Apr 2, 2013

பறவையே எங்கு போகிறாய் ...?







கற்றது தமிழ் படத்தின் இந்த பாடலை, எப்பொழுது கேட்டாலும் ஒரு விதமான ஏக்கமும்  , தவிப்பும், வலியும் வந்து சூழ்ந்து கொள்கின்றது . பாடலின் இசையும் , பாடல் வரிகளும் , ராஜாவின் குரலும், கேட்கும் செவிகளை படம்பிடிக்கப்பட்ட அந்த வறண்ட வட மாநிலத்திற்கே இழுத்துச்செல்கின்றது.

அஞ்சலிக்கும் , இயக்குனருக்கும் இந்தபடம் அறிமுகமாம் . ஆகச்சிறப்பான அறிமுகம் . படம் வெளிவந்த புதிதில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை . பார்க்கவேண்டும் என்று தோன்றியபோது படம் தியேட்டரை விட்டு போய் விட்டது . சில திங்களுக்கு முன் தொலைக்கட்சியில் பார்த்தேன் . இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று விளம்பரப்படுத்தப்படும், ஒரு திரைப்படத்தை முழுமையாக பார்ப்பதற்கு நிறைய பொறுமையும் , சகிப்புத்தன்மையும் வேண்டும் . இறுதிக்காட்சிக்கும் , வணக்கம் போடுவதற்கும் இடையில் கூட நான்கு விளம்பரங்கள் போடுவார்கள் . மெனக்கெட்டு பார்த்தேன் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆனது .

படம் நெடுகிலும் ஒரு வலி இழையோடுகின்றது , ஆனால் அது பாலா படம் போலவோ, பாலாஜி சக்திவேல் படம்போலவோ குரூரமாக இல்லை , அது ஒரு சுகமான வலி. ஜீவாவின் மிகச்சிறந்த படம் எதுவென்று கேட்டால் கற்றது தமிழை சொல்லலாம் . பிரபாவும் , ஆனந்தி யும் நீக்கமற நிறைந்திருந்த படத்தில் எந்தவொரு காட்சியிலும் ஜீவாவையோ , அஞ்சலியையோ பார்க்கமுடியாது . அவ்வளவு யதார்த்தம் .

இறுதிக்காட்சியில் அவர்கள் இறப்பதாகவோ , வாழ்வதாகவோ காட்டாமல் முடித்தது எமக்கு மிகவும் பிடித்திருந்தது . இயக்குனர் ராமின் அடுத்த படமான தங்க மீன்கள் படப்பிடிப்பில் உள்ளதாக சொல்கிறார்கள் . படம் வந்தவுடன் முதல் காட்சி  பார்க்க வேண்டும் . அதுதான் ராமிற்கு கொடுக்கும் பாராட்டு.

பெரும்பாலான தமிழ் படங்களில், இறுதிக்காட்சிகளில் சோகமான முடிவுகளையே வைக்கிறார்கள். அப்படி வைக்கும் படங்களையே யதார்த்த சினிமா என்றும் சிறந்த சினிமா என்றும் கொண்டாடுகிறார்கள் . பாலா, பாலாஜி சக்திவேல் , பிரபு சாலமன் படங்களையெல்லாம் சந்தோசமாக பார்க்க ஆரம்பிக்கும் நான், படம் முடிந்து வெளிவரும் போது, நீண்ட நாள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நோயாளி போல் ஆகிவிடுகின்றேன். இரண்டு மணி நேர படத்தில் எந்த ஒரு விசயத்தையும் , எந்த ஒருவரின் வாழ்வியலையும்  முழுமையாக, அதன் ஆழம் வரை சென்று காட்சிபடுத்தமுடியாதபோது, ஏன் ஒரு சோகமான முடிவை வைக்கிறார்களோ இறுதிக்காட்சிகளில்.

