May 3, 2013

சூப்பர் சிங்கர் – சத்யப்பிரகாஷ் .
சூப்பர் சிங்கர் முதல் சீசனில் இருந்து தொடர்ந்து பார்த்து வருகின்றேன் . தினமும் பல் விள(ல)க்குவது , குளிப்பது(!) , புசிப்பது போல சூப்பர் சிங்கர் பார்ப்பதும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது .

ஒவ்வொரு சீசனிலும் எத்தனையோ பேர் கலந்து கொண்டு சிறப்பாக பாடினாலும், யாரோ ஒருவர் மட்டும் பேவரைட் ஆக இருந்துவிடுகின்றார்கள் . கிருஷ்ணமூர்த்தி, அனிதா , ரவி , பிரியங்கா , அனு, சத்யப்பிரகாஷ் . இந்த விஷ் லிஸ்ட்ல கிருஷ்ணமூர்த்திய தவிர யாருமே டைட்டில் வின் பண்ணல . நமக்கு பிடிச்சவங்க வெற்றி பெறாத பொது கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கும் . அதிலும் சத்யப்பிரகாஷோட தோல்வி ஆகப்பெரிய அதிர்ச்சி  .

சத்யா எப்பவுமே ராக் ஸ்டார் தான் . உதித் நாராயணன் மாதிரி பாடுறதாகட்டும்  , சிவாஜி , எம்.ஜிஆர் மாதிரி எக்ஸ்பிரசன் கொடுக்குறதாகட்டும் , வெஸ்டர்ன் , கிளாசிக் , ஃபோக் , மெலடின்னு எல்லாத்துலயுமே  அசத்தக்கூடிய  சத்யா போட்டியில தோத்துட்டாலும் , அதிகமான சினிமா பாடல் வாய்ப்புகள் இப்ப இவருக்குதான் கிடைத்துக்கொண்டு இருக்கிறது .

முதல் பாடல், “மயங்கினேன் தயங்கினேன்” படத்தின் – “மயங்கினேன் தயங்கினேன்” என்ற ஒரு நிமிட மெலடி, பெரிதாக செவி ஈர்க்கவில்லை . அடுத்தாக, அனிருத் இசையில் “மூன்று” படத்திற்காக ஹரீசுடன் இணைந்து பாடிய போ நீ போ ரீமிக்ஸ். அதற்கடுத்து, ஜி.வி பிரகாசின் “தாண்டவத்தில்” “உயிரின் உயிரேவில்” சைந்தவியுடன் பாடிய  டூயட். இரண்டிலுமே பெரிதாக ஸ்கோப் இல்லை  , ஹம்மிங் , ஆலாப் மட்டுமே ஆனாலும் நன்றாகவே பாடியிருப்பார் . போன வருஷம் வெளிவந்த(?) “முதல் தகவல் அறிக்கை” என்ற படத்தில் “உன் ஊரெங்கும் வீசும்” என்று தொடங்கும் ஒரு  மெலடி பாடியிருக்கிறார் , அட்டகாசமாக இருக்கிறது. ஆனால், படம் படுத்ததால் பாடல் பரவலாக கேட்கப்படவே இல்லை .

இரண்டு வருடத்திற்குப் பிறகு இதோ இப்பொழுதுதான் நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன . “கொஞ்சம் காஃபி கொஞ்சம் காதல்” – சுருக்கமா – “K 4” என்ற வெளிவர இருக்கிற படத்தில் , பாணி கல்யான் இசையில் ஒரு சேர்ந்திசைபாடல்  - “அடி தாகீரா” என்று ஆரம்பிக்கும்  நட்பையும் , காதலையும் போற்றும் பாடல் . அதிராத இசை , எளிமையான வரிகள், இனிமையான குரல் , இடையிடையே ராப்  என்று கலவையாக, அருமையாக இருக்கிறது . படம் வெளிவந்தபிறகு கல்லூரி மாணவர்களின் ரிங் டோனாக இருப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உள்ள பாடல் .

பாடல் வரிகள் எல்லாமே அவ்வளவு அருமை .

“காதல்தான் இங்கு உயிரெழுத்து , நண்பரெல்லாம் அதன்  துணை எழுத்து”

“கைக்குட்டை இல்லாமல் கண்ணீரைத் துடைக்கின்ற அழகான விரல் அல்லவா “

“விரல்களில் செல்போன் பேச்சு , விழிகளில் பேஸ்புக் சாட்டு “

“தாய் கூட சிலநேரம் நம்மை தள்ளி வைப்பாள் அது பெரும் சோகம் , நண்பன் வந்து அங்கு நமக்காக  தோள் கொடுப்பான் அது யோகம் “.

“அதிகாலை , இளம் மாலை காஃபியின் சுவை போல அடி நெஞ்சில் இனிக்கின்றதே” .

கேட்டுப்பாருங்க உங்களுக்கும் பிடிக்கலாம் .
  
சமீபத்தில் பாரதிராஜாவின் “அன்னக்கொடியும் கொடிவீரனும்” படத்துக்காக ஜி.வி.பிரகாசின் இசையில் சின்மயி உடன் இணைந்து “ஆவாரங் காட்டுக்குள்ளே” என்று தொடங்கும் ஒரு டூயட் பாடியிருக்கிறார் . ஆலாப்புடன் தொடங்கும் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. அப்டியே போகப்போக குழைந்து நெகிழ்ந்து பாடியிருக்கிறார்கள் . கேட்க கேட்க பிடிக்கக்கூடும் . படம் வெளிவந்த பிறகு பண்பலைகளின் இரவு நேர விருப்பப் பாடலாக அமைவதற்கும் வாய்ப்பிருக்கிறது 

WELL DONE SATHYA...! WAY TO GO.....!

10 comments:

 1. மாணவர்களின் ரிங் டோனாக இருக்கப் போகிற பாடல் கேட்டதில்லை...

  இணைப்பிற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. கேட்டுப்பாருங்க நல்லாருக்கும் ...

   Delete
 2. எனக்குப் பிடித்த பாடகர்களுள் இவரும் ஒருவர்.

  பாடல்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அட ஒங்களுக்கும் புடிக்குமா ...?

   Delete
 3. சூப்பர் சிங்கர் பட்டம் வெல்லாவிட்டால் என்ன!அவர் ஒரு சூப்பர் சிங்கர்தான்!

  ReplyDelete
 4. ஸாரி பிரதர்! நான் தொலைக்காட்சிகள் எப்போதாவதுதான் பார்ப்பேன். அதிலும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி காணும் வாய்ப்பு கிட்டியதில்லை எனக்கு. ஸோ, நோ கமெண்ட்ஸ். நெக்ஸ்ட் டைம் வர்றேன்! ஸீயு!

  ReplyDelete
  Replies
  1. //ஸாரி பிரதர்! நான் தொலைக்காட்சிகள் எப்போதாவதுதான் பார்ப்பேன்.//

   ரெம்ப ரெம்ப நல்ல பழக்கம் ...!

   Delete

Related Posts with Thumbnails