Jun 26, 2013

கலவரக்காரனின் காதல் கடிதம் ...!






காதல் கடிதம் பரிசுப்போட்டியில் வலுக்காட்டாயமாக என்னை இழுத்துவிட்டதன் மூலம் , காதல் பூமியில் கலவரக்காரனை கட்டவிழ்த்துவிட்டான் சீனு ...! 

ஆங்கிலம் , பெண்கள் இரண்டுமே எப்பவும் எனக்கு அலர்ஜி தான் . ஆங்கிலத்தில பேசும்போது உணரும் அதே பதற்றத்தை பெண்களிடம் பேசும்போதும் உணர்வதுண்டு .  மனம் பதறி  தடதடக்க  ஆரம்பித்துவிடும் . காரணம் இல்லாமல் இல்லை, வீட்டிற்கு ஒற்றைப்பிள்ளை  . படித்தது குருகுலத்தில் . மொத்தத்தில் பெண்வாசமே இல்லை ....!

முப்பது  வருடங்களாக எனக்கு தெரிந்த , அறிந்த , பேசிய பழகிய ஒரே பெண் என் அம்மாதான் . அதிலும்  பதினைந்து வருடங்கள் விடுதி வாழ்க்கை . இப்பொழுது இரண்டு வருடங்களாக மனைவி . அதுவும் அம்மா வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருந்தவர்,  இரண்டு வாரங்களுக்கு முன்தான் என்னுடன் வந்து இணைந்துள்ளார் .

பெண்களுக்கும் எனக்குமான தொடர்பு வானுக்கும் பூமிக்குமானது . எப்பொழுதாவது பெய்யும் மழை தான் ஒரே தொடர்பு . அதிர்ஷ்டவசமாகவோ இல்லை துரதிர்ஷ்டவசமாகவோ இதுவரையில் என் வாழ்க்கையில் அப்படியொரு காதல் மழை பெய்யவே இல்லை , வறண்ட பாலைவனம்தான் . மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டபோதும் நான் எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுவிட்டேன் பயந்துகொண்டு ...!

இன்று பாலைவனத்தில் பெய்யப்போகும் இந்த காதல் மழை ஒரு கற்பனைக் கான(த)ல் மழை...!


“தேவி”யில் ஆரம்பித்து , “அன்பே”, “ஆருயிரே” என்று தொடர்ந்து , “அழகான ராட்சசியே” என்பது வரை ஆளாளுக்கு அவர்களின் காதலியை ஆயிரமாயிரம் விதங்களில் விளித்துவிட்டார்கள் . நான் எப்படி விளிப்பது என்று விழித்துக்கொண்டும், முழித்துக்கொண்டும் இருக்கின்றேன் . இப்படியே விழித்துக்கொண்டும், முழித்துக்கொண்டும் இருந்தால் தாடி வைத்த முரளி ஆவதற்கான அதிகபட்ச வாய்ப்புக்கள் இருப்பதாகப்படவே, இப்பொழுதே ஆரம்பிக்கிறேன் உனக்கான... இல்லை... எனக்கான இல்லை ... இல்லை...  நமக்கான காதல் கடிதத்தை ...!

…………………………………………..!

( உனக்கான வெற்றிடத்தை நீயே இட்டு நிரப்பிக்கொள் எனக்காக ...! ).

ஒருவழியாக கடிதத்தை ஆரம்பித்தாயிற்று. அடுத்து ....? வழமை போல காதலாகி கசிந்துருகவேண்டும் இல்லையா ...! இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லா இரவு முழுவதும் யோசித்துக்கொண்டே இருக்கின்றேன் .....! காதல் கசிந்துருகவில்லை , மெழுகுவர்த்தி உருகியதுதான் மிச்சம் . சரி , குறைந்த பட்சம் ஒரு கவிதையாவது எழுதலாமே என்று எழுத ஆரம்பித்தால்...! ஆரம்பித்தால்...? கவிதை அருவியாகக்கொட்டவில்லை,  வேர்த்துத்தான் கொட்டுகின்றது ...! என்ன செய்ய…? வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றேன் ...?

