Jan 2, 2015

பேசாத வார்த்தைகள் 010115


டூரர் பைக் 

மெளனம் பேசியதே படம் பார்த்ததில் இருந்து, கட்டுனா அவள கட்டனும்டா ங்குற மாதிரி ,வாங்குனா டூரர் பைக்தான் வாங்கனும்னு ஓர் ஆசை. நிதர்சனத்தில் ,ஸ்ப்ளெண்டர செண்டர் ஸ்டான்ட் போடுறதே நம் ஆண்மைக்கு விடப்பட்ட சவால் தான் என்பது வேறு விஷயம் J . நன்பேண்டாக்கள் கிட்ட மேற்படி டூரர் பைக் ஆசையை பகிர்ந்தபோது , தம்பு...! முதல்ல பில்லியன்ல தைரியாமா உட்காரப் பழகு , அப்புறம் பைக் பத்தி பேசலாமென பல்ப்பு தான் பதிலாக கிடைத்தது. வருடங்களுக்கு முன் பஜாஜ் ஷோரூம் போய் அவென்ச்சர் பைக் விலை பற்றி விசாரித்தேன் சொன்ன விலையையும் , மைலேஜ்ஜயும் கேட்டால் எச்சிலை கூட விழுங்க முடியவில்லை அவ்வளவு வறட்சி . அப்றமென்ன டூரர் பைக் ஆசையை தூர கடாசிவிட்டு .......க்கேத்த கோவணத்தை வாங்கியாயிற்று . ஆனாலும் அவ்வப்போது டூரர் பைக் ஆசை கிளர்ந்தெழுவதை தவிர்க்கமுடியவில்லை . எங்காவது பயணத்தின் போது டூரர் பைக்கர்கள் லெதர் ஜெர்க்கினும் , விண்டேஜ் ஹெலம்ட்டுமாக போவதை பார்க்கும் போது கண்டெய்னர் கணக்கில் கழிவிரக்கம் வந்து அப்பிக்கொல்கிறது . வாழ்க்கையில் நிறைய விசயங்கள் பிடிக்கும்போது கிடைப்பதில்லை , கிடைக்கும்பெறும்போது பிடிப்பதில்லை. 

ஆமா இப்ப எதுக்கு டூரர் பைக் புராணம் ...? நேற்று ஒரு டிவி கமர்ஷியல் பார்த்தேன் . பஜாஜ் அவென்ச்சர் பைக்கிற்க்கானது . அவ்வளவு அழகாவும் கம்பீரமாவும் இருக்கு விளம்பரம் . FEEL LIKE GOD ...!


என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா ...?

கட்சிக்கு ஆள் சேர்க்குறாங்களா இல்ல ரியாலிட்டி ஷோவிற்க்கு ஜட்ஜுங்க செலக்ட் பண்ராங்களான்னே புரியலையே ....! 

காயத்ரி ரகுராம் 

கங்கை அமரன்.... 

இன்னும் ஒருத்தர் மட்டுந்தேன் பாக்கி. அப்புறம் என்ன ஸ்ட்ரெயிட்டா ஷூட்டிங் தான் ...! ஏய் விசய் டிவி பீ கேர்புல்...!



தட் வட போச்சே மொமெண்ட்..!

தாய்லாந்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இந்திய ஜோடிகளுக்கு போக்குவரத்து செலவு உள்பட அனைத்தும் இலவசம் – தினமலர் செய்தி . 

கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ ...?


வரும் வாரம் ஆராவாரம் ....!

அடுத்த இரண்டு வாரத்திற்கு விகடன் மேடையில் மிஷ்கின் சாராம் – இந்த வாரம் வலைபாயுதேக்கு மட்டும் நாலு பக்கத்த ஒதுக்கிருங்க மிஸ்டர் விகடன் தாத்தா . 


NEW YEAR RESOLUTION 

எந்த RESOLUTION ம் எடுக்கக்கூடாதென்பதே இந்த NEW YEAR RESOLUTION.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு

Dec 18, 2014

பேசாத வார்த்தைகள் 18.12.2014



மெட்ராஸ் படத்தில் வரும் "காகித கப்பல் " இப்பொழுது விரும்பி பார்க்கும் பாடல் . பாடல் வரிகள்  ,  இசை  இரண்டையும் மீறி கவனம் கவர்வது - நடனம். ஒவ்வொரு அசைவும் அழகானதொரு கைக்கூ . மேற்படி நடனத்திற்கு பெயர் என்னவென்று தெரியவில்லை மைமிங்  ன்னு ஒன்றுள்ளது அது இதுதானா ?   வருடங்களுக்கு முன்பு அரவிந்தசாமி படம் ஒன்றிலும் பிறகு பானா காத்தாடி படத்திலும் இதைப்போன்றதொரு நடனம் பார்த்த நினைவு. மிகச் சமீபத்தில் சூது கவ்வும் படத்தில் வரும் காசு பணம் கூட மேற்படி வகையறாதான் என்று நினைக்கின்றேன் . 