எனக்கென்னவோ இறுதிக்காட்சியை, பார்ப்பவர்களின் ரசனைக்கும் , யூகத்திற்கும் விட்டுவிடுவதே சரியென்று தோன்றுகிறது அதுவே பிடித்தும் இருக்கிறது . அந்தவகையில் நூற்றி என்பது படமும் , அன்பே சிவம் படமும், கற்றது தமிழும் மிகவும் பிடிக்கும் . மேற்சொன்ன மூன்று படங்களிலும், கதையை நகர்த்திச்செல்லும் முதன்மையான கதாபாத்திரங்களுக்கு  முடிவே இருக்காது . இந்த மூன்று படங்களின் முடிவிலும் அழகான ஒரு பயணம் ஆரம்பிக்கும் . அது ஒரு முடிவில்லா பயணம் . இன்று வரையிலும் இந்த மூன்று படங்களின் கதாபாத்திரங்களும், எங்கோ இந்த உலகத்தின் ஓர் பகுதியில் சந்தோசத்தையும் , நம்பிக்கையையும் சுமந்துகொண்டு சுற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்றே நம்பிக்கொண்டிருக்கின்றேன் . எங்கேனும் அவர்களை பார்த்தீர்களேயானால் சொல்லுங்கள் உங்களை மிகவும் நேசிப்பவர் , விரும்புவர் வண்ணத்துபூச்சியாக வலையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறார் உங்களை தேடி என்று .

11 comments:

  1. ரசித்த விதம், மூன்று படத்தைப் பற்றிய பயணமும், முடிவில் வலையுலகில் பறப்பதும் அழகு... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அலுவலக வேலைகள் குறைவோ...? பகிர்வுகள் வருவதை வைத்தது சொன்னேன்.... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இல்லையென்று முழுப்பொய் சொல்ல விரும்பவில்லை .

      Delete
  3. அந்தப் பாடல்.. பறவையே எங்கு இருக்கிறாய் :)

    கேட்க ஆரம்பித்தால் ஏதோ ஒரு சொல்ல முடியாத வலி மனதை ஆட்கொண்டுவிடும்..

    /எனக்கென்னவோ இறுதிக்காட்சியை, பார்ப்பவர்களின் ரசனைக்கும் , யூகத்திற்கும் விட்டுவிடுவதே சரியென்று தோன்றுகிறது அதுவே பிடித்தும் இருக்கிறது/

    Again, சொல்லாமல் விட்ட விஷயங்கள் என்றுமே அழகு..

    ReplyDelete
    Replies
    1. அடடா ...! அடுத்தடுத்து பல்புகள் வாங்கி கொண்டேயிருக்கின்றேனே . :)

      ( இந்த அடடா வில் எதையும் மிஸ்பண்ணவில்லை என்றே நினக்கின்றேன் ) :)

      நன்றி ...!

      Delete
  4. //இந்த மூன்று படங்களின் முடிவிலும் அழகான ஒரு பயணம் ஆரம்பிக்கும் . அது ஒரு முடிவில்லா பயணம் . இன்று வரையிலும் இந்த மூன்று படங்களின் கதாபாத்திரங்களும், எங்கோ இந்த உலகத்தின் ஓர் பகுதியில் சந்தோசத்தையும் , நம்பிக்கையையும் சுமந்துகொண்டு சுற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்றே நம்பிக்கொண்டிருக்கின்றேன் . //- ரசனையை சுமந்திருக்கும் எண்ணங்கள்.. !

    ReplyDelete
  5. நன்றி உஷா அக்கா( ?). உங்கள் பதிவை மிஸ் பண்ணிட்டேன் இவ்வளவு நாளாக...எல்லாமே junk போல்டருக்கு போயிடுத்து . இப்பொழுது தொடர்கிறேன் join this site மூலம் .

    ReplyDelete
  6. ரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள். ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாசித்ததற்கும் , வாழ்த்தியதற்கும் ரெம்ப நன்றிங்க ...!

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

Related Posts with Thumbnails