கவிதையில் பொய் “அழகு” என்று சொல்கிறார்கள் . கவிதை எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொருமுறையும் உன்பெயரையே எழுதி முடிக்கின்றேன் என்று “அழகு” சொல்ல எனக்கும் ஆசைதான் ...! என்ன செய்ய...? எவ்வளவு முயன்றாலும் கவிதை மட்டும் வரவே மாட்டேன் என்கின்றது . ( அப்ப , கடிதம் மட்டும் நல்லா வருதாக்கும்னு மனதுக்குள் ஒரு நக்கல் விக்கல் எடுக்குமே..? ஐ நோ , ஐ நோ ..! ).

சரி சொந்தமாகத்தான் கவிதை எழுத முடியவில்லை , மதன் கார்க்கியையோ , நா.முத்துக்குமாரையோ காப்பியடித்து கவிதை எழுதலாம் என்றால் தன்மானம் தடுக்கின்றது . என்ன செய்ய ...? கோணலாக இருந்தாலும் என்னுடையதாக்கும் என்றே வளர்ந்துவிட்டேன்  ....! நோ ...! நோ ...! அதுக்காக கோணல் கவிதையெல்லாம் சொல்லி உன்னைக்கண்கலங்க  வைக்கமாட்டேன் ...! தைரியமாக மேலே படிக்கலாம் ....! ஹா ...! ஹா ...!

மொத்தத்துல என்னதாண்டா சொல்ல வர்ற ன்னு கேட்குமே உன் மனம் ...! என்னது கேட்கவில்லையா ...? ஆனால் என் மனம் கேட்கின்றது ...! பதில் தான் இல்லை என்னிடம் .  இதுதான் நான் என்று அறுதி உறுதியிட்டு எதையும் சொல்ல முடியவில்லை என்னால் . நிறம்மாறும்  பச்சோந்தியைப்போல மாறிக்கொண்டே இருக்கின்றேன் . நேற்றைய விருப்பம் , வெறுப்பு , கோபம் , பிரியம் , ஆசை எல்லாம் இன்று அப்படியே இல்லை அதே நேரத்தில் இல்லாமலும் இல்லை . நாளை எப்படி இருக்குமென்றும் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை . ( கமல் படம் பாத்துட்டு வந்து கடிதம்(!) எழுதியிருப்பானோன்னு மைல்டா ஒரு டவுட் வருமே ..! ஹா...! ஹா ...! ஐ நோ ...! ஐ நோ ...!).

எவ்வளவு தான் டார்ட்டாயிஸ் மாதிரி  சுத்தி சுத்தி யோசித்துப்பார்த்தாலும் முதன் முதலில் உன்னை எங்கே பார்த்தேன் என்று கண்டுபிடிக்க முடியாமல் ஆல் அவுட் ஆகிவிடுகின்றேன் . அதற்காக அப்படியே விட்டுவிடமுடியுமா ...? மீண்டும், மீண்டும் யோ...சிக்கி...ன்றேன் ....!

யுரேகா ...! யுரேகா ...! என்னை அழிக்க வந்த அணுகுண்டை கண்டுகொண்ட கணத்தை  கண்டுபிடித்துவிட்டேன் ...! ஆம் , நீயொரு அணுகுண்டுதானே...! என்ன, அணுகுண்டு மொத்தமாக அழிக்கும் , நீ அனு அனு வாக அழிக்கின்றாய் ..! அவ்வளவுதான் வித்தியாசம் .

தண்ணியடிக்க வரும்பொழுதுதான் முதன் முதலாக உன்னைப்பார்த்தேன் . நோ...! நோ...! அந்தத்தண்ணி இல்லம்மா, நம்ம தெரு முனையில இருக்கும் அடிபைப்பில் தண்ணியடிக்க வரும்பொழுது தான் முதன்முதலில் உன்னை  பார்த்தேன் . தப்புத்தப்பா யோசிக்கக்கூடாது, என்ன சரியா ...? பேசுறதையும் , எழுதுறதையும் பார்க்கும்பொழுது தண்ணியடிச்சுட்டு உளறுவது மாதிரி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலும் , அழகில்லாமலும் இருக்கும். உண்மை எப்பொழுதுமே பார்ப்பதற்கும் , படிப்பதற்கும் , கேட்பதற்கும் அழகற்று உளறுவது போல தானே இருக்கும் ...! 

