Apr 7, 2013

சொந்த செலவுல வச்சுக்கிட்ட ஆப்பு ....!

நீங்க எப்பவாது சொந்த செலவுல ஆப்பு வச்சுக்கிட்டதுண்டா ...? நான் வச்சுக்கிட்டேன் .


எப்பன்னு கேக்குறீங்களா ...? ஜஸ்ட்  டூ டேஸ் பேக் ...!

கரஸ்ல காலேஜ் போறோமே, யாருக்குமே தெரியாமப்போச்சுன்னா...? கட்டுன பதினஞ்சாயிரத்துக்கு ஒரு பப்ப்ளிகுட்டி கூட இல்லனா எப்பூடி ?. இப்டி மனஸ் புலம்பிக்கிட்டே இருந்துச்சு , சரி மனஸ்-ச திருப்தி படுத்தலாம்னு  நெனச்சு ஒரு பதிவ போட்டேன் , எம்.பி.ஏ நாங்களும் படிப்போம்ல னு . அது இப்ப படுத்து படுத்துன்னு படுத்துது” .


டி.டி அண்ணன் ஏற்கனவே சொல்லிருந்தாரு ....

பதிவுலகம் ஒரு போத(தி) மரம் மாதிரி , பதிவு எழுதுறது ஒரு போத மாதிரி , அளவா வச்சுக்குங்க இல்லன்னா அடிமையாகிடுவீங்கன்னு .

ரெண்டு நாளைக்கு முன்னாடி சுரேஷ் அண்ணங்கூட எழுதி இருந்தாரு ....

செரங்கு வந்தவன் கையும், வலைப்பூ ஆரம்பிச்சவன் கையும் சும்மாவே இருக்காது , சொறிஞ்சுகிட்டே இருக்கும்னு” ..

பெரியவங்க சொன்னா , பெருமாள் சொன்னமாதிரி ... கேட்டாதானே! ....பட்டாதான் புரியுது .. இப்ப அடிமையும் ஆயி , அதுக்கு மேல சொriயவும் ஆரம்பிச்சாச்சு .சொறியாட்டி இப்பல்லாம் தூக்கமே வரமாட்டிங்குது .

மொதநாள் காலேஜ் போன அனுபவத்த  , கொஞ்சம் சுவராஸ்யமா எழுதலாம்னு நெனச்சு,  கொஞ்சம் கற்பனையோட எழுதி ஒரு பதிவா போட்டா . கற்பனை கற்வினையாயிடுத்து...!

அந்த பதிவ எழுதுரதுக்கு முன்னாடி ஒண்ணமறந்துட்டேன் . இல்ல, இல்ல மூணமறந்துட்டேன். 

ஒண்ணு எனக்கு கல்யாணமானது .!
ரெண்டாவது எனக்கு ரெண்டு மச்சான்ஸ் இருக்குறது..!!
மூணாவது, ஒரு மச்சான் ஈ மெயில் லயும்  . இன்னொருத்தன் பிளாக்கராவே மாறியும் என்ன பாலோவ் பண்றது ...!

இப்ப சொல்லுங்க, நான் வச்சுகிட்டது சொந்த செலவு சூனியம் தானே . ஒரே பீதியா இருக்கு...! எப்ப எந்த மச்சான் கூப்டுவானோ , என்ன கேப்பாய்ங்க்களோ ன்னு . அவய்ங்க பாசமலருக்குதகவல் தந்துட்டாய்ங்களா இல்லையா ....? ஒண்ணுமே புரியல. சுனாமில சுறா மீனுகிட்ட மாட்டுனமாதிரி இருக்கு .

இது பத்தாதுன்னு, சொந்த செலவுல நா வச்சுகிட்ட இந்த ஆப்ப, எட்டு பேரு சேர்ந்து வீரியமான ஆப்பாக்கிட்டாங்க  , பின்னூட்டம்ங்க்குற பேர்ல ...!
பதிவு கொடுகுற பீதியவிட , பின்னூட்டம் கொடுக்குற பீதிதான் பேதிவர்ற மாதிரி இருக்கு .

வாங்க அந்த பேதிய பாப்போம் , ச்சீ.. ச்சீ .. அந்த பீதிய பாப்போம் ... அய்யோ வெரலு சிலிப்பாயிட்டே இருக்கு ... வாங்க அந்த பின்னூட்டத்தையும் , என் ஓட்டத்தையும் ஒரு கிளான்ஸ் பாப்போம் .

