May 27, 2013

கிரிக்கெட்டும் , கல்யாணமும் .....!




  
பரிணாம வளர்ச்சியில (?) கிரிக்கெட்டும் , கல்யாணமும் ஒரே மாதிரி தான் போல . ஆரம்ப காலத்துல கல்யாணம், “டெஸ்ட்” மேட்ச் மாதிரி அஞ்சு நாள் நடந்துச்சு , அப்புறம் “ஒன்டே” மாதிரி ஒரே நாள், காலைல ஆரம்பிச்சு நைட்டுக்குள்ளார முடிஞ்சுது .  இப்பல்லாம் “ட்வென்டி டிவென்டி” மாதிரி, நாலே மணி நேரம்தான் . சாயங்காலம் ஆறு டூ பத்து . கிரிக்கெட் மாதிரி கல்யாணங்கள் லயும் பிக்சிங்கும் , பிராடுத்தனமும் அதிகமாயிட்டே போகுது . எல்லாமே வியாபாரம் தானோ ....?

நிதானம் , பொறுமை இந்த வார்த்தைகளையெல்லாம் அகராதியிலருந்தே எடுத்துடலாம், எல்லாமே எக்ஸ்பிரஸ் தான்....! இவ்ளோ வேகமாவும் , அவசர அவதியாவும் எங்கதான் போறமோ ..? எந்த ஆணியதான் புடுங்க போறோமோ ...?

முந்தாநாள் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன் இல்ல இல்ல ரிசப்சனுக்கு போயிட்டு வந்தேன் . இன்விடேசன் கூட இப்பல்லாம் ரிசப்சனுக்குதானே தர்றாங்க . ஆறுமணிக்கு ஆபிஸ் முடிச்சு, அலுவலக நண்பர்கள் கூட அப்டியே அடிச்சு புடிச்சு போயி , மணமக்களை பாக்குறதுக்கு கொஞ்ச நேரம் கியூ வுல நின்னு , அப்டிக்கா மேடைக்கு போயி , சொரத்தே இல்லாம கைய கொடுத்து , டெம்ப்ளேட்டா ஒரு ஆல் த பெஸ்ட்ட மொணங்கி , இஞ்சி திங்காத மங்கியாட்டாம் ஈஈஈ ன்னு போட்டோவுக்கு இளிச்சு, நானும் வந்துட்டேன்னு  ஒரு அட்டண்டஸ் போட்டுட்டு  அப்டியே பந்திக்கு போனா அங்க அத விட பெரிய கியூ ....!

ஏற்கனவே சாப்டுட்டு இருக்குறவங்க எழுந்திரிக்குரதுக்கு முன்னாலேயே போயி பின்னால நின்னு சீட் புடிச்சு ஒக்காந்தா , பாஸ் ...! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க , இட்டலி வந்துட்டு இருக்குங்குறாங்க. கல்யாண வீட்டுல  வந்துட்டு இருக்குன்னு சொன்னா இப்பத்தான் வெந்துட்டு இருக்குன்னு அர்த்தம் . அய்யோ அய்யோ ...! முடியல , பசி தாங்க முடியல ...!

பசி வெறியில வச்ச மொய்யவிட அம்பது ரூபாய்க்கு சேத்து சாப்டுட்டு , வெளில வந்தா நம்ம எக்ஸ் கொல்லீக்ஸ்லாம் நிக்குறாங்க . ஹாய் ன்னு சொல்லிட்டு போறதுக்குள்ள ஒரு ஃபோன் , அப்டியே எடுத்து பந்தாவா பேசிட்டு , அப்புறம் எப்டி இருக்க மச்சி...! ன்னு கேக்குரதுக்குள்ள அவனுக்கு ஃபோன் , அவனுக்கும் கஸ்டமர் கேர் இருக்காதா பின்ன ....! அப்ரமென்ன வராத ஃபோனையே கொஞ்சம் நேரம் வெறிச்சு பாத்துட்டு வீட்டுக்கு வந்தாச்சு . பத்து மணிக்கு மேல அதே எக்ஸ் கொல்லீக்சஸ்க்கு போன போட்டு மொக்கிட்டு தூங்கியாச்சு ....!

இப்பல்லாம் ரியல்  வேர்ட்ல வாழறதுக்கு யாருக்குமே டைம் இல்ல , எல்லாருமே விர்ச்சுவல் வேர்ல்ட் ல தான் வாழ்ந்திட்டு இருக்கோம் அதுவும் எக்ஸ்பிரஸ் வேக வேர்ல்ட் ல .....!


என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு 

15 comments:

  1. எக்ஸ்பிரஸ் வேக வேர்ல்ட்

    புன்னகைக்க வைத்தது ...!

    ReplyDelete
  2. எக்ஸ்பிரஸ் வேகத்துல வந்த
    உங்கள் பின்னூட்டம்
    என்னை புல்லரிக்க வைத்தது ...!

    நன்றிங்க ...!

    ReplyDelete
  3. ஹா... ஹா... அடுத்து ஒரே 'over' தான்...!

    ReplyDelete
    Replies
    1. வந்தாலும் வந்துரும் ...!

      Delete
  4. // கல்யாண வீட்டுல வந்துட்டு இருக்குன்னு சொன்னா இப்பத்தான் வெந்துட்டு இருக்குன்னு அர்த்தம்//

    யோவ் கல்யாணமாது பண்றாங்களேன்னு சந்தோசப் படுவீங்களா... ஹையோ ஹையோ

    ReplyDelete
    Replies
    1. என்னால ஒன்னோட ஆதங்கத்த புரிஞ்சுக்க முடியுதுப்பா ...!

      அவசரப்படாதப்பா அண்ணனுக்கு முடிச்சுட்டு அப்புறம் ஒன்ன முடிச்சுடுவாங்க சாரி ஒனக்கு முடிச்சுடுவாங்க ....! ஹா ஹா ..!

      Delete
  5. உண்மை, முடிந்தவரை இந்த மின்னணுப் பொருட்கள் இல்லாமல் மனிதர்களுடன் நேரம் செலவிட்டால் மனத்திற்கு நல்லது

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ...! நன்றி வருகைக்கு.

      Delete
  6. கிரிக்கெற் கல்யாணம் ஒப்பீடு சூப்பர் .

    ReplyDelete
  7. நம்ம நாட்டுல இந்த 'கியூ' தொல்ல தாங்க முடியவில்ல

    ReplyDelete
  8. எக்ஸ்ப்ரஸ் வேக வர்ல்ட்! அது மட்டுமா... இப்பல்லாம் ஃபீலிங்ஸ் கூட அப்படித்தான் ஆயிட்டு வர்றதா என் எண்ணம்! பேக்ல தீப்புடிச்சுக்கிட்ட மாதிரி இங்க ஓடிட்டிருக்கற ஜனங்களைப் பாக்கறப்பல்லாம் அசந்திருக்கேன் நான்!

    ReplyDelete
    Replies
    1. //பேக்ல தீப்புடிச்சுக்கிட்ட மாதிரி இங்க ஓடிட்டிருக்கற // செம ...!

      Delete
  9. உண்மைதான்! எல்லாம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete

Related Posts with Thumbnails