Oct 22, 2013

விஜய் டீவி - மகாபாரதம் டூ ஆபிஸ் ....!






"திருமணமாகி சிங்கிள் பெட்ரூம்ல குடியிருக்குற ஓர் ஆண்மகனுக்கு மட்டும்தான் சீரியல் பார்ப்பதின் வலி தெரியும் ....!".


சீரியல் :

எல்லா சேனல்களிலும் ஜவ்வு மிட்டாயாக சீரியல்களை இழுக்க , விஜயில மட்டும் பஞ்சு மிட்டாயாக சீக்கிரம் கரைந்துவிடும் சீரியல்கள் ரெம்ப நல்லா இருந்தது . பட் இப்ப இங்கயும் ஜவ்வா இழுக்க ஆரம்பிச்சுட்டாங்க .

சரவணன் மீனாட்சி :

கல்யாணத்துக்கு ஒரு வருஷம் , அப்புறம் குழந்தை பிறக்குறதுக்கு அடுத்த ஒரு வருசம்னு இழுத்தடிச்சவுங்க இரெண்டே எபிசோடுல இருவது வருசத்த தாண்டினது பெரிய சோ(சா)தனை .
(சரவணன் & மீனாட்சி மகனுக்கு பொண்ணு பார்க்குறாங்கப்பா ... மிடில ...). வெகு விரைவில் முடியபோகுதாம் . அப்பாடா ....!

தாயுமானவன் :

அஞ்சு பொண்ணுங்க ஒரு அப்பா ...! வாரா வாரம் ட்விஸ்ட் & டர்ன் ன்னோட பரவா இல்லாம போயிட்டுருக்கு . பாரதி ன்னு ஒரு கேரக்டர் எ.எ ஜெய் மாதிரி அஞ்சு மடங்கு அப்பாவி & அப்புறம் ஒரு அழுகாச்சி அப்பா ..! மகா & கல்யாணி நல்ல நடிப்பு .

ஆபீஸ்  :

மரண மொக்கையான ஒரு நாடகம் ....! எந்தெந்த கலர்களில் பிளைன் சர்ட் மார்க்கெட்ல இருக்கும்னு இந்த நாடகத்த பார்த்தா தெரிஞ்சுக்கலாம் . ஆண்கள் எல்லாம் ஏசியன் பெயின்ட் விளம்பர மாடல் மாதிரியே சுத்தினு திறியுராங்கப்பா ....!

மகாபாரதம் :

சின்ன வயசுல பிளாக் அன்ட் ஒயிட்ல  டி.டி ல பார்த்தது . இப்பொழுது ரெம்ப கலர்ஃபுல்லா விஜய் ல ஆரம்பிச்சுருக்காங்க . ரிச்சான ஒளிப்பதிவு , சூப்பரன கிராஃபிக்ஸ், நல்ல நடிகர்கள் , அருமையான லொக்கேசன்ஸ் & செட்ஸ் , அழகான தமிழ் வசனம்னு ரெம்பவே நல்லா போயிட்டுருக்கு . என்ன ஒன்னு ஏழு மணிக்கு போடுறாங்க ....! நெறைய நாள் பார்க்க முடிவதில்லை . எட்டு , எட்டரை மணிக்கு மேல போட்டா பரவா இல்ல , இன்னும் நெறைய பேரு பார்க்கலாம் ....!

ஆச்சி தமிழ் பேச்சு :
                        ரெம்ப நல்ல நிகழ்ச்சி . தமிழ்ல பேசுறதுனா தூய தமிழ்ல்ல தான் பேசணும்னு நினைக்குறவங்களுக்கு நெல்லை கண்ணன் அவர்கள் பேசும் ஆங்கில கலப்பில்லா எளிய பேச்சுத்தமிழ் நல்ல உதாரணம் . அடுத்தடுத்து அவர் மேற்கோள் காட்டும் குறள் , கவிதை , சங்க இலக்கியம் , சமகால நிகழ்வுகளின் நக்கல்கள்  ன்னு நிகழ்ச்சியின் ஆதாரமே அவர்தான் . தமிழ் கடல்னு ரெம்ப சரியாத்தான் பட்டம் கொடுத்துருக்காங்க . பங்கேற்பாளர்கள் கூட அவர்மேல அளவுகடந்த மரியாதையையும் , அன்பையும் வைத்திருக்கின்றார்கள் . பாராட்டோ , திட்டோ உணர்வுகளை உடனே வெளிப்படுத்திவிடுவது அவரது மற்றுமொரு சிறப்பு .

