விஜய் TV
கனெக்க்ஷன்ஸ்
விஜய் டிவியின் மற்றுமொரு புது ஷோ – “கனெக்க்ஷன்ஸ்” . “நண்டு ஜெகன்” தொகுத்து
வழங்குகிறார் . FUN SHOW ன்னு PROMOTE பண்ணுனாலும், நம்மோட Grasping power க்கு சவால்
விடும் நிகழ்ச்சி . பெரும்பாலும் பித்தளை/ அலுமினியத்திரை பிரபலங்கள் தான்
பங்கேற்பாளர்கள். போலவே சரிபாதி கேள்விகள் திரைப்படங்கள் சார்ந்ததே . ஆனாலும்
சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்ச்சி. குழந்தைகளைக் கூட பார்க்கச்சொல்லலாம் .
உதாரணத்திற்கு மூன்று கேள்விகள் .
1.அடுத்தடுத்து இரண்டு சொட்டைத்தலையர்களின் புகைப்படம், மூன்றாவதாக
தாஜ்மகால் – இது ஒரு பாடலின் முதல் வரி . அது என்ன பாடல் ?
2.ஆச்சர்யக்குறி யின் புகைப்படம் – இது ஒரு உணவுப்பொருள். அந்த உணவுப் பொருளின் பெயர் என்ன ?
3.முதல் படத்தில் ஒருவர் குதித்துக் கொண்டிருக்கிறார், இரண்டாவது படத்தில்
சிவன் படம் – இது ஒருவரின் பெயர். என்ன பெயர் ?
சினிமா விமர்சனம் எழுதுபவர்களும்,சாப்பாட்டுக்கடை எழுதுபவர்களும் முறையே ஒன்று
மற்றும் இரண்டாவது கேள்விகளுக்கு பதிலளிக்கவும் . மூன்றாவது கேள்வி open Quota . J
மேற்கூறிய நிகழ்ச்சி போலவே மக்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்புகிறார்கள் . But அது பத்தியச்சாப்பாடு மாதிரி.
காஃபி வித் DD .
இதுபோன்ற நிகழ்சிகளை ரசிக்கும்படி கொண்டுபோவதற்கு ஆளுமைத்திறனும் வேண்டும்
அதேசமயம் குழந்தைத்தனமும் வேண்டும் . ஆளுமைத்திறனை மட்டும் வைத்து நடத்தினால் அது –செய்திச்
சேனல்களின் Interview போலவும் , சின்னப்புள்ளதனமா பண்ணுனா காமெடி சேனல்களின் நிகழ்ச்சி போலவும் ஆகிவிடும் .
கடந்த காலங்களில் அனுஹாசன் இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக கொண்டு சென்றிருந்தார்
. இப்போ DD Turn...! Only Fun ன்னு முடிவு
பண்ணி இறங்கியிருப்பார் போல ...! எப்ப பார்த்தாலும் கெக்கே பிக்கே ன்னு சிரிச்சுட்டே
இருக்கார் L.
ரெம்ப முக்கியமா Makeup & Costume . சுவத்துக்கு சுண்ணாம்பு அடிச்ச மாதிரி Makeup அதுக்கு
தோதா வெள்ளை கலர்ல Costume ...! pppppppaaaaaaaaa மிடில L .
சிங்காரம் தெரு
லொள்ளு சபா மாதிரி இருக்கும்னு நெனச்சு நம்பி பார்த்தேன் . ஒவ்வொரு கதாபாத்திரமும்
பாத்திரத்த உருட்டுற மாதிரி கத்துறாங்க. கத்திக் கத்தி மொக்க போட்டா ,
பார்க்குறவங்களும் கத்திக் கத்தி சிரிப்பாங்கன்னு நெனச்சுட்டாங்க போல . கத்திய எடுத்து
குத்தனும்போல இருக்கு L.
கேடி பாய்ஸ் –கில்லாடி கேர்ள்ஸ் .