பின்னூட்டமும்  என் ஓட்டமும்


பின்னூட்டம் - திண்டுக்கல் தனபாலன் :

// ஹா... ஹா... ரசித்தேன்...

ஹீரோ ஆனதற்கு பாராட்டுக்கள்...

ஆக(கா)... இந்த வருஷம் முடிக்கிற மாதிரி இல்லை... எதுக்கும் கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லது... ஹிஹி... வாழ்த்துக்கள்...//


என் ஓட்டம் ஜீவன்சுப்பு  :
    
அண்ணேன் ..! ஏன்..? ஏன்னேன் இப்டி கொல வெறி.. ? கிளாஸ் முடிஞ்சு வெளில வரும்போது ஒரு பய சொல்றான் , என்ன அங்கிள்” , கமென்ட்லாம் பலமா இருக்குன்னு . நீங்க என்னடான்னா ஹீரோ வானதற்கு பாராட்டுறீங்க  , பையன் சொன்னத பாத்தா நா ஆண்டிஹீரோ கூட இல்ல, “அங்கிள்ஹீரோ ... ஆக(கா) நீங்க ரசிக்குறீங்க ... அய்யோ அய்யோ ..!பின்னூட்டம் தளிர் சுரேஷ்  :
            
//நல்ல சுவாரஸ்யமாத்தான் இருக்கு! புள்ளிவிவரங்கள் சேகரிக்க வாழ்த்துக்கள்!//


என் ஓட்டம் ஜீவன்சுப்பு  :

என்னாது..! சுவாரஸ்யமா இருக்கா? புள்ளி விபரம் சேகரிக்குறதா.. அப்டின்னா ? நல்லா சொல்றீங்கன்னேன் வாழ்த்து . வந்து பாருங்க நொந்து போயிருக்கேன் .பின்னூட்டம் திடம் கொண்டு போராடும் சீனு  :
            
// ஹா ஹா ஹா தல உங்க புள்ளிவிவரம் சரி இல்லையே.... நல்ல அனுபவப் பதிவு.. சீக்கிரம் மிஸ்க்கும் உங்களுக்குமான காதல் பதிவு வெளிவர வாழ்த்துக்கள்... //

என் ஓட்டம் ஜீவன்சுப்பு :

அட பாவி நண்பா ...! நா ஒனக்கு என்னய்யா துரோகம் பண்ணுனேன் ..? ஏன்யா இப்டி குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ற...? ஆண் பாவம் சும்மா விடாது . அதுவும் கல்யாணம் ஆன ஆண்பாவம் ரெம்பவே பவரானது .

இந்தா என்னோட சாபத்தை நல்லா கெட்டியா பிடிச்சுக்கோ ...! கூடிய சீக்கிரமே ஒனக்கு கல்யாணமாகி , ஒரே வருசத்துல , ஒரே பிரசவத்துல நாலு புள்ளைங்க பொறந்து உன்னைய படுத்து பத்து ன்னு படுத்தனும் . பிளாகர் பக்கமே தல வச்சு படுக்கக்கூடாது .
பின்னூட்டம் சுபத்ரா பேசுறேன் :
            
// முதல் நாள் வகுப்பிலேயே இப்படியா.. :) //


என் ஓட்டம் ஜீவன்சுப்பு :

அய்யய்யோ..! , நீங்களுமா ...? நம்புங்க, நான் ரெம்ப நல்லவேங்க... ! உங்களுக்குதான் நல்லாவே தெரியுமே ... எனக்கு அட அட டட டாவேஒழுங்கா எழுதத் தெரியாதுன்னு ( இப்பகூட நாலு வாட்டி அழிச்சு அழிச்சு தான் எழுதுனேன் ) நீங்க போயி இப்படியான்னு எழுதிப்புட்டீங்களே . மனஸ் தாங்கல போங்க .பின்னூட்டம் மின்னல் வரிகள் பாலகனேஷ்   :
            
//ஆஹா... கடைசி வரியப் பாத்தா இன்னும் பல அரியர்ஸ் விழும் போல இருக்கே...! டீச்சர்கள் எப்பவுமே ரசிக்க வைப்பவர்கள்தான்- என் பார்வையில்! ம்... நடக்கட்டும்நடக்கட்டும்!//

என் ஓட்டம் ஜீவன்சுப்பு  :