என்னாச்சுன்னு தெரியல கடந்த இரண்டு வாரமா நெல்லை கண்ணன் அவர்களுக்கு பதிலாக தமிழச்சி தங்கபாண்டியனும் & வழக்கறிஞர் அருள்மொழியும் நடுவர்களாக வந்திருக்கின்றார்கள் . நடுவர்கள் ஆங்கில கலப்போடு பேசுவது நிகழ்ச்சியின் முரண் . நிச்சயமா நெல்லை கண்ணன் ஐயா இல்லாமல் நிகழ்ச்சி கொஞ்சம் இல்ல நல்லாவே தடுமாறுது  .......! தமிழ் கடலுக்கு இணையா வேறு யாரை போட முடியும் ..?

தொகுப்பாளர் சூர்யா அழகான கவிதை, நாசூக்கான கேள்விகள் னு இப்ப அசத்த ஆரம்பிச்சுருக்கார். .
ஜோடி :
         குடும்பத்தோட பார்க்கும் நிகழ்ச்சின்னு விளம்பரத்துல சொல்றாங்க . ஆனா குடும்பத்துல இருக்குறவங்க எல்லாம் தனித்தனியாத்தான் பார்க்கணும் அவ்ளோ அசிங்கமான அசைவுகள் & இரட்டை அர்த்தம்  . ரோபோ சங்கர் பண்றதெல்லாம் டான்ஸ் இல்ல அதுக்கு பேரு ..............................!

சூப்பர் சிங்கர் :

சூப்பர் சிங்கர் - தமிழகத்தின் தூக்க மாத்திரை ...!

கொஞ்ச நாளா ஒதுக்கி வச்சுருந்த நெஞ்ச .........ற செண்டிமென்ட்ஸ் ஸ மறுபடியும் அரம்பிச்சுட்டாங்க. சூப்பர் சீனியர் அல்கேட்ஸ் ஐ நல்ல மரியாதையோடு (டைரக்ட் வைல்ட் கார்டு வாய்ப்போடு ) போட்டியில் இருந்து நீக்கியது பாராட்டுக்கு உரியது .

ரெண்டு வாரத்திற்கு முன் நடந்த பக்திப்பாடல்கள் சுற்று நல்லாருந்துச்சு , பட் போன வருஷம் ஜூனியர்ஸ் பாடுனபோது இருந்த வைப்ரேசன் இந்தவருசம் மிஸ்ஸிங் . இந்த வாரம் ராஜா ஹிட்ஸ் .

MY WISH LIST …

திவாகர் .
ஆந்திராகாரு .
பார்வதி .
தீப்தி .
அல்கேட்ஸ் / ரமேஸ் .

போட்டியில் ஜெயித்தாலும் , தோற்றாலும் திவாகரின் குரலை அடுத்த தலைமுறை நடிகர்களின் ஒப்பனிங் சாங்கில் கேட்கலாம் .


என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .




31 comments:

  1. சூப்பர் சிங்கர் பார்ப்பதுண்டு... (கேட்பதுண்டு...!) மகாபாரதம் இனி மேல் தான்... மற்றவை எல்லாம் உங்கள் பதிவின் மூலம் தான் தெரியும்...!

