எல்லாரும்
பாத்துக்குங்க
நானும்
பதிவர்
! நானும் பதிவர்
! நானும்
பதிவர்
! அப்டின்னு
சொல்லாமலே
டிசம்பர்
30 ல திருப்பூர் பதிவர்
சந்திப்புல
சங்கமம்
ஆனேன்
. ( இதுவரைக்கும்
சுமாரா
, ரெம்ப
சுமாரா
ஒரே
ஒரு
பதிவு
போட்டுட்டு
அதுவும்
ஒரே
வரில
போட்டுட்டு
மொத
ஆளா
போனது
வேற
விஷயம்
)
சொந்தம்
, நட்பு
, இது
இல்லாம
ஒரு
புதிய
உறவுகளை
சந்திக்க
போற
ஒரு
ஆர்வம்
மேலோங்க
போன
முதல்
சந்திப்பு
.
நிறைய
வருடல்களையும்
கொஞ்சமே
கொஞ்சம்
நெருடல்களையும்
தந்த
சந்திப்பை
பற்றி
சுருக்கமா
( ? )..
வருஷ
கணக்குல
கூடவே
சேர்ந்து
வாழ்ந்தாலும்
ஒருத்தர
இவர்
இப்டிதான்னு
உறுதியா
சொல்லிடமுடியாது
. சந்தர்ப்பமும்
, சூழ்நிலையும்
ஒருத்தர
எப்டி
வேணும்னாலும்
மாத்தலாம்
. அப்டி
இருக்கும்
போது
நிமிச
நேர
சந்திப்பின்
மூலம்
யாரையும்
மதிப்பிட
முடியாது
, கூடாது
. அதே
நேரம் ஒருத்தர பத்தின
நல்ல
விசயங்கள
பதிய
நிமிச
நேரம்
போதும்னு
நெனச்சதால
இந்த
பதிவு.
அருண்
மொத
நாளே
தொலைபேசியில என் வருகையை
உறுதிபடுத்திக்கிட்டாரு.
மொதல்ல
சந்திச்சதே
இவர்தான்
.
நம்மள
பாத்தொன்ன மொதல்ல இவர் சொன்னது ...
நண்பா
! நெறைய
வேல
இருக்கு கைய கட்டிக்கிட்டு வேடிக்க பாக்காம
, இழுத்து
போட்டு
வேல
செய்யனும்னு
என்ன
? .
( அதெப்டி கரெக்டா
கண்டுபுடிசாப்லன்னு தெரியல..! ). இழுத்து
போட்டு
வேல
செய்யனும்னு
சொன்னதாலோ
என்னவோ
ஒரு
சேர
மட்டும்
இழுத்து
போட்டதோட
சரி
. ( உண்மையிலே
வேற
வேல
இல்லங்க
.)
ஆரம்பத்துல இருந்து கடசி வரைக்கும் கொஞ்சம் கூட சோர்வடையாம பர பரன்னு
பம்பரமா
சுத்தி
வேல
பாத்தாருங்க
.
சீனு
ஒரு
சில
பெயர்கள
உச்சரிக்கும்
போதே
ஒரு
நெருக்கத்தையும்
, பிரியத்தையும்
உணரமுடியும். ஆனா பழகி
பார்த்தா
மொத்தமா
முரண்படுவாங்க
. சீனுவும்
அப்டிதான்
ஆனா
முரண்பாடில்லாதவர்
. பெயரைபோலவே பழகுவதற்கும் இனிமையான ஆளு .
பழகிய
கூட்டத்திலே
பம்மி
பதுங்குற
ஆளு
நாம, புது கூட்டம்
பாத்து
மிரண்டு
போயி
ஒதுங்குனா,
விடாம கடைசி வர
அரவணைச்சு
ஆதரவு
கொடுதாப்புல.
பார்த்தா
பள்ளிகூடம்
போற
பையனாட்டம்
“சாதரணமாக”
இருக்காரு
. ஆனா
எழுத்துல
“அசாதரணமான
“முதிர்ச்சி
. அழகியல்
முரண்பாடு
..!.
கவுதம்
பாணியில
இவர்
எழுத்த
சொல்லனும்னா
... " அவ்ளோ
அழகு
!". வலைச்சரத்தில்
எழுதுச்சரம் தொடுக்கப் போகும் சீனுவுக்கு ஒரு மலர்ச்சரம் ..
