Dec 18, 2014

பேசாத வார்த்தைகள் 18.12.2014மெட்ராஸ் படத்தில் வரும் "காகித கப்பல் " இப்பொழுது விரும்பி பார்க்கும் பாடல் . பாடல் வரிகள்  ,  இசை  இரண்டையும் மீறி கவனம் கவர்வது - நடனம். ஒவ்வொரு அசைவும் அழகானதொரு கைக்கூ . மேற்படி நடனத்திற்கு பெயர் என்னவென்று தெரியவில்லை மைமிங்  ன்னு ஒன்றுள்ளது அது இதுதானா ?   வருடங்களுக்கு முன்பு அரவிந்தசாமி படம் ஒன்றிலும் பிறகு பானா காத்தாடி படத்திலும் இதைப்போன்றதொரு நடனம் பார்த்த நினைவு. மிகச் சமீபத்தில் சூது கவ்வும் படத்தில் வரும் காசு பணம் கூட மேற்படி வகையறாதான் என்று நினைக்கின்றேன் . 
ரெம்ப நாள் வாங்கனும்னு நனைச்சு சுமந்த ஆசையை பிழிந்து காயப்போட்டாச்சு . சல்லிசான ? விலையில் மடிக்கணினி ஒன்று வாங்கியாச்சு கூடவே ப்ளிப்கார்ட் ல் டேட்டா கார்டும் .  ஆம் அது உங்களை நோக்கித்தான் வரப்போகின்றது ஓடுங்கள் ...:) சகாயமான விலையில் இணைய இணைப்பை தரும் நெட்வொர்க் பற்றிய தகவல்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன .


சமீபத்தில் வாழ்க வளமுடன் அமைப்பின் யோகப் பயிற்சிக்கு போய் வந்தேன் . பதினைந்து நாள் வகுப்புக்கு பத்து நாள் போய் வந்ததே வாழ்நாள் சாதனையாயிற்று இத்தனைக்கும் வகுப்பு நடந்தது பக்கத்து கட்டிடத்தில்  .வஜ்ராசனம் என்று ஒன்றை போட சொன்னார்கள் .... எட்டு போட சொன்ன RTO  ஆபிசரே பரவா இல்ல... முடிலப்பா முடில  :(  .


பத்து வருடங்களுக்கு பிறகு  குப்பை கொட்டும் விலாசத்தை  மாற்றியிருக்கிறேன் . புது வேலை ,  புது ஜாகை , புது மனிதர்கள் சுவராஸ்யம் கம் திகில்னு கலவரமா போயிட்டு இருக்கு வாழ்க்கை  . திருப்பூருக்கும் கோவைக்கும் அரைமணி நேர பயண தூரம் தான் ஆனால் திருப்பூரில் இருப்பது ஆப்பிரிக்காவில் இருப்பதை போலவும் கோவை ஆஸ்திரேலியாவில் இருப்பதைப்போலவும் பீல் ஆகுது . 


என்றென்றும் புன்னகையுடன் 
ஜீவன் சுப்பு 

  

14 comments:

 1. கலவையாய்... அருமை...
  புதிய வேலையிலும் சந்தோஷங்கள் தொடரட்டும்

  ReplyDelete
 2. புது வேலை, புது வீடு, புது லாப்பு:)) கலக்குறேள் சுப்பு:))
  அப்பாஆஆ !! எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து!! அதுதான் புது lap கெடசுடுசே, அப்போ அட்டெண்டன்ஸ் போடுங்க ஓகேவா??

  ReplyDelete
 3. எல்லாமே புதுசு (மடிக்கணினி உட்பட). வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வஜ்ராசனம் என்று ஒன்றை போட சொன்னார்கள் .... எட்டு போட சொன்ன RTO ஆபிசரே பரவா இல்ல... முடிலப்பா முடில :( //

  முதலில் கஷ்டமாய் இருக்கும், பழகி கொண்டால் நிறைய நன்மைகள் .வஜ்ராசனம் மூலம் கிடைக்கும்.


  ReplyDelete
 5. ஆஹா! பல நாள் கழித்து வருகை! புது லாப்!?

  வஜ்ராசனம் எளிதாயிற்றே. நண்பரே! பழக பழக எளிதாகிவிடும்...மிகவும் பயனுள்ள ஆசனம்!

  உங்க லேப் எங்கள நோக்கி வந்தா நாங்க கேச் பண்ணிக்குவோம்...ஓட மாட்டோம்...

  ReplyDelete
 6. பேசாத வார்த்தைகள் பேச ஆரம்பிச்சுருச்சு...தொடர்ந்து பேசுங்க நண்பரெ!

  ReplyDelete
 7. எப்படியோ மீண்டும் ஐயாவை பார்ப்பது சந்தோஸம் வலையில். தொடர்ந்து வலையில் பேசுவோம்.

  ReplyDelete
 8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  அன்புடனும், நட்புடனும்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 9. சகா வுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...

  ReplyDelete
 11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  அன்புடனும், நட்புடனும்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 12. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
  துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

  வலைப் பூ நண்பரே!

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 13. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete

Related Posts with Thumbnails