    ReplyDelete
  2. விஜய் தொலைக்காட்சி தான் பல நேரங்களில் எங்கள் இல்லத்தில் இணைந்திருக்கிறது. அனைத்து நிகழ்ச்சிகளையும் நன்றாக அலசியுள்ளீர்கள். விஜய் மற்ற ஊடங்களிலிருந்து மாறுபட்டிருக்கிறது. பகிர்வுக்கு நன்றீங்க நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நம்மூர்க்காரரே ...!

      Delete
  3. நல்ல வேளை. நான் விஜய் டிவி சீரியல்களை பார்ப்பதேயில்லை.
    மேலும் வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு தமிழாக்கம் செய்யும் சீரியல்கள் எந்த சானலில் வந்தாலும் அதை எதிர்க்கிறேன்.

    ரசிக்கும் ஒரே நிகழ்ச்சி சன் டிவியில் ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் குட்டிச் சுட்டீஸ் அரைமணி நேரம் நிகழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. குட்டிச் சுட்டீஸ் நல்ல நிகழ்ச்சிதான் ...

      Delete
  4. பெரும்பாலும் டி.வி. பார்ப்பதில்லை - அதிலும் சீரியல் என்றால் ஸ்ட்ரிக்ட் நோ நோ தான்.....

    ReplyDelete
  5. இவ்வளவு சீரியலும் பாக்க உனக்கு டைம் இருக்குதா ஜீவன்...? குடுத்து வெச்சவன்யா! நான் சீரியல் எதுவும் பாக்கறதில்லன்றதால எதும் சொல்றதுக்கில்ல...! அதுசரி... சூப்பர்சிங்கர்ல ஏதோ ஆந்திராகாரு பிடிக்கும்னு சொல்லியிருக்கியே... ஸான்ட்ரோ காரு, மாருதி காரு, ஸ்விப்ட் காருன்னு நிறையக் காரு தெரியும் எனக்கு... அதென்ன ஆந்திரா காரு?

    ReplyDelete
    Replies
    1. //குடுத்து வெச்சவன்யா!// சீரியல் பார்ப்பது வரமல்ல சாபம்ண்ணா...!


      அதென்ன ஆந்திரா காரு? .... :)

      அந்த பையன் பேரு தெரியலன்னேன் ...!

      Delete
  6. விஜய் டீவில "டீடீ" (திண்டுக்கல் தனபாலன் இல்லே) நடத்துற ப்ரோக்ராம் எதுவா இருந்தாலும் பார்ப்பேன்.. (ஜோடி, ஆர் யு ரெடி, நம்ம வீட்டு கல்யாணம், காப்பி வித் டிடி.. இப்படி..) ஐயாம் எ கிரேட் பேன் ஆப் ஹேர் யு (க்)னோ??

    ReplyDelete
    Replies
    1. அப்ப அடுத்து டிடிப்பா வருமோ ...?

      Delete
  7. பாவம்யா நீரு.. சீரியல் பார்க்க பிடிக்காம தான் அஞ்சு மணிக்கு ஆபீஸ் முடிஞ்சாலும் ஏதாவது காரணம் சொல்லிட்டு எட்டு மணிக்கு வீட்டுக்கு போறீரா.. (அச்சச்சோ, சபையில சொல்லிட்டனா??)

    ReplyDelete
  8. மகாபாரதத்துல வரும் கிருஷ்ணனா நடிப்பவருக்கு பதிலா வேற யாரையாவது போட்டிருக்கலாமோன்னு எனக்கு தோணுது. கிருஷ்ணனுக்குண்டான குறும்பு பார்வை, கள்ளச் சிரிப்பு இதெல்லாம் இவர்கிட்ட மிஸ்ஸிங். சகுனி சரியான பாத்திரப்படைப்பு.

    ReplyDelete
    Replies
    1. பெண்ணல்லவோ அதேன் கரெக்கிட்டா கண்டுபிடுச்சுட்டீங்க. நாங்க கிருஷ்ணரையல்லாம் பார்க்குறது கிடையாது ... :)

      Delete
  9. இவ்ளோ சிரியல் பாக்றீங்களா ?