ஜோதிஜி
டாலர்
நகரத்தின்
தந்தை
. நான்
சந்தித்த
முதல்
பதிவர். எண்ணம் , எழுத்து , சொல், செயல்
எல்லாம்
கை
வர
பெற்றவர்.
அந்த
வகையில
வரம்
வாங்கி
வந்தவருன்னு
சொல்லலாம்.
( சொல்லாடல்
உபயம்
டா.ந.த.)
ஒரு
சில
தினங்களில்
தன்னோட
மொத
புஸ்தக
குழந்தைய
பிரசவிக்க
இருக்காரு
அண்ணன்
. ஊரும்
பெரும்
கூடி
, சீரும்
சிறப்புமா
பிரசவம்
,தல
பிரசவமா
நடக்கும்னு
... வாழ்த்தவோ
, வணங்கவோ
, இறைவனை
வேண்டவோ
வேண்டாம்.
எண்ணுவோம்
அது
போதும்
. ஏன்னா
எண்ணம்
போல்
வாழ்வு
, எண்ணங்கள்
வலிமையானது .
( சொல்லாடல் உபயம்
எம்.எஸ்
.உதயமூர்த்தி
அய்யா
. நீங்க
இன்னும்
இது
போன்ற
வார்த்தைகளால்
வாழ்ந்து
கொண்டுதான்
இருக்கீங்க
.)
கண்மணி
அன்போடு
சகோதரி
கண்மணி
, தன
ரெண்டு
கண்களோடு
அன்போடு
வந்திருந்தார்.
நடை
உடை
பாவனை
நிகழ்ச்சியை
தொகுத்து
வழங்கிய
விதம்
அத்துனையும்
ரெம்ப
நேர்த்தி
கண்ணியம்
.
மதுமதி
மனுஷன்
சிரிக்க
சிரிக்க
இனிக்க
இனிக்க
பேசுராருங்க.ஒரு
வரலாறையே போற போக்குல
சொல்றாரு
. இவர்
மேடையில
பேசுவாருன்னு
போட்ருந்தாங்க
ரெம்ப
எதிர்பார்த்து
காத்திருந்தேன்
. வழக்கம்போல
எதிர்பார்ப்புகள்
ஏமாற்ற
தவறுவதில்லை
ங்குறது
நிருபணம் ஆச்சு .
செழியன்
& விஜயன்
இருபதில் இருக்குற வாலிபங்கள் . இந்த வயசுல ஒயரம் வளரும் பரு கூட வளருமா
என்ன அப்டின்னு ஒரு சோப்பு வெளம்பரம் தொல்லைகாட்சியில வந்துட்டுருக்கு . அது மாதிரி
இந்த வயசுல Facebook ல இருப்பாங்க Twitter
ல இருப்பாங்க, ஆனா Blog ல இருப்பாங்களா எழுதுவாங்களான்னு ஆச்சர்யபடுத்தியவர்கள் .
சிபி செந்தில்
சிம்மக்கொரலோன் .அட்ராசக்க ! என்ன கொரலுப்பா ? மொத ஆளுமையையும் ஒத்த கொரல்ல
வச்ருக்காருங்க . மனுஷன் ரகசியத்த கூட போக்ரான்ல போட்ட குண்டாட்டம் சொல்லுவாராட்டுக்கு
. எதோ அலக்சா ராங்கிங் ல டாப்புன்னாங்க . நமக்கு அலேக்சாவும் தெரியாது அண்டார்டிகாவும்
தெரியாது. எதோ பெரிய ஆளுன்னு புரிஞ்சுகிட்டேன்.
ஈஸ்வரன்
நிகழ்ச்சியின் பிரம்மா . முடிவு பண்ணி கொஞ்ச நாள்ல நிகழ்ச்சிய சிறப்பா நடத்திட்டாங்க
. ரெம்ப எளிமையாத்தான் இருந்தாரு . ரெண்டு வேல டீ மத்தியானத்துக்கு வகைக்கு ஒண்ணா மூணு
சோறு ன்னு நல்ல உபசரிப்பு .