நல்ல TRP போல , நிறைவு நிகழ்ச்சியில் சீசன்
ஒண்ணுன்னு சொல்லி . அடுத்த சீசனுக்கு அடி போட்டுருக்காங்க . Title Winner –
கில்லாடி கேர்ள்ஸ் – No ஆச்சர்யம் . BGM
இல்லாம , நங்கைகள் பைனல்ல பாடிய மெலடி மெட்லி
வெகு அருமை .
டவுட்டு
தமிக அரசுப் போக்குவரத்துகழகத்தினர் சில மாதங்களுக்கு முன்பாக 7C ன்னு ஒரு கொரியர்
சிஸ்டத்திற்கு விளம்பரப்படுத்தினார்கள் . அதாகப்பட்டது, ஏழு ரூபாயில் கூரியர் .
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டார்களா இல்லையா ...? படுத்திவிட்டார்கள் என்றால்
என்ன வழிமுறை ...? தெரிஞ்சவுங்க விம்முங்கோ ப்ப்ப்ளீஸ் ...!
சினிமா
பாண்டிய நாடு போஸ்டர பார்த்து ஹீரோ அருள்நிதின்னு நெனச்சுட்டேன் . பக்கத்துல போயி
பார்த்தோன்னதான் தான் தெரிந்சுது அது விஷால்னு
. போலவே தகராறு பட இசை வெளியீட்டு விழாவில் ஹீரோவைப்பார்த்து ஸ்ரீகாந்த்துன்னு நெனச்சேன்
ஆனா அது அருள்நிதி ....! ஷப்பா ரெம்பவே கண்ணக்கட்டுது ...! ந.சி.ரா சிரிக்க மாட்டாரு
, ம.சி. எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டாரு , இந்த வரிசையில அருள்நிதி பேச மாட்டருன்னு நினச்சேன்
. But , மனுஷன் சத்யராஜுக்கு சிஷ்யப்புள்ள மாதிரி ரவுசு பண்றாருப்போய்...!
செய்யகூடாத விசயங்கள் ன்னு மூணு இருக்கு - என்னளவுல.
1.பரீட்சை எழுதிட்டு வந்து, Answer சரிபார்க்கப்புடாது.
2.ஒரு பொருள வாங்கின பொறவு, அடுத்தவன்கிட்ட அபிப்பிராயம் கேக்கப்புடாது,
3.விமர்சனம் படிச்சுட்டு சினிமா பார்க்க போகப்புடாது...!
ஆனா இந்த மூணும் பண்ணாம இருந்தா பைத்தியமே புடிச்சுடும் நமக்கு . இரண்டாம் உலகம்
விமர்சனம் படிக்கப்புடாதுன்னு நெனச்சாலும் , கையும் கண்ணும் அரிக்க ...
படிச்சுட்டன் J. இனிப்போயி படம் பார்த்தா, எல்லாரும் நல்லாருக்குன்னு சொல்ற
முதல் பாதிலேயே கொட்டாவி வந்துடும் . So கு.கா.ஆ – நிராசை .
ஜன்னல் ஓரம்
வழக்கமா கரு.பழ & வித்யாசாகர் கூட்டணில பாடல்கள் அட்டகாசமா இருக்கும் . ஜன்னல்
ஓரம் கேட்டவரைக்கும் முந்தைய படங்கள் போல இல்லை
. ( இடையிடையே வரும் வசனத்தைத் தவிர்த்து கேட்டால் ) ரெம்பா நாளைக்குப்பிறகு திப்பு
பாடிய “என்னடி என்னடி ஓவியமே” – அட்டகாசம் . கண்டிப்பா விமர்சனம் படிக்காம போயி பார்த்துடோனும்
படத்தை .
பிளாக்குல ட்வீட்டு
சூசைட் பண்ணிக்கப்போறேன்னு சொல்பவனையும் , சொந்தத்தொழில் செய்யப்போறேன்னு
சொல்பவனையும் இந்தச் சமுதாயம் ஒரே மாதிரியே அணுகுகின்றது . // அடிமையாவே
இருந்துடலாம் பாஸ் //
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
நிலாச்சோறு கூட்டாஞ்சோறாய் தித்திப்பாய் இருக்கு...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நிலாச்சோறு - அருமை....
ReplyDeleteத.ம. 1
முதல் கேள்விக்கு பதில் சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால் !