                 என்னாது ஆஹா வா ? எனக்கு அரியர்ஸ் விழுகுறதுல  உங்களுக்கு அப்டியொரு சந்தோசமாண்ணா.? //

நடக்கட்டும் , நடக்கட்டும்// ஆல்ரெடி நடக்க ஆரம்பிச்சுடுத்து. இனிமே நடக்கவே முடியாது . பின்னூட்டம் தேவியர் இல்லம் ஜோதிஜி   :
            
// பாடங்கள் பாக்கி இல்லாமல் முடிக்க வாழ்த்துகள். //

என் ஓட்டம் ஜீவன்சுப்பு  :

               ஹலோ அண்ணா...! நீங்க இங்கதான் இருக்கீங்களா ? உங்கள பாத்துதான் நான் பதிவெழுதவே ஆரம்பிச்சேன் . சூப்பரா எழுதாட்டியும் , கொஞ்சம் சுமாரா ரெண்டு மூணு பதிவெழுனேன் அப்பல்லாம் உங்கள ஆளக்காணும்.  மொக்கையா எழுதுன ஒரு பதிவுக்கு வாழ்த்துச்சொல்லி , என்னோட டேமேஜுக்கு வேல்யூ அடிசன் பண்ணிட்டீங்க .பின்னூட்டம் ஸ்கூல் பையன்   :

 // எம்பி எம்பி எம்பிஏ படிங்க...//

என் ஓட்டம் ஜீவன்சுப்பு  :

               எலேய்..! ஸ்கூல் பையா என்ன நக்கலா ...? எனக்கு கல்யாணம் மட்டும்தான் ஆகிருக்கு, ஆனா, ஒமக்கு கல்யாணமாகி , பள்ளிக்கூடம் போற வயசுல பையன் இருக்கான் . ஞாபகம் இருக்கட்டும் . மகனே என்னைக்காவது மாட்டாமலா போவ ? அன்னைக்கு வச்சுருக்கேண்டி ஆப்ப்பு ......! இந்தநாள் உன் காலண்டர்ல குறிச்சுவச்சுக்க  .... நீ சிங்கத்த சொறண்டி பாத்த  நாள் . பதிலுக்கு பதில் நானும் சொறண்டுவேம்பு.


பின்னூட்டம் அந்தமான் தமிழ் நெஞ்சன்   :


// எல்லாம் சரி... பாஸ் பன்னிட்டீங்களா பூட்டுக்கிச்சா?//


என் ஓட்டம் ஜீவன்சுப்பு  :

               அய்யய்யோ...! இப்பத்தான்யா கிளாசுக்கே போயுருக்கேன் . அதுக்குள்ளே புட்டுக்குச்சாவா ...? நல்லா கேக்குறாங்கய்யா கேள்வி ?  ஏற்கனவே தலகாணி சைஸ்ல இருக்க புக்க பாத்து கலவரம் ஆகி இருக்கேன் . நீங்க வேற கடுப்புல துடுப்பு போடுறீங்க .அப்பாடி .... முடியல .  நா என்ன முடிவு பண்ணி.......

வீசும் வெளிச்சத்திலே துகளாய் நானிருப்பேன் அட அட டட டா .... 

இருங்க பாஸ் போன் வருது , “அய்யய்யோ...!  போன் வரல புயல் வருது....... பொண்டாட்டிஈஈ.ஈ..!.

சொல்லு செல்லம் ....!

“...........”

என்னது பிளாக்கரா ...? “

“..........”

டார்லிங் ..! எனக்கு லாக்கர் தெரியும் , புரோக்கர் தெரியும் , அது என்னாது பிளாக்கர் ....? ஹைபிரிட் பண்ணுன பிளாக்காயா ...? “

“.........”

அய்யோ , நெசமாத்தாண்டா ..! காட் பிராமிஸ் எனக்கு தெரியாது குட்டிம்மா .

“.......”

என்னாது ...? காதலா ...? அய்யோ தப்பு , தப்பு .. அபச்சாரம் அபச்சாரம் .. கன்னத்துல போட்டுக்க.

“........”

ஹலோ..! புச்சிம்மா...! .ஹல்லோலோஓஓஓ.....!

டொய்ங் ...! டொய்ங் ..! டொய்ங் ...!

மாப்பு வச்சுடாய்ங்கடா ஆ.....ப்...ப்...பூ...பூ...பூ...பூ .....!


