May 23, 2013

பாஸ்...! ஒங்களுக்கு உசுரு மேல ஆச இருக்கா ...?

மண்டையில மூளை இருக்குதோ இல்ல களிமண்ணு இருக்குதோ , நாட்டுக்கும் , வீட்டுக்கும்  நாம ரெம்ப முக்கியமில்லையா….? அதான் , பேண்டுக்கு பெல்ட்  போட்டுருக்கேனோ இல்லையோ , கார்ல எப்ப போனாலும் சரி கண்டிப்பா சீட் பெல்ட் போட்டுடுவேன் . வண்டி சாவிய எடுக்குறனோ இல்லையோ , ஹெல்மட் எடுத்துட்டு தான் டூ வீலரையே தொடுவேன் .

அதென்னமோ தெரியல கார்ல சீட் பெல்ட் போட்டுட்டு போறவனையும் , டூ வீலர்-ல ஹெல்மட் போட்டுட்டு போறவனையும் நம்மாளுங்க கிண்டலாவே பாக்குறாங்க . பயந்தாங்கோளின்னு நக்கல்,  நையாண்டி வேற...! நண்பர்களே...! ஒங்க உசுரு, ஒங்களுக்கு மசுருக்கு சமமா இருக்கலாம் . ஆனா, ஒங்க குடும்பத்துக்கு ரெம்பப் பெரிசு, ஒங்க உசுரையும் , இழப்பையும் எதுனாலயும் ஈடுகட்டவேமுடியாது.  ஸோ , டூ வீலர்ல போகும்போது ஹெல்மட்ட தலையில வைச்சுக்குங்க . நீங்க தலையில வைக்காமா பெட்ரோல் டாங்கி மேல வச்சீங்கன்னா ஒங்க குடும்பம் தலையில கைவச்சுடும்......! கார்ல போகும்போது சீட் பெல்ட்ட சீட்டுக்கு போடாமா, கண்டிப்பா நீங்க போட்டுக்குங்க, இல்லாங்காட்டி ஒங்க சீட்டு செதறீடும்...!

நீ என்ன வேணும்னாலும் சொல்லு  நாங்க போடவே மாட்டோம் னு சொல்ற வீர பிரகஸ்பதிகள் என்னனோ தொலைங்க . ஆனா தயவு செய்து போடுறவங்கள கிண்டல் பண்ணாதீங்க . சீட் பெல்ட்டோட அவசியத்த இந்த வீடியோவவிட அழகாகவும் , ஒரைக்குற மாதிரியும் யாராலும் சொல்ல முடியாது . பாருங்க பாஸ் பாருங்க ...! பாத்தத பாஸ் பண்ணுங்க பாஸ், பாஸ் பண்ணுங்க..!

வீடியோவைப் பகிர்ந்த லெக்ஷ்மண் அண்ணனுக்கு நன்றிகள் ...!


என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு.


21 comments:

 1. பட்டாம் பூச்சி குழந்தையின் முகபாவம் அருமை...

  முதல் வீடியோ இணைப்பிற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ம்..ம்.. நல்ல விஷயத்தை நல்லாவே உரைச்சிருக்கிங்க... சீல்ட் பெல்ட் முக்கியத்துவம் பற்றி இதை விட அழகா சொல்ல முடியாது.. சூப்பர்! (ஆமா என்னை திட்டறதுக்குன்னே இந்த பதிவா?)

  ReplyDelete
  Replies
  1. சாமி சத்தியமா இது ஒரு கோ -ஆக்சிடன்ட் தாங்க ....!

   Delete
 3. அருமையான பயனுள்ள பதிவு. ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு "Better to be safe than sorry", பாதுகாப்பு மிக மிக அவசியம், சிரிப்பவர்களைப்பற்றி நமக்கு கவலை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் மிஸ்டர் கும்மாச்சி . சொலவடை சூப்பர் .

   Delete
 4. நல்லாருக்கு.... படிப்பெல்லாம் எப்படிப் போகுது?

  ReplyDelete
  Replies
  1. அவரு மொத வருஷம் முடிச்சிட்டாரு... பாசா பீசா என்பது மட்டும் சஸ்பென்ஸ்

   Delete
  2. @ சீனு ...

   நா நல்லா பண்றனோ இல்லையோ ஆனா , நீ நல்லா பண்றப்பா ....!

   @ ஸ்கூல் பையன் அண்ணேன் ...!

   படிப்பல்லாம் நல்லாத்தான் போகுது ...! நாந்தேன் போக மாட்டேங்குறேன் ...! ஹி ஹி

   அப்பப்ப கோவிச்சுகுட்டு காய் விட்டர்றீங்க அப்ரமாட்டிக்கு பழம் விடுறீங்க .. ஒங்க கேரக்டரையே "புரின்ஹ்குஜி" முடியலையே...! என்னமோ போங்க..!

   Delete
 5. வீடியோ பகிர்வு ரசிக்கவைத்தது ..!

  ReplyDelete
 6. அருமையானா வீடியோ, முன்பே பார்த்துளேன் என்ற போதும் இம்முறையும் ரசித்துப் பார்த்தேன்...

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பார்த்து , ரசித்துப் படித்து (?) கருத்துரையிட்ட அன்புத் தம்பி சீனுவுக்கு நன்றி...!

   (எங்கேயோ சுட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்காதப்பா , அதே தான் ).

   Delete
 7. அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்ண்ணா ...!

   Delete
 8. வாழ்வில் அடி பட்டு நான் உணர்ந்த அவசியமான ரெண்டு நல்ல பழக்கங்கள்

  ReplyDelete
 9. அவசியமான எதையும் மக்கள் அடி பட்டால் தான் உணருவாங்க. நல்ல பகிர்வுங்க.

  ReplyDelete
  Replies
  1. // அடி பட்டால் தான் உணருவாங்க // இது ரூபக்குக்கு தானே ...? ஹா ஹா ..!

   நன்றிங்க ....!

   Delete
 10. அடிபட்டவர்களைப் பாதது நான் கத்துக்கிட்ட விஷயம் இது. நல்லா உரைக்கற மாதிரி சுளீர்னு ‌சொல்லியிருக்கீங்க தம்பி! சபாஷ்! (அப்பப்ப மெசேஜும் சொல்விங்களோ?)

  ReplyDelete
  Replies
  1. //(அப்பப்ப மெசேஜும் சொல்விங்களோ?)//

   கொஞ்சம் கொஞ்சமா கருத்து கந்தசாமியா மாறிட்டு வர்றே...நோ ...! ஹி ஹி ...!

   Delete

Related Posts with Thumbnails