Feb 2, 2013

வரப் போற விஸ்வரூபங்கள் ....!


 இப்போ     : என் மன வானில் எண்ணங்களாக ...!

விரைவா :  வலைப்பூவில் வண்ணங்களாக ....!

படத்துக்கு மட்டுந்தான் வெளம்பரமா..?  பதிவுக்கும் போடுவோம்ல ...!

அந்த தசாவதார விஸ்வரூபங்கள் ...!

1. நான் அவன் இல்லை ...!
 2. வாங்க சொர்க்கத்துக்கு போகலாம் ...!
 3. கருமத்தம்பட்டி டூ பூலாங்குறிச்சி - "வலி "- திண்டுக்கல் .
 4. களப்புக்கட...! வழியாக  ரிட்டர்ன் டு கருமத்தம்பட்டி .....!
 5.பறவையே எங்கு போகிறாய் ...?
 6.ஆனந்த விகடன் - ஃபுல் மீல்ஸ் டு வெரைட்டி ரைஸ் ... !
 7. இங்கு கொழந்தை தொழிலாளர்கள் தயாரிக்கப்படுகிறார்கள்.
 8. காவன் ரூனா சூனா பானாவின்  பார்வையில - காவன் ரூனா பாவன் ழானா...!
 9.டாலர் நகரமும்  நானும் - (.கா அண்டு நி.கா.)
 10. முரண்பாடு , சமன்பாடு , பெரும்பாடு .....!இதையெல்லாம்,  நேரடியாவே DTM  அதாங்க DTH மாதிரி ( DIRECT TO MAIL ) வெளியிடலாம்னு ஒரு ஐடியா இருந்துச்சு, ஆனா சில எதிர்ப்புகள் காரணமாவும் போனியாகதுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்னதாலும்  வலைப்பூவுலையே  ரிலீஸ் பண்ணிடலாம்னு தயாரிப்பு  தரப்புல முடிவு  பண்ணிருக்கோம் .

இந்த தசாவதார விஸ்வரூபங்கள் உங்களுக்கு எதுன்னா உடன்பாடில்லைனா நீங்க என்கிட்டே தான் சொல்லனும் . நாம  பேசி ஒரு சுமுகமா முடிவு பண்ணிக்குவோம் . என்ன சரிதானே . சரி சரின்னு மண்டய மண்டய ஆட்டிட்டு அப்ரமாட்டிக்கு "அம்மா" ட்ட போட்டுகுடுத்து பதிவுக்கே தட போட்டுடக்கூடாது . பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ...!

அப்டில்லாம் ஆகாது , ஒருவேள , ஒருவேள அப்டி எதுன்னா ஆச்சுன்னா, நா சகிப்பு தன்ம உள்ள ஆந்திரா , பம்பாய் ன்னு வேறு வலையுலகத்துக்கு போய்டுவேன் . அங்கயும் இல்லனா அடிமையா இருந்தாலும் , இறந்தாலும் பரவா இல்லன்னு ஆங்கில வலைக்கு போய்டுவேன் .

இந்த நேரத்துல என்ன பின் தொடர்ற அந்த பன்னிரெண்டு பேர்க்கு நா என்ன சொல்லிகிறேன்னா ....!

எவ்ளோ எதிர்ப்பு  வந்தாலும் சரி  , உங்க வலைல  வைரஸ் குண்டு  போட்டாலும் சரி  எந்த நேரத்துலயும் கொந்தளிச்சு யாரையும் தாளிச்சுற கூடாது.

என்ன சொல்றீங்க .. வலை மாறக்கூடாதா .. ச்ச ச்ச .. அது ஒரு கவலயில சொன்னது , கோவம் -லாம் இல்ல.

எப்பவும் அமைதியா இருக்கோணும் என்ன..? எப்பவுமே அகிம்சையும் , அமைதியும் தான் ஒசந்தது . ஜெய்கிந்த் ....!


( ஆகா ஆரம்பத்துல இருந்து கடசி வரைக்கும் எல்லாமே சமகாலத்தோட  ஸின்க் ஆகுதே . ஒலக மகா  ரசிகசிகாமணிகள் யாரும் ஒண்டிக்கு ஒண்டி வந்துடாதிங்கப்பா .. நா ஒரு டம்மி பீசு ...)

ஆனா ஒன்னே ஒன்னுஇந்த "நான் அவன் இல்லை" ங்கற விஸ்வரூபத்த மட்டும் சீக்கிரம் வெளில வுடனும் . நெறையப் பேருக்கு நன்றிகடன் தீக்கனும் .

எண்ணங்களும் , வண்ணங்களும் சேந்த  பின்னாடி, உங்க வூடு தேடி இந்த வண்ணத்துபூச்சி பறந்து வரும்.

4 comments:

 1. வண்ணத்துப்பூச்சி test, test என்று இருமுறை எனது dashboard-ல் பறந்துள்ளது... ஹிஹி...

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. புதிதாக வலைப்பூ தொடங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். வண்ணத்துப் பூச்சி அழகான பெயர். ப்ளாக் அண்ட் ஒயிட் ஆக இருக்கிறது. வண்ண டெம்ப்ளேட்டை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கு நன்றிங்க . கறுப்பு வெள்ளை எனது விருப்பமான நிறம் அதனால்தான் ...

  ReplyDelete

Related Posts with Thumbnails