Jan 2, 2015

பேசாத வார்த்தைகள் 010115


டூரர் பைக் 

மெளனம் பேசியதே படம் பார்த்ததில் இருந்து, கட்டுனா அவள கட்டனும்டா ங்குற மாதிரி ,வாங்குனா டூரர் பைக்தான் வாங்கனும்னு ஓர் ஆசை. நிதர்சனத்தில் ,ஸ்ப்ளெண்டர செண்டர் ஸ்டான்ட் போடுறதே நம் ஆண்மைக்கு விடப்பட்ட சவால் தான் என்பது வேறு விஷயம் J . நன்பேண்டாக்கள் கிட்ட மேற்படி டூரர் பைக் ஆசையை பகிர்ந்தபோது , தம்பு...! முதல்ல பில்லியன்ல தைரியாமா உட்காரப் பழகு , அப்புறம் பைக் பத்தி பேசலாமென பல்ப்பு தான் பதிலாக கிடைத்தது. வருடங்களுக்கு முன் பஜாஜ் ஷோரூம் போய் அவென்ச்சர் பைக் விலை பற்றி விசாரித்தேன் சொன்ன விலையையும் , மைலேஜ்ஜயும் கேட்டால் எச்சிலை கூட விழுங்க முடியவில்லை அவ்வளவு வறட்சி . அப்றமென்ன டூரர் பைக் ஆசையை தூர கடாசிவிட்டு .......க்கேத்த கோவணத்தை வாங்கியாயிற்று . ஆனாலும் அவ்வப்போது டூரர் பைக் ஆசை கிளர்ந்தெழுவதை தவிர்க்கமுடியவில்லை . எங்காவது பயணத்தின் போது டூரர் பைக்கர்கள் லெதர் ஜெர்க்கினும் , விண்டேஜ் ஹெலம்ட்டுமாக போவதை பார்க்கும் போது கண்டெய்னர் கணக்கில் கழிவிரக்கம் வந்து அப்பிக்கொல்கிறது . வாழ்க்கையில் நிறைய விசயங்கள் பிடிக்கும்போது கிடைப்பதில்லை , கிடைக்கும்பெறும்போது பிடிப்பதில்லை. 

ஆமா இப்ப எதுக்கு டூரர் பைக் புராணம் ...? நேற்று ஒரு டிவி கமர்ஷியல் பார்த்தேன் . பஜாஜ் அவென்ச்சர் பைக்கிற்க்கானது . அவ்வளவு அழகாவும் கம்பீரமாவும் இருக்கு விளம்பரம் . FEEL LIKE GOD ...!


என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா ...?

கட்சிக்கு ஆள் சேர்க்குறாங்களா இல்ல ரியாலிட்டி ஷோவிற்க்கு ஜட்ஜுங்க செலக்ட் பண்ராங்களான்னே புரியலையே ....! 

காயத்ரி ரகுராம் 

கங்கை அமரன்.... 

இன்னும் ஒருத்தர் மட்டுந்தேன் பாக்கி. அப்புறம் என்ன ஸ்ட்ரெயிட்டா ஷூட்டிங் தான் ...! ஏய் விசய் டிவி பீ கேர்புல்...!தட் வட போச்சே மொமெண்ட்..!

தாய்லாந்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இந்திய ஜோடிகளுக்கு போக்குவரத்து செலவு உள்பட அனைத்தும் இலவசம் – தினமலர் செய்தி . 

கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ ...?


வரும் வாரம் ஆராவாரம் ....!

அடுத்த இரண்டு வாரத்திற்கு விகடன் மேடையில் மிஷ்கின் சாராம் – இந்த வாரம் வலைபாயுதேக்கு மட்டும் நாலு பக்கத்த ஒதுக்கிருங்க மிஸ்டர் விகடன் தாத்தா . 


NEW YEAR RESOLUTION 

எந்த RESOLUTION ம் எடுக்கக்கூடாதென்பதே இந்த NEW YEAR RESOLUTION.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு

15 comments:

 1. இந்த வருடம் பஜாஜ் அவென்ச்சர் வாங்க வாழ்த்துக்கள்...

  இலவசம் - இந்த நினைப்பு வேறு இருக்கோ...?

