Nov 21, 2013

நிலாச்சோறு – விஜய் டீவி , டவுட் , அடடா - அழகு , கு.கா.ஆ , பிளாக்குல ட்வீட்டு ...!


விஜய் டீவி ..!

நடுவுல கொஞ்சம் ... பண்ணுவோம்..!

வாரா வாரம், ஞாயிற்றுக் கிழமை இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வந்த “அறுபது நொடி ஆர் யூ ரெடி” – நிகழ்ச்சி நிறைவடைந்ததை அடுத்து அதே அணி “நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்” என்கின்ற புது நிகழ்ச்சியோடு களமிறங்கியிருக்கின்றது . Very Funny Show ...! யூ டியூப்பில் கிடைத்தால் பார்க்கலாம் .

தமிழ் பேச்சு

“ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” –ஐ அவசர அவதியாக சப்பென்று முடித்ததன் பின்னணி என்னவென்றுதெரியவில்லை . ஒரே ஆறுதல் - நிறைவான நிகழ்ச்சிக்கு நெல்லை கண்ணன் வந்திருந்தது/அழைக்கப்பட்டிருந்தது  .

சரவணன் மீனாட்சி

ஆஹா ஓகோன்னு பேசப்படும் எல்லாம் பிறிதொரு காலம் அய்யோ ராமான்னு சொல்லப்படும் என்பது உண்மைதான் . அய்யோ ராமா .....!

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கரில் இந்த வாரம் கவியின் குரல் . கவிகள் – அரசர் & பேரரசர் . அரசர் தனக்கு டாக்டர் பட்டம் தரவில்லையே என்று தன் குடும்பத்தாரிடம் வருந்தியதாக அவரது புதல்வர் காந்தி கண்ணதாசன் கூறினார்  .  இளைய தளபதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்த எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி அப்பொழுது தொடங்கப்படவில்லையோ...? அது இருக்கட்டும், கவியரசர் – கவிப்பேரரசர் இது சரியா..? சந்தையில் பிரபலமாக இருக்கும் ஒரு பொருளை அடியொற்றி எடுத்து, அதைப்போலவே பெயரிலும் சித்து விளையாட்டு செய்யும் சிறுபிள்ளைத்தனம் போலல்லவா உள்ளது .

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் .
ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் . J 

டவுட்டு

ஒருவேளை ஓஜாவோ , பியூஸ் சாவ்லாவோ அல்ல இன்ன பிற சுழல் வீரர் எவரேனுமோ சென்னை சூப்பர் கிங்க்சில் இடம் பிடித்திருந்தால் இன்று அஸ்வின் இடத்தில் அவர்களில் யாரேனும் ஒருவர் விளையாடிக்கொண்டிருப்பார்களோ ....?


அடடா ... அழகு ...!

எழுத்து

நானோ அளவு விஷயத்தை வைத்துக்கொண்டு கண்டெயினர் அளவுக்கு சுவராஸ்யமாக  கதைப்பது/எழுதுவது எவ்வளவு கடினமோ அதே அளவிற்கு இணையானது கண்டைனர் டு நானோ. நறுக் சுருக் ன்னு நாலு பத்திகளிலோ , நாலு வரிகளிலோ ஒரு விஷயத்தை பளிச்சுன்னு புரியவைக்கும் பதிவுகள் எப்பொழுதுமே என் போன்ற வளரும் வாசிப்பாளர்களின் ஆதர்சம் /விருப்பம் . அப்படியான நறுக் சுருக் பதிவுகளுக்கு சொந்தக்காரர் – ஆனந்த் செல்லையா .

உடல் மொழி 

ஒரு சில படங்களின் ஒரு சில கட்சிகள்/உடல் மொழிகள்  மட்டும் கண்ணை விட்டு அகலாது போலவே சில காட்சிகள் மிகப் பிடித்தமானதாக இருக்கும்  . அப்படியான இரண்டு .....
  
