Mar 13, 2013

பரதேசி & வத்திக்குச்சி...!

கடந்த பத்து, பதினைந்து நாட்களாகவே , பத்து நிமிடத்திற்கு ஒரு முறை , தொலைக்காட்சி அலைவரிசைகளில் பரதேசி & வத்திகுச்சி யோட டீசரும், ட்ரைலரும் தான் நீக்கமற நிறைந்திருக்கிறது .

பரதேசி – பளிச்சென்ற வண்ணங்களிலும் இல்லாமல் , கருப்பு வெள்ளையிலும் இல்லாமல் ஒரு மாதிரியான பழுப்பு படிந்த, பழைய கால புகைப்படம் போன்ற வண்ணமே சொல்கின்றது இது ஒரு வரலாற்றை, வாழ்வியலை பேசக்கூடிய படமென்று .

ஒத்திகை பார்க்காமல் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய எளிய மக்களின் வாழ்வியலை, பல வருட ஒத்திகைகளுக்கு பிறகு பாலா படங்களாக்குவார் . அந்த மனிதர்களின் உச்சபட்ச சந்தோசம் , துயரம் , ரணம் , வலி , சுகம் என அனைத்தையுமே எந்த வித சமரசங்களும் இல்லாமல் அப்படியே பதிவு செய்வதில் தான் பாலாவின் வெற்றி அடங்கியிருப்பதாக நினைக்கின்றேன் .

டிரைலரை பார்க்கும் போது, இந்தப்படமும் முந்தைய படங்களை போலவே இருக்கும் போல் தெரிகிறது . இந்த முறை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார் . தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவில் ஆரம்பித்து , படத்தின் வண்ணம் , கதை நடப்பதாக காட்டப்படும் தளம் , நடிகர்களின் உடை, பேச்சு மொழி என எல்லாமே ஈர்க்கிறது .

அதர்வாவை காட்டிலும் , வேதிகாவின் சின்ன சின்ன உடல் மொழிகள் அட்டகாசமா இருக்கின்றது .இதற்கு முன் காளை என்ற படத்தில் வேதிகா வந்து போனதாக நினைவு . இதில் நிச்சயமாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் .

வழக்கமாக இசைக்கு ராஜாக்களை நாடுபவர் , இந்த முறை ஜி.வி இடம் தாவியிருக்கிறார் . ராஜாக்களை மிஞ்சும் அளவுக்கு இசை கேட்டிருப்பார் போல , ஜி.வி, அவர் பாணியிலும் இல்லாமல்  , ராஜாக்கள் போலும் இல்லாமல் ஒரு புது மாதிரியாக இசை அமைத்துள்ளார் . பாடல்கள் எதுவும் மனதில் தங்கவில்லை . “மாலை தன வேதனை” , “முன் பனியா”, “இளங்காத்து வீசுதே”, “ஓம் சிவோ”, “பிச்சை பாத்திரம்”...... வீ மிஸ் ராஜாஸ் .. பாலாவும் இதையேதான் உணந்திருப்பார் .

கடந்த இரண்டு நாட்களாக பரதேசி படத்தின் ரியாலிடி ட்ரைலர் & டீசர் தான் இணையத்தில் சூடான விவாதிக்கப்படுகிறது . இப்பொழுதெல்லாம் ஒரு படம் வெற்றியடைய விளம்பரம் மட்டும் பத்தாது ,ஏதோ ஒரு வில்லங்கமும் , விவகாரமும் இருந்தால் தான் முடியும் என்ற நிலைக்கு தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள் போலும் .
அடுத்தவர்கள் தயாரிக்கும் பொழுது , ஒரு படத்தை வருடக்கணக்கில் எடுக்கும் பாலா , தான் தயாரித்து, இயக்கும் படத்தை மட்டும் இவ்வளவு விரைவாக எடுத்து முடித்துவிட்டார்.
தான் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்று, இது வரை எடுத்த படங்களின் மூலம் நிரூபித்த பாலா , வியாபாரத்திற்காக, ஒரு மோசமான பட விளம்பரத்தின் மூலம், தன்னை மிகச்சிறந்த தயாரிப்பாளராக நிரூபிக்க தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது .

