மாயி
படத்த இப்ப எடுத்துருந்தா , “வாம்மா மின்னல்”ங்குறதுக்கு பதிலா “வாம்மா
மின்சாரம்”னு சொல்லிருப்பாய்ங்களோ..?
பாத்து
பாத்து , தேச்சு தேச்சு குளிச்சாலும் , குளிச்சு முடிச்சு கண்ணாடிய பாக்கும்போது
காதுமடல்ல சோப்பு நுரை பொங்குவது எனக்கு மட்டுந்தானா..?
“மாதக்கடைசிகளில்
மனைவியை சமாளிப்பது எப்படி”ன்னு யாருன்னாச்சும் புக்கு எழுதீருக்காங்களா...?
“ஊர்
உலகத்துல எவ்ளோவோ பொண்ணுங்க இருக்கும்போது நா மாட்டும் ஏன் ஜெஸ்சிய லவ்
பண்ணுநேங்க்குற” மாதிரி , ஊர் , உலகத்துல எவ்ளவோ கோவில்கள் இருக்கும்போது ,ஏங்க
எல்லாரும் திருப்பதிக்கும் , திருச்செந்தூருக்குமே போறாங்க ...?
டவுட்
டவுட் டவுட் ....!
என்றென்றும்
புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு
அதானே, எதாவது 'புக்'கு இருந்தா ஜொள்ளுங்கப்பா... சே... சொல்லுங்கப்பா...
ReplyDeleteஎன்னது இல்லையா...? கல்யாணமே செய்து கொள்ளக் கூடாதா...? அட... போகப்பா...!
உங்களுக்குமா ...?
Deleteஅப்படி ஒரு புக்கை நீங்களே எழுதினா என்ன ....?
ReplyDeleteநாலு வரி பிளாக் எழுதுறதுக்கே நாக்கு தள்ளுது ...! இதுல புக்கு எழுதுறதா...? சாமி சத்தியமா நான்லாம் இணைய மொக்கை இல்லைங்கோ ...! ஐ மீன் எழுத்தாளன் இல்லைங்கோ ...!
Deleteஇந்த திருப்பதிக்கு ஏன் போறாங்க என்ற கேள்வி எனக்குள்ளேயும் இருக்கு.
ReplyDelete.
மனிஷங்கள கூட்டம் கூட்டமா கூண்டுல அடைத்து வைத்து, நிறைய கூட்டம் சேர்ந்த பின் வெளியே கடவுளை தரிசிக்க விடுவது, என்ன உங்க பெருமாள் சொல்லிய முறையா?
கோவிந்தா ...! கோவிந்தா ...!
Delete