திண்டுக்கல்
தனபாலன்
பின்னூட்டத்தின் சக்கரவர்த்தி , இல்லனா பின்னூட்ட புயல்னு சொல்லலாம் . நிலாவுக்கு
போனா கூட அங்க ஒரு நாயர் சாயா கட வச்சுருப்பாருன்னு சொல்லுவாங்க , அது மாதிரி ஒலகத்துல
எந்த மூலையில யாரு பதிவு போட்டாலும்
அங்க நம்ம அண்ணனோட பின்னுட்டம் இருக்கும்
. எனக்கு
கூட
இவருதாங்க
மொதல்ல
பின்னுட்டுனாரு. கடமைய செய்
பலன
எதிபாராத
, எதிர்பார்க்கலனா
ஏமாற்றம்
இல்லன்னு,
ஆயிரம் சொன்னாலும் , மனசு
ஏந்குதே
அங்கீகாரத்துக்கு
. ஒரே
ஒரு
வரில
ஒரே
ஒரு
பதிவு
போட்டுட்டு
ஒரு
நாளக்கி
ஒம்பது
வாட்டி
ஒப்பேன்
பண்ணி
பாக்குற
என்ன
மாதிரி
ஆளுக்கெல்லாம்
நீங்க
தெய்வம் ....!
தாய்த்தமிழ்
பள்ளி
குழந்தைகள்
:
தமிழின்
மேல
இருக்குற
பேரன்பையும்
அந்நிய
மொழிகள்
மேல்
இருக்குற
பெருங்கோபத்தையும்
இயல் இசை நாடகம் அப்புறம் வேல்குச்சி கொண்டு அட்டகாசமா வெளிபடுத்துனாங்க. இயக்குனர்
பாலா ஒரு மிகச்சிறந்த வலி கடத்தி அப்டின்னு நாஞ்சில் நாடன் அய்யா ஒரு பேட்டியில சொல்லிருந்தாரு
, அது மாதிரி இந்த கொழந்தைங்க தமிழ் உணர்வை
நம்முள் கடத்துவதில் ஆகச்சிறந்தவர்கள்.
இந்த நேரத்துல
இவர்களின்
ஆசிரியர்களையும்
, நிர்வாகியையும்
கண்டிப்பா
வணங்கணும்
. ஒரு
கொழந்த
பாடும்போது
தொண்ட
கட்டி
பாடமுடியாம
பாதில
நிறுத்திடுச்சு
. இந்த
நேரத்துல
அவங்க
ஆசிரியர்கள்
என்ன
பண்றாங்க
ரியாக்ட்
பண்ணுறாங்களா
இல்ல
ரெஸ்பாண்ட்
பண்றாங்களான்னு
பாத்தா..
ஒருத்தர்
கூட
முகம்
சுளிக்கல
அத்தன
பேரும்
அந்த
கொழந்தய
அரவனச்சுகிட்டாங்க
.கான்வன்ட்ல
இதல்லாம்
நெனச்சு
கூட
பார்க்க
முடியாது
.
இவ்வளவு
வருடல்களுக்கு
மத்தியில
கொஞ்சம்
நெருடல்கள்
...
1.திட்டமிட்டபடி
எல்லாருக்கும்
பேச
வாய்ப்பு
கொடுக்க
முடியாம
போனது
.
2.தனியா
சகாயம்
அவர்களுக்கு
வச்ச
வெளம்பர
தட்டி
( அவரே நிச்சயமா விரும்பமாட்டாரு
)
3. ரெம்ப
முக்கியமா
கலை
நிகழ்ச்சி
நடந்துட்டு
இருக்கும்
போதே
ரெண்டு
பேரு
மேடையில
ஏறி
சகாயம்
அவர்களுக்கு
வெச்சுருந்த
வெளம்பர
தட்டிய
மாத்து
மாத்துன்னு
எடம்
மாத்திகிட்டு
இருந்தாங்க
. ( அவங்க
நோக்கம்
நல்லாவே
தெரிஞ்சுது
.)
ஆதலால்
அறிவுரை
செய்வீர்
:
இந்த
கால்
குறி , அரை குறி
, முக்கா
குறி , முழு குறி
அப்புறம் ஆச்சர்யகுறி இதெல்லாம்
தெரியாத
தற்குறி
நான்
. ஆதலால்
தெரிஞ்சவங்க
அறிஞ்சவங்க
அறிவுர
சொன்னிங்க
னா
நானும்
தெரிஞ்சுக்குவேன்
.
