Mar 20, 2014

பேசாத வார்த்தைகள் : விஜய் , குக்கூ , டூர் & ட்வீட் .






நடிகர் கம் பாடகர் வரிசையில் உலக நாயகனுக்குப் பிறகு இளைய தளபதி குறிப்பிட்டுச்சொல்லக் கூடியவராகிறார் . சாமீபத்திய ஜில்லா “படத்தின் கண்டாங்கி கண்டாங்கி” பாடலில் தலைவி ஷ்ரேயாகோஷால்உடன் பாந்தமாக பாடியிருக்கிறார் . காஸ்ட்யூமும் , காட்சி படமாக்கப்பட்ட இடங்களும் பாடலுக்கு பொருந்தாத போதிலும் , தளபதியின் குரலிலும் , நடனத்திலும் அப்டியொரு வசீகரம் .

**********************************************************************************************************************************************************

புதுப்படங்களில் கவன ஈர்ப்பு செய்யும் பாடல் - குக்கூ படத்தின் , “கல்யாணமாம் கல்யாணம்” . வழக்கமான காதல் தோல்வி சிச்சுவேசன் பாடலென்ற பொழுதிலும் , கவன ஈர்ப்பு செய்வது இசையும் , குண்டடித்த எம்.ஜி.ஆரும் , பூசினாற்போல வரும் சந்திரபாபுவும் தான்  . சந்திரபாபுவை பார்க்கும் போது அவ்வளவு பரவசமாக இருக்கிறது . நம்பியார் , ரகுவரன் , நாகேஷ் போன்று மறக்க முடியாத நடிகர்களில் சந்திரபாபு முதன்மையானவர் .


**********************************************************************************************************************************************************


அலுவலக டூரில் , எந்தெந்த ஊர்களுக்கு செல்வதென்பதை முடிவு செய்யும் பொருட்டு பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள் .  கடவுளின் தேசத்திற்கு போகலாமென நான் உள்பட நால்வர் கை தூக்க . தண்ணீர் தேசத்திற்கு போகலாமென நாற்பதுக்கும் மேற்பட்டோர் கைகள் , கால்கள் என மொத்தமாக தூக்க , நால்வருக்கும் டெப்பாசிட் காலி . என்னென்னமோ சொல்லி கேன்வாஸ் பண்ணினாலும் எடுபடவில்லை . வேணும்னா , இரண்டு அணியாக பிரிந்து  முதல் அணி பாண்டிக்கும் , இரண்டாவது அணி வீகாலேண்டுக்கும் போகலாமென ஒருவர் ஐடியா கொடுக்க , நமக்கு அடிவயிறே கலங்கிவிட்டது . பின்னே , மூணு படி மேலேறி , கீழே பார்த்தாலே நமக்கு தலையும் தரையும் சேர்ந்து சுத்தும்  இதில் வீகாலேண்ட், ஜெயண்ட்வீல்னு பேரக்கேட்டாலே டரியலாகுது. ஆணி புடுங்கவே வரலையப்பாவென்று கூறி வெளிநடப்பு செய்தாயிற்று . என்னவொன்னு டூர் போயிருந்தா, அப்படி இப்படின்னு  ஒரு அஞ்சாறு பதிவும் , ஏழெட்டு FB ஸ்டேட்டசும் தேத்தியிருக்கலாம் J விதி வலியது .....!

**********************************************************************************************************************************************************

தமிழனுக்கு தெரிந்ததெல்லாம் ரெண்டே திசைகள் தான் , ஒண்ணு நார்த் மற்றொன்று சவுத் . ஈஸ்ட் , வெஸ்ட்டெல்லாம் என்ன பாவம் பண்ணுச்சோ . / நான் தமிழன் /


ஜீவன்பேஷனில் : ஜீவன் பேஷன் : கோடைக்கேற்ற ஆடை - லினன் ( LINEN)



என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .




12 comments:

  1. விதி வலியதுதான் ,அதனால்தான் கழுகுப்பார்வை ஜோக்காளி மேலும் படமாட்டேன் என்கிறது !
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. இனி பார்வை பட்டுவிடும் பகவான்ஜி ..!

      Delete
  2. கண்டாங்கி சாங் கேட்டப்போவும் ,பார்த்தப்போவும் எனக்கும் இதுதான் தோனுச்சு!
    கல்யாணம் பாட்டுல விஜயும் வந்தரே பார்த்தீங்களா சகோ!
    பாண்டி போகாத சகோ வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் பாட்டுல விஜயும் வந்தரே பார்த்தீங்களா // அப்டியா ..? ச.பா. மேலேயே கவனமிருந்ததால் கவனிக்கவில்லை ...

      Delete
  3. சந்திரபாபு ஒரு லெஜண்ட். அன்றைய காலகட்டத்தில் நடித்ததைவிட இப்போது இருந்து நடித்திருந்தால் இன்னும் உயரம் தொட்டிருப்பார். ‘இளையதளபதி’ செய்யும் அதிசய காரியத்தை (நடிப்பவரே பாடறது) கின்னஸ்ல போட்டுட் வேண்டியதுதான். தமிழ் சினிமாவுல வேற யாரும் பண்ணாததைல்லவா சாதிச்சிருக்காரு...!

    ReplyDelete
    Replies
    1. //கின்னஸ்ல போட்டுட் வேண்டியதுதான். // :)

      Delete
  4. //நமக்கு அடிவயிறே கலங்கிவிட்டது . /// சூது கவ்விடுச்சில்லே..! FUN மால் அனுபவங்கள் நினைவுக்கு வந்து போனது..

    ReplyDelete
    Replies
    1. //FUN மால் அனுபவங்கள் நினைவுக்கு வந்து போனது..//

      அதேன் படம் போட்டு நாறடித்துவிட்டீரே .... :(

      Delete
  5. குக்கூ படத்தில் இருக்கும் வேறொரு பாடல் எனக்கு பிடித்தது.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அதுவும் நல்ல இருக்கு ..!

      Delete
  6. என்னைப்பொருத்தவரை அவருக்கு நடிப்பைவிட பாட நன்றாக வருகிறது

    ReplyDelete

Related Posts with Thumbnails