Mar 2, 2013

சூப்பர் சிங்கரும் ...சூப்பர் சீனியரும் .....
எனக்கு சக்கர வியாதி அதனால இனிப்பு சாப்டகூடாதுன்னு சொல்லிகிட்டே ஜிலேபி சாப்டர ஆளுங்க நாம . அதுபோல தான் சூப்பர் சிங்கரையும் , விஜய் டீ வி  யையும் திட்டிகிட்டே தெனமும் தவறாம பாத்துடுவேன் .

புது சீசன் ஆரம்பிச்ச இந்த ரெண்டு , மூணு வாரத்துல நேத்து தான் பாத்ததுலே ஒர்த்தான எபிசோடு .

வெள்ளந்தியான பேச்சு , கருப்பான தேகம்  , சாதாரண உடை . கிராமத்து ஆளு , அதுவும் பழைய பாட்டு மட்டுமே பாடுறவரு முக்கியமா அறுபத்தியொரு வயசு .... நிச்சயமா நாம ஓலக மகா ஜட்ஜுங்க இவர வெளிய அனுப்பிடுவாங்கன்னு நெனச்சேன் .( முப்பது வயசுக்கு மேல உள்ள யாரும் இது வர டாப் நூருக்குள்ள கூட வந்தது இல்ல , வர விட்டது இல்ல .)

நல்ல வேல வெளிய அனுப்பமுடியாத அளவுக்கு கலக்கிட்டாரு ஐயா அழகேசன் .. சூப்பரா பாடுனாருங்க . யூ டியூப் ல போய்  பாருங்க . ரெண்டு அட்டகாசமான பழைய பாட்டு .

அவரு செலக்ட் ஆகும்போது பார்வையாளர்கள் பகுதியிலருந்து ஒருத்தர காமிச்சாங்க . என்ன உறவுன்னு தெரியல... மனுசருக்கு அவ்ளோ சந்தோசம் ... ஒரு செக்கன்ட் சந்தோசத்துல அவரோட தொண்டக்குழி ஏறி இறங்கும் பாருங்க .. அடடா ..!
பாரதிராஜா பட எதார்த்த மனிதர்கள்லாம் சும்மா ...
என்ன ஒரு எக்ஸ்பிரசன் .... அத எழுத முடியாது உணர தான் முடியும்.

ரெண்டு பெரும் கட்டிபுடிச்சுகிட்டாங்க – அது அழகான ஒரு கவித மாதிரி இருந்ததது .
( நிச்சயமாக நண்பராகத்தான் இருப்பாருன்னு நெனைக்கறேன், இருபதிலே வராத உறவுகள் , அறுபதில் எங்க வரபோகுது )

போட்டில எவ்வளவு தூரம் வருவாருன்னு , விஜய் டிவி க்குதான் தெரியும் .
என் விருப்பமெல்லாம் அவருக்கு பரிசு, பட்டம்  கொடுத்து அனுப்பாட்டியும் , பிளாக் அன்ட் ஒயிட்ல அழவைக்காம, வோட்டு அரசியல் பண்ணாம , வெள்ளந்தியான குழந்தையாகவே அவர் திருப்பி அனுப்பப்படவேண்டும் ... அனுப்புவார்களா ....?

போட்டி சேனல்கள் கவனத்திற்கு : அப்பட்டமா காப்பி அடிச்சு எல்லாருமே ஜுனியருக்கும் , சீனியருக்குமே போட்டி வைக்காம. ஜூனியர வதைக்குரத விட்டுட்டு சூப்பர் சீனியர்களுக்கு ரியாலிட்டி ஷோ வச்சிங்கன்னா.... TRP ரேட்டிங் பிச்சுக்கும் . வயசான அவங்களுக்கும் ஒரு அரவணைப்பா  இருக்கும். பாக்குற எங்களுக்கும் சந்தோசமா இருக்கும் .

5 comments:

 1. உண்மையிலே அட்டகாசமாக பாடினார்...

  /// சூப்பர் சீனியர்களுக்கு ரியாலிட்டி ஷோ /// நல்ல பரிந்துரை...

  ReplyDelete
 2. ரொம்ப நல்ல இருந்தச்சு நண்பா உங்க பதிவும் அவரு பாட்டும்... அவரு நண்பர் மாதிரி தெரியலையே தம்பியா இருப்பாரோ

  ReplyDelete
 3. உங்களது பதிவைப் பார்த்த பின்புதான் யூ ட்யூப்'ல் அதைப் பார்த்தேன்.
  உண்மையில் அழகேசன் பின்னி எடுத்து விட்டார்.

  இறுதிக்கு வருவாரா என்பது தெரியவில்லை; எப்படியும் கர்நாடக சங்கீத சுற்றில் கழற்றி விடுவார்கள்..ஆனால் அவரது முத்திரை சூப்பர் சிங்கரில் எப்படியும் இருக்கும்..

  சுட்டியற்கு நன்றி.

  ReplyDelete
 4. ரி.எம்.எஸ். குரலில பிச்சு உதறிட்டாரு

  ReplyDelete
 5. நன்றி....!

  பின்னூட்டமிட்ட இந்த நாலு பேருக்கும் ...!

  வந்துபோன அந்த நானூறு பேருக்கும்...!

  ReplyDelete

Related Posts with Thumbnails