Apr 27, 2014

விளம்பரம்



மாதவன் & இமான் அண்ணாச்சி இவர்களிருவரும்தான் இன்றைய தேதிக்கு தமிழர்களை பாடாய்ப்படுத்துபவர்களில் முக்கியமானவர்கள் . பேசாமல் மேற்படி இருவரையும் நாடு கடத்திவிடல் நலம் .

எழுபத்து ஐந்து லட்சத்தில் உங்க பட்ஜெட்டுக்குள்ள வீடுன்னு சொல்லும் மாதவன் விளம்பரத்தை பார்க்கும் போதெல்லாம் பத்திக்கிட்டு வருது . தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோருமே ஆண்டிமுத்து ராசா என்ற நினைப்பில் மேற்படி விளம்பரத்தை எடுத்திருப்பார்கள் போல . யய்யா பில்டர்களே உங்க பில்டப்பு தாங்க முடியல . நாங்கல்லாம் ஆண்டிப்பட்டிக்கு கூட ராசா கூட இல்ல வெறும் ஆண்டி மட்டுந்தேன் .

மற்றொன்று டேபிள் மேட் விளம்பரம் . ஸ்கூல் மேட் , காலேஜ் மேட் , ரூம் மேட் ஏன் ஆஃபிஸ் மேட் கூட இல்லாமல் இருக்காலாம் , ஆனால் டேபிள் மேட் இல்லாமல் இருக்கலாமா..? என்ற ரேஞ்சிற்கு படுத்துகிறார் அண்ணாச்சி . உங்க வீட்டுல டேபிள் மேட் இருக்கான்னு வாய்க்குள்ளாற மைக்க  விட்டுடுவாரோன்னு பயத்துல  இப்பொழுதெல்லாம் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியைக்கூடப் பார்ப்பதில்லை .


கப்பித்தனமான விளம்பரங்கள் ஒருபுறம் படுத்துனாலும் , மறுபுறம் ரசனையான விளம்பரங்களுக்கும் குறைவில்லை . ஹட்சன் நிறுவனத்தினரின் ஆரோக்கியா பால் மற்றும் ஹட்சன் தயிருக்கான விளம்பரங்கள் எனக்கு மிகப் பிடித்தவை. 

எந்த உணவுப்பொருட்களில் கலப்படம் இருந்தாலும் சகித்துக்கொள்ளும் நம்மால் பாலில் மட்டும் கலப்படம் இருப்பதை சகித்துக்கொள்ளவே முடியாது . இந்த கருத்தை மிகச்சரியாகப்புரிந்து கொண்டு வெகு யதார்த்தமான பின்னணியுடன் , மிக எளிமையாக , கொஞ்சமும் ஒப்பனையற்ற ஒரு விளம்பரம் . மிக முக்கியமாக தமிழர்கள் மறந்த சுய தொழிலை , குறிப்பாக பெண்களின் தொழில் வாய்ப்பையும் முன்னேற்றத்தையும் ஒருசேர கொடுத்திருப்பது விளம்பரத்தின் சிறப்பு .






அடுத்தது மேற்படி நிறுவனத்தாரின் தயிர் விளம்பரம்.  ஆங்கில விளம்பரம் என்ற பொழுதிலும் , அட்டகாசமான பின்னணி இசையும் , எழில் கொஞ்சும் பின்புலக் காட்சிகளும் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன . குறிப்பாக விளம்பரம் முடியும் தருவாயில் வாயில் தயிருடன் வரும் மங்கையை பார்க்கும் பொழுது எனக்கும் வாயிலிருந்து தயிரைப்போன்றதொரு திரவம் வருகின்றது .ரசனையற்ற மனைவி அதை ஜொள்ளு என்கின்றாள் – போகட்டும் J.








என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .





16 comments:

  1. அதானே... நம் ரசனையே வேறு...! போகட்டும்... ஹிஹி...

    ReplyDelete
  2. மூளைச் சலவை செய்வதற்காக இன்று பல விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன. தங்கள் பார்வை சரியானது.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்கிற மாதிரி சில விளம்பரங்களை கண்டாலே எரிச்சல் வரும்.

    பரவாயில்லை, உங்கள் மனைவியாவது ஜொள்ளு என்று மட்டும் சொல்லி முடித்து விடுகிறார்கள்.......!!!!

