Apr 28, 2013

ஞானும் பயணக்கட்டுர எழுதப்போறேன் ....!வலையுலகில் இது பயணக்கட்டுரை மா....த........ம்...! எல்லாரும் எழுதுறாங்கோ ஸோ ஞானும் பயணக்கட்டுர எழுதலாம்னு முடிவு பண்ணிருக்கேன் . ஊரை ஓட்டி வாழ்றது தானே உத்தமம்.....!

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மருதமல போயிட்டு வந்தேன் . அதனால , மருதமலைக்கு போயிட்டு வந்தத சுவைபட எழுதப்போறேன் ....! ( சுவைபட க்கு பக்கத்துல ஆச்சரியக்குறி, கேள்விக்குறியல்லாம் போடமுடியாதுங்க...! கான்ஃபிடன்ட் பாஸ் கான்ஃபிடன்ட்..! ) சரி பயணக்கட்டுர எழுதுறதுன்னு முடிவு பண்ணியாச்சு யார் மாதிரி எழுதுறது .... ? யோசிக்கவே இல்ல,  மொத சாய்ஸ் நம்ம “பாலகணேஷ்” அண்ணேந்தான்.....!

பாலகணேஷ் அண்ணேன் மாதிரி கலகலப்பா எழுதுனம்னா படிக்குறவங்க ச்சும்மா விழுந்து விழுந்து சிரிப்பாங்க, உருண்டு பொரண்டு ரசிப்பாங்க, கமெண்ட்ஸ் ச்சும்மா அள்ளும் அப்டின்னு முடிவு பண்ணி, நைட்டு பூரா கட்டில்ல விழுந்து உருண்டு பொரண்டு யோசிச்சு ரெண்டு பக்கம் எழுதுனேன். எழுதுனத வாசிச்சு பாத்தா ....! பாத்தா ...!. ஆத்தா ...! சிரிப்பே வரலங்க ....! கடுப்பு தான் வருது யுவர் ஆனர் ...! சகிக்கல ...! அப்டியே போட்டேன்னா நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சுடும் . அதுசரி அவரு எவ்ளோ பெரிய ஆளு ?  “மலையோட போயி மடு மோதலாமா” ? லாது ...லாது ..! “புலியப்பாத்து பூனை சூடு போட்டுக்கலாமா” ? லாது..! லாது ...! ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் தெரிஞ்சுகிட்டேன்.... இன்னான்னு கேக்குறீங்களா ..? தப்பித்தவறி கூட பதிவுல என் போட்டோவயோ , கொரங்கு போட்டோவயோ போட்டுடக்கூடாது . எப்டி காலாய்ச்சுருக்கோம் நமக்கே திரும்பிடுச்சுன்னா...? ( ஆமா, ஓம் போட்டோவுக்கும் கொரங்கு போட்டோவுக்கும் என்னப்பா வித்தியாசம் அப்டின்னெல்லாம் கமெண்ட் போடப்புடாது, ப்புடாது...! ப்புடாது ..!ப்புடாது ...!

செரி மொத ஆப்சன் நமக்கு ஒத்துவரல. அடுத்து........ ஆங்...! நம்ம “பீப்பீ” மாதிரி எழுதலாம் ...!

நம்ம பிலாசபி பிரபா மாதிரி ச்சும்மா “கிளுகிளு”ப்பா , ரசனையோட , எழுத்துப்பிழையே இல்லாம ஒரு நீ.......ண்....ட.... பயணத்தொடர் எழுதலாம் அப்டின்னு முடிவு பண்ணி, நல்லெண்ணைய நறுக்குன்னு நடுமண்டைல தேச்சுட்டு வீட்லே ரூம் போட்டு களத்துல குதிச்சேன் . நடுச்சாமம் வரைக்கும் எழுதுனேன் . சுமாரா நாலு பத்தி எழுதிமுடிச்சு படிச்சுப் பாத்தா ...! பாத்தா..!  உவ்வே...ஏ..ஏ...! வாமிட் வாமிட்டா வருது அவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு . அப்டியே போட்டேன் “ரசனையாகாது ரகளையாயிடும்”. பிரபா மாதிரி வார்த்தை ஜாலத்தோட பதிவெழுதுரதுக்கெல்லாம் மச்சம் வேணுங்க, நமக்கு காக்கா போட்ட எச்சம் மாதிரி ஒடம்பு பூரா தழும்பு தான் இருக்கு .

