Dec 16, 2013

சேனல்ஸ் பக்கம் : விஜய் & புதுயுகம்



புதுயுகம் : கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு  

தலைப்பை மிகச்சரியாக , மிகச்சிறப்பாக நியாயப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி . தலைப்பிசை , தலைப்பின் வடிவமைப்பு , தொகுத்து வழங்குபவரின் குரல் , விசயங்களை சேகரித்து சுவையாக வழங்குவது என எல்லாமே ரெம்பப் பிரமாதம் . உணவோடு சேர்த்து வரலாற்றையும் ஊட்டுகிறார்கள் . Worth to Watch .


புதுயுகம் : ரிஷி மூலம்

நீயா நானாவின் மற்றுமொரு வடிவம் . என்ன , நீ.நா. வில் எதிரெதிர் வரிசையில் அமர்ந்து ARGUMENT பண்ணுபவர்கள் இங்கே அரைவட்ட வடிவில் உட்கார்ந்து ARGUMENT பண்ணுகிறார்கள் . COAT டையும் , கோபிநாத்தையும் பார்த்துச் சலித்தவர்களுக்கு , பாவாடை சட்டையில் அபிராமி தொகுத்து வழங்குவது ஆறுதல் . J ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளில் விஜய்க்கு நல்ல போட்டி புதுயுகம் .


விஜய் : நீயா நானா

இரண்டு வாரங்களுக்கு முன்பான நீயா நானாவில் அறுபதும், இருபதும் இசைக்காக மோதிக்கொண்டார்கள்  . நீயா நானாவில் இதுபோன்ற அமைவது அரிது . அறுபதினர் அசத்திவிட்டனர் . எவ்வளவு திறமையாக பாடுகிறார்கள் . நம் வீட்டில இருக்கும் பெரியவர்களுக்குள்ளும் இதைப்போல  ஏதேனும் ஒரு திறமை இருக்கலாம் , நமக்குத்தான் நேரமே இல்லையே கேட்பதற்கு . சூப்பர் சிங்கர் சூப்பர் சீனியர் விரைவில் எதிர்பார்க்கலாம் .



மூன்றாவது நிமிடத்திலிருந்து ஒன்பதாவது நிமிடம் வரை அட்டகாசம்  .

மேற்படி நிகழ்ச்சியை பார்த்த வகையில் ரெண்டு வருத்தம் ...

முதலில் – பெரியவர்கள் அணியில் ஒரு பெண் கூட கலந்துகொள்ளாதது .

இரண்டாவது – இப்பொழுதெல்லாம் முப்பதிலேயே முன் நெற்றி PLOT ஆகிவிடுகின்றது. ஆனால் , நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில பெரியவர்களுக்கு முன் நெற்றி வரை முடி புரளுகின்றது. இளைய சமுதாயம் இழந்தது இசையை மட்டுமல்ல ....



சேனல் ட்வீட் :

காம்பியரிங் TO ஸ்டார் – விஜய் டீவி ; ஸ்டார் டூ காம்பியரிங் – புதுயுகம் . J



என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



14 comments:

  1. ரசித்து பார்த்த நீயா நானா இது தான் என்று நினைக்கிறேன்... (நேரம் அன்று அதிர்ஷ்டவசமாக கிடைத்தது...)

    அன்றைய நிகழிச்சியில் (பாடல்களில்) எந்த பாடல் எனது தளத்தில் இல்லை என்று யோசிக்கிறேன்...!

    ReplyDelete
  2. வணக்கம்
    ஜிவன் சுப்பு

    நானும் நீயா நானா என்ற நிகழ்ச்சியை ரசித்துப்பார்பபேன்..... அருமையாக பதிவை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சீரியல் பத்தி ஒண்ணுமே சொல்லலியே

    ReplyDelete
  5. நன்றி.பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  6. \\இப்பொழுதெல்லாம் முப்பதிலேயே முன் நெற்றி PLOT ஆகிவிடுகின்றது. ஆனால் , நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில பெரியவர்களுக்கு முன் நெற்றி வரை முடி புரளுகின்றது. இளைய சமுதாயம் இழந்தது இசையை மட்டுமல்ல//

    உண்மை இளையசமுதாயம் இழந்தது எத்தனையோ?

    ReplyDelete
  7. 22 வயதாகும் என் தம்பியின் ஆகா பெரிய பிரச்சனை ,கவலை எல்லாம் இந்த முன்தலை தான்.பார்த்து பார்த்து நொந்து போறான் .என்ன விஜய்ல இருந்து புது யுகம் மாறிடிங்க போல

    ReplyDelete
  8. ரசித்த கவிதையில் என் படைப்பா ?!.கவனிக்கவே இல்லை .நன்றிகள் பல ஜீவன் சார்

    ReplyDelete
  9. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி ...!

    @ மைதிலி Sister....

    சின்னவெங்காயத்த , நல்லா மை போல அரச்சு தினமும் தலையில தடவச்சொல்லுங்க ... அப்டி பண்ணுனா முடி வளர்ச்சி அதிகமாகுமாம் ...! ( But இன்னைக்கு வெங்காயம் விக்குற ரேட்டுக்கு , மாசக் கடைசில காய்கறி செலவு அதிகமாகவும் வாய்ப்பிருக்கு :) )

    * - பக்க விளைவுகளுக்கு யாம் பொறுப்பல்ல :)

    ReplyDelete
  10. ஆனாலும் ரிஷிமூலம் அபிராமியை கோபி நாத்துக்கு இணையாகக் கூறியதுதான் கொஞ்சம் ஓவராத் தோணுது...

    ReplyDelete
  11. இந்த வாரம் நிலாச் சோறு கொஞ்சம் டேஸ்டு கம்மியா இருக்கு? (ஜீவன் சுப்பு டச் இல்லையே)

    ReplyDelete
  12. நிலாச்சோறு அருமை....
    நீயா நானா நானும் பார்த்தேன்.. கலக்கல்.... அந்தக்கால இசைப்பிரியர்களுக்குத்தான் என்ன குரல் வளம்.... ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு ஜீவன்..... தொலைக்காட்சியில் நடப்பவற்றை உங்கள் பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

    ReplyDelete

Related Posts with Thumbnails