    ReplyDelete
    Replies
    1. சீரியல் விசயத்தில் ஆணியம் பெண்ணியத்திடம் தோற்றுப்போய்விடுகின்றது....!வேற வழி இல்லாம வலியோடு பார்க்குறோம் .... !

      Delete
  10. //திருமணமாகி சிங்கிள் பெட்ரூம்ல குடியிருக்குற ஓர் ஆண்மகனுக்கு மட்டும்தான் சீரியல் பார்ப்பதின் வலி தெரியும் ....!".// வீட்டுல செம அடி போல :)

    ReplyDelete
  11. எங்க வீட்டுல ஒரே போகோ மயம்தான்!

    ReplyDelete
    Replies
    1. போகோ எவ்ளவோ பெட்டருங்க ...!

      Delete
  12. மகாபாரத தமிழ் நல்லாயிருக்கா? சுப்பு...! வாயசைவும் வசனங்களும் ஒட்டவே இல்லையே!
    ரெகுலரா எந்த சானலும் பார்க்கறது இல்ல. அம்மாவிற்காக இப்போ 'தென்றல்' (கடவுளே!) கணவருக்காக சூப்பர் சிங்கர் (மிஷ்கின் எபிசோட்), ஆச்சி தமிழ் பேச்சு இப்படி....
    ஆச்சி தமிழ் பேச்சு - நெல்லைக் கண்ணனை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நாலு எபிசோடுதான் பாத்தேம்மா ...! வட மொழியில் எடுத்து டப் பண்ணியதுனால இருக்கலாம் . சூப்பர் சிங்கர் - மிஷ்கின் எபிசோடு அட்டகாசம் ... அப்டி ஒரு வைப்ரேசன் ....! மிஷ்கினுக்கு திமிருன்னு நெறைய பேரு எழுதி படிச்சுருக்கேன் .. பட அது அறிவுத்திமிரு ....!

      ///நெல்லைக் கண்ணனை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.//- நிச்சயமாக .

      Delete
  13. சீரியல் பெரும்பாலும் விரும்புவதில்லை...
    மற்றவை பார்க்க நேரமிருப்பதில்லை...
    சூப்பர் சிங்கர் சிலவாரங்களாக தொடர்ந்து பார்க்கிறேன் என் கணினியில்....
    திவாகர், பார்வதி கலக்கல் குரலுக்கு சொந்தக் காரர்கள்...
    தமிழ்ப்பேச்சு சில வாரங்கள் பார்த்திருக்கிறேன்...
    தமிழ்க்கடலின் பேச்சுக்கு நான் அடிமை...

    ReplyDelete
    Replies
    1. ஆமா குமார் . சூப்பர் சிங்கர் மிஸ்கின் எபிசோடு பாருங்க செம்மையா இருக்கும் .

      Delete

  14. "திருமணமாகி சிங்கிள் பெட்ரூம்ல குடியிருக்குற ஓர் ஆண்மகனுக்கு மட்டும்தான் சீரியல் பார்ப்பதின் வலி தெரியும் ....!".
    //

    வாங்கும் அடிய இதுக்கு மேல டீசன்ட்டா சொல்ல முடியாது சாமி ...
    சீரியல் நமக்கு ஒவ்வாத ஒன்று ... ஒரு சீரியல் பார்த்த கதை இருக்கு அதை பொறவு பதிவா சொல்றேன் தல ./..

    ReplyDelete
    Replies

    1. :)

      சொல்லுங்கண்ணேன் சொல்லுங்க....!

      Delete
  15. அட நம்ம ஜீவன் அண்ணா ,சீரியல் மேல வெறுப்போடு,சீரியல் பார்க்க கெளம்பிட்டார் போல,, சீரியல்களுக்குள் சீரியசாக பல விசயங்களை கவனிச்சு சொல்லி இருக்கீங்க பாஸ்.. உங்கள் திருமண வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள் :)

    ReplyDelete

Related Posts with Thumbnails