ரெண்டாவது ஆப்சனும் அவுட்டு. அடுத்து ....? அடடே நம்ம சீனு ...! வரலாற்று பதிவெல்லாம் எழுதுறாப்புல அவர எப்பூடி மிஸ் பண்ணுனோம் . அடச்சே இவ்ளோ நேரம் கையில “வெண்ணைய” வச்சுண்டு நெய்க்குல்ல அலஞ்சுருக்கோம் ....! 

“மருதமலையை நோக்கி ஒரு வரலாற்றுப் பயணம்” – அடடா தலைப்பே ச்சும்மா அதிருதுல்ல .....! ஓக்கே நமக்கு தோதான ஒரு ஆளப்புடிச்சாச்சு , அட்டகாசமான ஒரு தலைப்பையும் வச்சாச்சு அடுத்து பதிவுல குதிக்க வேண்டியதுதான் . மொத வேல டேட்டா கலெக்ட் பண்ணனும், ரெடி ஸ்டார்ட்..!

மருதமலை ...,
கொங்கு மண்டலம் ,
அறுபடைவீடு,
குடைவரைகோவில்,
நிலவறைக்கதவு ,
தாழி,
தேவர் ...

ஆ..த்.தாடி..! இப்பவே கண்ணகட்டுதே..! எப்ப கலெக்ட் பண்ணி எப்ப பதிவெழுதி எப்ப முடிக்குறது ...!

ஏண்டா டேய்ய்.......! “வரலாறுன்னா எஸ்.டீ.டி தானே”ன்னு கேக்குற நீயெல்லாம் வரலாற்றுப் பயணம் எழுத நினைக்கலாமா ...? இதெல்லாம் ஒனக்கே “டுட்டுடூ” மச்சா தெரியலையான்னு மனஸ் மண்டையில அடிச்ச பின்னாடி தான் புரிஞ்சுது, எவ்ளோ பெரிய ரிஸ்க்கு எடுத்துருக்கோம்னு . மொதல்ல நம்ம போனது வரலாற்றுப் பயணமே இல்ல ..! அப்டியே இருந்தாலும் வரலாற்று பயணம் எழுதுறதுக்கு “சீனு” மாதிரி “தெறமையும்” , “பொறுமையு”ம் வேணும். நமக்கிட்ட “பேனா மை” கூட கெடையாது நமக்கு இதலாம் தேவையா ...?

போச்சு மூணு ஆப்சனும் போச்சு ...! பேசாம எழுதாம விட்ரலாமா...? நோ...! நெவர் ..... ! ஒருபோதும் முன்வச்ச கைய பின் வக்கப்புடாது....! அப்றம் வேற யாரு மாதிரி எழுதுறது ...?  ஆங் ..! ஐடியா..! நம்ம மாதிரியே எழுதுவோம் ...! இவ்ளோ நாள் எழுதலையா ? நாம எழுதுறதையும் படிக்குறாங்கல்ல ? கொஞ்சம் வித்தியாசமா எழுதுவோம் ...! வித்தியாசம் ...................?அது என்ன வித்தியாசம்ன்னு அடுத்த பதிவுல படிச்சு தெரிஞ்சுக்குங்க யுவர் ஆனர்ஸ்.........!
( ஹா ஹா ...! நாங்களும்  வப்போம்ல சஸ்பென்சும் டுவிஸ்ட்டும்...!)

அடுத்த பதிவு : பயணத்தொடர் 1 – ஏன் போனேன் எப்பூடி போனேன் மருதமலை ...!


ப்புடாது...! ப்புடாது..! ப்புடாது...! :

“கலாய்த்தலும் , கலாய்க்கப்படுதலும் நட்பின் உரிமையே” என்று எல்லாம் வல்ல எங்கள் பெரியவால்கணேஷ் அண்ணேன் சாரி பெரிய”பால்கணேஷ்” அண்ணேன் சொல்லியிருப்பதால்  கலாய்க்கப்பட்டவர்கள் கண்டிப்பா கோவிச்சுக்கவோ , அன் பாலோவ் செய்யவோ ப்புடாது..! ப்புடாது..! ப்புடாது...! பதிலுக்கு நீங்க எம்புட்டு வேணும்னாலும் கலாய்ச்சுக்கலாம் .

