Mar 22, 2018

பேசாத வார்த்தைகள் : 02-2018


பேசாத வார்த்தைகள் : 02-2018



பயணமும், வாசிப்பும் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன என்று வாசித்த நினைவு. சத்தியமான வார்த்தைகள். குறிப்பாக திட்டமிடாத பயணமும் , வாசிப்புமே அனுபவத்தை அள்ளித்தருகின்றன. பயணம் சார்ந்த படங்கள் பெரும்பாலும் சிலாகிக்க தகுந்தவையாகவே இருக்கும் என்பது என் எண்ணம். பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட  கதாபாத்திரங்கள் படத்திற்கு  சுவாராஸ்யம் கூட்டும். தமிழில் வந்த எங்கேயும் எப்போதும் , அன்பே சிவம் இரண்டுமே எனக்கு மிக நெருக்கமான படங்கள் . குறிப்பாக எ.எ ல் வரும் பயணக் கதாபாத்திரங்கள் . தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட அழகான கவிதைக்கு ஒப்பானது .

நார்த் 24 காதம் என்ற மலையாளப் படத்தினை தீபாவளிக்கு முதல் நாள் நள்ளிரவில் பார்க்க வாய்த்தது. அழகான ஒரு ரோட் மூவி . ஃபகத் ஃபாசிலின் நடிப்பை மகேஷிண்டே பிரதிகாரம் மற்றும் ஐந்து சுந்தரிகளின் ஒரு எபிசோடில்  ஏற்கனவே பார்த்து ரசித்த அனுபவமுண்டு . மேற்படி படத்தை பார்க்க ஆரம்பித்த போது , யாருடா இது , ஃபகத்திற்கு போட்டியா நடிக்கிறான் என்று வியந்து , டைட்டில் கார்டில் ஃபகத் பேரை பார்த்து பல்பு வாங்கினேன். நம் வருங்கால முதல்வர்கள் எல்லாம் ஒன்று ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள் இல்லை ஆக்டிங்குற பேர்ல ஆக்ஸா பிளேடை நடு மார்பிலே சொருகுகிறார்கள் . ஃபகத் பாத்திரத்திற்கு தேவையான நடிப்பை ரெம்ப shuttle ஆக , ரசிக்கும் விதமாக கொடுக்கிறார்  . பெண் ரசிகைகள் அதிகமென்று கேள்விப்பட்டதுண்டு , சக ஆண்களுக்கே பிடிக்கும்போது பெண்களுக்கு பிடிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

படத்தின் ஆச்சர்யம் நாராயணியாக நடித்திருக்கும் சுப்பிரமணியபுரம் சுவாதிதான் . நெடுமுடி வேணு , ஃபகத் என Established நடிகர்களுக்கு மத்தியில் எறங்கி அடித்து அசத்தியிருக்கிறார் . So cute என்று சொல்லும்போதெல்லாம் So க்யூட்டாக கவர்கிறார். நல்லவேளை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிரயாணத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களுமே படத்தை அழகாக்குகின்றனர். நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இசையும் , ஒளிப்பதிவும் பிரயாணம் செய்திருக்கிறது . இசை கோவிந்த் மேனன் . கிளைமேக்சிற்கு கொஞ்சம் முன்னே, பின்னிரவில் , காலிகட்டிலிருந்து நெடுமுடி வேணுவின் வீட்டிற்கு மூவரும் ஆட்டோவில் பிராயணிக்கும் பத்து நிமிடங்களும் உருக்கமான , நெகிழ்வான நிமிடங்கள். அந்த பத்து நிமிடங்களுக்கும் வரும் பின்னணி இசை ஒரு மென் சோகக் கவிதை . அதற்கடுத்த பத்து நிமிடங்கள் ஆதுரமான ஸ்பரிசம். கிளைமேக்ஸ் சுகம். அவசியம் பாக்கவேண்டிய ஒரு ஃபீல் குட் மூவி.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு

3 comments:

  1. மெனக்கெடுதலில் அவர்களை மிஞ்ச முடியாது...!

    ReplyDelete
  2. சிறப்பான விமரிசனம். மலையாள சினிமா விரும்பிகள் எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாத படங்களில் இதுவும் ஒன்றோ?

    ReplyDelete
  3. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Bharatanatyam teachers | Best Bharatanatyam Dancers | Bharatnatyam classes

    ReplyDelete

Related Posts with Thumbnails