Sep 24, 2013

ராஜா ராணி ...!


ரெம்ப FRESH ஆன ஒரு FEEL GOOD ALBUM ஜீ.வி.பி. யிடமிருந்து ...!

ஆல்பத்தோட ஆரம்பம்   “A LOVE FOR LIFE”  மியூசிக் கேக்கும்போதேல்லாம் “செல்வராகவன்” படம் பாக்குற ஒரு FEEL . VERY SOOTHING COMPOSITION . அனேகமா டைட்டில் SONG ஆக இருக்கலாம் .


அடுத்து, ஆல்பத்தோட ராணி ...! “அஞ்ஞ்சாடே(?) , அஞ்ஞ்சாடே”   . பாடலின் சிறப்பு சக்திஸ்ரீயின் கிறக்கமும் , குழைவும் கலந்த குரல் & பா.விஜயின் வரிகள்  . பொதுவா ஆணின் பார்வையில் சொல்லப்படும் காதலின் தாக்கத்தை பெண்ணின் பார்வையில் சொல்லியிருக்கின்றார்கள் . தங்கள்  உள்ளம் கொள்ளை கொண்ட கள்வர்களின் அழைப்புக்கு காதலிகள் காலர் ட்யூனாய் வைக்க ஏற்ற பாடல் .

“மிளகாப் பூப்போல என்னுள்ளே அழகாப் பூக்க விட்டானே .
வெக்கத்துல விக்க வச்சானே , வெப்பத்துல சிக்க வச்சானே “. வரிகள் செம்ம ....!

ஹெட் போன்ல கேக்கும்போது மட்டுமே பாடல் வரிகளை தெளிவாக கேட்கமுடியும் .


அடுத்து , “ஜில்லென ஒரு மழைத்துளி  “ கடற்கரை சாலையில் காதலியைக் கட்டிக்கொண்டு காற்றோடு பைக்கில் பறப்பது போல ஆரம்பிக்கும் பாடல் , போகப்போக ட்ராபிக் கான்ஸ்டபிளை பார்த்த லைசென்ஸ் இல்லாதவன் போல திணறி மீண்டும் பறக்கின்றது . கிளிண்டன் , V.T.V அல்போன்ஸ் , சூப்பர் சிங்கர் அல்கா பாடியிருக்கின்றார்கள் .


NEXT , “ஹே பேபி” ஆரம்பத்துல வர்ற மியூசிக் ( சாக்ஸாபோன்..?) அட்டகாசம் . ஜி.வி.யோட ஜில்- குரல்ல தொடங்குவது கானா பாலாவோட கர கர CONTRAST குரல்ல முடியுது .


அடுத்து , “இமையே , இமையே” , “ஒரு பாதி கதவு” போல் இல்லாவிட்டாலும் அருமையான மென் மெலோடி . ஜி.வி . யும் சக்திஸ்ரீ யும் பாடியிருக்கின்றார்கள் . வழக்கமாக பாடும் பார்ட்னருக்கு ரெஸ்ட் போல ....!


NEXT , ஓ(டு)டே ஓ(டு)டே ...! அதிர அதிர இசைத்தாலும் , திமிர திமிர வெளிப்படும் குரலுக்கு சொந்தக்காரரான நாம “விஜெய் பிரகாஷ்” & இன்னும் இருவர் பாடியிருக்கின்றார்கள் . “உன்னிமேனனுக்கும்” அப்புறம் ரெம்ப ஸ்பஷ்டமா வார்த்தைகளை பாடுவது அனேகமா நம்ம வி.பி யாத்தானிருக்கும் .


அடுத்து , குட்டியா , க்யூட்டா வந்தனா ஸ்ரீனிவாசின் குரலில் “உன்னாலே”.டிஸ்கி :        டீசர் & டிரைலர பார்க்கும்போது , காட்சிகளும் , COSTUMES ம் கண்ல ஒத்திக்குற மாதிரி கலக்கலா இருக்கு. படம் எப்டி இருக்கப்போகுதோ தெரியல . ஆனா, கண்ணுக்கும், காதுக்கும் குளிர்ச்சியா , VISUAL & MUSICAL TREAT இருக்கும்னு நம்பலாம் ...!என்றென்றும் புன்னகையுடன் :)

ஜீவன்சுப்பு .