பிகு
: அடேங்கப்பா
! இந்த
ஒரு
பதிவுக்கே
நாக்கு
தள்ளி
போச்சு
. ஒன்ரெண்டு வார்த்தைகள எழுத்துல
கொடுவரதுக்கு
கீ
போர்டு
கூட
பெரிய
போராட்டமே
நடத்தவேண்டியதாப்போச்சு
. எப்டி
தான்
தெனம்
பதிவு
போடுறாங்களோ
. ரெம்ப
குஷ்டமப்பா
...!
மறுபடியும்
எழுதுறதுக்கு தெம்பும் திராணியும்
வந்தா
வண்ணத்துப்பூச்சி பறக்கும் .
அது
வர
ரெஸ்ட்
! ரெஸ்ட்
! ரெஸ்ட்
...!
( ஏன்னா
தமிழ்
ல்ல
எமக்கு
புடிக்காத
வார்த்த
ஓய்வு!
ஓய்வு!
ஓய்வு!
)
சரளமாக நேரிலே பேசற மாதிரி நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்... பதிவில் கொஞ்சம் கொஞ்சம் நெருடல்களையும் விட்டு வையுங்க... அப்ப தான் அடுத்த பதிவு எழுத தோணும்... மற்றபடி நான் புயல் எல்லாம் இல்லை... வாழ்வில் ஏற்பட்ட புயலால் (!?) வந்த சில பதிவுகள்... விரைவில் இணையம் வர முயற்சி செய்கிறேன்... இந்தப் பதிவின் தகவல் தந்த நண்பருக்கு நன்றி... வண்ணத்துப்பூச்சிகள் நன்றாக பறக்க மறுபடியும் வாழ்த்துக்கள் தோழரே...
ReplyDeleteவரும் 27-ஞாயிறு திருப்பூர் வரவில்லையா...? (9944345233)
ReplyDeleteமுதலில் வாழ்த்துக்கள் நண்பா, சொல்ல வந்த விஷயத்தைக் கூற கொஞ்சம் பொறுமையும் தமிழும் இருந்துவிட்டால் போதும் வலைபூ யாருக்கு வேண்டுமானாலும் வசப்பட்டுவிடும். நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகக் கூறியிருப்பது உங்களுக்கான சிவப்புக் கம்பள வரவேற்பு.
ReplyDeleteசில வார்த்தை உபயோகம் வெகு அழகு
//அதே நேரம் ஒருத்தர பத்தின நல்ல விசயங்கள பதிய நிமிச நேரம்போதும்னு நெனச்சதால இந்த பதிவு.
இழுத்து போட்டு வேலசெய்யனும்னு சொன்னதாலோ என்னவோ ஒரு சேர மட்டும் இழுத்து போட்டதோட சரி //
பதிவின் இடையில் உதயமூர்த்தி அய்யா பற்றி கூறியிருக்கும் கருத்துகள் சூப்பர்
நீங்க இன்னும் இது போன்றவார்த்தைகளால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கீங்க
//எதிர்பார்ப்புகள் ஏமாற்ற தவறுவதில்லைங்குறது நிருபணம் ஆச்சு// இந்த வார்த்தை கையாடலை நான் வெகுவாக ரசித்தேன் தல. விஸ்வரூபம் ரிலீஸ் ஆகலன்னு தெரிஞ்சதும் நீங்க எழுதியிருக்க இந்த வரிகள் தான் நியபகதிர்க்கு வந்தது. .
எனக்கு கூட இவருதாங்க மொதல்லபின்னுட்டுனாரு. ஹா ஹா ஹா பார்த்தேன் டிடி எபோதும்னே அப்டித் தான், எப்படித் தான் தேடிக் கண்டுபிடிகிராரோ.
//இயக்குனர் பாலா ஒரு மிகச்சிறந்த வலி// தாய் தமிழ் பள்ளி மாணவர்களைக் குறிப்பிட நீங்கள் கூறி இருக்கும் உவமை அருமை.
