பதிவர் சந்திப்பு :
INDIBLOGGERS அமைப்பின் மூலம் கோவையில், கோவை வாழ் பதிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு
செய்திருக்கின்றார்கள். நிகழ் தேதி – 15.12.2013 . நிகழ்விடம்
– கோவை – ஆர்.எஸ்.புரம். மேலதிக தகவல்களுக்கு .. http://www.indiblogger.in/bloggermeet.php?id=237.
மேற்படி நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவுமில்லை . ஆனால், முன் கூட்டியே இருக்கையை
உறுதி செய்யவேண்டும் . நானும் ஒரு துண்டு போட்டிருக்கிறேன் J .
சினிமா
திரைப்படங்களில், சாகடிக்கப்பதற்காகவே சில கதாபாத்திரங்கள்
படைக்கப்பட்டிருக்கும் . முறையே நம்மையும் , சமயங்களில் அந்த
கதாபாத்திரத்தையும். முதல் வகையை
தவிர்த்து இரண்டாம் வகையில் சாகடிக்கப்படும் (கதையின் திருப்பத்திற்காக) கதாபாத்திரங்கள்
பெரும்பாலும் நம்மை சலனப்படுத்துவதில்லை . ஆனால் , ஒரு சில படங்களின் ஒரு சில
சாகடிப்புகள் மட்டும் என்னவோ செய்துவிடும் , எவ்வளவு நாட்களாயினும் ....! சமீப காலங்களில் அப்படி சலனப்படுத்திய இரண்டு கதாபத்திரங்கள் ...
“கோ” படத்தில் பியாவின் சாகடிப்பு – அழுகாச்சியே வந்துடுச்சு ... பாதிலேயே
எழுந்து வந்துடலாமான்னுகூட யோசிச்சேன் ....!
மற்றொன்று,
“நான் ஈ” படத்தில் “நானி”யின் சாகடிப்பு – “நான் ஈ” படக் காட்சிகளை தொலைக்காட்சியில்
பார்க்கும்போதெல்லாம் ஒரே ஒரு எண்ணம் தான் தோன்றும் ....
“நானி”யை சாகடிக்காம அப்படியே ஒரு அழகான காதல் கதையாவே சொல்லியிருக்கலாமே......?
இசை :
பண்ணையாரும் பத்மினியும் – இரண்டு நாட்களாக கணினியில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது
. ஜி.வி.பி , அனிருத் வரிசையில் அடுத்த இசைப்பாலகன் – ஜஸ்டின் பிரபாகரன் .
படத்தின் தளத்திற்கும் , படம் நடக்கும் காலத்திற்கும் JUSTICE பண்ணியிருக்கிறார் என்றே
தோன்றுகின்றது . பாடல்கள் எல்லாம் அருமை . VINTAGE FEEL SONGS ...!
பிரபாகரனின் குரல், யுவனை நினைவுபடுத்துவதாக பேச்சு – அப்படித்தான் படுத்துகிறது
நேக்கும் . “எங்க ஊரு வண்டியை” SUPER SINGER JUNIORS ஓட்டியிருக்கிறார்கள் –
அருமையான பயணம் . மற்ற அனைத்துப் பாடல்களுக்கும்
பெண் பாடகர்களின் குரல் தேர்வு வெகு பொருத்தம் . பாடல் வரிகள் வாலிபக் கவிஞர் .
என் விருப்பப் பாடல் – ஒனக்காக பொறந்தேனே ...!
விமர்சகர் ஆவியின் பார்வையில் பண்ணையாரும் பத்மினியும் - இங்கே
டிக்கெட் டிக்கெட் ...!
தொடர்வண்டியில் இதுநாள் வரை முன்பதிவு செய்து, “படுத்து”க்கொண்டு பயணித்ததே இல்லை
. ALWAYS UNRESERVED தான் .வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்ற போனவாரம் ஒரு வாய்ப்பு .
வெகு சிரமப்பட்டு irctc யில் கணக்கு துவங்கி , முன்பதிவும் செய்தேன் . பெருமை பீற்றிக்கொண்டிருக்கும்பொழுது
நண்பர் போட்டார் தண்டவாளத்தில் குண்டை . நான் பதிவு செய்திருப்பது RLWL லாம். அதாகப்பட்டது
, REMOTE LOCATION WAITING LIST . ரயில்வே பட்ஜெட்டுல நாற்பது ரயில் தமிழ்நாட்டிற்கு
விட்டிருக்கிறார்கள் என்றால் கூட நம்பலாம் ஆனால் RLWL சீட்டு உறுதியாகும் என்று நம்பிடாதப்பா
... சாமி சத்தியமா உனக்கு உறுதியாகாது இருக்கை ன்னு சொல்லிட்டு போயிட்டார் .
வேறென்ன நண்பர் சொன்னதே நடந்தது . ரத்து செய்த மூன்று நாட்களில் பணம் திருப்பி தரப்பட்டது,
ரூபாய் நூறு பிடித்தத்தோடு . PRACTICE MAKES
A MAN PERFECT...! வேற எப்பூடி சப்பகட்டுறது ...!
பிளாக்குல ட்வீட்டு
ஆயிரத்தெட்டு வசதிகள் இருந்தாலும் APARTMENT ல் குடியிருப்பது LODGE ல் குடியிருப்பதுபோலவே
இருக்கிறது // வாழ்வைத் தொலைத்து பிழைப்பைத் தேடுபவன் L //
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
PRACTICE MAKES A MAN PERFECT...!
ReplyDeleteசூப்பர்...!
Visit : http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_28.html
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையான ஒழுங்கமைப்பு... தொடருங்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை.... ட்வீட்.... உண்மை!
ReplyDeleteஇரயில் பயணச் சீட்டு அனுபவம் - :)))
த.ம. 2
This comment has been removed by the author.
ReplyDeleteபதிவர் சந்திப்பு ,சிறக்க வாழ்த்து !
ReplyDeleteTamilmanam +1
ReplyDeleteநிஜம் தான் .கோ படத்தில் பியா வின் மரணம் சட்டென நம் உற்சாகத்தை வடிப்பதாக (முடிப்பதாக)அமைந்திருந்தது இல்லையா ?!!!!!!!!!!!!!
ReplyDeleteநல்ல இருக்கு பதிவு ...
ReplyDeleteரிமொட் லோ. டிக்கட் இப்போதான் தெரியும் நன்றி.