அரைத்தூக்கத்தில் , அதிகாலை வேளையில் தண்ணியடிக்க வந்த என் மனம் தந்தியடிக்க ஆரம்பித்துவிட்டது நங்கை உன்னைப்பார்த்த பின். கிஞ்சித்தும் ஒப்பனையின்றி, தூக்கத்தில் கலைந்த முடி முன் நெற்றியில் நடனமாட ,  மங்கை நைட்டியை மடித்துக்கட்டி பக்கத்துவீட்டு அட்ராசிட்டி அத்தையிடம் நீ மல்லுக்கட்டிய பொழுதுதான் முதன் முதலில் உன்னைப்பார்த்தேன் . யப்பா ...!  நீ பேசியதெல்லாம் தேனாக காதில்  வந்து பாய்ந்தது என்று சொன்னால் என்னைப்போன்ற பொய்யன் இந்த உலகத்தில யாரும் இருக்கமாட்டார்கள்  , நீ பேசிய வார்த்தைகள் எல்லாமே ஈயத்தைக்காய்ச்சி ஊத்துவதை போலத்தான் இருந்தது . ஆனாலும் எனக்குப்பிடித்தது ... ஏனென்றால் நீ பேசியது உண்மையையும் , நியாத்தையும் . அந்த நிலையில்  உன்னைப் பார்த்ததும் காதலெல்லாம் வரவில்லை , கொஞ்சம் கலவரமாகத்தான் இருந்தது   .

அதற்கடுத்தடுத்த நாட்களிலும் அதிகாலையில் கொஞ்சம் பயத்துடனும் , கொஞ்சம் குறுகுறுப்புடனும் தண்ணியடிக்கவந்தேன் உன்னைப்பார்ப்பதற்காகவே. மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணி முகமூடி போட்டுக்கொள்ளாமல் வெகு இயல்பாக இருக்கும் நீயும் , உன் நடவடிக்கைகளும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது  .

தண்ணீர் மெதுவாக வருகின்றது என்று அனைவரும் வருத்தப்படும்போது எனக்கு மட்டும் சந்தோசம் கரைபுரண்டோடும், உன்னை இன்னும் சிறிது நேரம் பார்க்கலாமே என்று. விடுமுறை முடிந்து விடுதி திரும்பும் மாணவன் எப்படி பேருந்து மெதுவாகச் செல்லவேண்டும் , பள்ளி மெதுவாக வரவேண்டும் என்று மனத்திற்குள் எண்ணுவானோ, அதேபோல நானும் சமயங்களில் தண்ணீர் மெதுவாக வரவேண்டுமென்று எண்ணியம்துண்டு.  

எதிர்பார்த்த ஒரு நாளில் எனக்கு பிறந்த நாள் என்று ஆரஞ்சு மிட்டாயுடன் என் முன்னே நீ நின்றது இன்னும் என் கண்ணில் அப்படியே இருக்கின்றது . சம்பிரதாய வாழ்த்து கூட சொல்லாமல் , ஓ அப்படியா என்று உடல்மொழியில மட்டும் சொல்லிவிட்டு , மிட்டாயை மட்டும் எடுத்துக்கொண்டேன் . சில நாட்கள் ஆரஞ்சு மிட்டாயை அப்படியே வைத்திருந்து பின் சில பல வண்டுகள் தேனெடுக்க முயல்வதை அறிந்த அடுத்த நொடியே கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டேன்- என்ன செய்ய ஆசையும் , பொறாமையும் கொண்ட  சராசரி  மனிதன்தானே   நானும் ...!

நான் வண்ணத்திரையின் நடுப்பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கின்றேன்,
நீயோ வண்ணதாசனை (சு)வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நான் சத்தம் போட்டு பேசுவது எனக்கே கேட்கவில்லை ,
நீ ரகசியம் பேசுவது ஊருக்கே கேட்கிறது .
நான் அடங்கிக்கொண்டிருகின்றேன் ,
நீ வெடித்துக்கொண்டிருக்கின்றாய் .
நான் பேசாத வார்த்தைகள் தான் அழகென்கின்றேன் ,
நீயோ பேசும் வார்த்தைகள் தான் அழகென்கின்றாய் .
இப்படி அனைத்திலுமே நீயும் நானும் முரண்பட்டுத்தான் இருக்கின்றோம் ,
அதனாலென்ன ...? அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
காதலில் முரண் தானே அழகு ...!