ரெம்ப நாள் வாங்கனும்னு நனைச்சு சுமந்த ஆசையை பிழிந்து காயப்போட்டாச்சு . சல்லிசான ? விலையில் மடிக்கணினி ஒன்று வாங்கியாச்சு கூடவே ப்ளிப்கார்ட் ல் டேட்டா கார்டும் .  ஆம் அது உங்களை நோக்கித்தான் வரப்போகின்றது ஓடுங்கள் ...:) சகாயமான விலையில் இணைய இணைப்பை தரும் நெட்வொர்க் பற்றிய தகவல்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன .


சமீபத்தில் வாழ்க வளமுடன் அமைப்பின் யோகப் பயிற்சிக்கு போய் வந்தேன் . பதினைந்து நாள் வகுப்புக்கு பத்து நாள் போய் வந்ததே வாழ்நாள் சாதனையாயிற்று இத்தனைக்கும் வகுப்பு நடந்தது பக்கத்து கட்டிடத்தில்  .வஜ்ராசனம் என்று ஒன்றை போட சொன்னார்கள் .... எட்டு போட சொன்ன RTO  ஆபிசரே பரவா இல்ல... முடிலப்பா முடில  :(  .


பத்து வருடங்களுக்கு பிறகு  குப்பை கொட்டும் விலாசத்தை  மாற்றியிருக்கிறேன் . புது வேலை ,  புது ஜாகை , புது மனிதர்கள் சுவராஸ்யம் கம் திகில்னு கலவரமா போயிட்டு இருக்கு வாழ்க்கை  . திருப்பூருக்கும் கோவைக்கும் அரைமணி நேர பயண தூரம் தான் ஆனால் திருப்பூரில் இருப்பது ஆப்பிரிக்காவில் இருப்பதை போலவும் கோவை ஆஸ்திரேலியாவில் இருப்பதைப்போலவும் பீல் ஆகுது . 


என்றென்றும் புன்னகையுடன் 
ஜீவன் சுப்பு 

  

Jun 14, 2014

பேசாத வார்த்தைகள் : சேனல்ஸ் பக்கம் - புதுயுகம் & மக்கள்



புதுயுகம் மற்றும் மக்கள் தொலைக்காட்சிகளில் சிலபல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன . போதிய promo இல்லாததினால் வெகு ஜன பார்வையாளர்களை சென்றடைவதில்லை .

புதுயுகம் தொலைக்காட்சியின் பெரிய minus என்று பார்த்தால் Galrity & Background settings . என்பது தொன்னூறுகளில் பொதிகை பார்த்த effect . மக்கள் - ரெம்ப நல்லாவே இருக்கு -குறை சொல்ல ஒண்ணுமில்லை .

புதுயுகம் :
  
உயிரே  உனக்காக படத்தில் வரும் ஓடோடி விளையாடு பாடலில் நதியாவின் தாத்தாவாக வருவாரே மீசை தாத்தா அவரின் பேட்டியை சமீபத்தில் புதுயுகம் தொலைக்காட்சியின் கேள்வி பாதி கிண்டால் பாதி நிகழ்ச்சியில் பார்த்தேன் .  நேற்றுவரை ஐயாவை ஒரு நடிகராகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் பெரியவர் Instrument வாசிப்பதில் கில்லாடியாம் . Instrument என்றால் யமகா பியானோ வோ , World class வயலினோ இன்ன பிற Electronic கருவிகளோ இல்லை . கொட்டாங்குச்சி , பழைய தகரம் அவ்வளவு தான் . ச்சும்மா பின்றாருங்க ...! அய்யாவின் பெயர் மீசை முருகேசனாம் . கலைமாமணி பட்டம் வாங்கியிருக்கிறார் .

ராஜாவின் பார்வை ராணியின் - பாடலில் வரும் குதிரை ஓடும் சத்தம் அய்யாவின் கொட்டாங்குச்சியில் இருந்து வந்ததாம் . EXCELLENT ! மேற்படி நிகழ்ச்சியின் இணைப்பு இங்கே .





மக்கள் - நொடிக்கு நொடி - சிட்டு 

மக்கள் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரை ஒளிபரப்பாகும் நொடிக்கு நொடி நிகழ்ச்சி - one of my favourite . காரணம் சொல்லித்தெரியவேண்டியதில்லை :) . சித்ரா செல்லமா சிட்டு என்னமா தொகுத்து வழங்குது பொண்ணு . அடேங்கப்பா எவ்வளவு Expression ஸ் . 

தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி - அழகான பொண்ணு , அதைவிட அழகான குரல் & உடல் மொழி எல்லாவற்றிலும் மேலான பேரழகுத் தமிழ் வார்த்தைகள் . நேரம் கிடைப்பின் பாருங்கள் .







என்றென்றும் புன்னகையுடன் 

ஜீவன் சுப்பு .


Jun 4, 2014

பேசாத வார்த்தைகள் : நான் சிகப்பு மனிதன் , வந்தனா ஸ்ரீ , லாவகம் & COMING SOON.




