இசை அறிவோ , INSTRUMENT’S & திரை மொழி அறிவோ
இல்லாத ஒரு C செண்டருக்கும் கீழே உள்ள ரசிகன் தான் நான் . எங்கேயாவது எப்பயாவது அட
போடும் பாடல்களையோ , படங்களையோ பார்த்தால் , கேட்டால் அதை சலிக்கும் வரை திரும்ப
திரும்ப பார்க்கும் & கேட்கும் பழக்கம் உள்ளவன் . அப்படி அட போட வைத்த மூன்று
பாடல்கள் & ஒரு டீசர் இங்கே ....!
லோக்கல் சேனலில் கடந்த சில நாட்களாக இரண்டு
பெண்கள் பாடும் ஆடியோ மேக்கிங்கை பார்க்கவும் , கேட்கவும் நேர்ந்தது ... BUT ,
யாரு என்ன படம்னு ஒன்னும் தெரியல... எப்டி தேடுவதுன்னு தெரியாமல் அப்டியே
விட்டுட்டேன் . இன்று வே.மதிமாறன் அவர்களின் ஒரு பதிவை படிக்கும் போதுதான், அவர்கள்
வித்யா & வந்தனா ( ஐயர் சிஸ்டர்ஸ் ) ங்குறது தெரிஞ்சு யூ டியூப்ல
தேடிப்பிடித்தேன் .....!
தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது முதலில்
வசீகரித்து நிலவு போன்ற வட்ட முகம்தான்...OMG...! இரண்டு பாடல்களை கேட்டேன் முதல்ல
மீசை கவிஞனின் “ஆசை முகம் மறந்தேனடி” தமிழ் உச்சரிப்பு ரெம்ப மோசம்னு மதி-ஜி எழுதியிருந்தபடி
ஆஸ்சை முகமென்று ஆரம்பிக்கின்றார்கள் .
BUT அழகான பெண்கள் (தமிழ் )கொலை செய்தால் கூட கொஞ்சுவது போலதானே...? எனக்கு
கொஞ்சுவது போல தான் உள்ளது ....!
இரண்டாவது பாடல் “நீ நினைந்தால் ஆகாததும்
உண்டோ “ அடடா என்ன ஒரு SOOTHING ஆனா இசைகோர்ப்பு ....! பாடல் வரிகள் யாரென்று
தெரியவில்லை . இசை – பெரியசாமி தூரனாம் . வாழ்த்துக்கள் அவருக்கு .
ரெண்டு பாடல்களிலும் மிக முக்கியமான
ஒருவருக்கு பங்குண்டு அவர் – SHANKAR TUCKER அமெரிக்கன் CLARINET & MUSIC COMPOSER. நம்மூர்
நாதஸ்வரம் மாதிரியான ஓர் இசைப்பானை ஊதுகிறார் பாருங்க .....அட அட அட டா .... AWESOME ...AWESOME.....! பேரைபோலவே சங்கர் டக்கர்யா ...!
சங்கர் டக்கர் , இயக்குனர் ராதாமோகனின் அசிஸ்டன்ட் விக்னராஜன் இயக்கிக்கொண்டிருக்கும் “ஒரே ஞாபகம்” படத்தின் மூலம் தமிழ் படங்களுக்கு
இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் . ஜி.வி & அனிருத் அலர்ட்டா இருங்கப்பா .....!
ஒரே ஞாபகம் டீசர் ஐ தேடிப்பிடித்து பார்த்தேன் . அட்டகாசமான விஷுவல்ஸ்
...! அழகு ....! அழகு ....! டீசர் பார்த்தா எதிர்பார்ப்பு எகிறுது .... படத்தில் பெரும்பாலும்
புதுமுகங்கள் ...! CINEMATOGRAPHY A.M EDWIN
SAKAY இவர்
எந்திரன் மேக்கிங்கின் ஒளிப்பதிவாளராம். வாழ்த்துக்கள் எட்வின் & ஒரே ஞாபகம் டீம் .
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு ....!
//பெண்கள் (தமிழ் )கொலை செய்தால் கூட கொஞ்சுவது போலதானே...?// உங்கள மாதிரி ஆளுங்க இருக்கப் போய் தான்யா இப்படி எல்லாம் நடக்குது # சொல்லிவைப்போம்
ReplyDeleteஇப்படில்லாம் எழுதுனா நாங்க கிள்ளி வைப்போம் ....!