ஒவ்வொரு காதலும் கண்டிப்பாக கல்யாணத்தில் தான் முடியவேண்டும் என்றோ , இல்லை கருமாதியில் தான் முடியவேண்டுமென்றோ அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை . அப்படிப்பட்ட காதல் தான் வெற்றிபெற்ற காதல், அமரக்காதல் , என்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை . காதலையும் கல்யாணத்தையும் என்னால் தொடர்பு படுத்தவே முடியவில்லை . நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவரை காதலிக்கின்றோம் . அதற்க்காக காதலிக்கும் அத்தனை போரையும் திருமணம் செய்து கொள்ளமுடியுமா இல்லை திருமணம் செய்துகொள்ளமுடியவில்லை என்று ஒவ்வொருமுறையும் மரித்துத்தான் போகமுடியுமா ...? நான் ஒரே ஒருவரை மட்டும் தான் என் வாழ்வில் காதலித்தேன் என்று யாராவது சொன்னால் அதை விட பெரிய வேஷம் வேறெதுவும் இல்லை என்றுதான் நான் சொல்வேன் .

ஒருவேளை பரஸ்பரம் விருப்பமிருந்தும் நாம் இணையமுடியாவிட்டாலும் , அதற்காக நான் வருந்தமாட்டேன் . நீயும் வருந்தவேண்டிய அவசியமில்லை . காதலின் வெற்றியை திருமணத்தின் மூலமும் , தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதின்மூலமும் மதிப்பிடுவது முட்டாள்தனமாகவே எனக்கு படுகின்றது . திருமணம் என்பதை  ஒரு சடங்காக, ஒரு விதிமுறையாகத்தன்  பார்க்கின்றேன் . வரைமுறை மீறாதாவர்களுக்கு விதிமுறை தேவையில்லை என்பவர்களின் எண்ணமே என் எண்ணம்  .

ஒருவேளை நாம் இணைந்தால் , நான் உனக்கு முழு சுததந்திரம் தருவேனென்று சொல்லமாட்டேன் . உனக்கான சுதந்திரமும் , உனக்கான கட்டுப்பாடுகளும் உன்னிடம் தான் இருக்கின்றது . உன் நிறை குறைகளுடன் உன்னை அப்படியே ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன் . அதே போல் நீ என்னை அப்படியே  ஏற்றுக்கொள்ள மட்டுமே விரும்புகின்றேன் . உனக்காக நானும் , எனக்காக நீயும் ஏன் நமது தனிப்பட்ட விருப்பங்களை , வெறுப்புகளை மாற்றிக்கொள்ளவேண்டும் . எனக்கு அதில் உடன்பாடில்லை. வற்புறுத்துவதும் , வற்புறுத்தப்படுவதும் கூட வன்முறைதானே ? நீ நீயாக இரு நான் நானாக இருக்கின்றேன் . உனக்கு கொடுக்க என்னிடம் எந்த வாக்குறுதிகளும் இல்லை, கட்டுப்பாடுகளும் இல்லை . உன்னை ,உன் செயலை எனக்கு பிடித்திருக்கின்றது , நாம் இணைந்து வாழ்ந்தால் நான்றாக இருக்குமென்று தோன்றுகின்றது . உனக்கும் என்மீது காதலிருந்தால் , இணைய விருப்பமிருந்தால்,இணைய சாத்தியப்பட்டால் சந்தோசம் .

நாம் இணைந்தாலும் இணையாவிட்டாலும் , தனிமையான ஜன்னல் ஓரத்து பேருந்துப்பயணமும்  , பின்னிரவின் நிசப்தமும்  , தெருவோர குழாயடிச்சண்டையும் , மொட்டைமாடி தூக்கமும் , வண்ணதாசனின் புத்தகங்களும் ஆரஞ்சுமிட்டாயும் இன்னும் எத்தனை எத்தனயோ விசயங்கள் எப்பொழுதும் என் காதலை உயிர்ப்புடனேயே  வைத்திருக்கும் ...!


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு .


இது எனது  சொந்தப் படைப்பு என்று உத்திரவாதம் கொடுக்கின்றேன்  ...!


83 comments:

  1. ஜீவன் சுப்புவின் ஸ்டைலில் காதல் கடிதம்... பல இடங்களில் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தது... அருமையான காதல் கடிதம் தந்த வண்ணத்துப்பூச்சிக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. // ஜீவன் சுப்புவின் ஸ்டைலில் காதல் கடிதம்... //

      அது இன்னா ஸ்டைலு ...? சொல்லவே இல்ல ...!

      வாழ்த்துக்கு ரெம்ப தேங்ஸ் ஸ்பை .

      Delete
  2. //வெற்றியை திருமணத்தின் மூலமும் , தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதின்மூலமும் மதிப்பிடுவது முட்டாள்தனமாகவே எனக்கு படுகின்றது//

    எனக்கும் அப்படித்தான் படுது...

