பரீட்சைன்னு
சொன்னா பல்லுப்போன வயசுல கூட பயம் வரும்போல # பயமா இருக்கு..! எம்.பி.ஏ. எக்ஸாம்
எழுதப்போறேன் ....! ( நாங்களும் கீச்சுவோம்ல ...! ).
ரெகுலர்ல
காலேஜுக்கு போயி, மூணு தியரி மூணு பிராக்டிகல்
எழுதுனாவே கன்ஃபார்மா நாலு அரியர்ஸ் விழுகும் . இந்த லட்சணத்துல காலேஜே போகாம, கரஸ்ல
ஒம்போது பேப்பர் எழுதப்போறேன், ஒம்போதுமே தியரி...! ஹைய்யோ, ஹைய்யோ ...!
பரீட்சைங்க்குற
பேர்ல, மனப்பாடம் பண்ணுனத கக்குறதுங்குறது நல்ல கல்விமுறையே இல்ல, பரீட்சைகள் புத்தகத்தை பார்த்து எழுதுவதாக
இருக்க வேண்டும் அப்டின்னு யாரோ ஒரு நல்ல உள்ளம் எதிலையோ எழுதி இருந்ததா ஞாபகம் ...!
புத்தகத்த பாத்து எழுதச்சொன்னா கூட எந்த கேள்விக்கு எந்த புத்தகத்துல பதில்
இருக்கும்னு தெரியாத தற்குறில நாம...! என்னமோ போங்க அநியாயமா இருபதுனாயிரம்
போச்சேன்னு கவலயா இருக்கு ....!
அதுக்கு
நாங்க என்னடா பண்ணமுடியும்னு கேக்குறீங்களா..? ஒண்ணே ஒன்னு பண்ணுங்க பாஸ் ..! ஒங்க
இஷ்ட தெய்வத்த வேண்டிக்குங்க ...! நா நல்ல படிக்கணும் , எனக்கு எக்ஸாம் ஈசியா
இருக்கோணும் , எனக்கு தெரிஞ்ச கொஸ்டீனா வரணும்னு இல்ல ...! எம்பக்கத்துல ஒக்காந்து எழுதப்போறவேன்
நல்லா படிக்கணும் , அவனுக்கு தெரிஞ்ச கொஸ்டீனா
வரணும் , அவனுக்கு எக்ஸாம் ஈசியா இருக்கோணும்னு வேண்டிக்குங்க .
நாங்கல்லாம் பொதுநலவாதியாக்கும் ....!
ஆங்...! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் , பாஸ் படத்துல வர்ற மாதிரி அழகான ஹால்
சூப்பர்வைசர் வரணும்னும் வேண்டிக்குங்க , ஆனா பிட்டல்லாம் புடுங்ககூடாதுன்னு
கண்டிசனோட வேண்டிக்குங்க ....! ஹி ..ஹி.....!
நெறைய
கிழிக்க வேண்டியது சாரி படிக்க வேண்டியது இருக்குறதுனால பிளாக்குக்கு ரெண்டு வாரத்துக்கு லீவு ...! லீவு ...! லீவோய் ....!
(என்னங்க
சொல்றீங்க ...? லீவ கொஞ்சம் எக்ஸ்டன் பண்ணுனா நல்லாருக்குமா...! நோ...! நெவர்...!
).
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கள் ஊர் ஸ்ரீ காரிய சித்தி கணபதியை நினைத்து கொண்டு எழுதுங்கள்! காரியம் சித்தியடையும்!
ReplyDeleteஒங்க ஊர் ஸ்ரீ காரிய சித்தி கணபதியைநெனச்சு எழுதிட்டேன் . பாஸ் பண்ணுனா சொல்லி அனுப்புறேன் என் சார்பா நாலு தேங்கா வாங்கி ஒடச்சுருங்கன்னேன் .
Deleteஅண்ணா.. எவ்வளவோ எழுதிட்டோம் (ப்ளாக் போஸ்ட்ஸ்)
ReplyDeleteஇத எழுதமாட்டோமா? :)
ஆல் த பெஸ்ட்!
நா படிச்ச படிப்புக்கு பெஸ்ட் ஆப் லக்குன்னு தா சொல்லோனும் .
Deleteஹா ஹா ஹா. அழகான சூப்பர்வைசர் வந்தா கவனம் சிதறி விடும். எனவே நீங்கள் தேர்வில் வெற்றி பெற ஒரு ஆண் மகன் வர வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDeleteதையிருல மறக்காம சக்கர கலந்து சாப்பிட்டு விட்டு போங்க.
ஜெய் ஸ்ரீ பிட்ஆனந்தா !
//தையிருல மறக்காம சக்கர கலந்து சாப்பிட்டு விட்டு போங்க.//
Deleteபோனா ...?
//ஜெய் ஸ்ரீ பிட்ஆனந்தா !//
அய்யய்யோ அபச்சாரம் அபச்சாரம் ...!
பக்கத்துல உககாந்து எழுதறவனும் எம்.பி.ஏ. எக்ஸாம் எழுதத்தான் வந்திருக்கானான்னு செக் பண்ணிக்கப்பா... ஹி... ஹி...! எம்பியே எக்ஸாம் எம்பாமயே நல்லபடியா எக்ஸாம் எழுதி வெற்றி வீரனா மீண்டும் எங்களைச் சந்திகக நல்வாழ்த்துகள்!
ReplyDelete//பக்கத்துல உககாந்து எழுதறவனும் எம்.பி.ஏ. எக்ஸாம் எழுதத்தான் வந்திருக்கானான்னு செக் பண்ணிக்கப்பா... ஹி... ஹி...!//
Deleteஎப்டின்னேன் ... எப்டி அனுபவம் போல ...?
//எம்பியே எக்ஸாம் எம்பாமயே நல்லபடியா எக்ஸாம் எழுதி வெற்றி வீரனா மீண்டும் எங்களைச் சந்திகக நல்வாழ்த்துகள்!//
என்கன்னேன் சந்திக்க விட்டீங்க ....?
பரீட்சை எழுதாம இருந்தாகூட ஓகே . பதிவு எழுதாம இருக்கக் கூடாது.
ReplyDeleteஅப்டி சொல்லுங்க பாஸ் ....!
Delete