Apr 1, 2014

நிமிர்ந்து நில் ...!


கார்கள் , மரங்கள் எல்லாம் தன்னால தீப்பிடித்துக்கொண்டது ன்னு பேப்பர்ல செய்தி வர்ற மாதிரி , ரோட்டில் நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டு எரிந்தார்னு இனிவரும் காலங்களில் செய்தி வந்தாலும் வரும் . ஆச்சர்யப்பட அவசியமே இல்ல, அடிக்குற வெயிலு அப்படி. அம்மண உடம்புல ஆயில ஊத்தி எரிக்குற மாதிரி இருக்கு  .

போன ஞாயிற்றுகிழமை, ஒரு நொந்த வேலை காரணமாக டவுனுக்கு போயிருந்தேன் . எங்க , அடிக்குற வெயில்ல பாடமாகி ,  மாலைமலர்ல படமாகிடுவோமொன்னு பயத்துல செந்தில் குமரனில் ஒதுங்கினேன் . ரெண்டு ஆப்சன் ஒன்னு குக்கூ , மற்றொன்று பதிவின் தலைப்பு . மண்டையில எதுவுமே இல்லைன்னாலும், பொதுவா மதியக் காட்சி படம் பார்த்தாலே மண்டை பாரமாகிடும் . பட், ஒதுங்க வேற வழியே இல்ல , சரி குக்கூ போலாம்னு பார்த்தா , ஏற்கனவே  ராமு , வமு வில் ஏற்றி வைத்த பாரம் பயமுறுத்த நிமிர்ந்து நிற்பதென முடிவாயிற்று .


செரி , வாங்கோ நிமிர்ந்து நிற்போம் ,

ஆல்ரெடி, நம்ம பதிவ ஜட்ஜுங்க கழுவி ஊத்துன மாதிரியே முதல் பாதி ஜிவ்வு , ரெண்டாவது பாதி ஜவ்வு ...! அதிகாரிகளாலும் , அரசியல்வியாதிகளாலும் பழிவாங்கப்படும் ஒரு சாமான்யன் , எப்படி பொங்கி எழுந்து பொங்கல் வைக்கிறான்ற “CK நாயுடு காலத்து கதைதான்”. (“ Sentence Inspired by Mr.ஆவி”). .

மலர்ச்சியும் , நெகிழ்ச்சியுமான அமலா பாலைதான்  மைனாவிற்கு பிறகு எங்கேயும் பார்க்க  முடியவே இல்லை . மைனாவிற்கு பிறகான அனைத்து படங்களிலும் ,  அம்மணி மூஞ்சி ஆல்வேஸ் Sepia டோனில் தான் இருக்கிறது . மேற்படி படத்திலும் அஃதே . தமிழ் நடிகர்களிலேயே , ரெம்ப மட்டமான DRESSING சென்ஸ் உள்ளா ஆளு நம்ம ரவிதான் . அகா துகா வெல்லாம் அசத்தலா ட்ரெஸ் பண்ணிட்டு இருக்கும்போது , நம்மாளு ஏன் இப்பூடி படுத்துறாருன்னு நிறைய முறை நினைச்சுருக்கேன் . இதே மாதிரி நிறைய பேரு நினச்சுருப்பாங்கோ போல , அதான், ஏன் அங்கிள்ஸ் போடுற சட்டையா போடுறன்னு சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஜெனிலியாவை விட்டு கிண்டலடித்திருப்பார்கள் . இந்த படத்தில பரவா இல்ல . 

இரண்டாம் பாதியில் வரும் ஜெயம் கதாபாத்திர சித்தரிப்பு ரெம்ப சுமார் . பொண்ணுங்க ஷாலை உருவி கழுத்துல போட்டுக்குறதும் , கட்டிப்புடிச்சு ஆறுதல் சொல்லுறதும் முற்போக்குத்தனம் போல . நமக்குத்தான் மோசமா தெரியுது .

போலி பத்திரம் தயாரிக்கும் ஒரு பெண் கதாபாத்திரம் படத்தில வருது , அந்த அம்மணியோட உடல் மொழியும் சரி , உடைகளும் சரி , வசன உச்சரிப்பும் சர் class class class ...! ஆரம்பத்துல சூரி டாவடிக்குற மாதிரி கட்டுனாங்க . எங்க , கிளைமாக்ஸ்ல ரெண்டு பேரு கண்ணும் சந்திக்குற மாதிரி எதுனா சீன் வச்சுடுவாங்களோன்னு பதறிப்போயிருந்தேன் . நல்ல வேளை அப்டி எந்த அசம்பாவித சீனும் இல்ல . சூரி முதல் பாதி காமெடியில் கலகலக்க வைக்கிறார் , பின் பாதி குணச்சித்திரத்தில் கண்ணை மட்டும் கலங்கலாக வைத்திருக்கிறார் .