    ReplyDelete
  4. சில விளம்பரங்கள் ரொம்பவே கடுப்பேற்றினாலும், மேலே சொன்ன விளம்பரங்கள் போல சில மனதில் மகிழ்ச்சி உண்டாக்குகின்றன....

    ReplyDelete
  5. நீங்கள் சொல்லும் ஆரோக்கியா விளம்பரம் எனக்கும் பிடித்தமான ஒன்று

    ReplyDelete
  6. விளம்பரம் சில நேரத்தில் தொல்லைதான்.

    ReplyDelete
  7. #ஜொள்ளு என்கின்றாள் #
    எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு ,நாளைக்கு எனக்கு ஒரு கமெண்ட் போடுறீங்க ...அப்பத்தான் நீங்கள் வீட்டில் நலமுடன் இருப்பதாய் நம்புவேன் !
    த ம 3

    ReplyDelete
  8. //ரசனையற்ற மனைவி // ஓஹோ, அவ்வளவு தைரியம் வந்தாச்சா? இருங்க, சிஸ்டருக்கு போன் போட்டு சொல்றேன்.. ;-)

    ReplyDelete
  9. வாட் எ டேம் கோ-இன்சிடேன்ஸ், நானும் இன்னைக்கு விளம்பரம் பற்றித்தான் போஸ்ட் போட்டிருந்தேன்.. வைஸ் பீப்பிள் ரைட் அலைக்.??

    ReplyDelete
  10. வணக்கம்
    தங்களின் விளம்பர ஆலோசனை...நன்றாகத்தான் இருக்கிறது...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  11. அந்த கடைசி வரியை ரசனையற்ற உங்கள் மனைவி படிக்கக் கடவது :-)

    ReplyDelete
  12. ரசனையற்ற மனைவி அதை ஜொள்ளு என்கின்றாள் –
    >>
    ப்ச்ச்ச் உலக நடப்பு தெரியாதவங்களா இருக்காங்களே!!

    ReplyDelete
  13. அண்ணாச்சிய டேபிள் மேட் ல பாத்தப்போ நானும் இப்படிதாங்க அதிர்ச்சி ஆனேன்....இதே போல கார்டியா ஆயில் விளம்பரம் அதுவும் மிகவும் இரசிக்கும்படி அழகாகவே இருக்கும்.... எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம் அது ( வர வர சின்னத்திரையில் இரசிப்பதற்க்காக இருப்பவை (சில) விளம்பரங்கள் மட்டும்தான் போலும்.. ஹ்ம்ம்)

    ReplyDelete
  14. hey! cheers எனக்கும் அந்த ரெண்டு addம் பிடிக்கும். அப்புறம் 40504050வை விட்டுடீங்களே, தாங்க முடியல, நானும் டேபிள் மேட் பற்றி எழுத நினைத்து விட்டுட்டேன், பாருங்க bro பொண்ணு home வொர்க் செய்யும் முன்னாடி போஸ்டர் கலரா அடிக்கிவைச்சுருக்கும். எல்லா சீன் ளையும் லாஜிக் கே இருக்காது:/ ஹட்சன் விளம்பரத்தில் கிளார்ட்டி கலக்கலா இருக்கும் ல:) so nice!!

    ReplyDelete
  15. இந்தப் பொண்ணப் பாத்து ஜொள்ளு விடுறீரா? அடி வாங்குனதை ஏன் எழுதலை?

    ReplyDelete
  16. எனக்கும் சில விளம்பரங்கள் பிடிக்கும். நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் ஆரோக்யா விளம்பரங்கள் (இன்னொன்றும் வரும் - அந்தக் குடும்பத் தலைவி சொல்லுவார் 'இந்த மாடு ரொம்ப அழகா இருக்குறதுனால எனக்கு ரொம்ப பிடிக்கும்!' என்று.) நன்றாக இருக்கின்றன. எனக்குப் பிடித்த விளம்பரங்களைப் பற்றி இங்கு எழுதியிருக்கிறேன்:
    http://pullikkolam.wordpress.com/2012/11/14/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/
    நேரம் கிடைக்கும்போது படியுங்கள்!
    ஜீவன் சுப்பு திருமணம் ஆனவரா? eligible bachelor என்றல்லவா நினைத்திருந்தேன்!

    ReplyDelete

Related Posts with Thumbnails