Mar 17, 2014

பேசாத வார்த்தைகள் : நீலாங்கரை , ட்வீட் , வித்தியாசம் .புலிவால் படத்தில் வரும் நீலாங்கரையில் பாடல் இப்பொழுதைய விருப்பப்பார்வையில் . தினமும் ஓரிரு முறையேனும் காணொளியுடன் பார்த்துவிடுகிறேன் . பாடலின் சில காட்சிகள் சர்வம் படத்தின் பாடலை நினைவு படுத்தினாலும் ,  படமாக்கப்பட்டிருக்கும் இடங்களும் , நடனமும் , இசையும் அழகு ...!

வழக்கமாக பாடல் காட்சிகளில் நடமாடும் விமல் , மேற்படி பாடலில் நடனமாடியிருப்பது ஆச்சர்ய அதிர்ச்சி . அதிலும் அம்மணி அனன்யா அலுங்காமல் ஆட , அண்ணனோ குலுங்கி குலுங்கி ஆடுகிறார் . நடன வகுப்புக்கு போகிறார் போல , போய்த்தானே ஆகவேண்டும் , இல்லையெனில் சி.கா &  வி.சே க்களின் போட்டியை எப்படி சமாளிப்பது .? அனன்யா , வெகுளித்தனமான கதாபாத்திரங்களுக்கெனவே செய்துவைத்த பதுமை . லைலா, ஜெனிலியா போன்ற லூசுத்தனமான வெகுளிகள் பட்டியலில் இவரையும் சேர்க்காமல் இருந்தால் சரி .

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் மற்றுமொரு முணுமுணுக்க வைக்கும் அழகானதொரு இசைக்கோர்வை . தென்மேற்கு பருவக் காற்றிலிருந்து -புலிவால் வரையிலுமாக என்.ஆர்.ஆர் இசையில் வெளிவந்த படங்களில் குறைந்தது ஒரு பாடலாவது வானொலி மற்றும் காணொளிகளின் விருப்பப் பாடல்களாக இருந்துவிடுகின்றது . பாடல்கள் & இசை சிறப்பாக இருந்தும் அதற்கான அங்கீகாரம் அவருக்கு சரியாக கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம் .

பெண்கள் கொண்ட ஆசையெல்லாம்
Fridge ல்  வைத்த ஆப்பிள் போல ,
ஆண்கள் கொண்ட ஆசையெல்லாம்
வெயிலில் வைத்த வெண்ணெய் போல ....

மேலே உள்ள வரிகள் மேற்படி பாடலில் கதாநாயகி பாடுவது போல வருகிறது ... பொருளுரை புரிந்தவர்கள் விவரிக்கவும் .

ட்வீட்டு

இன்றைய ஆண்களின் முக்கியமான இரண்டு பிரச்சினைகள்- முடி & மடி , முதலாவது வளராம படுத்துது , இரண்டாவது வளர்ந்து படுத்துது – நான் ஆண் –

வித்தியாசம் ..

இன்னொன்னு சாப்புட்டுடான்னு தட்டுல கொண்டாந்து தோசைய வச்சா அது அம்மா ,
இன்னொரு தோச வேணுமான்னு கேட்டா அது வீட்டுக்காரம்மா .

தம்பி , முடி வெள்ளிக்கம்பிக் கணக்கா இருக்குடா – அம்மா .
தல பூராம் நரச்சுப்போச்சு – வீட்டுக்காரம்மா ...
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .


18 comments:

 1. Fridge-ல் உள்ளதை (உடனே) சாப்பிட்டால் கெடுதி...!

  வித்தியாசம் : அன்பு வேறு... அக்கறை வேறு... இரண்டும் இருந்தால் - (நமக்கு....?)

  ReplyDelete
 2. வித்தியாசத்தை ரசித்தேன்

  ReplyDelete
 3. ட்வீட்டுகள் அருமை......

  ReplyDelete
 4. அம்மா: உனக்குப் பணக்காரக் களை வந்திருச்சுடா...
  மனைவி: என்னங்க, உங்க தலைல சொட்டை விழுந்திருச்சு.. ஹிஹி...

  ReplyDelete
 5. பெண்களின் ஆசை எப்பொழுதும் புதிதாகவே.... ஆண்களின் ஆசை தொடங்கிய வேகத்தில் அப்படியே முடிந்தும் போகிறது// இப்படியான அர்த்தமாகவும் இருக்கலாம்....

  ReplyDelete
 6. எனக்கும் பிரியா சொன்னதுதான் தோணுச்சு
  என் மகனுக்கு சிரிச்ச முகம்.
  சும்மா பேக்கு மாதிரி பல்லைக்காட்டாதிங்க !
  LOL!!

  ReplyDelete
  Replies
  1. //சும்மா பேக்கு மாதிரி பல்லைக்காட்டாதிங்க !// :)

   Delete
 7. நல்லா இருக்கு தலைவா...

  ஒரு தேர்ந்த வாசகனால் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக முடியும் என்பதற்கு நீரும் ஓர் உதா....

  ReplyDelete
  Replies
  1. யோவ் நீ கலாய்க்குற தானே ...?

   Delete
 8. அட மேல நம்ம பதிவு.. டாங்க்சுங்கொ :-)))))))

  ReplyDelete

Related Posts with Thumbnails