இன்றைய
இரவோடு, நான் பூமிக்கு வந்து பதினோராயிரத்து முண்னூற்று இருபத்தி மூன்று நாள்
முடிந்துவிட்டது. ஆமாங்க..! எனக்கு ஹேப்பி பர்த்டே ....!
(என்னங்க..!
கால்குலேட்டர் ஒப்பன் பண்ணி 11316 டிவைடட்
365 ன்னு போட்டுப்பார்த்துருப்பீங்களே...! ஐ நோ ..! ஐ நோ...! எதையுமே நேரா சொல்றதவிட சுத்தி வளச்சு சொன்னாத்தானே ரீச் ஆகுது . சரி சரி சிரிச்சது
போதும் மேல படிங்க ...! இல்ல... இல்ல... கீழ படிங்க .)
அன்பின்
அரவணைப்புடனும்,
அனுபவத்தின்
துணையுடனும்
அகவை
முப்பத்து இரண்டில்
அடியெடுத்து
வைக்கின்றேன்.
அற்புதமான
ஆண்டாக
அமையுமென்ற
நம்பிக்கையுடன்...!
சிறுவயதில்
பிறந்தநாள் என்பது ஒரு திருவிழா , ஒரு கொண்டாட்டம் . ஆம் ...! எத்தனையோ ஆயிரம்
விந்தணுக்களில் ஒன்று மட்டுமே கருவாகி , உயிராக உருவாகி , உலகத்தோடு உறவாடிய நாள்
நிச்சயமாக கொண்டாடப்படவேண்டிய நாள் தானே ....! ஆனால் இப்பொழுதைய கார்ப்பரேட்
கலாச்சாரத்தில் பிறந்தநாள் என்பது வெறும் விழா கூட இல்லை மற்றுமொரு திண்டாட்ட நாளே.
வேலைக்கு வந்த புதிதில் பிறந்தநாளன்று புத்தாடை அணிந்து , மிட்டாயுடன் அலுவலகம்
சென்ற என்னை விநோதமாகப் பார்த்தார்கள் சக கார்ப்பரேட் கர்மாக்கள் . என்ன இது சின்னப்புள்ளத்தனமா
என்று ஏளனம் , பரிகாசம் வேறு . அன்றோடு முடிந்தது பிறந்தநாள் கொண்டாட்டம் .
இப்பொழுது நானும் பழகிவிட்டேன் பரிகசிக்க ...!
இதோ
இன்று அதிகாலை அலைபேசியில் அம்மாவின் அழைப்பு . மிகுந்த ஆச்சர்யம் எனக்கு….! அம்மாவின் அழைப்பில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது என்று
நீங்கள் நினைக்கலாம் . பரஸ்பரம் முரண்பட்ட ஒரு காரணத்தினால், இரண்டுநாளைக்கு முன்
அம்மாவுடனான ஒரு தொலைபேசி உரையாடலை, முழுமையாக முடிக்காமலே துண்டித்துக்கொண்டேன் .
அதன் பின் நானும் கூப்பிடவில்லை , அவரும் அழைக்கவில்லை . இதோ அவரே அழைத்துவிட்டார்
..!
சுப்புக்குட்டி
..! நாளக்கி ஒனக்கு பொறந்த நாளுப்பா , காலயில வெள்ளனா எந்துருச்சு கோயிலுக்கு
போயிட்டு
வாய்யா….. வில் ஆரம்பித்து ஒவ்வொன்றாய்
சொல்லிகொண்டே போனார் , அறிவு அன்னிச்சையாக சரி.... சரி.... என்று சொல்லிகொண்டு
இருந்த அதே வேளையில் , மனம் மானசீகமாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருந்தது, துண்டித்துக்கொண்ட தொலைபேசி இணைப்புக்காக . வீம்பில் நான் ஜெயித்து
விட்டேன்...! ஆனால், அன்பில் அவர் ஜெயித்துவிட்டார்..! எவ்வளவு தான் முரண்பட்டாலும்
, சண்டையிட்டாலும் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள அம்மாக்களுக்கு மட்டும் ஆயிரம்
ஆயிரம் அக்கறைகளும், பிரியங்களும் இருந்து
கொண்டுதானிருக்கின்றன .
நாளை நானும்
கொண்டாடுவேன் ஹேப்பி பர்த்டே ...! எப்படி
...?
வழமைபோல
அதிகாலை எட்டரை மணிக்கு அடித்துப்பிடித்து எழுந்து, காக்கைக் குளியல் போட்டு,
கரித்துக்
கொட்டிக் கொண்டே கேண்டீன் இட்லியை விழுங்கி , சீட்டு ஹீட்டாகும் வரை அலுவகத்தில் குப்பை
கொட்டி, இடையிடையே ஐ.பி.ல், அஞ்சலி என நியாயம்பேசி , மாலை வீடுவந்து , வெட்டியாக சிறிதுநேரம்
விட்டம் பார்த்து, சொச்ச நேரத்துக்கு பேஸ்புக் மேய்ந்து, ஹேப்பி பர்த்டே சொல்லாதவனுக்கு
அர்ச்சனை செய்து, பின்னிரவில் சொட்டச்சொட்ட கண் விழித்து சூப்பர் சிங்கர்
பார்த்து, சூம்பிப்போன கண்களுடன் சுருண்டிடுவேன் படுக்கையில் ....!
