Mar 6, 2014

பேசாத வார்த்தைகள் : இன்லேன்ட் லெட்டர் ...!

கைப்பட ஒரு கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலை சமீபத்தில் . கொரியர் மூலம் அனுப்பலாம் என்று முடிவு செய்து , A 4 SHEET , கவர் எல்லாம் வாங்கி கொரியர் ஆபீஸ் போனால் , அங்கு ஏகப்பட்ட  நிபந்தனைகள் ,  குறைந்தபட்ச கட்டணமே முப்பது ரூபாயாம் . ரிமோட் ஏரியாவாக இருந்தால் தபாலை பட்டுவாடா செய்வதற்கு குறைந்த பட்சம் மூன்று நாட்களாகுமாம் அடுக்கிக்கொண்டே போனார் ஊழியர் .... போங்கடா நீங்களும் உங்க கூரியர் சர்வீசும்னு சொல்லிட்டு அஞ்சலகத்தை நோக்கி அடியை போட்டேன் .

பல வருஷம் ஆகிடுச்சு போஸ்ட் ஆபீஸ் போய் . தடை உத்தரவு போட்ட கிராமத்தில் கூட ஏழெட்டு காவல்துறை தலைகள் தென்படும். நான் நுழைந்த போஸ்ட் ஆபீஸ்ல நாலே பேரு . அந்த நால்வரும் போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள்ன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்ல .  

வழி மேல் விழி வைத்து காத்திருந்தவரிடம் ஒரு இன்லேன்ட் லெட்டர் கேட்டு பத்து ரூபாயை நீட்டினேன் . சில்லறை இல்ல தம்பி நாலா வாங்கிக்குங்களேன்னு சொல்லி கல்லாவை திறந்து காட்டினார் . கல்லா காந்தித்தாத்தா தலையை போலவே இருந்தது . போஸ்ட் கார்டு இருக்கான்னு கேட்க நினைத்து , இல்லன்னு சொல்லிட்டா மனசக்கு கஷ்டமா ஆகிடுமேன்னு கேட்கமாலே வந்துவிட்டேன் . ஏன்னா , போஸ்ட் கார்டுக்கும் எனக்கும் ஏகப்பட்ட நெருக்கம், அதைப்பத்தி தனியே ஒரு பதிவெழுதி ஹிட்ஸ் தேத்த வேண்டும் , so , அது தனியா வரும் J.


இந்த இடத்துல ஒரு சின்ன பி.பேக்...

பால்யத்தில் இன்லேன்ட் லெட்டரை பற்றிய என் அபிப்பிராயத்தை நினைத்தால் சிப்பு சிப்பாக வருகிறது . இங்கிலாந்து லெட்டர் என்பது தான் திரிந்து பேச்சு வாக்கில் இன்லேன்ட் லெட்டர் ஆகிவிட்டதாக வெகு நாட்கள் நம்பியிருந்தேன் . இங்கிலாந்து நாட்டுக்காரங்க நம்மை ஆண்டுகொண்டிருந்தபோது கொண்டுவரப்பட்டது என்பதினால் இந்தப்பெயர் வந்தது என்று எம் அறிவுக்கூட்டத்திடம் சொல்லி அதை ஞாயப்”படுத்தியதும்” உண்டு , நமக்கு வாய்த்த அடிமைகளும் அதை நம்பினார்கள் . ஐந்தாம் வகுப்பில் அடுத்த ஊரில் இருந்து புதிதாக வந்து சேர்ந்த ஒரு தேர்ந்த அறிவாளி , எங்கள் நம்பிக்கையில் பலமாக ஆணி அடித்தான் .... ! அதாகப்பட்டது அந்தக்காலத்துல எல்லாரும் இங்க்  பேனாவுலதான் எழுதுவாங்க , SO , இங்க் லெட்டர் தான் மருவி இங்கிலாந்து லெட்டர் ஆகிவிட்டதாக சொல்லி நம் அடிமைக்கூடாரத்தை காலி செய்துவிட்டான்
.
இந்த இன்லேன்ட் லெட்டர் இருக்கு பாருங்க , அதை அவ்வளவு எளிதாகவெல்லாம்  மடித்துவிடமுடியாது .நிச்சயமாக தனித்திறமை வேண்டும் . அதைவிட இரண்டு மடங்கு திறமையும் , லாவகமும் பிரிப்பதற்கு வேண்டும் . பெரும்பாலும் நான் பிரித்த லெட்டர்கள் எல்லாம்  , சரளாவிடம் அடிவாங்கிய வடிவேலுவைப்போல நாராசமாய் கிழிந்து தொங்கும் . சேதாரம் இல்லாமல் பிரித்ததே இல்லை .

