நன்றி...!
ஹாரிபாட்டரின் “பவர் ஸ்டார்” பதிவின் இன்ஸ்பிரேசன்ல எடுக்கப்பட்ட .. சாரி எழுதப்பட்ட பதிவு. நன்றி ஹாரி ...!
“டேய் ...! சிம்புக்கு என்னாலதாண்டா தொல்ல, ஆனந்த தொல்ல” ...! கண்ணா லட்டு தின்ன ஆசையா வுல பவரு பேசுற பன்ச் டயலாக் இது . சரி படத்துக்காக தான் பவரு பேசிருக்காருன்னு பாத்தா ... மனுஷன் நெசமாவே சிம்புக்கு தொல்ல குடுக்க ஆரம்பிச்சுட்டாரு ... ஏற்கனவே “ஆனந்த தொல்ல” ... இப்ப “ஆந்த்தம் தொல்ல”...!
யூ டியூப்ல பாத்தீங்கல்ல, “பவரு” சிம்புக்கு எப்பூடி “பியூஸ்” புடுங்குராருன்னு.
“யங் சூப்பர் ஸ்டார் சிம்பு” ரசிகனின் பார்வையில் ஒரு கொலவெறி கலாட்டா ....!
சிம்பு ரசிகன் : வர வர இந்தாளு பண்ற அலப்பறைக்கு அளவே இல்லாம போச்சு . இந்த அநியாயத்த கேக்க, இங்க யாருமே இல்லையா.. இல்லையா .... இல்லையா ....?
( எக்கோ எபெக்டில் படிக்கவும்..)
ஏன் இல்ல .. நா இருக்கேன் .. நா இருக்கேன் ... நா இருக்கேன் ...!
எலே, எவன்டா அவென் ...?
நான்தாண்டா கொமாரு ...!
என்னடா தெலுங்கு பட டைட்டில் மாதிரி இருக்கு ...! யாரு கொக்கி கொமாரா ..?
இல்ல, ராசகொமாரூ....!
அடங்கொப்பத்தா...! யாரு விண்ணுக்கும் மண்ணுக்கும் ராசகொமாரா நீயி.. ?
ஆமா நானே தான் . நீ வருவாயா..? என மன்றாடி கேட்ட, நூறு கோடி இந்திய ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று உங்களை பவர் ஸ்டாரிடமிருந்து ரட்சிக்க வந்த ராஜகொமாரூ நாந்தான் ....
அய்யைய்யோ....! நாய் புடிக்குறவண்ட இருந்து தப்பிச்சு , நாய் புடிக்குற வண்டில விழுந்து சாகப்போரமே ...!
நாசமா போச்சு ... ஏலே.., பக்கிகளா ஓடுங்க ஓடுங்க.. ஆபத்து நம்மள நெருன்கிட்ட்ருக்கு ... நாம இப்ப அது வாயில இருக்கோம்... ஓடுங்க ...!
( தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஆங்கில பட வசனம் போல படிக்கவும்.)
வடிவேலு : என்னடா நடக்குது இங்க ...? டேய் அப்ரசண்டிகளா..!. கொஞ்ச நாலு நா பீல்டுல இல்லனா இன்னா அழிச்சாட்டியம் பண்றிங்க ...! நா வந்துட்டன்டா , வந்துட்டேன் ....!
சிம்பு : இதெல்லாம் சரிபட்டு வராது ... இவங்க கொட்டத்த அடக்கணும்னா ஒரே வழி தான் .... நேர அப்பாட்ட போயி சரண்டர் ஆயிடவேண்டியதுதான் ......
யப்...பா ய...ப்பா ... என்ன வெச்சு ஒரு படம் எடுப்..பா எடுப்..பா பா பா ...! ஆகா, அப்பான்னு சொன்னவே எதுக மோன கொட்டுதே.... இருங்கடா இருங்க .. எங்க அப்பாவ கூட்டிட்டு வரேன் ... ஏ டண்டணக்கா ...டண்டனக்கா ....!
சூப்பர் ஸ்டார் : அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள இனி காப்பாத்தமுடியாது . கதம் ..கதம் ..கதம் ....!
ஹா ஹா ஹா முடிஞ்சது முடிஞ்சு போச்சு.. இது முடியாம போயிட்டே இருக்கே
ReplyDeleteஹா..ஹா.. போட்டுத் தாக்குங்க...
ReplyDeleteகலக்கல்
ReplyDeleteவண்ணத்துப் பூச்சின்னு தலைப்பு வச்சுட்டு கருப்பு வெள்ளையில இருக்கே. கலரா மாத்துப்பா டெம்ப்ளேட்டை
ReplyDeleteகலக்குங்க
ReplyDeleteஹி ஹி கலக்குங்க தல
ReplyDeleteVerry thoughtful blog
ReplyDelete