டிரைலரும், டீசரும் எம்மை டீஸ் பண்ணவில்லை. படமும் அவ்வாறே இருந்தால் சரி .வத்திக்குச்சி : ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் இரண்டாவது படம் . ஒரு நல்ல படம் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மீதான நம் நம்பிக்கையையும் , எதிர்பார்ப்பையும் ஒரு சேர பெற்றுவிடுகின்றது . அந்த வகையில் “எங்கேயும் எப்போதும்” பார்த்த பின் வத்திக்குச்சியின் மீதும் இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

இசை - வாகை சூடவா மூலம் செவி ஈர்த்த ஜிப்ரான் , “குறு குறு” என்ற பாடலிலும்  “மம்மி வேக் மீ அப்” என்ற தமிங்கிலீஸ் பாடலிலும் மீண்டும் ஒருமுறை செவி ஈர்க்கிறார் . மற்ற பாடல்களும் காட்சிகளுடன் திரையில் பார்க்கும் போது பிடிக்கக்கூடும் .

அஞ்சலி – திமிரான பேச்சு , நக்கலான பார்வை , அதிகாரமான தோரணை எல்லாம் சேர்த்து வச்சு பார்த்தால் குட்டி சொர்ணாக்கா மாதிரி தான் அஞ்சலி, ஆனாலும் அழகு . கதாநாயகிகளை முன்னிறுத்தி கதை யோசிக்கும் இன்றைய இயக்குனர்கள் சினேகாவையும் ,அஞ்சலியைதான் தேர்வு செய்வார்கள் போலும் . சினேகா திருமதி ஆகிவிட்டபடியால் இபொழுது ஒரே வாய்ப்பு அஞ்சலிதான் , அவரும் மிகச்சிறப்பாகவே நடிக்கிறார் . சமீப வருடங்களில் பார்த்த படங்களில், நடித்த கதாநாயகிகளின் பெயர்களில் , அஞ்சலி நடித்த கதாபாத்திரங்களின் பெயர் மட்டுமே ஞாபத்தில் இருக்கிறது.  கற்றது தமிழ்- “ஆனந்தி”, அங்காடி தெரு -“கனி” , எங்கேயும் எப்போதும் –“மணிமேகலை”.

வத்திக்குச்சி ட்ரைலர் முழுதும் அஞ்சலி ராஜ்ஜியம் தான் . வழக்கம் போல அஞ்சலிக்கு அடிபணியும் கதாநாயகன் தான் .இருந்தாலும் ரசிக்க முடிகிறது.

காரணமே இல்லாமல் ஒரு சிலரை பிடிப்பதைப்போல், ஒரு சிலரை பிடிக்காமலும் போகிறது . வத்திக்குச்சி ஹீரோவை பார்த்தாலும் அப்படித்தான் பிடிக்கவே இல்லை. எஸ் ஜே சூர்யாவின் ஒன்னு விடாத தம்பி போல் இருக்கிறார். ஏ ஆர் முருகதாசின் தம்பி என்ற தகுதி மூலம் மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இயக்குனர் - புதுமுகம் , அதனாலேயே நம்பி போகாலாம் . இன்றைய தேதிக்கு புதுமுக இயக்குனர்கள் படம் மட்டுமே படமாக பார்க்கும் வகையில் இருக்கிறது . சிறந்த இயக்குனர்களாக பீற்றிக் “கொல்லும்” இயக்குனர்களின் படங்கள் பாடமாகவே இருக்கிறது .

அஞ்சலி , ஜிப்ரான் , ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பு இதற்காகவே வத்திக்குச்சியை உரசி பார்க்கலாம் என தோன்றுகிறது. 

5 comments:

 1. //இயக்குனர் - புதுமுகம் , அதனாலேயே நம்பி போகாலாம் // ஹா ஹா ஹா படிச்சதும் பிடிச்ச வசனம்

  பரதேசி - இன்னும் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை... வெள்ளிக்கிழமை மதியம் என் மனநிலை பொறுத்து...

  ReplyDelete
 2. நாட்ல டீசரை புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு கைபுள்ளைங்க அதிகமாயிட்டானுங்க.

  ReplyDelete
 3. இரண்டு படமுமே நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்... பார்க்கலாம்...

  ReplyDelete
 4. Good post.Thank you.
  cricket live streaming

  ReplyDelete
 5. நல்லதொரு தகவல் பகிர்வு! பார்க்கலாம்! நன்றி!

  ReplyDelete

Related Posts with Thumbnails