    ReplyDelete
  3. நோ நோ வையும் ஐ நோ வையும் தவிர்த்திருக்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. அப்டிக்கா கீழ dd இன்னா சொல்லிருக்காருன்னு பாருங்க மிஸ்டர் ஸ்பை ...!

      Delete
  4. /// நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவரை காதலிக்கின்றோம்... ///

    ஆழ்ந்த... உண்மையான வரிகள்...

    ஐ நோ ...! ஐ நோ ...! சூப்பர்...!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. /// நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவரை காதலிக்கின்றோம்... ///

      ஆழ்ந்த... உண்மையான வரிகள்...

      அண்ணேன் சும்மா கற்பனை காதல் கடிதம்?ன்னேன் , நீங்கவாட்டுக்கு உண்மையான , ஆழ்ந்தன்னு சொல்லிட்டு போயிடுவீங்க ... அப்புறம் மச்சான்ஸ் வீங்க வச்சுடுவானுங்க ...! அய்யோ ...! அய்யோ ...!

      வாழ்த்துக்கு ரெம்ப நன்றிங்கண்ணா.

      Delete
  5. தென்றல் சசிகலாவின் காதல் கடிதம் படித்தீர்களா?

    http://veesuthendral.blogspot.com/2013/06/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. காதலாகி கவிதையாகி கசிந்துருகியிருக்காங்க ....!

      சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில இந்த பவர் ஸ்டாரையும் எறக்கிவிட்டுட்டாங்களே ....! ஹய்யோ ...ஹய்யோ ...!

      Delete
    2. ஏன் ஏன் இப்படி ஜீவனும் எழுத்துக்களில் ஜீவனை காட்டி இருக்காங்களே... ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துங்க.

      Delete
  6. கடிதத்தின் இடையில் வரும் கவிதை பிரமாதம்.
    பரிசு பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. //கடிதத்தின் இடையில் வரும் கவிதை பிரமாதம்.//

      என்னாது கவிதையா ...? அது எங்க இருக்கு ...?

      ஓ மடக்கி மடக்கி எழுதிருக்கேனே அதுவா ? கொஞ்சம் கடுதாசி பெரிசா இருக்கட்டுமேன்னு அப்பிடி எழுதுனேன் .பரவால்ல நானு கவிஞன் ஆகிட்டேன் .

      வாழ்த்துக்கு நன்றி மிஸ்டர் முரளி.

      Delete
  7. உங்கள் நடையில் காதல் கடிதம். ரசித்தேன்... வெற்றி பெற வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நடை கொஞ்சம் தள்ளாட்டமா இருக்குன்னு தானே சொல்லவா(ர்)றீங்க தம்பி ...!

      Delete
  8. சிறப்பான காதல் கடிதம். ரசித்தேன்......

    வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. நெசமாத்தான் சொல்றீங்களா ...?

      ரெம்ப தேங்கஸ்ங்க ...!

      Delete
  9. நல்லாத்தான் எழுதி இருக்கீங்க! வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இந்த நல்லாத்தானுக்கு அடுத்து போட்டுருக்க ஓர் ஆச்சரியக்குறியே சொல்லுது நீங்க இன்னா சொல்லவாரீங்கன்னு .

      நன்றி சுரேஷ்ண்ணா .

      Delete
  10. சிரிக்கவும் சிந்திக்கவும் பின் சந்தோஸப்படவும் காத்லில் தேவை நிஜ்ம் எப்போதும் முக்கியம் என்ற முத்தை தந்த அருமையான கடிதம் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ..!

      தனிமரம் சீக்கிரம் தோப்பாகட்டும்...!

      Delete
  11. காதல் கடிதம் எழுத ஆரம்பித்து மெல்லிய நகைச்சுவையுடன் துவக்கிச் சென்றாலும் ரசனையான வரிகளும், கருத்துக்களும் இல்லாமலில்லை. நல்லாத்தான் லவ்வறீங்கப்பு! ஆனாலும் இந்த டி.என்.முரளி இவ்வளவு அப்பாவியா இருப்பாருன்னு நான் நெனக்கவே இல்லீங்கோ... வார்த்தைய மடிச்சுப் போட்டா உடனே கவிதைன்னு நம்பிடறாரே...! ஹி... ஹி...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நடுவர் அண்ணேன் ...!