ReplyDeleteடிடி குய்யோ முறையோ என்று கத்துவதைப் பார்த்தால் எனக்கு எரிச்சலாக இருக்கும்...
சிங்காரம் தெரு எந்த சேனல் ?
நாங்கல்லாம் ஏன் அடிச்சு பிடிச்சு படத்தை முதல் நாள் பார்க்குறோம்;ன்னு நினைக்கிறீங்க ? விமர்சனம் எழுதுறவிங்க கிட்ட இருந்து தப்பிக்கத்தான்... ஒருநாள் ரெண்டுநாள் லேட் பண்ணா நம்மாளுங்க ஒரு பத்து பேராவது விமர்சனம் எழுதிடுவாங்க... அதை படிக்காம சுயக்கட்டுப்பாடோட இருக்குறதுல பிரச்சனை இல்லை... பிரச்சனை என்னன்னா நம்மாளுங்க தலைப்புலயே படத்தோட ரிசல்ட்டை சுருக்குன்னு சொல்லிடுவாங்க... அதுவுமில்லாம ஃபேஸ்புக்குல ஒரு நூறு பேர் ஒன்லைனர்ஸ் போட்டிடுவாங்க... அதுக்கு தான்... FDFS பார்த்துட்டா பிரச்சனை இல்லை...
நான் ஜன்னலோரம் ஸ்கிப் பண்ணிடலாம்'ன்னு இருக்கேன்... உண்மைத்தமிழன் ஆலோசனையின் பேரில் விடியும் முன் பார்க்கப்போகிறேன்...
@ பிரபாகர் ,
Deleteசெம்ம GP உமக்கு . சொச்ச ரெண்டு ...?
சிங்காரம் தெரு - விஜய் - ஞாயிறு காலை, மணி - பத்து .
//FDFS பார்த்துட்டா பிரச்சனை இல்லை...//
வாஸ்தவம் தான் ..! But சமயங்கள்ல மரண மொக்கையும் பார்க்கவேண்டியதாகிவிடுகின்றது . சில வருடங்களுக்கு முன் ஞானும் ஒரு FDFS பார்த்தேன் . அந்தப்படத்தின் தமிழ் பெயர் - "பல்கலைக்கழகம்" . அதுதான் முதலும் கடைசியுமான FDFS :( .
ஜன்னல் ஓரம் - பழனியப்பன் படம் கொஞ்சம் நாடகத்தனமாத்தனிருக்கும் , பட் , பார்த்தி , கிராமத்து விமலு , இளவரசு , அப்புறம் முக்கியமா மனீஷா & கரு .பழ வசனம் .... ஈர்க்கும் விசயங்கள் நிறைய ....
விடியும் முன் - த்ரில்லர் ?
இரண்டாவது ஐஸ்க்ரீமா இருக்குமோ ?
Deleteமூன்றாவது தெரியவில்லை...
மொக்கைப்படங்களும் ஃபன் தானே... என்னைப் பொறுத்தவரையில் சராசரி படங்கள் தான் பிரச்சனை... ஒன்னு படம் நல்லாயிருக்கணும் இல்லைன்னா நல்ல மொக்கையா இருக்கணும்...
த்ரில்லரே !
@ பிரபாகர் ,
Deleteஇரண்டாவது - அட
மூன்றாவது - ஜம்புலிங்கம்
செய்யகூடாத விசயங்கள் 3 சூப்பர்...!
ReplyDeleteDD-க்கு கோபம் வருகிறது...!
ஹிஹி...
குமார் , வெங்கட் ஜி & DD
ReplyDeleteபாராட்டிற்கு நன்றிகள்..!
உண்மைதான் நான் பிசினெஸ் பண்போறேன் சொல்றவங்கள சப்போட் பண்ணா ,ஏன் நீயாச்சும் நல்ல புத்தி சொல்லகூடாதான்னு கேட்கிறாங்க வேலைய தவிர மற்ற எதுவும் கவர்மெண்டுல வேண்டாம்னு நினைக்கிற மக்கள்.leave it.
ReplyDeleteநன்றிங்க மைதிலி...!
Delete