பொறி பறக்கும் வசனங்கள் புல்லரிக்க வைக்குது . படத்தில self corruption அப்டிங்க்குற ஒரு சொல்லாடல் கையாளப்பட்டிருக்கு . அந்த ஒரு சொல்லும் அதைதொடர்ந்து வரும் வசனமுமே போதும் நான் குடுத்த அம்பது ரூவாய்க்கு . மற்றபடி ,படத்தில கனி சார் பண்ணுன ஒரே மிஸ்டேக்கு , அதுவும் கிரிமினல் மிஸ்டேக்கு – பாடல்கள்.

என்னதான் ஆயிரம் நொட்டை சொன்னாலும் , என்னளவில இந்த மாதிரி படங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தமிழில் வந்துட்டு இருக்கனும்னுதான் எதிர்பார்க்கிறேன் . இல்லன்னா ,ஆஸ்பத்திரியின் பிரசவ அறையில் குழந்தையை பார்ப்பதற்கு கொடுக்கும் அம்பதும் , பிணவறையில் சடலத்தை பார்ப்பதற்கு கொடுக்கும் நூறும் லஞ்சமென்றே தெரியாமல் போய்விடும் அடுத்த தலைமுறைக்கு.என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .


19 comments:

 1. நிமிர்ந்து நில்...
  அழகா நிமிர்ந்து சொல்லியிருக்கீங்க...
  கடைசி வரிகள் நச்.

  ReplyDelete
 2. ஜீவன்சுப்பு,

  உங்கப்பதிவுகளை அவ்வப்போதுபடிச்சிருக்கேன்,பிற பின்னூட்டங்களிலும் கண்டுக்கொண்டிருக்கேன், ஆனால் பின்னூட்டம் போட்டேனானுதெரியாது,சமீபத்தில் கியாஸ்பதிவில் கூட பின்னூட்டமிட முயன்றேன் , ஆனால் போட முடியலை.

  dot.in என முடிவதை மாற்ற வைத்திருக்கும் ஜாவாஸ்கிரிப்ட் தான் அதற்கான காரணமாக இருக்கலாம், பலப்பதிவிலும் எனக்கு அதனால் பிரச்சினைகள் தான். ஏன் எனில் நான் வழக்கமாக "ஃபயர்ஃபாக்ஸ் உலாவி தான் பயன்ப்படுத்துவேன் ,அதில் படிக்க முடியும், பின்னூட்டமிட முடிவதில்லை அவ்வ்.

  குரோமில் வந்தால் தான் உங்களது பதிவுகள் போன்ற சிலவற்றின் பின்னூட்டப்பெட்டியே திறக்குது அவ்வ்.

  இம்முறை வெற்றிகரமாக பின்னூட்டம் வந்திடும்னு நினைக்கிறேன்.

  நிமிர்ந்து நில் சரியாக காட்சியகப்படுத்தாத ,திரைக்கதையில் கவனமில்லாமல் உருவான படைப்பா தான் எனக்கு பட்டது. ஒரு நல்ல "கதைக்களனை" சமூத்திரக்கனி வீணாக்கிட்டார்னே தோன்றுது.

  ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர் போன்றவர்கள் சின்ன சின்னக்காட்சிகளின் மூலம் ஒரு "சித்திரத்தை" உருவாக்கி கதை சொல்வார்கள், அதுவே அவர்களின் வெற்றிக்கு காரணம். சமூத்திரக்கனி அதில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை, சினிமா என்பது "காட்சி ஊடகம்" என்பதை மறந்து விட்டார் அவ்வ்.

  # இல்லாத ஆளூக்கு சான்றிதழ் கொடுத்தாங்கனு ,கேஸ் போட்டால் எல்லாம் ஒன்னுமே நிக்காது, அந்த சான்றிதழ் எல்லாம் நாங்க கொடுக்கவே இல்லை எல்லாம் போலி என சொல்லிட்டு "ஃபாரன்ஸிக் டெஸ்ட்" செய்ய வச்சு ,அது போலினு சான்று வாங்கி வேலைய முடிச்சிடலாம்.

  கஞ்சா,ஹெராயின் கேசில் மாட்டுறவங்க எல்லாம் ,அது போதைப்பொருளே இல்லைனு "ஃபாரன்சிக் லேப் டெஸ்ட்" ஐ "வாங்கிடுவாங்க, அப்புறம் எங்கே இருந்து உள்ளே போட ,புடிச்ச அதிகாரி மேல கூடவே "லஞ்சம் கேட்டார்" கொடுக்கலை அதான் என்ன ஃப்ரேம் செய்து கேஸ்போட்டார்னு ஒரு வழக்கும் போடுவாங்க அவ்வ்!

