Mar 21, 2013

அய்யோ..! இங்க ஈர(ழ)மே இல்லயா...?

மத்திய அரசில் இருந்து திமுக விலகிக்கொண்டதற்கு , ஆளுக்கொரு காரணம் சொல்றாங்க ..

கபட நாடகம் – இது முதலமைச்சர் ,
மாணவர்கள் எழுச்சி – இது மீடியா,
அடுத்த எலக்சன் கூட்டணிக்காக – இது அரசியல் பார்வையாளர்கள்,
நாங்க ஏற்கனேவே எடுத்த முடிவுதான் – திமுக
ஆச்சரியம் , ஆனா அரசுக்கு ஆபத்தில்ல – நிதி அமைச்சரு .

என்னமோ போங்க , ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி சொல்றாங்க . ஆனா நிச்சயமா இவங்க யாரும் நல்லது பண்ண மாட்டாங்கன்னுதான் மட்டும் தெரியுது . ஆக மொத்தம் எல்லாரும் அரசியல் தான் பண்றாங்க .

இவங்க பண்ற அரசியல பாத்தா, உண்மையா போரடுரவங்களயும் பைத்தியக்காரனா மாத்திடுவாங்கபோல.

மாணவர்களே சூதானமா இருந்துக்கங்கபா  .
இல்லாட்டி உங்களையும் அவுங்க கூட்டத்திலையோ,
இல்லாட்டி மன நோயாளியாகவோ மாத்திடுவாங்க .

முந்தா நேத்து ஒரு டீ.வில ஒரு நேரலை விவாத நிகழ்ச்சி பாத்தேன் , திமுக ஆதரவு வாபஸ் வாங்குனதை பற்றி, ஒரு நாலஞ்சு  பேரு பேசுனாங்க ..இல்ல அடிச்சுகிட்டாங்க . எதுக்கு அடிச்சுகிட்டாங்க ? நாங்க ரெம்ப நல்லவங்க ன்னு அடையாளப்படுத்துரதுக்காக .

நிகழ்ச்சியில, ஜெனிவாவுலருந்து ஒரு பொது பங்கேற்பாளர் சொல்றாரு ,

“இந்தியா சார்புல மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதி வாய தெறக்கவே இல்ல , எல்லாரும் அவர் ஏதாவது பேசுவாருன்னு பாத்தா ..கடசி வர பேசவே இல்ல” அப்டின்னு .

அதுக்கு நம்ம காங்கிரஸ் மாண்புமிகு, கூலா சொல்றாரு , ஆமா பேசலதான்...,
இப்ப என்ன அவசரம் ? அதான் இன்னம் ரெண்டு நாள் இருக்குல்ல , கடசில கருத்து சொல்லுவோம் .அப்டிங்குராறு  .

கடசில கருத்து சொல்றதுக்கு , கரண்டு பில் கட்டுரதுக்காகவா போயிருக்கோம்னு...?
கத்தனும்போல இருந்துச்சு .
   
காலத்தையும் , மனிதர்களையும் பறிகொடுத்து நிக்குரவண்ட, அண்னேன் கடிகார கணக்கு சொல்றாரு .நீங்கல்லாம் நூறு வருசத்துக்கு நல்லா இருப்பீங்க  ...!

இவங்களையேல்லாம் நெனச்சு நம்ம நாமே நொந்துக்க வேண்டியதுதான் .வேறென்ன செய்ய ?

  
தமிழ்நாடு காங்கிரஸ்ல எத்தன கோஷ்டி, எத்தன தலவருங்க தொண்டருங்க இருக்கான்னு நமக்கு தெரியல . ஆனா ஒருத்தருக்கு கூட இது உருத்தலயாங்க ?

ஒரு கோஷ்டியில இருக்க ஒருத்தர பதவி நீக்கிட்டாலோ , எலக்சன்ல சீட்டு தரலைனாலோ ஒடனே அந்த கோஷ்டி ல இருக்க எல்லாரும் , தலைமைக்கு தந்தி அடிக்குரிங்க , தபால் போடுறீங்க , ஏன் சமயத்துல தலைநகருக்கே படையெடுக்குறீங்க.


  
ஈழ இன அழிப்பு உங்களுக்கு அநியாயமா தெரியலையா ?
இது தப்புன்னு தலைமைக்கு தந்தி அடிக்க தோணலையா ?
டெல்லிக்கு படை எடுக்கனும்னு தோணலையா ?  
ஈழம் உங்க மனசுல ஈரத்த வர வைக்கலையா ?

இவ்ளோ பேரு இங்க போராடுறாங்க , இன்னுமா உங்களுக்கு உறைக்கல இது துரோகம்னு ?
இந்நேரம் அத்தன பேரும் உங்க அடிப்படை உறுப்பினர் பதவிலருந்து வெலகி இருக்கவேண்டாமா ?

ஒருத்தர பலிவாங்குனதுக்காக ஒருலட்சத்து அறுபதினாயிரம் பெற பழி வாங்கியாச்சுங்க . இன்னுன் என்னதாங்க வேணும் ...?
  
இது எவ்வளவு பெரிய தப்புன்னும் ,பாவம்னும் உங்க மனசாட்சியே சொல்லும் இல்ல கொல்லும் .
வேறென்ன சொல்ல முடியும் என்னைபோன்ற கையாலாகாத வாக்காளனால்.....? எம் நிலை கண்டு எம்மீதே எமக்கு கழிவிரக்கம் வருகிறது .


இதெல்லாம் பாக்க பாக்க , எமக்கேன்னமோ நம்பிக்கையே இல்லாம போகுது.........

அய்யோ...! இங்க ஈர(ழ)மே இல்லயா...?

3 comments:

 1. //டெல்லிக்கு படை எடுக்கனும்னு தோணலையா ?
  ஈழம் உங்க மனசுல ஈரத்த வர வைக்கலையா ?//

  அரசியல் வியாதிகளிடம் நன்மையை எப்படி நண்பா எதிர்பார்க்க முடியும்

  ReplyDelete
 2. நம் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்... இவர்கள் ஒற்றுமையாகக் குரல் கொடுத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்...

  ReplyDelete
 3. பணம் தவிர மற்ற எதுவும் அவர்களுக்கு தெரியாது...

  நல்ல கேள்விகள்...

  ReplyDelete

Related Posts with Thumbnails