      Delete
  12. ஹஹஹா.... நல்லா இருந்துச்சு சார்... Work out ஆகி இருக்கும்ங்க . மிஸ் பண்ணிட்டீங்களே.. ;)

    ReplyDelete
    Replies
    1. // ஹஹஹா.... //

      நம்ம கடுதாசி சிரிப்பா சிரிக்குது ...!

      நன்றிங்கோ மேடம்ஜி ...!

      Delete
  13. இப்படி அனைத்திலுமே நீயும் நானும் முரண்பட்டுத்தான் இருக்கின்றோம் ,
    அதனாலென்ன ...? அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
    காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
    மிகவும் பிடித்ததுங்க இந்த வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. //இப்படியே விழித்துக்கொண்டும், முழித்துக்கொண்டும் இருந்தால் தாடி வைத்த முரளி ஆவதற்கான அதிகபட்ச வாய்ப்புக்கள் இருப்பதாகப்படவே,//

    மொத பால்லையே சிக்சர் நண்பா!

    ReplyDelete
    Replies
    1. //மொத பால்லையே சிக்சர் நண்பா!//

      அதான் ஆறு கமெண்ட் போட்டுருக்கீங்களோ ...? நன்றி பாஸ் .

      Delete
  15. // அப்ப , கடிதம் மட்டும் நல்லா வருதாக்கும்னு மனதுக்குள் ஒரு நக்கல் விக்கல் எடுக்குமே..? ஐ நோ , ஐ நோ ..!//

    ஹஹ்ஹா

    ReplyDelete
  16. //யுரேகா ...! யுரேகா ...!//

    யாரது? யு.ரேகாவா?? ;-)

    ReplyDelete
    Replies
    1. ஹல்லோ மிஸ்டர் ஆ(பா)வி
      நான் ஒரு அப்பாவி ...!

      Delete
  17. //தண்ணீர் மெதுவாக வருகின்றது என்று அனைவரும் வருத்தப்படும்போது எனக்கு மட்டும் சந்தோசம் //

    இருக்குமே..

    ReplyDelete
  18. // திருமணம் என்பதை ஒரு சடங்காக, ஒரு விதிமுறையாகத்தன் பார்க்கின்றேன்//

    இதை நானும் ஆமோதிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆமோதிப்பை நான் பாராட்டுகின்றேன் ...!

      Delete
  19. சரி, காதல் கடிதம் எழுதறேன்னு சொன்னீங்களே, எங்க அது..?

    ஜஸ்ட் கிட்டிங்.. சுவாரஸ்யமா இருந்தது உங்க கற்பனை காதல் கடிதம்..(நம்பிட்டோம்)

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மொ.பா ... ஏம்ப்பா ...! நம்புங்க பாஸ் நானெல்லாம் ரெம்ப ரெம்ப நல்லவேன் ..!

      Delete
  20. சற்றே இலக்கியத்தனமான நகைச்சுவை கலந்த காதல் கடிதம். ரசித்துப் படித்தேன்.
    'உள்ளபடி ஏற்றுக்கொள்ள' விரும்புவது ரொம்ப முதிர்ச்சிங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்பா சார் ரெம்ப நன்றி சார் .!

      Delete
  21. முதல் சில வரிகளில் நன்றாகச் சிரிக்க வைத்துவிட்டீர்கள்.
    // நான் பேசாத வார்த்தைகள் தான் அழகென்கின்றேன் ,
    நீயோ பேசும் வார்த்தைகள் தான் அழகென்கின்றாய் .
    இப்படி அனைத்திலுமே நீயும் நானும் முரண்பட்டுத்தான் இருக்கின்றோம் ,
    அதனாலென்ன ...? அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!// முரண் பற்றிய அனைத்து வரிகளும் அருமை, அதிலும் இந்த வரிகள் மிகவும் பிடித்தது. யதார்த்தமான காதலும் அதைச் சொல்லும் கடிதமும், கலக்கல்.
    //நீ நீயாக இரு நான் நானாக இருக்கின்றேன் . உனக்கு கொடுக்க என்னிடம் எந்த வாக்குறுதிகளும் இல்லை, கட்டுப்பாடுகளும் இல்லை . உன்னை ,உன் செயலை எனக்கு பிடித்திருக்கின்றது , நாம் இணைந்து வாழ்ந்தால் நான்றாக இருக்குமென்று தோன்றுகின்றது . உனக்கும் என்மீது காதலிருந்தால் , இணைய விருப்பமிருந்தால்,இணைய சாத்தியப்பட்டால் சந்தோசம் .// அட, அட இத நிறையப் பேர் கத்துக்கணும். வாழ்த்துகள் ஜீவன்சுப்பு!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிங்க கிரேஸ் ...!