“தலைவா” படத்தின் ஒரு பாடல் காட்சியில் , என்னது தமிழ் பசங்க டீமில் பொண்ணா ...! கங்கிராட்ஸ்-னு விஜய்யை ஒருவர் பாராட்ட அதை ஆமோதித்து ஏற்றுக்கொள்ளும் விதமாக தளபதி காட்டும் உடல் மொழி ....! அடடா அழகு ....!

மற்றொன்று “மரியான்” படத்தின் – “இன்னும் கொஞ்ச நேரம்” பாடலில் – பனிமலர் பார்வதி, மீன் குழம்பையும் , தனுசையும் ஒருசேர பார்க்கும் அந்த ஓரிரு நொடி....! அட்டகாசம் ...! அவ்வளவு நளினம் ....! அழகு ...! “பனிமலர்” என்ற பெயர் வைத்தவருக்கு ஒரு மலர்ச்செண்டு ...!

அதென்னவோ தெரியவில்லை ஒப்பனையோடு வரும் மற்ற படங்களை காட்டிலும் , கடலோரப் பெண்களாக வரும் கதாபாத்திரங்களில் மட்டும் நாயகிகள் அவ்வளவு அழகாக இருக்கின்றார்கள் ஒப்பனை இன்றியும் . உ.ம் – நீர்ப்பறவை – சுனைனா , மரியான் – பார்வதி .


கு.கா.ஆ ..!

சிறுவயதில் “பாதாள பைரவி” , “அலாவூதீனும் அற்புத விளக்கும்” போன்ற FANTASY படங்களை எவ்வளவு குதூகலமாக பார்த்தோமா அதே அளவு குதூகலம் இப்பொழுது இருப்பதில்லை . நிற்க ...! அது போன்ற படங்கள் இப்பொழுதும் வந்து கொண்டுதானிருக்கின்றது .. நாம் தான் நம் ரசனை என்ற அழகியலை தொலைத்து விட்டு , அறிவாளித்தனத்தை வைத்துகொண்டு தர்க்கம் பண்ணிக்கொண்டிருக்கின்றோம் .

“இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்ற Fantasy & Adventure படங்களை போல இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வாரம் “இரண்டாம் உலகத்திற்காகவும்”  . அடுத்த வாரம் பிரியமான வசனகர்த்தா “கரு.பழ”னாவோட “ஜன்னல் ஓர”த்திற்காகவும் திரையரங்கம் போகவேண்டும் . இவை இரண்டும் தான் இப்போதைய கு.கா.ஆ. J


பிளாக்குல ட்வீட்டு

அறிவாளித்தனமாக அறிவுரை கூறுபவன் , முட்டாள்தனமாகவே முடிவெடுக்கின்றான் . // நான் அவன் J //

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .

22 comments:

 1. நிலா சோறு சுவை. எம்.எஸ்.விக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது கிடைத்ததில்லை, சிவாஜிக்கு சிறந்த நடிகாருக்கான தேசிய விருது இல்லை. டி.எம்.எஸ் க்கு சிறந்த பாடகர் விருது கிடைத்ததில்லை.கண்ணதாசனுக்குக் கூட தேசிய விருது கிடைத்ததாக நினைவில்லை

  ReplyDelete
 2. நிலாச்சோறு சுவையாய் இருந்தது..தமிழ் பேச்சு டி.ஆர்.பி குறைந்திருக்குமாய் இருக்கும்.ஒப்பனை இல்லா கதா நாயகிகள் எப்போதும் அழகுதான்.. அப்போதெல்லாம் ஷோபா, சரிதா இவர்களெல்லாம்... அதென்ன கு.கா.ஆ.

  ReplyDelete
  Replies


  1. // டி.ஆர்.பி குறைந்திருக்குமாய் இருக்கும் // வாய்ப்பில்லை . எனக்குத்தெரிந்தே நிறைய பேர் பார்த்தார்கள் .

   கு.கா.ஆ - குறுகிய கால ஆசை :)

   நன்றிங்க ...!

   Delete
 3. எல்லா ரசனையும் இன்றைக்கு பணத்தின் மீது...!

  ReplyDelete
 4. நிலாச்சோறு சுவையாகவும் ரசனையாகவும் இருந்தது.