Deleteசரிதான்... நாமல்லாம் ‘டாமில்’ பேசினா இந்த ஜீவனுக்கு தாங்காது... பொண்ணுங்க பேசினா...! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! பாட்டுக்களை விட ஃபிகர்களை ரசிக்கிறது இப்படியா வெளிக்காட்டிக்கிறது...! பாட்டுக்களைக் கேட்டுப் பாக்கறேன்... அப்புறம் சொல்றேன்!
ReplyDeleteசொல்லுங்கண்ணேன் சொல்லுங்க ...!
Deleteவெளிக்காட்டிட்டா நல்லவனா வேஷம் போட வேண்டிய அவசியமில்ல பாருங்க அதான் ....!
வீட்டிலே சொல்லிட்டீங்களா...?
ReplyDeleteஇன்னும் இல்லைங்கண்ணா ...!
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//ஆசை முகம் மறந்தேனடி//
ReplyDelete"ஆசை முகம் மறந்துப் போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி..."..னு ஆரம்பிக்கும் பாட்டு...
//ஆஸ்சை முகமென்று ஆரம்பிக்கின்றார்கள் . BUT அழகான பெண்கள் (தமிழ் )கொலை செய்தால் கூட கொஞ்சுவது போலதானே...? எனக்கு கொஞ்சுவது போல தான் உள்ளது ....!//
அட ! :) உடன்படுகிறேன் பாஸ்
one of my all time favourite song இது ,,
பாரதியார் பாட்ட பயபுள்ளைங்க கட் சார்ட் செய்து பாடியிருக்குதுங்க! இந்த வெர்சனில் சில வரிகள் ஸ்கிப் செய்யப்படிருக்கும் ...
அது ஒரு குட்டி வருத்தம்....
//"ஆசை முகம் மறந்துப் போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி..."..னு ஆரம்பிக்கும் பாட்டு...//
Deleteநீ சொல்றது சரி விஜி ...! நாதான் தப்பா டைப்பீருக்கேன் ....!
உடன்"பட்டதுக்கு" நன்றி ....!
அது ஒரு "குட்டி" வருத்தம் - :-)
இந்த புள்ளைங்க ரெண்டும் சேர்ந்து "முன்பே வா என் அன்பே வா..." பாட்டும் பாடியிருக்குங்க அண்ணா !
ReplyDeleteகேட்டுட்டு இருக்கேன் ... மியூசிக் நல்லாருக்கு ....!
Deleteஆஸ்சை முகம் ... ஜாம்... தமிழ்க் கொலை... அழகிய பெண்கள்...
ReplyDeleteம்... டீசர் நல்லாயிருக்கு...
நன்றி குமார் ....!
Deleteஅது ஒண்ணுமில்ல... அவாளுக்கு 'ச' வராது... 'ஷ' தான் வருமாம்...
ReplyDeleteSee from 01:16
http://www.youtube.com/watch?v=qaXg9H6T-ws
பார்த்தேன் ...! அவாளை பத்தி அவாளே ஷொன்னா சரியாத்தானிருக்கும் ....!
Deleteதன்னை தானே கிண்டல் செய்து கொள்ளும் பக்குவமும் அவாளுக்கு உண்டு. நீங்க முதல்ல 'ழ' சொல்லக் கத்துக்கங்க நண்பரே..
Delete//சரிதான்... நாமல்லாம் ‘டாமில்’ பேசினா இந்த ஜீவனுக்கு தாங்காது... பொண்ணுங்க பேசினா...! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! பாட்டுக்களை விட ஃபிகர்களை ரசிக்கிறது இப்படியா வெளிக்காட்டிக்கிறது...! //
ReplyDeleteஅது சரி.....
ஏனுங்கண்ணா .... இப்பூடி ...!?
Deleteஆசை முகம் என்பதை ஆஷை முகம் என்று பாடுவதை தவிர, பாட்டில் குறையில்லை. அருமையான குரல் வளம். பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇவர்கள் பாடிய இன்னும் சில பாரதியார் பாடல்களையும் கேட்டதாய் நியாபகம்...ஹ்ம்ம்ம் என்ன இவர்களின் உச்சரிப்பை பாரதி கேட்க்கவில்லை கொடுத்து வைத்தவர்...
ReplyDeleteஹா ஹா ...! :)
Deleteஎது எப்படியோ நான் படித்தவரைக்கும் சிரிச்சுட்டே இருந்தேன் .மொத்தத்தில் இந்த வண்ணத்துப்பூச்சியின் வண்ணம் இன்னும் என் விரலோடு!!
ReplyDelete//சிரிச்சுட்டே இருந்தேன்//
Deleteசிரிச்சுட்டு இருந்தீங்களா ....?
ஆசை முகம் சைதன்வி version கேளுங்க பாஸ்...
ReplyDelete