Feb 25, 2014

கியாஸ்...!






மானிய விலையில் கியாஸ் வாங்குறதுக்கு ஆதார் அட்டை கட்டாயம்ன்னு சொன்னாய்ங்க   அப்புறம் வேண்டாம்ன்னாய்ங்க, இப்ப மறுபடி வேணும்னு சொல்றாய்ங்க .. என்ன நடக்குதுன்னே புரியல  ...? இந்த நேரத்துல கியாஸ் பத்தி ரெம்ப நாளைக்கு முன்பு எழுதி பத்தவைக்காம இருந்த ஒரு பதிவு , என் இருப்பை தெரிவிக்கும் விதமாக இப்போ இங்கே ....!

*******************************************************************

ஆறு வருசத்துக்கு முன்னாடிதான் எங்க வீட்டுல கியாஸ் வாங்குனோம் . அதுக்கு முன்னாடி வரையிலும் விறகடுப்பு தான் . எமர்ஜென்சின்னா  மண்ணெண்ணெய் அடுப்பு . முதல் கேஸ் அனுபவம் இன்னும் ஞாபகம் இருக்கு. வாங்கிட்டு வந்து எப்புடி மாட்டுரதுன்னு தெரியாம கீழ் ஃபுளோர்ல இருக்க ஆபிஸ் நண்பர கூட்டினு வந்து  மாட்டித்தர சொன்னேன் . அவர் நம்மள விட பெரிய “அம்மாடக்கரா” இருப்பாராட்டுக்கு, ஹி ஹி ன்னு முடியில்லாத தலைய சொரிஞ்சுட்டே , எங்க வீட்டுக்காரம்மாவதான் கேக்கனும்னு சொல்லி அவர அனுப்பி வெச்சாரு .

அந்தம்மா நக்கலா என்னைய ஒரு பார்வை பாத்துட்டு மாட்டிக்கொடுத்துட்டு போச்சு. அதென்னமோ தெரியல நமக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுதுனா ஊர் பூரா சொல்லிடுறோம் , ஆனா தெரியாத விசயத்த மட்டும் தெரியலைன்னு பளிச்சுன்னு யார்கிட்டயும் சொல்ல முடியல , குறிப்பா பெண்கள்ட்ட...!

கியாஸ் மாட்டி கொஞ்ச நாளைக்கு , நா இருக்கும்போது மட்டும் சமைன்னு எங்கம்மாட்ட சொல்லிருந்தேன் . பின்ன...! நா இல்லாத போது ஏதாவது திருகிவிட்டு பத்தி எரிஞ்சுருச்சுனா ? சந்தேகத்”தீ”...! ஆபிஸ் போகும்போதும் சரி விட்டு வந்தோன்னயும் சரி மொத வேலை, மோப்பம் புடிக்குற வேல தான் ...! கியாஸ் டியூப் , சிலிண்டர் , சிம்மு எல்லாத்தையும் மோந்து பாப்பேன் எதுனா கியாஸ் லீக் ஆகுதான்னு . நா பண்ணுற அட்ராசிட்டிய பாத்துட்டு அம்மா அஞ்சாறு வாரத்துக்கு அடுப்படி பக்கமே அண்டல . மண்ணெண்ணெய் அடுப்ப வச்சுகிட்டு பெட்ரூம்லே சமைக்க ஆரம்பிச்சுருச்சு .

அப்புறம் அம்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சேன் . ரெகுலேட்டர் எந்தப்பக்கம் திருகுரது, லைட்டர் எப்டி பத்தவைக்குறது, எப்டி சிலின்டர ஆஃப் பண்றதுன்னு . ஆனா ரெகுலேட்டர் எந்தப்பக்கம் திருகுரதுன்னு அம்மாவுக்கு இன்னும் தெரியமாட்டிங்குது . ஸ்டிக்கர் லாம் எழுதி ஒட்டி வச்சேன் ... சோத்தாங்கை பக்கம் திருப்புனா ஆஃப் ஆயிடும் , பீச்சாங்கையி பக்கம் திருப்புனா எரியும்னு... ஊகும் கத்துக்குற வழிய காணும் . லைட்டர் அடிக்கவும் தெரியமாட்டிங்குது , தீக்குச்சிதான் , என்னைக்காவது மண்ணெண்ணெய தெளிச்சு பத்தவச்சுடுமோன்னு ஸ்ட்ராங்கா ஒரு பயம் இருந்துட்டே இருக்கு.

என்னம்மா இப்டி பண்ற...? எத்தனதடவ சொல்றதுன்னு ஏதாவது சத்தம் போட்டா , கியாஸ வேணா திருப்பி குடுத்துடுடா , கியாஸ் வெடிச்சா கூட பரவால்ல தாங்கிக்கலாம் , ஆனா தெனம் நீ  பண்ற அட்டாகாசத்ததான் தாங்க முடியலன்னு என்னையவே கலாய்க்குறாங்க J


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



25 comments:

  1. எப்படியோ 67 பதிவுகள் வந்தாச்சு. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. :) எண்ணிக்கையெல்லாம் நமக்கு பெருமையாண்ணேன்..

      Delete
  2. வணக்கம்

    ((கியாஸ் வெடிச்சா கூட பரவால்ல தாங்கிக்கலாம் , ஆனா தெனம் நீ பண்ற அட்டாகாசத்ததான் தாங்க முடியலன்னு என்னையவே கலாய்க்குறாங்க )))
    நல்ல கருத்துணர்வுகளை நல்ல நகைச்சுவை கலந்த பாணியில் எடுததுச் சொல்லிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அல்லோ ரூபன் உங்க கலாய்த்தலுக்கு ஒரு அளவே இல்லையா ....?

      Delete
  3. இனி அடிக்கடி பத்த வைங்க - பதிவுகளை...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ரிடன் ஆப் தி டிராகன்..!!

    ReplyDelete
    Replies
    1. என்னாது டிராகனா ? ஏன்யா ஏன் ...

      Delete
  5. ஹா... ஹா...
    அம்மா சொன்னது சரிதானே...
    தொடர்ந்து எழுதுங்கள்,,,

    ReplyDelete
  6. //என் இருப்பை தெரிவிக்கும் விதமாக இப்போ இங்கே ....! // - அது சரி........!

    ReplyDelete
  7. வருக சகோ. உங்க blogஐ என் friends blog list ல சேர்த்த மறுநாளே லீவ் ல போய்டிங்க. நேந்து மாலை கூட உங்க குட் பை பதிவை என் ப்ளாகில் பார்த்தேன். செம ஹுமரான பதிவோடு திரும்பவந்தது மகிழ்ச்சி ! நலம் தானே சகோ?

    ReplyDelete
  8. //என் இருப்பை தெரிவிக்கும் விதமாக// அதுனாலதா கேஸ் குறித்த என்ட்ரியோ?

    ReplyDelete
  9. நல்ல நினைவுகள்.....

    மீண்டும் பதிவிட வந்தது நன்று.... தொடர்ந்து பதிவிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. மீண்டும் வந்தாச்சு ஜீவன் சார் காஸ் விசித்திரம்தான்.

    ReplyDelete
    Replies
    1. பாஸ் இன்னும் தனிமரமாத்தேன் இருக்கீகளா ?

      Delete
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு

    வலைச்சர தள இணைப்பு : கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்

    ReplyDelete
  12. நல்ல அனுபவங்கள்தான் - இரசிக்க வைத்தன.

    ReplyDelete

Related Posts with Thumbnails