  ReplyDelete
 5. உடல்மொழி என்ற பகுதி அட்டகாசமாக இருக்கிறது... நான் கூட இதுபோல சிலவற்றை ரசித்திருக்கிறேன்... மூடர் கூடம் படத்தில் இது போல ரசிக்கத்தக்க உடல்மொழிகள், வசன உச்சரிப்புகள் நிறைய உள்ளன...

  ஆனாலும் தலைவா படப் பாடலில் அந்த ரியாக்ஷன் பற்றி எழுதியது கலாய்ப்பது போலவே இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. மூடர் கூடம் - இனிமேல்தான் பார்க்க வேண்டும் .

   தலைவா - அட எனக்கு நெஜமாவே புடிச்சுதான்ப்பா எழுதுனேன் . ஒருவேள சரியான வார்த்தைகளை போடலையோ என்னவோ ...?

   அப்புறம் - எனக்கு விஜய் பஞ்ச் னாதான் பயம் மத்தபடி ஐ லவ் விஜய்ங்க :)

   நன்றி பிரபாகர் :)

   Delete
 6. //தமிழ் பேச்சு

  “ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு”... சரவணன் மீனாட்சி//

  இந்த இரு அவதானிப்புகளை உங்கள் பிலாக்- ல் இரண்டாம் முறை படிக்கிறேன் :)

  //– “ஆனந்த் செல்லையா” .// நல்ல அறிமுகம் .

  //அறிவாளித்தனமாக அறிவுரை கூறுபவன் , முட்டாள்தனமாகவே முடிவெடுக்கின்றான்// :( , ஆமாம்

  ReplyDelete
  Replies
  1. // இந்த இரு அவதானிப்புகளை உங்கள் பிலாக்- ல் இரண்டாம் முறை படிக்கிறேன் :) //

   உம் நினைவாற்றலை மெச்சுகிறேன் :)

   நன்றி விஜி .

   Delete
 7. அஸ்வின் மேல் உமக்கென்னையா இவ்வளவு கடுப்பு. எப்படி பார்த்தாலும் அவன் நம்ம பைய யா!

  ReplyDelete
  Replies
  1. அவன் நம்ம பயலோ இல்ல நாறப்பயலோ...! பயபுள்ள விக்கெட்டே எடுக்க மாட்டீங்குது ...! அப்டியே எடுத்தாலும் டெயிலண்டர்கள் விக்கெட்டைத்தான் எடுக்குது :( .

   Delete
 8. நன்று..இன்னும் எழுதுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சக்தி முருகேசன் ...!

   Delete
 9. தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு மிகவும் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. முடிச்சுட்டாங்களே :( .

   நன்றி ஜி .

   Delete
 10. //
  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் .
  ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் . J /// ஹி ஹி இது சூப்பர்...

  ஆமா எனக்கு ஒரு டவுட்டு... நீங்க விஜய் டி வி புரமோட்டரா ஜாயின் பண்ணீட்டிங்கலா... எது எப்படியே சரவணன் மீனாட்சி பத்தி சொன்னது "வொய் பிளட் சேம் பிளட்" ரகம் :P ....

  ReplyDelete
  Replies
  1. //நீங்க விஜய் டி வி புரமோட்டரா ஜாயின் பண்ணீட்டிங்கலா.//

   வேற வழியில்ல ... ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனா , ஆபீஸ் நாடகம் முடியுற வரைக்கும் விஜய் டிவிதான் ...! பெண்ணியம் ராஜ்ஜியம் :(.

   நன்றி பிரியா ...!

   Delete
  2. ஹிஹி ரொம்ப பாவம் தான் நீங்க.... :P

   Delete
 11. சகோதரருக்கு வணக்கம்..
  பணம் நோக்கி பயணக்கும் உலகத்தில் ரசனைக்கு ஏது இடம். மீடியா மீது தங்கள் பார்வை நன்றாகவே உள்ளது, அஸ்வினை ஏன் வம்புக்கு இழுத்தீங்கனு தான் தெரியல. இருப்பினும் அழகான பதிவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  ReplyDelete

Related Posts with Thumbnails