      Delete
  22. // மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டபோதும் நான் எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுவிட்டேன் பயந்துகொண்டு ...!//
    இப்படித்தான் பலபேரு கோட்டைவிட்டுவிடுகின்றனர். பலருக்கு இதுதான் காதல் என்பது புரியும்போது... ரொம்ப தூரம் போய்விட்டுருப்போம்! உண்மையை உண்மையாய் கூறிவிட்டீர் நண்பரே. மிகவும் அருமை!

    //அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
    காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
    காதலில் முரண் தானே அழகு ...!//
    அட்ரசக்க... அட்ரசக்க

    ReplyDelete
    Replies
    1. டேங்க்ஸ் பாஸ் ...!

      //இப்படித்தான் பலபேரு கோட்டைவிட்டுவிடுகின்றனர். //

      நீங்களும்னு சொல்லுங்க ...! அதென்ன பலபேரு ...?

      Delete
  23. னைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
    காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
    காதலில் முரண் தானே அழகு ...

    அழகு ரசித்தேன் வரிகளை வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. காதலின் வெற்றி என்பது கைகள் இணைவதில் மட்டுமில்லை என்பதில் எனக்கும் உடன்பாடு! குறைகளுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலும்! தெரியாது, தெரியாது என்று சொல்லியே அசத்தி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  25. இப்படி அனைத்திலுமே நீயும் நானும் முரண்பட்டுத்தான் இருக்கின்றோம் ,
    அதனாலென்ன ...? அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
    காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
    காதலில் முரண் தானே அழகு ...!
    //


    அட அட உண்மை தான் கலக்கல் அன்பரே

    //நான் வண்ணத்திரையின் நடுப்பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கின்றேன்,
    நீயோ வண்ணதாசனை (சு)வாசித்துக்கொண்டிருக்கிறாய்.//



    ஹா ஹ பாத்து பாஸ் பாத்துட போறாங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம்ஜி ...!

      //ஹா ஹ பாத்து பாஸ் பாத்துட போறாங்க// ஹி ஹி ஹி ...!

      Delete
  26. //ஒவ்வொரு காதலும் கண்டிப்பாக கல்யாணத்தில் தான் முடியவேண்டும் என்றோ , இல்லை கருமாதியில் தான் முடியவேண்டுமென்றோ அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை அப்படிப்பட்ட காதல் தான் வெற்றிபெற்ற காதல், அமரக்காதல் , என்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை . காதலையும் கல்யாணத்தையும் என்னால் தொடர்பு படுத்தவே முடியவில்லை//

    //காதலில் முரண் தானே அழகு!//

    அசத்திடீங்க சுப்பு! ரொம்பவும் ரசித்தேன்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ரெம்பவும் நன்றிங்க மேடம்ஜி ...!

      Delete
  27. "பரஸ்பரம் விருப்பமிருந்தும் நாம் இணையமுடியாவிட்டாலும் , அதற்காக நான் வருந்தமாட்டேன் . நீயும் வருந்தவேண்டிய அவசியமில்லை . காதலின் வெற்றியை திருமணத்தின் மூலமும் , தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதின்மூலமும் மதிப்பிடுவது முட்டாள்தனமாகவே எனக்கு படுகின்றது."

    அனைவரும் அறிந்து தெளிய வேண்டிய உண்மை இது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கோ ...!

      //அனைவரும் அறிந்து தெளிய வேண்டிய உண்மை இது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே.//

      வாலிப காதல் மன்னர்கள் கவனிக்கவும் ...!

      Delete
  28. நான் வண்ணத்திரையின் நடுப்பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கின்றேன்,
    நீயோ வண்ணதாசனை (சு)வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
    நான் சத்தம் போட்டு பேசுவது எனக்கே கேட்கவில்லை ,
    நீ ரகசியம் பேசுவது ஊருக்கே கேட்கிறது .
    நான் அடங்கிக்கொண்டிருகின்றேன் ,
    நீ வெடித்துக்கொண்டிருக்கின்றாய் .
    நான் பேசாத வார்த்தைகள் தான் அழகென்கின்றேன் ,
    நீயோ பேசும் வார்த்தைகள் தான் அழகென்கின்றாய் .
    இப்படி அனைத்திலுமே நீயும் நானும் முரண்பட்டுத்தான் இருக்கின்றோம் ,
    அதனாலென்ன ...? அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
    காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
    காதலில் முரண் தானே அழகு ...!