  இதுக்கு உண்மையாவே "முன்னுதாரணம்" இருக்கு. இந்த படத்தை மேற்படியான உண்மையான அரசு ஊழியர்கள் பார்த்தால் ஹே ...ஹேனு தான் சிரிப்பாங்க :-))

  ReplyDelete
  Replies
  1. //ஆனால் பின்னூட்டம் போட்டேனானுதெரியாது// போடுவதற்கு வாய்ப்பே இல்லை , ஏன்னா இங்கு இருநூறு சதவீதம் கும்மியும் , ஜல்லியுமே அடிக்கப்படும் :).

   மேற்படி படத்தில கூட ஒரு வசனம் வரும் . இந்தியாவில போலிக்கு தான் இன்னும் போலி கண்டுபிடிக்கலைன்னு ... நீங்க சொல்றத பாத்தா அதுவும் வந்துடுச்சுபோல ...

   Delete
 3. சூரி வசனங்கள், பத்திர பதிவு கதாபாத்திரம் என என் எண்ணங்களை படம் பிடிச்ச மாதிரி எப்டி இப்டி!!!!! sepia டோன் அமலா! தீப்பிடிக்கும் மனிதன் ஆசம் வர்ணனைகள்!!
  //தமிழ் நடிகர்களிலேயே , ரெம்ப மட்டமான DRESSING சென்ஸ்// தொழில் தர்மம்!!
  //இல்லன்னா ,ஆஸ்பத்திரியின் பிரசவ அறையில் குழந்தையை பார்ப்பதற்கு கொடுக்கும் அம்பதும் , பிணவறையில் சடலத்தை பார்ப்பதற்கு கொடுக்கும் நூறும் லஞ்சமென்றே தெரியாமல் போய்விடும் அடுத்த தலைமுறைக்கு.// சரியா சொன்னீங்க ப்ரோ. worth refreshing நான் உங்க பதிவை சொன்னேன் !

  ReplyDelete
  Replies
  1. //என் எண்ணங்களை படம் பிடிச்ச மாதிரி// Cheers ..!

   // worth refreshing // நா உங்க கமெண்ட்ட சொன்னேன் :)

   Delete
 4. வணக்கம் சகோதரர்
  எங்கே படத்தை முழுவதுமாக குறை சொல்லி விடுவீர்களோ என்று நினைத்துக் கொண்டே படித்தேன். இறுதி வரிகளில் என் நினைப்பை மாற்றி விட்டீர்கள். ஆம் சகோதரர் படத்தில் ஆயிரம் குறை இருந்தாலும் இது போன்ற படங்கள் அவ்வப்போது வர வேண்டும் என்பதே எனது விருப்பமும். இருவரின் எண்ணங்களும் ஒத்திருப்பது மகிழ்ச்சி. எனது தளத்திலும் இப்படம் பற்றிய பதிவு இட்டுள்ளேன். முடிந்தால் பார்க்கவும். நன்றீங்க சகோ.

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலை - படிச்சுட்டேன் ..

   Delete
 5. எனக்கும் பிடித்திருந்தது...

  சகோதரர் அ. பாண்டியன் அவர்களின் விமர்சனமும் ஒத்தே உள்ளது...

  ReplyDelete
 6. //அடிக்குற வெயில்ல பாடமாகி , மாலைமலர்ல படமாகிடுவோமொன்னு பயத்துல//

  ஹா ஹா செம... இங்கயும் இப்படித்தான் வெயிலடிக்குது...

  கடைசி பாராவுல நல்லா சொன்னீர்யா.. நாம குடுக்கறது லஞ்சம்னு தெரியாமலே போயிடும்....

  ReplyDelete
 7. வெயில் காலங்கள்ல எதாச்சம் ஒரு கோடை வாசஸ்தலத்துல இருக்கற வீட்ல ஓய்வு, குளிர் காலத்துல சென்னைல வாழ்வு - அப்படின்னு கற்பனைல ஒரு வாழ்க்கைய அமைச்சுக்கறது எனக்குப் பிடிக்கும். ரியல்ல... பாடமாகி படமாகிறக் கூடிய அபாய வாழ்க்கைதான் அமைஞ்சிருக்கு.ஹும்...! கடைசிப் பாராவை மிக ரசித்தேன்.

  ReplyDelete
 8. அடுத்த தலைமுறையிலும் லஞ்சம் இருக்கும் என்பதுதான் என்னை ரொம்பவே சுட்டது...
  அடிக்கடி இம்மாதிரிப் படங்கள் வரவேண்டும் என்பது சரியே...
  அனால் ஓடும் வண்ணம் திரைக்கதை இருக்க வேண்டும்.. அது அவுக பாடு...

  ReplyDelete
  Replies
  1. அது அவுக பாடு :)

   நன்றி

   Delete
 9. நல்லதொரு விமர்சனம்.
  "//மக்குத்தான் மோசமா தெரியுது .//" - உண்மை, அதை பார்க்க பார்க்க எரிச்சல் தான் வந்தது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Related Posts with Thumbnails