“மலை”யோட போயி மடு மோதலாமா...... ? “நம்ம “பிலாசபி பிரபா” மாதிரி ச்சும்மா கிளுகிளுப்பா...”
“அடச்சே இவ்ளோ நேரம் கையில “வெண்ணைய” வச்சுண்டு நெய்க்குல்ல அலஞ்சுருக்கோம்” ..........!
இந்த வரிகளையெல்லாம் அடைப்புல போட்டு – ஹா ஹா ஹா என்று சிரித்து, எதிர்க்கட்சி பதிவர்கள் சிலர் திட்டமிட்டு நம்முள் பகையை ஏற்படுத்த ட்ரை பண்ணுவாங்க அப்பக்கூட நீங்க கோவிச்சுக்கப்புடாது...! ப்புடாது..! ப்புடாது..! ப்புடாது...!12 comments:

 1. ஹா ஹா... 'ஐ எம் வெய்டிங்'....!

  ReplyDelete
  Replies
  1. தளபதி நீங்க வெயிட்டிங்லே இருங்க ....! தல சீக்கிரம் வந்துடுவாரு ...!

   என்னாது தல யாருன்னு கேக்குறீகளா ...? ஹா ஹா நாந்தேன்...!

   Delete
 2. இப்பவே எனக்கு கண்ணக்கட்டுது நண்பா...

  ReplyDelete
  Replies
  1. என்னாது இப்பவே கண்ணக்கட்டுதா ...?

   யாரங்கே புடிச்சு கட்டுங்கய்யா இவர ...!

   எவ்ளோ க...ஷ்ஷ்ஷ்...டப்பட்டு பதிவெழுதுறேன் ...இவருக்கு கண்ணக்கட்டுதாம்ல ...!

   Delete
 3. ஹா... ஹா... ரசித்தேன்...

  இன்று மருதமலை சென்று வந்தேன்... இப்பதிவைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது...

  முருகா...! கவனித்துக் கொள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. முருகர் நல்லாவே கவனிச்ச்ட்டார் ....!

   Delete
 4. பயணக் கட்டுரையா? பேஷ் பேஷ்!

  ReplyDelete
  Replies
  1. பேஷ் பேஷ்! ( ரெம்ப நல்லாருக்குன்னு..?) பாராட்டுன ஒங்களுக்கு ரெம்ப நன்றிங்கோ ...!

   Delete
 5. சிங்கம் களத்துல எறங்கிருச்சு டோய்...! எது மாதிரியும் இல்லாத ஒரு புது(?) மாதிரியா வரப் போவுதுன்னு சுவாரஸ்யமா ட்ரெய்லர் ஓட்டிப்புட்டே.... அதுவும் ரெண்டு பாவிங்களோட ஒரு அப்பாவியவும் சேத்துக் கலாய்ச்சு.. ஹி... ஹி...! மெயி்ன் பிக்சர் சுவாரஸ்யமா தராம... திருமதி தமிழ் மாதிரி தந்தேன்னு வெச்சுக்க... என்ன பண்ணுவேன் தெரியும்ல.......
  ........
  .........
  ............
  ............
  அலுதுடுவேன்!

  ReplyDelete
  Replies
  1. அண்ணேன் திருமதி தமிழையே சகிச்சுக்கிட்டீங்க ... அதவிட மொக்கையால்லாம் இருக்காதுன்னு கண்டிப்பா சொல்லமாட்டேன் .....! ஹா ஹா ஹா ..!

   Delete
 6. // “சீனு” மாதிரி “தெறமையும்” , “பொறுமையு”ம் வேணும்.// யோவ் இந்த இடத்துல கண்டிப்பா ஆச்சரியக் குறி வந்து இருக்கணும்யா ஹா ஹா ஹா

  ஒக்கா மக்கா வரிக்கு வரி நகைச்சுவையா எழுதிட்டு சிரிப்பே வரலியாம், யாருகிட்ட இந்த டகால்டி வேல எல்லாம்....

  இதே ஸ்பீட்ல சீக்கிரம் உங்க வண்டிய கிளப்புங்க

  ReplyDelete
  Replies
  1. வண்டிய கிளப்புங்க ...! கிளப்பிவுடுரதுலேயே இருங்கய்யா ...!

   Delete

Related Posts with Thumbnails