர் காலேஜ் முடிச்சவங்கதான் . எல்லாருமே வயசுல சின்னவங்க , எப்டி பிகேவ் பண்றதுனே புரியல . இதுக்குதான்  படிக்குற வயசுல ஒழுங்கா படிக்கணும்கிறது .

அடுத்து மேடம்  எந்த கேள்விய கேட்டாலும் , பய புள்ளைக என்னையே பாக்குதுக . முடியல...! போதாக்குறைக்கு மேடமும்  என் மூஞ்சியவே பாக்குறாங்க . பதிலுக்கு நானும் அவுங்க மூஞ்சியவே பாத்தேன் . கொஞ்ச நேரத்துல அவுங்க மூஞ்சியில ஒரு மொறப்பு தெரிஞ்ச மாதிரி இருந்தது . அதுக்கப்புறம் சுவத்த பாக்க ஆரம்பிச்சுட்டேன் .

ரெம்ப முக்கியமான “சம்” அப்டின்னு சொல்லி , ஒரு கணக்கு போட ஆரம்பிச்சார் போர்டுல . அந்த கிளாஸ்ல இருந்தது ஒரு பெரிய சைஸ் போடு , அந்த போர்டையே மூணுவாட்டி அழிச்சு , அழிச்சு போடுறாரு . போடுறாரு , போட்டுக்கிட்டே இருக்காரு “சம்” முடிஞ்ச மாதிரியே தெரியல . “ஏண்டா எம்.பி.ஏ எடுத்தோம் , நமக்கு நாமே ஆப்பு வெச்சுகிட்டோம்” ன்னு புலம்பிக்கிட்டே உக்காந்துருந்த நேரத்துல,  நம்ம பக்கத்துல ஒக்காந்துருந்த  பய பயத்துல கேட்டான் இப்டி ....

“ஏன் மேடம் , இந்த எக்சாமுக்கு கால்குலேட்டேர் கொண்டுபோகலாம்ல...?”

“அய்யோ...! கால்குலட்டேர் கொண்டுபோகலைன்னா உன்னால இந்த சம்ம போடவே முடியாது” – இது மேடம்

“அய்யோ , கால்குலேட்டர் கொண்டுபோனாக்கூட என்னால இந்த சம்ம போடவே முடியாது” – இது நானு .

வழக்கமா முனுமுனுக்குற நானு , சத்தம் போட்டே சொல்லிட்டேன் . மொத்த வகுப்பும் கெக்கே பிக்கேன்னு சிரிக்குது . இது ஒன்னும் அவ்ளோ பெரிய ஜோக் இல்ல தான் . ஆனா நம்ம பய புள்ளைக “கொல்லுன்னு” சிரிச்சு என்ன சிக்கவிட்டுட்டானுங்க.

பியூஸ் போன பல்பாட்டம் மூஞ்சிய வச்சுக்கிட்டு , ஒருவித பீதியோடவே மேடத்த பார்த்தேன் . இந்ததடவ முன்னமாதிரி முழுசா சிரிக்கவும் இல்ல, பின்ன மாதிரி முழுசா மொறைக்கவும் இல்ல,
கொஞ்சம் முறைப்போடும் , நிறைய சிரிப்போடும் அவர் என்னையே உற்றுப் பார்த்தார் ...!
அய்யோ அது செம்ம கியூட் ....! இதுக்காகவே அரியர்ஸ் வச்சு , அடுத்த வருசமும் படிக்கலாம் QUANTITATIVE TECHNIQUES .

கண்டுபிடிப்பு  – பெண்கள் சிரிச்சாலோ , மொறச்சாலோ வராத அழகு! மொறச்சுக்கிட்டே சிரிக்கும் போது வந்துடுது.. அழகோ அழகு ..!


அடுத்த கிளாஸ்ல பார்ப்போம் என்ன நடக்கப்போகுதுன்னு .....!

8 comments:

 1. ஹா... ஹா... ரசித்தேன்...

  ஹீரோ ஆனதற்கு பாராட்டுக்கள்...

  ஆக(கா)... இந்த வருஷம் முடிக்கிற மாதிரி இல்லை... எதுக்கும் கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லது... ஹிஹி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நல்ல சுவாரஸ்யமாத்தான் இருக்கு! புள்ளிவிவரங்கள் சேகரிக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா தல உங்க புள்ளிவிவரம் சரி இல்லையே.... நல்ல அனுபவப் பதிவு.. சீக்கிரம் மிஸ்க்கும் உங்களுக்குமான காதல் பதிவு வெளிவர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. முதல் நாள் வகுப்பிலேயே இப்படியா.. :)

  ReplyDelete
 5. ஆஹா... கடைசி வரியப் பாத்தா இன்னும் பல அரியர்ஸ் விழும் போல இருக்கே...! டீச்சர்கள் எப்பவுமே ரசிக்க வைப்பவர்கள்தான்- என் பார்வையில்! ம்... நடக்கட்டும், நடக்கட்டும்!

  ReplyDelete
 6. பாடங்கள் பாக்கி இல்லாமல் முடிக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. எம்பி எம்பி எம்பிஏ படிங்க...

  ReplyDelete
 8. எல்லாம் சரி... பாஸ் பன்னிட்டீங்களா?? பூட்டுக்கிச்சா?

  ReplyDelete

Related Posts with Thumbnails