நா ஆணியே புடுங்கல ... எம்.பி.ஏ வே படிக்கல ... டிஸ் கண்டினியு பண்ணிட்டேன் போதுமா ...?   

31 comments:

 1. சும்மா ஒரு ஜாலிக்காக எழுதினது... இப்படி ஆகி விட்டதே... இருந்தாலும் இப்படி ஒரு பின்னூட்ட பதிவு கிடைக்குமா...? ஹிஹி

  ஆமா... மச்சான் அவர்களின் முகவரி என்ன...? (ப்ளாக் முகவரி...!)

  சும்மா சொல்லுங்க... இன்னொரு சுவாரஸ்யமான பதிவு நீங்க எழுத வேண்டாமா...?

  ReplyDelete
  Replies
  1. //சும்மா சொல்லுங்க... இன்னொரு சுவாரஸ்யமான பதிவு நீங்க எழுத வேண்டாமா...? //

   வேண்டாம்ண்னேன் ...வேண்டாம் ...! இதுவே ரெம்ப காலத்துக்கு தாங்கும் .

   Delete
 2. // நா ஆணியே புடுங்கல ... எம்.பி.ஏ வே படிக்கல ... டிஸ் கண்டினியு பண்ணிட்டேன் போதுமா ...?//

  தலகாணி புத்தகத்தைப் பார்த்துப் பயந்ததைக் காரணம் காட்டாம, பின்னூட்டம் போட்ட எங்க எல்லாரையும் காரணமா வெச்சு எப்படியோ எம்.பி.ஏ.க்கு முழுக்கு போட்டுட்டீங்க போல :))

  ReplyDelete
  Replies
  1. கரக்டா கண்டுபிடிச்ச உங்களுக்கு , ஒரு தலைகாணி அனுப்பி வைக்கப்படும் .

   Delete
  2. அனுப்பி வையுங்க :))

   Delete
  3. அட்ரசே இல்லாம அனுப்பி வைக்க சொன்னா எப்பூடி ...? :))

   Delete
  4. ‘சுபத்ரா, திருநெல்வேலி’னு கேட்டா பிறந்த குழந்தை கூட எங்க வீட்டு அட்ரஸை சொல்லிடுமே :)

   Delete
  5. "சுபத்ரா , திருநெல்வேலி" அட்ரஸ் சொல்லு ...,

   "ங்கே"

   "சுபத்ரா , திருநெல்வேலி" அட்ரஸ் சொல்லு செல்லம்ல அடரஸ் சொல்லு ...,

   "ஹி ஹி .."

   "சுபத்ரா , திருநெல்வேலி" அட்ரஸ் சொல்லு ...,"

   வீ.........ல் ......! வீ....ல் ...!வீ....ல் ...!

   டேய் யார்றா அது பிறந்த குழந்தைய பயமுறுத்துனது.. இன்னாடா சொல்லி பயமுறுத்துன ...?

   அய்யய்யோ சத்தியமா நா இல்லைங்கோ ......! கேக்கச்சொன்னத தாங்கோ கேட்டேன் ....! நீங்க எதுன்னா கேக்கணும்னா "சுபத்ரா , திருநெல்வேலி" அங்க போயி கேளுங்கோ....!

   Delete
  6. எல.. எங்க வூருக்குப் போயி இப்பிடிக் கேட்டா அந்தக் கொளந்த எப்படில ச்சொல்லும்? நாங்க வேற மாரிலா பேசுவோம். நீ இப்பிடிப் பேசுத ;)) பாரு, பாவம் கொழந்த பூச்சாண்டினு நெனச்சு ப்பயந்துட்டு :))

   Delete
  7. ஆத்தா அஞ்சலி நீ எங்காத்தா இருக்க சீக்குரம் வந்துரு தாயி .....! ஒனக்கு போட்டியா இங்க ஒரு சேர்மக்கனி வந்துட்டாக ...! வந்து என்னான்னு கேளு தாயி ...? பச்சப்புள்ளய அதட்டுராகவே ...!

   எல இருலே அங்க ஆத்தா அஞ்சலிய கூட்டியாறேன்லே ...!

   Delete
 3. மொத்தம் 23பேர் பாலோ பண்ணறாங்க.இதுல எனக்கு தெரிஞ்சவங்க பாதிபேருக்குமேல இருக்காங்க/.
  மீதிப் பேர்ல துப்பறியும் சுப்பு சாரி சாம்புவை வச்சி உங்க மச்சானை கண்டு புடுச்சி அவர் கிட்ட உங்கள பத்தி புகழ்ந்து நல்லதா நாலு பிட்டு சேத்து சொல்லாறோம்.கவலைபடாத சுப்பு.