சீக்ரியம் ரெஸ்ட் எடுத்து முடிச்சு வாங்க. இன்னும் நிறைய எழுதுங்க.... உங்களுக்கான மேடை உங்களால் அலங்கரிக்கப்பட காத்துக் கொண்டுள்ளது.
//சரளமாக நேரிலே பேசற மாதிரி நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்...// தனபாலன் சார் சொன்னது முழுக்க் முழுக்க உண்மை
இழுத்து போட்டு வேலசெய்யனும்னு சொன்னதாலோ என்னவோ ஒரு சேர மட்டும் இழுத்து போட்டதோட சரி
ReplyDelete:) :) நல்லா இருக்கு இந்த வரிதான் :)
என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி :)
வண்ணத்துப் பூச்சி எனக்குப் பிடிக்கும் (எல்லோருக்கும் தானே?), சீக்கிரம் மீண்டும் பறக்கட்டும்!
வண்ணத்துத்துப்பூச்சி பதிவுலக வானில் சுழன்று சுழன்று சுத்த வாழ்த்துகள்..நேர்ல பேசவே மாட்டேங்குறீங்க.. பதிவு பலமா பேசுது..நல்லாயிருக்கு நண்பா..தொடர்ந்து எழுதுங்கள்..
ReplyDeleteசீனு உற்சாகப்படுத்திட்டேன்..அப்புறம் இல்லேன்னு சொல்லப்படாது..
இயல்பான எழுத்து நடை உங்ககிட்ட இருக்கு. கவிஞர்களுக்கும் குழந்தைகளுக்கும், ரசிக்கும் மனம் படைத்த அனைவருக்கும் வண்ணத்துப்பூச்சி மிகப் பிடித்தமானது. இந்த வண்ணத்தப் பூச்சி வலையும் அனைவர் மனதிலும் இடம்பிடிக்க என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்! (எழுத ஆரம்பிச்ச புதுசுல நானும் உங்களைப் போல எப்படித்தான் தினம் எழுதறாங்களோ... எங்கருந்துதான் மேட்டர் கிடைக்குதோன்னு வியந்திருக்கேன். ஆனா என்னாலயும் எழுத முடிஞ்சுது. உங்களுக்கும் அது சீக்கிரமே கை வந்துடும் நண்பா)
ReplyDeleteவணக்கம். வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட எல்லோரையும் பார்த்து பேசியிருக்கிறேன் என்பது கூடுதல் சந்தோஷம்.
பதிவு உலகத்திற்கு நல்வரவு!
வாழ்த்துகள்!
வணக்கம். வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசிறந்த எழுத்து நடை பதிவர் சந்திப்பின் மூலம் ஓரளவு நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். வாழ்த்துக்கள். தொடருங்கள் தொடர்கிறோம்.
வலைச்சரத்தில் எழுதுச்சரம் தொடுத்த சீனுவுக்கு ஒரு
ReplyDeleteமலர்ச்சரத்துடன் அறிமுகமாகிய அழகிய வண்ணத்துப்பூச்சிக்கு வாழ்த்துகள்...
பதிவர்களை பற்றி சுவாரஸ்யமா எழுதியிருங்கிங்க..! தொடர்ந்து நிறைய எழுதுங்க.. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று உங்களின் படைப்பு வலைச்சரத்தில் அறிமுகமானது வாழ்த்துக்கள் வலைப்பதிவாளர்கள் பற்றிய அறிமுகம் நன்றாக உள்ளது உங்கள் பக்கம்வருவது முதல் தடவை எழுத்துலகில் மேலும் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்!
ReplyDeleteதொடக்கத்தில் திருப்பூரில் கணக்குபுள்ள என்ற பெயரில் கஷ்டப்பட்ட நாள் முதல் இன்று நிப்ட் படித்து விட்டு முதல் நாளில் மெர்சன்டைசர் என்று உள்ளே வந்து குந்திக கொள்ளும் நாள் வரைக்கும் பார்த்த காரணத்தால் உங்கள் இந்த அசாதரணமான வளர்ச்சி எனக்கு பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. உங்களின் திறமையை வெளியே வருவதற்கு பல காரணங்களில் நானும் ஒரு காரணமாக இருக்கின்றேன் என்கிற வகையில் மகிழ்ச்சியே.
ReplyDelete