29 comments:

 1. நீர் ரசிகன்யா... உமது பதிவை பார்த்து தான் 'வணக்கம் சென்னை' பாடல்கள் கேட்டேன் ... இப்போதே 'ராஜா ராணி' பாடல்களையும் தரவிறக்கி கேட்கிறேன்

  ReplyDelete
 2. ஓடே..ஓடே.. என் பேவரைட்.. (உபரி தகவல்: அது நஸ்ரியா பாட்டாக்கும்.. ;-) )

  ReplyDelete
  Replies
  1. ஓட ஓட விரட்டுனாலும் நீர் இந்த நஸ்ரியா புராணத்த விடமாட்டீருபோல

   Delete
 3. ஹே பேபி பாடல் வெஸ்டர்னில் ஆரம்பித்து கானவில் முடிகிறது.. ஹே பேபி கடைசியில் ஏ.. பாப்பா ஆனது நான் மிகவும் ரசித்த வரி..

  ReplyDelete
 4. ஆரம்பம் படப் பாடலும், ராஜா ராணியும் நான் இப்போது திரும்பத் திரும்ப கேட்கும் பாடல்கள்..

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பம் இனிமேதான் ஆரம்பிக்கணும் .

   Delete
 5. அஞ்ஞாடே ன்னா கணவன்னு அர்த்தமாம்.. எந்த லேங்க்வேஜ்சுலேன்னு தான் தெரியல..

  ReplyDelete
  Replies
  1. அஞ்ஞாடே...! டைப்புரதுக்குள்ள கண்ணு முழி பிதுங்கிருச்சு . கனவன்னாலே அப்பிடிதான் போல ....!

   Delete
 6. தரவிறக்கிட்டேன்... ஏனுங்க நல்லா மட்டும் இல்ல உங்களுக்கு இருக்குதுங்க ... :-)))

  ReplyDelete
  Replies
  1. யோவ் உன்ன கட்டாயப் படுத்தி தரவிறக்கம் பண்ண வைச்ச மாதிரி சொல்றே, இப்ப நான் சொல்றேன்யா நல்லா இல்ல டெலிட் பண்ணவும் ... பண்ணிட்டு சொல்லவும் மிஸ்டர் சீனு.. ஐயம் வைட்டிங்

   Delete
  2. சட்டத்திற்கு புறம்பாக தரவிறக்கம் செய்ய சுட்டி கொடுத்த சூப்பர் சுப்புவையும், தரவிறக்கம் செய்தும் பாட்டைக் கேட்காத "ஜூனியர் STR" சீனுவையும் சங்கம் கண்டிக்கிறது.. இன்னும் பாட்டை தரவிறக்கமே செய்யாத அரசனை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறது..

   Delete
  3. @ தி.கொ.போ.சீ .... யூத்துக்கெல்லாம் பபுடிக்கும் உமக்கு கொஞ்சம் டவுட்டுதான் ... :----)

   Delete
  4. @ அரசன்

   அரசனின் கருத்தை இந்த அவை ஆமோதிக்கின்றது .

   Delete
  5. @ ஆவி

   "ஜூனியர் STR"....! :)))))))

   Delete
 7. தரவிறக்கம் செய்து இன்றே கேட்கிறேன்....

  தகவலுக்கு நன்றி ஜீவன்சுப்பு.....

  ReplyDelete
  Replies
  1. கேளுங்க .... கேட்டுக்கிட்டே இருப்பீங்க .

   Delete
 8. வணக்கம் தல, இன்னும் பாடல் கேட்கல, படத்தின் இயக்குனர் அட்லீ மீது எனக்கு தனிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கு .. நிச்சயம் படம் நல்லா இருக்கும் என்று நம்புகிறேன் .. நம்புவோம்

  ReplyDelete
  Replies
  1. அரசனின் (கால் )அடிபட்டமையால் இந்த அவை அளவற்ற ஆனந்தம் அடைகின்றது ....!

   அரசரே வருக ...!

   ( அரசனிடம் அடிபட்டமையால் ன்னு யாரும் தப்பாப் படிக்கப்புடாது ...)

   Delete
 9. ஆறு பாட்டு ஒரு தீம் மியுசிக்.. எல்லாமே சூப்பர்.. அது எல்லாத்துக்கும் மேல நஸ்ரியா நடிச்சிருக்கு, இத விட படம் நல்லா இருக்க வேறேதும் கியாரண்டி வேணுமா?

  ReplyDelete
  Replies
  1. "நஸ்ரியா "அதுதான் பயமே தல

   Delete
  2. @ அரசன்

   அப்டித்தான் சொ(கொ)ல்லுங்க அரசே ...! கொலையா கொல்றாப்புல ...!மிடில

   Delete
 10. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 11. புது கல்யாணம் ..அதுவும் காதலித்த பெண்ணுடனே ...g v p ன் உற்சாகத்திற்கு சொல்லவா வேணும் ?சூப்பர் !

  ReplyDelete

Related Posts with Thumbnails