ட்வீட் !
சிவகங்கை தொகுதியில் நானே போட்டியிடுவதாக நினைத்து ஓட்டுப்போடவும் –ப.சிதம்பரம்
பேட்டி.
அய்யய்யோ...! கிடைக்கப்போற ஒன்னு ரெண்டு ஓட்டுக்கும் வேட்டு வச்சுட்டாரே
அப்பச்சி – கார்த்தி சிதம்பரம் - மைண்ட் வாய்ஸ் .
**************************************************************************************
ச.இ.க.இ...!
மண் வாசனையை நுகராத நாசியும்
இடிச்சத்தம் கேளாத செவியும்
மின்னற் கீற்றைப் பார்க்காத கண்ணும்
பிறவிப்பயனடைவதே இல்லை ...!
எமது நாசியும்
செவியும்
கண்ணும்
இன்று பிறவிப்பயனடைந்தன ...!
**************************************************************************************
சூப்பர் சிங்கர்.
ஆரம்பித்துவிட்டார்கள் அடுத்த ரவுண்டை . இன்றைய தேதிக்கு நீயா நானாவையும் , சூப்பர்
சிங்கரையும் சிலாகிப்பது என்பது ஒரு Style Statement போல ஆகிவிட்டது .
முன்பெல்லாம் நீயா நானா புகழ் கோபிநாத் என்று போடுவார்கள் , இப்பொழுது நீயா நானா புகழ்
அராத்து என்று பிளக்ஸ் வைக்கிறார்கள் . அதாகப்பட்டது நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு
போய்விட்டதாம் .
சூப்பர் சிங்கர் இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை
. Flat ல் நாங்கள் டிவி பார்க்கவில்லை எனிலும் முப்பத்தி சொச்ச வீட்டிலிருந்தும் கோரசாக
வந்து விழுகின்றது சூப்பர் சிங்கர் ஒலி.
சொந்தமா சுச்ச்சூ போகத் தெரியாத குஞ்சு , குளுவானை எல்லாம் கூட்டி வந்து பாடு பாடுன்னு
பாடுபடுத்துகின்றார்கள் நம் பாசத்திற்குரிய தமிழ் அம்மா , அப்பாக்கள் . ஒரு அம்மா வாய்
நிறைய புன்னகையோடு சொல்லுது , காலை ஒன்பது மணி குரல் தேர்வுக்கு முதல் நாள் மாலையே
வந்து இடம் பிடித்தோமென்று . இரண்டு வருடங்கள் வீட்டிற்கே தனி பயிற்சியாளர் வரவழைத்து
பயிற்சி மேற்கொண்டோம் , இன்னொரு வாய்ப்பு கண்டிப்பாக தரவேண்டுமென்று மற்றுமொரு நிராகரிக்கப்பட
குழந்தையின் அம்மா – சண்டை போடுகிறார் . டாக்டராக்க வேண்டும் , இஞ்சினியர் ஆக்கவேண்டும்
என்ற தமிழ் பெற்றோர்களின் ஆசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பது சூப்பர் சிங்கராக்க
வேண்டும் , சூப்பர் டான்சர் ஆகவேண்டும் என்ற ஆசையும் . போகிற போக்கை பார்த்தால் வீதிக்கு
நாலு ரியாலிட்டி ஷோ பயிற்சி மையங்கள் வந்துவிடும்போல .
போட்டியில் அடுத்த ரவுண்டிற்கு போகவேண்டுமென்ற ஆதீதமான அழுத்தத்தை குழந்தைகளின்
மேலே திணிக்கின்றார்கள் . திணிக்கும் திணிப்பில் எல்லாமே வாந்தியாகத்தான் வெளிவருகின்றது.
ஓவியம் , பாட்டு , நடனம் போன்ற கலைகளெல்லாம் இயல்பாய் வெளிவந்தால் தான் சிறப்பே .
நம்மாட்களுக்கு இது தெரிவதே இல்லை .
இது எங்கே போய் முடியுமென்று தெரியவில்லை . ரியாலிட்டி ஷோ தோல்வியின் காரணமாக
ஏற்பட்ட மன அழுத்தத்தால் பத்து வயது குழந்தை தற்கொலைன்னு செய்தி வரும் வரை நாமளும் சரி , சேனல்சும் சரி திருந்தமாட்டோமென்றே
நினைக்கின்றேன் .
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
ப.சி சூப்பரூ!
ReplyDeleteச.இ.க.இ. ரசனை.
இதே எண்ணத்தில் தான் நானும் இந்த நிகழ்ச்சிஐ தவிர்க்கிறேன். நம்ம காலத்தில் மார்க்கு வாங்கலேன்னா கூட இப்படி அழுததில்லயே சகோ!? இந்த பெற்றோர்களை என்ன செய்யமுடியும்:((
ச.இ.க.இ...! - இன்னும் இங்கில்லை...
ReplyDeleteஉண்மைதான் இந்த சூப்பர் சிங்கர் பார்த்து எனக்கும் அதுதான் தோன்றியது..
ReplyDeleteசூப்பர் சிங்கர்! கொடுமை! பாவம் குழந்தைகளை திறமைகளை வளர்க்கிறோம் என்று சாகடிக்கிறார்கள்! டிவிட் சூப்பர்!
ReplyDeleteபசிக்கு இந்தத்தடவை மகனின் தோல்வி ருசி நிச்சயம்..
ReplyDeleteசூப்பர் சிங்கர் கொடுமை...
//ச.இ.க.இ//
ReplyDeleteஆஹா. கவித கவித.
ஆஹா!ம்ம்கவிதை சூப்பர்!
ReplyDeleteஎன் பசங்களை சூப்பர் சிங்கர் பார்க்க விடுறதே இல்ல. சின்ன குழந்தைங்க கூட ஆபாசப்பாடல்களைப் பாடுதுங்க.
ReplyDeleteமுதல் பாலிலேயே சிக்ஸர்! ட்வீட் - ஐ சொன்னேன்! :)
ReplyDeleteசூப்பர் சிங்கர் - இந்த நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை!
கவிதையும் சூப்பர் சிங்கர் பற்றிய கருத்துக்களும் அருமை!!
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே...
ReplyDeleteஉங்கள் ஆருடம் பலிக்காமல் போக பிரார்த்தனைகள்
ரசித்த கவிதை! தேங்க்ஸ் bro :))
ReplyDelete