  ReplyDelete
 2. I forgive my father
  I forgive woman
  I forgive my boss
  I forgive the government
  I forgive my barber
  I forgive my past
  I forgive them all
  I feel like god!!!!!!!
  what a marvelous, splendid, manly ADD for a real manly bike:)) once again cheers saga :)

  ReplyDelete
 3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், சுப்பு!

  ReplyDelete
 4. நிறையச் செய்திகள்... நிறைவாய்...

  ReplyDelete
 5. நண்பர் ஒருவர் ஊருக்குப் போவதால் மூன்று நாட்களுக்கு தன்னுடைய பஜாஜ் அவெஞ்சரை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார். எல்லா வண்டிக்கும் பிரேக்கைப் பிடித்து செல்ப் ஸ்டார்ட் பட்டனை அழுத்த வேண்டும். ஆனா இந்த வண்டிக்கு க்ளச்சைப் பிடித்துக்கொண்டு ஸ்டார்ட் பட்டனை அழுத்த வேண்டும். இது தெரியாமல் பட்டனை அழுத்தியதால் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்கே அரை மணி நேரம் ஆனது. காலால் உதைத்து ஸ்டார்ட் செய்யும் வசதி இல்லை. செண்டர் ஸ்டாண்ட் கிடையாது, சைடு ஸ்டாண்ட் மட்டும் தான். சைடு லாக் - ஊர்ப்பக்கம் சொல்வதுபோல கோளாறா பூட்டணும்.

  அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். கம்பீரமாக இருந்தது. பல்சர் கூட இதுக்குப் பக்கத்தில சின்ன வண்டியா தெரிஞ்சது. மற்ற வண்டிகளெல்லாம் எனக்கு வழிவிட்டு ஒதுங்கின. கடற்கரை சாலையைப் பிடித்ததும் கியர் லீவரை அழுத்த, "அட, அஞ்சு கியர்" என்று வியந்துபோனேன். சுகமாக சோபாவில் அமர்ந்து காற்றில் பறப்பது போன்ற ஓர் உணர்வு. அட அட அட.... வண்டி ஒட்டுபவருக்கும் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் முதுகு வலி என்பது வராது. அம்மாதிரியான அமைப்பு.

  வீடு இருக்கும் சந்து அருகே வந்ததும் எப்போதும் என்னைப் பார்த்ததும் வாலாட்டிக்கொண்டே ஓடிவரும் எங்கள் ஏரியா நாய் ஏனோ அன்றைக்கு மட்டும் என்னைப் பார்த்தது குரைத்துக்கொண்டே இருந்தது.

  ReplyDelete
 6. இந்த வருடத்தில் உங்கள் எழுத்தை அதிகம் வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன் நிறைய எழுதுங்கள் ப்ரோ ...

  ReplyDelete
 7. இனிய தொடக்கம்......

  உங்கள் வண்டி ஆசை நிறைவேறட்டும்.....

  ReplyDelete
 8. //எந்த RESOLUTION ம் எடுக்கக்கூடாதென்பதே இந்த NEW YEAR RESOLUTION//

  நானும்!

  ReplyDelete
 9. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 11. அவென்சர் நல்லாருக்குனு சொல்லுறாங்க...வாங்க வாழ்த்துக்கள்.

  இனிய ஆரம்பம்...
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!

  ReplyDelete
 12. டூரர் பைக் சீக்கிரம் வாங்க ததாஸ்து :-)

  ஆனா பில்லியன்ல இல்ல மொதல்ல ஐஞ்சாவது மாடியில இருந்து கீழ எட்டிப் பார்க்க கத்துகோங்க.. இன்னும் எவ்ளோ உயரம் நீங்க போக வேண்டி இருக்கு ;-)

  ReplyDelete
 13. சீசீ அதிகமாக அதிகமாக மைலேஜ் குறையும் தானே நண்பா. தவிர டூரர் அவேன்சர் போன்ற வண்டிகள் குடும்பஸ்தர்களுக்கானது அல்ல.. ;)

  ReplyDelete
 14. அன்பு நண்பரே!
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  ReplyDelete
 15. வணக்கம்...

  வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தாங்கள் விழாவிற்கு வர முடியா விட்டாலும், தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் வழங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete

Related Posts with Thumbnails