Apr 4, 2013

மிட்டாய் வாங்கலியோ மிட்டாய் ...!







சமீபத்தில் ஊர் சென்று வந்தேன் . கிட்டத்தட்ட அறுநூறு கிலோமீட்டர் பயணம் . வீடு வந்து பேக்கை பிரித்து பார்த்தால், கிட்டத்தட்ட  பத்து பதினைந்து மிட்டாய் . ஆரஞ்சு மிட்டாயில்  ஆரம்பித்து , டைரி மில்க் வரை வகை வகையாக, கலர் கலராக . நாலைந்து முறை ஊர் போய் வந்தால், ஒரு மிட்டாய்க்கடையே வைக்கலாம் போல . இப்பல்லாம் சூப்பர் மார்க்கெட்டில் ஆரம்பித்து பெட்டிக்கடை வரை, மீதி சில்லறைக்கு பதிலாக மிட்டாய்  தான் தருகிறார்கள் . போனவாரம் ஒரு மெடிக்கல் ஷாப்பில், ஐந்து ரூபாய் சில்லறைக்கு பதிலாக ஒரு க்ரீம் பிஸ்கட் பாக்கெட்டை கொடுக்கிறார் கடைக்காரர். நல்ல வியாபார உத்தி . இப்படியே மிட்டாயா கொடுத்து, கொடுத்து எல்லாரையும் சர்க்கரை வியாதிக்காரங்களா மாத்தீடுவாங்க போல . அப்ப கூட  சர்க்கரை வியாதிகாரர்களுக்கு சுகர் ஃபிரி மிட்டாய் கொடுத்தாலும் கொடுப்பார்கள் . நல்லா பண்றாங்கடா வியாபாரம் .

அரசுப்பேருந்து கழகத்துக்கு ஒரு அன்பான வேண்டுகோள் :

ஆளுக்கு ஆள் மிட்டாய் கொடுக்குறாங்க . நீங்க ஏங்க பாஸ் ட்ரை பண்ணகூடாது..? ஒவ்வொருமுறை பஸ் ஏறும்போதும் பக்கு பக்குன்னு இருக்கு, சில்லறைக்காக என்னென்ன ஏழரை நடக்கப்போகுதோ என்று . ஒவ்வொரு கண்டக்டர்கிட்டயும் பணப் பையோட சேர்த்து ஒரு மிட்டாய்ப்பையும் கொடுத்தனுப்புனீங்கன்னா கசப்பா இருக்க எங்க பயணம் இனிப்பா இருக்கும்ல .

( என்னாது..! , அரசுப்பேருந்து கழகத்துக்கு மிட்டாய் வாங்கியதில் ஆயிரம் கோடி முறைகேடா .......?
ஐயா சாமிகளா...! ஆ....ணியே புடுங்க வேண்டாம்... முடியல ..! )



13 comments:

  1. ஹா..ஹா! அப்படியே சேர்ந்த மிட்டாயை எல்லாம் டிராபிக் ஜாம்ல கடை போட்டுடலாமில்ல..?

    ReplyDelete
    Replies
    1. // டிராபிக் ஜாம்ல கடை போட்டுடலாமில்ல// லாம் . ஆனா மாமுலுக்கே பத்தாதே ...!

      Delete
  2. இப்போதெல்லாம்பல கடைகளில் சில்லறை டப்பாவுக்கு பதிலாக மிட்டாய் சாக்லேட் டப்பா தான் வைத்திருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. அதென்னவோ வாஸ்தவம் தான் . சாக்லேட் டப்பாவோட நிருத்திக்கிட்டாங்கன்னா பரவால்ல..

      Delete
  3. //ஒவ்வொரு கண்டக்டர்கிட்டயும் பணப் பையோட சேர்த்து ஒரு மிட்டாய்ப்பையும் கொடுத்தனுப்புனீங்கன்னா கசப்பா இருக்க எங்க பயணம் இனிப்பா இருக்கும்ல . //
    :) :)

    ReplyDelete
  4. (சில) கண்டக்டர் : தம்பி, இது நல்லாயில்லே... இதை வைச்சி தான் நைட் கச்சேரி செஞ்சிட்டு வீட்டுக்குப் போறேன்... ஒருத்தரையும் எல்லார் முன்னிலையும் மானம் போற மாதிரி திட்டலேன்னா, எனக்கு பொறுக்காது... இன்னும் நிறைய இருக்கு... வேணாம் தகராறு... சொல்லிபுட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. // இன்னும் நிறைய இருக்கு..// கழுவி கழுவி ஊத்துவாங்களோ ..?

      Delete
  5. இங்கும் சில்லறைக்குப் பதில் மிட்டாய் இருக்கின்றது.

    "அரசுப்பேருந்து கழகத்துக்கு மிட்டாய் வாங்கியதில் ஆயிரம் கோடி முறைகேடா .......?" ஹா...ஹா....

    ReplyDelete
    Replies
    1. //"அரசுப்பேருந்து கழகத்துக்கு மிட்டாய் வாங்கியதில் ஆயிரம் கோடி முறைகேடா .......?" ஹா...ஹா....// ச்சும்மா ....ஒரு கற்பனை ...

      இங்கும் - இலங்கையா ?

      Delete
  6. ஹா ஹா ஹா ரசித்தேன்... சிரித்தேன்..

    ReplyDelete

Related Posts with Thumbnails