    கவிதை கொட்டுது சூப்பர் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிதை கொட்டுதா ...! இல்ல கண்ணக்கட்டுதா ..?

      நன்றி பிரதர் .

      Delete
  29. அழகாக செதுக்கியிருக்கிறீர்கள் காதலனாய் உங்கள் கவிதையை...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. Hmm it looks like your blog ate my first comment (it was extremely long) so I guess I'll just sum it up what I wrote and say, I'm thoroughly
    enjoying your blog. I as well am an aspiring blog blogger but I'm still new to everything. Do you have any suggestions for beginner blog writers? I'd genuinely appreciate it.


    Here is my web-site ... background music download free mp3

    ReplyDelete
    Replies
    1. யாரு பாஸ் நீங்க ...! தமிழ்ல கமென்ட் போட்டாவே முடியாது நம்மளால ... இதுல இங்கிலீசு ...!

      நல்லார்க்குன்னுதான் சொல்லீருப்பீங்க - ஸோ ... நன்றி பாஸ்!

      Delete
  31. திருப்பூர்ல பார்த்த அப்போ , அவ்ளோ அமைதியா பேசின நீங்களா இப்டி....
    எப்படி இருக்றீங்க

    ReplyDelete
    Replies
    1. நல்ல இருக்கேன் செழியன் . நன்றி .

      Delete
  32. //காதலில் முரண் தானே அழகு ...!//

    காதலின் முழு ரகசியத்தையும் அறிந்து வைத்திருக்கும் உமக்கா ஓய் காதல் தெரியாது. ராட்சஸன்யா நீர்! நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று இந்த உத்தியைக் கையாண்டிருக்கீங்க போல!

    வாழ்த்துகள் ஜீவன்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த உத்தியைக் கையாண்டிருக்கீங்க போல!//

      பாஸ் உத்தியும் இல்ல புத்தியும் இல்ல ...! தோணுனத எழுதி இருக்கேன் ...!

      நன்றி சத்ரியன் ...!

      Delete
  33. அருமையாக உள்ளது. இது காதலிக்கு காதலன் எழுதும் காதல் கடிதம் என்பதை விட, சமூகத்திற்கு காதலைப் பற்றிய ஒரு புரிதல் கடிதம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. நிச்சயம் இந்த கடிதம் முழுதும் கற்பனையானது என்பதை என்னாலும் ஏற்க முடியவில்லை.
    வெற்றிப் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் ...!

      கலவரக்காரன்னு ஆரம்பிச்சு காமெடி பண்ணி கடசில கருத்து கந்தசாமியா முடிச்சப்புறமும் தெரியலையா இது ௨௦௦% கற்பனை தான் பாஸ் ...!

      Delete
  34. அண்ணா! லவ்லி லெட்டெர்!!

    ReplyDelete
  35. "லவ்"லி லெட்டெர்!! என்று பாராட்டிய தங்கச்சிக்கு நன்றி ...!

    ReplyDelete
  36. ஆரம்பத்துல நானும் கொஞ்சம் கலவரமாகிட்டேன்... என்னதான் சொல்ல வரீங்கன்னு..., ஆனால் முடிவுல ரணகளமாக்கி அதகளம் பண்ணிடீங்க!! காத(ன)ல் மழை செம கூல்!!

    ReplyDelete
  37. உண்மையை உண்மையாய் கூறி...
    பரிசு வென்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஜீவன்சுப்பு....

    ReplyDelete
  39. காதல் கடிதம் எழுதி பரிசு வென்றதற்கு வாழ்த்துக்கள் ஜீவன் சுப்பு.

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  41. படிக்கணும் படிக்கணும்னு இன்னைக்கு தான் படிச்சேன், :) ரொம்ப நல்லா இருந்தது! :) வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  42. காதலை உயிர்ப்புடன் வைத்திருந்த உங்களுக்கு பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  43. வணக்கம்
    உங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்
    http://blogintamil.blogspot.com/2013/09/3.html?showComment=1379545194911#c5940160482125873396
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Related Posts with Thumbnails