ரெம்ப சல்லிசான பைசா ங்குற ஒரே காரணத்தினால் வீட்டில் எப்பொழுதும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவது அஞ்சல் அட்டைதான் . போஸ்ட் கார்டுல  இருக்குற மிகப்பெரிய குறை பிரைவசி.  மிக முக்கியமான விசயங்கள் இருந்தால் மட்டுமே இன்லேன்ட் லெட்டர் வாங்குவார்கள் . இன்லேன்ட் லெட்டர்ல எழுதுறதே ஒரு தனி பெருமை , போஸ்ட் மாஸ்டர் நிமிர்ந்து பார்த்து லெட்டரை  ஐ கொடுப்பதில் இருந்து , போஸ்ட் பண்ற வரைக்கும் ஒரே குதூகலம்தான் .

போஸ்ட் பண்றதுல இருக்குற ஒரே சிக்கல் , போஸ்ட் பாக்ஸ் இருக்கும் உயரம் . எங்க கிராமத்தில் போஸ்ட் பாக்ஸை ஐந்தடி உயரத்தில் தான் வைத்திருப்பார்கள் . ஏன்னா, பழைய ஸ்டாம்புகளை தரலைன்னு சொல்லி போஸ்ட் மேன்/மாஸ்டர் மேல இருக்குற கோபத்தை  எங்களை மாதிரி சமத்தான பசங்கள் போஸ்ட் பாக்சிற்குள் கல்லு மண்ணு போட்டு காட்டுவோம் . இன்னும் ரெம்ப சமத்தான பருத்திவீர பசங்கள் தவளை , ஒனான்னு போட்டு போஸ்ட் பாக்ச ஒரு மினி மி.க.சா யாவே மாத்திடுவானுங்க .

So , போஸ்ட் பண்ணுவதற்கு மற்றுமொரு சமத்தனோ , இல்லை சமத்தனாக இருந்து இப்ப அட்வைசர் ஆறுமுகமா மாறியிருக்கும் யாரோ ஒரு அண்ணனின் உதவியோ தேவை . எப்பவும் போஸ்ட் பண்ண பிறகு உள்ள கைய விட்டு ஒரு ஆட்டு ஆட்டி , ரெண்டு சைடுலையும் ஒரு தட்டு தட்டுனாத்தான் ஒரு திருப்தி இருக்கும் . சமயங்கள்ல ரத்தம் பார்த்த கடிதங்கள் கூட உண்டு J

இந்த இடத்துல பி.பேக் முடியுது ....!

பழக்க தோசத்துல போஸ்ட் பண்ண பிறகு உள்ள கைய விட்டு பார்த்த என்னைய போஸ்ட் ஆபீசர் முறைக்கவே , வழிந்துவிட்டு ஓடியாந்துட்டேன் .

இப்போ எனக்கு வேறொரு பிரச்சினை , மீதம் உள்ள மூன்று கடிதங்களும் தங்களை உயிர்ப்பிக்க சொல்லி ஓயாமல் தட்டிக்கொண்டே இருக்கின்றன மேசையை . முகவரியை தேடிக்கொண்டே இருக்கின்றேன் நான் . உங்களில் யாருக்கேனும் உங்களுடைய பால்யத்தின் பரவசத்தை அனுபவிக்கவேண்டுமேன்று விருப்பமிருந்தால் பின்னூட்டத்தில் உங்களது முகவரியை சொல்லிச்செல்லுங்கள் . பரவசம் பத்திரமாக அனுப்பிவைக்கப்படும் இன்லேன்ட் லெட்டர் வழியாக ....!

பி.கு: ஆச்சர்யமான விசயம் என்னன்னா , சனிக்கிழமை மதியம் போஸ்ட் பண்ண லெட்டர் செவ்வாய்க்கிழமை காலை உரியவரிடம் சேர்ப்பிக்கப்பட்டுவிட்டதுங்குறதுதான்  . இரண்டரை ரூபாயில வேலையும் முடிஞ்சுடுத்து . ஜீவன் ஹேப்பி அண்ணாச்சி J.

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .


21 comments:

 1. பின்னூட்டத்தில் போடுபவர்களுக்கு தான் முன்னுரிமையா.. email, sms எல்லாம் தெருக் கொள்ளப்பட மாட்டாதா...!

  ReplyDelete
  Replies
  1. அடப்பாவிங்களா குரூப்பா சேர்ந்து கும்மியடிக்குரீங்களே :(

   //தெருக் கொள்ளப்பட மாட்டாதா...!//

   அடுத்தவாட்டி கோயமுத்தூர் வா மகனே தெருவுலே வச்சு கொல்றேன் ...

   Delete
 2. யப்பு.. புறா ஏதும் கிடைக்கலையா என்ன?

  ReplyDelete
  Replies
  1. உம்மை மாதிரி ஆட்கள்லாம் இருக்கும் பொது புறாவெல்லாம் எப்டிப்பு இருக்கும்

   Delete
 3. முந்தைய இங்கிலாந்து சே... இன்லேன்ட் லெட்டரை லாவகமாக பிரித்து, உருட்டி உருட்டி படித்த அனுபவம் இருக்கிறதா...? அதென்ன அனுபவம் என்பதை கேட்கப்படாது...! ஹிஹி...

