Apr 10, 2013

வாய்க்கொழுப்பு ...?






சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் அலுவகத்திற்கு தாமதமாக சென்றேன்.

காரணம்...?

வெள்ளிக்கிழமை மாலையில் ,  “தன்சனி” தொலைய எவரோ ஒருவர் சாலையில் உடைத்த சிதறு தேங்காய் , சனிக்கிழமை காலையில் “என்சனியாகி” வண்டியின் டயரை பதம் பார்த்துவிட்டது .
(இதுக்கு பெயர் தான் சனிப்பெயர்ச்சியோ ...?)

அவசர அவசரமாக அலுவலத்திற்குள் நுழைந்த என்னிடம் , எதிர்ப்பட்ட சக பெண் அலுவலகர் கேட்டார்...

“லேட்டாயிடுச்சு போல” ...?

“ஆமாங்க” ...

“என்னாச்சு” ...?

“வண்டி பஞ்சராயிடுச்சுங்க ..”

“எங்க” ?

“வழக்கம் போல டயர்லதான் “.

“.......!.”

இதன் பிறகு , அவர் வேலையை விட்டு போகிறவரை என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை . பின்னொரு நாள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரிடம் குமுறியிருக்கிறார், எனக்கு “வாய்கொழுப்பு” அதிகமென்று .

நீங்களே சொல்லுங்க யுவர் ஆனர் . இதுக்கு பேரு வாய்க்கொழுப்பா... ?



12 comments:

  1. //“தன்சனி” தொலைய எவரோ ஒருவர் சாலையில் உடைத்த சிதறு தேங்காய் , சனிக்கிழமை காலையில் “என்சனியாகி”//
    :D

    ReplyDelete
  2. அதானே...? சிரிக்கத் தெரியாதவர்... விட்டுடுங்க பாவம்...

    ReplyDelete
    Replies
    1. கரக்டா சொன்னிங்க அண்ணேன் ...!

      Delete
  3. இதுக்கு பெயர் தான் சனிப்பெயர்ச்சி
    ஹி ஹி

    வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்

    ReplyDelete
    Replies
    1. // வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில் //

      என்னாங்க ... நாடி ஜோசியம் பாக்க கூப்புடுற மாதிரி எழுதிருக்கீங்க ...! ஆத்தாடி ...!

      Delete
  4. //“வழக்கம் போல டயர்லதான் “.//

    இந்த மாதிரி பதில் சொன்னா யார் தான் திட்ட மாட்டாங்க?

    ReplyDelete
    Replies

    1. //இந்த மாதிரி பதில் சொன்னா யார் தான் திட்ட மாட்டாங்க?//

      ஹல்லோ பாஸ் ... நீங்க ந.சி.ரா பேரனாட்டுக்கு ...! சொல்லவே இல்ல ...?

      பீ கேர்ஃபுல் --- என்னச்சொன்னேன் ...!

      Delete
  5. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் அலுவகத்திற்கு தாமதமாக சென்றேன். -ஒருநாளா..? இல்ல, வழக்கம் போலன்னு நாங்க திருத்தி வாசிக்கணுமா?

    உங்கள் சக ஊழியரை(யும்) சூப்பராவே கடிச்சிருக்கீங்க!

    எஸ்.வி‌.சேகர் ஒரு படத்தில் இந்த மாதிரி டயர் பஞ்சர் என்று சொல்ல, ‘‘நேத்திக்கும் இதானடா சொன்னே?’’ என்பார் மேனேஜர். ‘‘அது முன் டயர் சார், இது பின் டயர்’’ என்பார் சேகர். ‘‘என்னால நம்பவே முடியலையே...’’ என்று மேனேஜர் சொல்ல... ‘‘நம்புங்க சார்! என் வண்டிக்கு ரெண்டு டயர் இருக்கு!’’ என்பார். அதான் நினைவுக்கு வந்துச்சு!

    எனக்கென்னமோ உங்களுக்கு கொழுப்பு வாய்ல மட்டும் இருக்கறதாத் தோணலை தம்பி! ஹி... ஹி...!

    ReplyDelete
    Replies
    1. // ஊழியரை(யும்)// - அடைப்புக்குக்ள்ள போட்ருக்க யும் என்னோட வாய அடின்னு சொல்றதுக்கு தானே...! ஐ நோ ...!

      //எனக்கென்னமோ உங்களுக்கு கொழுப்பு வாய்ல மட்டும் இருக்கறதாத் தோணலை தம்பி! ஹி... ஹி...!// உங்கள விடவான்னேன் .....! ஹி ஹி ...!

      கடுப்பயும் , எதிர்ப்பையும் ஒவ்வோருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்லுவாங்க ...

      பலர் எரிஞ்சு விழுந்து சொல்லுவாங்க ..
      ஒரு சிலர் நாகரீகமா சொல்லுவாங்க ...
      அண்ணா நீங்க மட்டுந்தான் நகைச்சுவையா சொல்லுறீங்க .....!

      ( என்ன வாசம் வருதா ...அதான்னேன் சாம்பிராணி வாசம் .. ஹா ஹா ஹா ...!


      இப்படிக்கு உங்கள் -
      மை டியர் தங்கக் கம்பி!

      Delete
  6. பதிவையும் வாத்தியாரின் பதிலையும் ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. பின்பாதி மட்டுந்தானே உண்மை ...ஹே ஹே ... எங்ககிட்டேவா ...?

      Delete

Related Posts with Thumbnails