  ReplyDelete
 4. பின்னூட்டங்களை வைத்தே ஒரு பதிவு தேத்திட்டீங்களே வெரிகுட்! நான் சொன்ன புள்ளிவிவரம் உங்க பாடம் அதாங்க குவாண்டிடிவ் எகனாமிக்ஸோ என்னவோ சொன்னீங்களே அதை பத்தி! அனாவசியமா பீதி அடையவேணாம்!

  ReplyDelete
  Replies
  1. // குவாண்டிடிவ் எகனாமிக்ஸோ // அய்யோ ... அழகா தமிழ்"படுத்தி"ட்டீங்களே .

   Delete
 5. Replies
  1. வாங்க பாஸ் . தல க்கு முன்னாடி தறு போட மறந்துட்டீங்க தானே ...? ஐ நோ ... ஐ நோ ...!

   Delete
  2. Hahahaa :D....அப்டின்னா நீங்க கூட அப்டிதான் நெனச்சுருக்கீங்க ....சரிதானே ?

   Delete
 6. சுவாரஸ்யமான பதிவு
  மிகவும் ரசித்தேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கய்யா வாங்க . ரெம்ப நன்றிங்க .

   Delete
 7. வல்லவனுக்கு ‌கமெண்ட்டும் ஆயுதம். பதிவே எழுத பயனபட்டிருக்குதே...! இதுக்குத்தான்யா என்னை மாதிரி இன்டர்நெட் தெரியாத மச்சான்கள் இருக்கற பொண்ணாப் பாத்துக் கட்டணுங்கறது! ஹா... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. // இதுக்குத்தான்யா என்னை மாதிரி இன்டர்நெட் தெரியாத மச்சான்கள் இருக்கற பொண்ணாப் பாத்துக் கட்டணுங்கறது! ஹா... ஹா... ஹா...//

   அண்ணேன்... உங்க காலமெல்லாம் மலையேறிப்போச்சு ... இப்பல்லாம் (நான்) "ஈ" கூட இண்டர்நெட்ல ஐட்டம் சாங்குக்கு குத்தாட்டம் போடுது .

   Delete
 8. பதிவு எழுதறது போதை மாதிரி-ன்னு D.D. அண்ணன் அட்வைஸ் பண்ணியிருந்தாரா? கருத்து கந்தசாமியா மாறிட்டு வர்ற அவரை வெச்சே ஒரு டுடோரியல் காலேஜ் ஓபன் பண்ணிடலாம் போலருக்கே...! ஹி... ஹி...! žž

  ReplyDelete
  Replies
  1. //கருத்து கந்தசாமியா மாறிட்டு வர்ற அவரை வெச்சே ஒரு டுடோரியல் காலேஜ் ஓபன் பண்ணிடலாம் போலருக்கே...! //

   சூப்பரு . காலேஜ் க்கு .. என்ன பேரு வைக்கலாம்ணும் நீங்களே சொல்லீடுங்க அண்ணா ...!

   Delete
 9. மிகவும் ரசனையான பதிவு .. :) :) :)

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க . பேர பாத்தாலே சும்மா அதிருதுங்க ....!

   Delete
 10. அடப்பாவி... சும்மா ஒரு வார்த்தை கமென்ட் போட்டதுக்கு இவ்வளவு டீப்பா திட்றானேயா... விட்டா பேரன் பேத்தி வரைக்கும் திட்டுவான் போலிருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
  Replies
  1. ஹா ...ஹா....ஹா ... ச்சும்மானாச்சுக்கும் ...லுல்லாயி ...! தப்பா எடுத்துக்காதீங்க .ஆனாலும் ஆப்பு வெயிட்டிங் பாஸ் . கொஞ்சம் உசாராவே இருந்துக்கங்க .

   Delete
 11. வோய் நீர் விட்டது சாபமா இல்ல வரமா... வரமா வந்த சாபமா... சாபமா வந்த வரமா.... ஒரே கண்பியுஸ் அய்யா

  ReplyDelete
  Replies
  1. இப்ப வரம் மாதிரி தான் தெரியும். போக போகத்தான் புரியும் அது எவ்வளவு பெரிய சாபம்னு......!

   Delete

Related Posts with Thumbnails