  இதுவே போதும்... இதே பரவசமாக இருக்கிறதே... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி dd ..! உலகத்துலையே அதிகமான நன்றிகளை நீங்கதான்னேன் அறுவடை செஞ்சுருப்பீங்க ....

   Delete
 4. பாசமுள்ள அண்ணனுக்கு, தங்கையின் முகவரி

  மிஸ். பாசமலர்
  விவேகானந்தர் தெரு
  துபாய் குறுக்குச் சந்து
  துபாய் பஸ் ஸ்டாண்ட்
  துபாய்.

  விழி மேல் வழி வைத்துக் காத்திருக்கும்
  அன்புத் தங்கை.

  ReplyDelete
  Replies
  1. ஏலே என்ன நக்கலா , சிவகங்கைக்காராய்ங்கள சீண்டிப்பார்க்காதலே சீவிப்புடுவோம் சீவி ....!

   ( குமாரண்ண்ணே நாஞ் சொல்றது சரிதானே ?)

   Delete
 5. கடுதாசி அனுபவமே சுகமானதுதான்...
  வெளிநாடுகளுக்கு எல்லாம் போஸ்ட் பண்ணும் ஐயியா இருக்கா சார்...

  ReplyDelete
  Replies
  1. ஐயியா ல்லாம் இருக்கு .. நீங்க அட்ரசயும் ஐந்நூறு ரூபாயையும் அனுப்பிச்சு வைங்க போட்ரலாம் கடுதாசிய ...

   Delete
 6. ஒரு file நிறைய நட்பும் ,உறவுகளும் எழுதிய கடிதம் என்கிட்டே இருக்கு !!
  இப்போ அம்மா இல்லை (அட எங்க அம்மாவை சொன்னேங்க )ஆனா அவங்க கையெழுத்தை பார்த்துக்கொள்ள முடியும். மறுபடியும் ஆட்டோகிராப் பக்கங்கள் மூன்றாம் அத்தியாயம் எழுதுற அளவுக்கு மேட்டர் இருக்கு. அத்தனையும் நினைவு படுத்துகிறது இந்த பதிவு! nice!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. நன்றி டீச்சர் .. நீங்களும் அந்த குரூப்புல சேரமா இருந்ததுல மகிழ்ச்சியே ...!

   Delete
 7. 828, T.H.Road,
  Thiruvotriyur,
  Chennai 600019.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரபாகர் ! மேற்படி முகவரி உண்மையானதுதான்னு நம்பி கடிதம் போடுகிறேன் விரைவில் ...

   Delete
 8. மலரும் நினைவுகள் என்னையும் பற்றிக் கொண்டன ஜீவன்! நான் இன்லேண்ட் லெட்டரைப் பயன்படுத்தி பல ஆண்டுகாலமாகி விட்டதை இப்போது சற்றே ஆதங்கத்துட்ன நினைத்துப் பார்க்கிறேன்.

  சுபத்ரா...! உங்க அட்ரஸ் சூப்பரம்மா!

  ReplyDelete
  Replies
  1. நன்றிண்ணா ..!

   சுபத்ரா...! உங்க அட்ரஸ் சூப்பரம்மா! :(

   Delete
 9. உங்களை நம்பி எனது முகவரி தரேன் சகோ! லெட்டர் மட்டும் வரலைன்னா உங்களுக்கிருக்கு தீபாவளி, பொங்கல் லாம்....,
  என் முகவரியை நல்லா கவனமா படிச்சுக்கோங்க.

  பேரு - அதேதான்,
  வீட்டு நம்பர் - அதே நம்பர்தான்.
  தெருப் பேரும் மாத்தலை
  ஊர்- அதும் அதேதான்.
  வட்டம் - இதுவரை மாறலை
  மாவட்டம்- அதும் மாறலை.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள். இது என் முதல் முறை, உங்கள் தளத்தில். அழகாக எழுதிருக்கிறீர்கள். இப்போது தான் புதிதாக தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். கடிதம் மூலமாக தொடர்பு கொள்வது தான் என் தளத்தின் முக்கிய கொள்கை. வாருங்கள். வந்து வாசித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

  ~ NRIGirl

  ReplyDelete
 11. நல்ல பதிவு
  நல்ல கடிதங்களுக்கான போட்டியை நடத்த உத்வேகம் தந்த பதிவு..

  ReplyDelete
 12. தில்லி வந்த புதிதில் பல முறை இந்த உள்நாட்டு அஞ்சலை பயன்படுத்தி இருக்கிறேன் - சில வருடங்களாகவே கடிதம் எழுதும் பழக்கமும் விட்டுப்போனது. மீண்டும் எழுதத் தூண்டியது உங்கள் பதிவு! :)

  ReplyDelete

Related Posts with Thumbnails