Nov 6, 2013

ரம்மி“இமான்” , “விஜய் சேதுபதி” என்ற இரு சமகால சக்கரவர்த்திகளை தாண்டி “ரம்மி” மீதான பிரியத்திற்கு  காரணம் , படத்தின் பெரும்பாலான காட்சிகள் எம் கிராமத்தில் படமாக்கப்பட்டிருப்பது தான் . எங்கள் கிராமத்தில் இருக்கும்  அரசினர் கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் தான் படத்தின் இயக்குனர் கம் தயாரிப்பாளர் எனக்கேள்வி . 1980 களில் நடக்கும் “டார்க் ரொமாண்டிக் திரில்லர்” கதையாம்.

நாலே சீட்டுல ரம்மில டிக் அடிக்குரமாதிரி , நாலே பாட்டுல நச்சுன்னு மற்றுமொரு ஹிட் அடித்திருக்கின்றார் இமான் . வழக்கமாக இமான் ஆல்பங்களில் வரும் குத்துப்பாடல் இதில் இல்லை . நான்கு டியூனும் கதை நடக்கும் காலத்திற்கும் , தளத்திற்கும் நியாயம் செய்வது போலவே அமைந்துள்ளது .

அடியே என்ன ராகம் :

ஆரம்பத்தில் வரும் கர்நாடக சங்கீதம் போன்ற ஆலாப் கேட்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகிடுச்சு , என்னடா படத்துக்கும் , பாட்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கே என்று . சில நொடிகளுக்கு பின் அபய் குரல் ஆரம்பிக்கும் போது பாட்டும் சும்மா பறக்க ஆரம்பிக்கின்றது . இசைப்புயலின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் அபய் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இருபத்தி இரண்டு  வயது இளைஞர் . குரலை கேட்டால் நம்பவே முடியல அவ்வளவு தெளிவு & கம்பீரம் . கடல் படத்தில் வரும் மூங்கில் தோட்டம் இவர் பாடியதாம் . வளமான எதிர்காலம் அபய்க்கு ...!

கூட மேல கூட வெச்சு :

ரெம்ப நாளைக்குப்பின் பிரசன்னா குரலில் அழகான ஒரு பாடல் . சேர்ந்து பாடியிருக்கின்றார் வந்தனா சீனிவாசன் . தென் மேற்கு பருவக்காற்றின் – ஏடி கள்ளச்சி பாடலை போன்று பிரபலமாவதற்கு அதிக வாய்ப்புள்ள பாடல்கள் . யுகபாரதியின் பாடல்வரிகள் கூடைக்கு பக்க பலம்.

ஒரு நொடி :

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை வரும் வாத்தியக்கருவியின் கோர்வை ரெம்ப நல்லாருக்கு . , திவ்யா ரமணி &  இமானின் குழையும் குரல்களில் மற்றுமொரு அழகான மெலடி . திவ்யா ரமணியின் குரல் திவ்யம் .

எதுக்காக என்ன நீயும் :

சூப்பர் சிங்கர் பூஜாவும் , சந்தோசும் இணைந்து ஏற்ற இறக்கங்களுடன் ரெம்ப நல்லா பாடிருக்கின்றார்கள் .

அழகான , எளிமையான வார்த்தைகளுடன் , விளிப்புகளுடனும் ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி  எழுதியிருக்கின்றார் . அழகு ...!

மினிமம் பட்ஜெட்டில் எடுக்கும் படங்களுக்கு இமான் கொடுத்துக்கொண்டிருப்பது மேக்சிமம் கியாரண்டி ....! வாழ்த்துக்கள் மிஸ்டர் இமான் ...!
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .

22 comments:

 1. இன்னும் பாடல்களைக் கேட்கவில்லை. கேட்கிறேன்....

  ReplyDelete
 2. எலேய்... கோவை ஆவியும் நீயும் ஒரேயடியா ஆடியோ விமர்சனமா எழுதித் தள்ளுறீயளே... என்ன சங்கதி? படத்தைப் பாக்கறதுல நொந்துக்கறதுதான் மிச்சம்... பாட்டையாச்சும் கேப்போம்னா... கோயமுத்தூர்க்காரவிங்க ஒரு கும்பலாத்தான் கிளம்பிட்டாய்ங்க போலருக்குய்யா...! ஆவிகிட்ட மெயில் பண்ணச் சொல்லி இந்தப் பாட்டுக்களை கேட்டுப் பாக்கறேன். ரைட்டா?

  ReplyDelete
  Replies
  1. கட்டாயம் அனுப்பி வைக்கிறேன் சார்.

   Delete
 3. கேட்டுடுவோம் ...!! :)

  ReplyDelete
 4. டார்க் என்று சேர்த்துக்கறது இப்போ பேஷனா போச்சு.. நானும் கேட்டேன்.. எதுக்காக என்ன நீயும் என் பேவரைட்..

  ReplyDelete
 5. இதுவரைக்கும் கேக்கலை.... கேக்கணும்.....

  ReplyDelete
  Replies
  1. அதுசரி ...! கேக்குரதுக்கு முன்னாடியே ஏன்யா காத பொத்திக்குற ...! ச்சும்மா தமாசு :)

   Delete
 6. வணக்கம்
  படம் பற்றிய தகவல் நன்று வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. மினிமம் பட்ஜெட்டில் எடுக்கும் படங்களுக்கு இமான் கொடுத்துக்கொண்டிருப்பது மேக்சிமம் கியாரண்டி ....! வாழ்த்துக்கள் மிஸ்டர் இமான் ...!......உண்மை

  ReplyDelete
 8. உங்க எழுத்துக்களைப் பார்த்தாலே கேட்க்கனும் போல இருக்கிறதே... இதற்காகவே கேட்க்க வேண்டும்

  ReplyDelete
 9. பயனுள்ள முத்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏது....! பயனுள்ள முத்துக்களா ....? அண்ணேன் ஊடு மாறி வந்திட்டீக போல ...!

   Delete
 10. ரம்மியின் ரம்மியம் என் டப் டென் லிஷ்டில் கொடிக்காட்டி பறக்கிறது.
  ஒரு நொடி, பல நொடிகளாய் ரீப்பிட் மொட்.
  நல்ல பகிர்வுக்கு, நன்றி 

  ReplyDelete
 11. கூட மேலே மற்றும் அடியே என்ன ராகம் பாடல்கள் அருமை......அடிக்கடி கேட்கும் பாடல்கள்...

  ReplyDelete

Related Posts with Thumbnails