ஆனால்
அம்மா அப்படியா ...!
அதிகாலை
துயிலெழுந்து
அழகாகப்
பட்டுடுத்தி
அன்பாக
புன்னகைப்பூச்சூடி...!
அர்ச்சனை
ஒருகையிலும்
ஆரஞ்சு
மிட்டாய் மறுகையிலுமாக
ஆலயம்
சென்றிடுவாள் ...!
இறைவனைப்
பிரார்த்தித்து
இனிப்பை
வழங்கிடுவாள்
இன்று
எம்மகனுக்கு பிறந்தநாளேன்று ...!
மாசற்ற
அந்தத் தாயிடம்
மனமாரச்
சொல்லுங்கள்
எனக்கான
வாழ்த்துக்களை ...!
சொல்லி
முடிக்கும் அந்த
கணத்தில்,
ஆரஞ்சு மிட்டாயின்
தித்திப்பை
நீங்களும் உணர்வீர்கள் ....!
என்றென்றும்
புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க ...!
DeleteWish you happy birthday..
ReplyDeleteThanks Brother ....!
Deleteஎன்றும் இது போல் மகிழ்வுடன் இருக்க பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமகிழ்வுடன் நன்றியண்ணா ...!
Deleteஆரோக்கியமான எண்ணங்களுடன் அழகான அமைதியான வாழ்க்கையுடன் மனதில் உள்ள லட்சியங்களை அடைய எங்கள் தேவியர் இல்லத்தின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகான வாழ்த்துக்கு ஆழமான நன்றிகள் அண்ணா ..!
Deleteஇறைவனைப் பிரார்த்தித்து
ReplyDeleteஇனிப்பை வழங்கிடுவாள்
இன்று எம்மகனுக்கு பிறந்தநாளேன்று ...!
மாசற்ற அந்தத் தாயிடம்
மனமாரச் சொல்லுங்கள்
எனக்கான வாழ்த்துக்களை ...!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
நன்றி நன்றி நன்றி ...! நல்லாருக்கீங்களா ...?
DeleteMANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY.!
ReplyDeleteஇது ஆரஞ்சு மிட்டாய்க்கு...!
//// இது ஆரஞ்சு மிட்டாய்க்கு...! ////
Deleteஅப்டின்னா எனக்கு இல்லையா .....! ஹா ஹா ஹா ...! நன்றிங்க .
நல்ல பதிவு. சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ராம் ....!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே! (கொஞ்சம் லேட்டுதான் :-D)
ReplyDeleteகொஞ்சமில்ல ரெம்ப லேட்டு ... ஹா ஹா ஹா ...! நன்றி தம்பி..!
Deleteலேட்டா சொன்னாலும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//வீம்பில் நான் ஜெயித்து விட்டேன்...! ஆனால், அன்பில் அவர் ஜெயித்துவிட்டார்..! //
அம்மான்னா சும்மாவா?
//பேய்குணம் கொண்டே பிள்ளை
பெருந்துயர் தந்திட்டாலும்
சேய்குணம் சிறிதும் இன்றி
சிறுமையை அளித் திட்டாலும்
நாய்குணம் மனதில் கொண்டே
நல்லன மறந் திட்டாலும்
தாய்குணம் மாறா தம்மா
தரணியில் உயர்ந்த தம்மா//
இது அம்மா தலைப்பில் முன்பு நான் எழுதியது
வாழ்த்துக்கும் , கவிதைக்கும் நன்றிங்குறேன் ...!
Deleteகவித அழகு ....!
தங்கள் பதிவுகளைப் படித்த போது - எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிந்த்து.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஏங்க நல்லா பாத்து சொல்லுங்க , முதிர்ச்சி எழுத்துலயா இல்ல முகத்துலயா ...?
Deleteஎனிவே வாழ்த்துக்கு நன்றிங்கோ ...!
//அகவை முப்பத்து இரண்டில்//என்னது முப்பத்தி இரண்டா.. சத்தியமா உங்கள பார்த்தா அப்படி தெரியல... பொய் தான?....
ReplyDeleteஅழகான பதிவு... தாமதித்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
மனதிலும் எழுத்திலும் என்றும் இளமையாய் இருக்க வாழ்த்துக்கள்
//என்னது முப்பத்தி இரண்டா..தாமதித்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..//
Deleteஇன்னும் கொஞ்சம் லேட்டா வந்தா முப்பத்தி மூணே வந்துடும் ...! ஹி ஹி ...!
நன்றி சீனு ...!
ரொம்பவே லேட்டா கவனிக்கறேன் தம்பி. ஆனாலும் என் மனசு நிறைஞ்ச, மகிழ்ச்சி ததும்பற வாழ்த்துக்களை இப்ப தெரிவிச்சுக்கறேன். அடுத்த மாசம் பரிசோட சந்தி்க்கறேன்... ட்ரீட்டோட காத்திரு!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றின்னேன்...!
Delete// அடுத்த மாசம் பரிசோட சந்தி்க்கறேன்.//
ஆக்சுவலா நீங்க இந்த எடத்தோட கமெண்ட கட் பண்ணிருந்துருக்கணும். ஹி ஹி ...!
hey! same age yaar!
ReplyDeletesame pinch!!!:))
cheers ...!
ReplyDeleteSister இப்போ Friend :)