நான் சிகப்பு மனிதன் படத்தில் வரும் “ஒ பெண்ணே” பாடல் சமீபத்தில் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று . முதலில் ஈர்த்தது ஆண் குரல் . ஏதேது சுக்விந்தர் சிங்கையோ இல்லை உதித் நாராயணனையோ திருப்பி அழைத்துத வந்துவிட்டார்களோ என்று பார்த்தால் AL-RUFIAN என்ற பையன் பாடியிருக்கிறார் . இன்னும் யுவன் காதுகளில் சிக்கவில்லை போல J .

மேற்படி பாடலில் வரும் பெண் குரல் வந்தனா ஸ்ரீனிவாசனுடையது . எமக்கு பிடித்தமான பெண் பாடகர்களில் ஒருவர் . தாண்டவத்தில் வரும் ஒரு பாதிக் கதவு , ராஜா ராணியின் உன்னாலே , ரம்மியின் – கூட மேல இவையெல்லாம் வந்தனா வசீகரித்த பாடல்கள். வந்தனாவின் குரலில் தொக்கி நிற்கும் அக்கறை எனக்கு ரெம்பப் பிடிக்கும் .

ரெண்டு நாள் முன்பு local channel ல் நா.சி.ம இடைவேளை வரையிலும் பார்த்தேன் . சமீபகாலமாக விஷால் under play பண்ணி நடிக்கும் படங்கள் நன்றாகவே இருப்பதாக தோன்றுகிறது . அடக்கி வாசிப்பதற்கு சொந்தத் தாயாரிப்பும் ஒரு காரணியாக இருக்கலாம் . இருக்கட்டும் பால் பப்பாளி , பச்ச தக்காளின்னு மஞ்ச கலர் பனியனும் , ராஜ்கிரண் Under wear ம்  போட்டு பாடுவதைக் காட்டிலும் , Bare Body காட்டி பஞ்சு Dialouge பேசுவதைக் காட்டிலும் இது எவ்வளவோ மேல் .

         ***********************************************************************************************************************************

முள் மேல போட்ட சேலையை லாவகமாக எடுக்கவேண்டுமென்று சொல்வார்கள் . இப்பொழுதெல்லாம் யாரும் முள் மேல் சேலையை போடுவதும் இல்லை , காயவைப்பதுமில்லை. But , இந்த லாவகம் நிறைய இடங்களில் தேவைப்படுகின்றது . குறிப்பா பின் வரும் சில விசயங்களில்....,

* வண்டிக்கும் &SHOE க்கும் சேதாரமில்லாமல் Two Wheeler Stand ல் இருந்து வண்டியை எடுப்பதற்கு. 

* பேருந்து பயணங்களில்,  Luggage Carrier ல் திணிக்கப்பட்ட Bag ஐ எடுப்பதற்கு .

* Chain stitch மூலம் தைக்கப்பட்ட அரிசி மூட்டையை அவிழ்ப்பதற்கு.

* Two Wheeler Side ல் மாட்டப்பட்ட கட்டைப்பையை சேதாரமில்லாமல் எடுப்பதற்கு .

இதுநாள் வரைக்கும் மேற்படி விசயங்களில் இந்த லாவகம் நேக்கு கைவந்த பாடில்லை . கைப்புள்ளை கணக்காக எம் கைப்பொருள்களுக்கு சேதாரம் ஆகிக்கொண்டே இருக்கின்றது .


         ***********************************************************************************************************************************

மன்னிச்சுக்குங்க ன்னு சொல்லும் போது இருக்கும் உறுத்தலும் , வலியும் Sorry சொல்லும்போது இருப்பதே இல்லை – SORRY ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த வார்த்தை .

         ***********************************************************************************************************************************

நிறைய எழுத வேண்டுமென்று ஆசை , ஆனால் நாலு வரி டைப்புவதற்கே நாற்பது முறை Backspace ஐ அழுத்த வேண்டியதிருக்கு . ஆதலால், எழுத ஆசைப்படும் சில பதிவுகளின் சில தலைப்புக்களையாவது எழுதி வைக்கலாமென்ற எண்ணத்தில் ...

ஒற்றைக் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா ?

இலக்கியம் – கவிதை – ஹைக்கூ Vs எம்.எஸ்.வி - ராஜா – ரஹ்மான் ...!

ரிங்டோன் கலாட்டா ...!

ஆஞ்சியோ – அதிர்ச்சி அனுபவம் ...!

M.B.A – ஒரு சபதம் !

சுன்னத் – அவசியமா ?

நான் ரசித்த பெண்கள் ...!

மாலைப்பொழுதின் மயக்கத்திலே – மவுன ராகம் ...!

இஞ்சினியரிங்கும் இண்டர்வியுவூம் ..!

பேஷன் – SOCKS SELECT செய்வது எப்படி ?

ஆடை ரசனையற்றவர்களா தமிழக ஆண்கள் ?

வாட்டர் தெரப்பி – From own Experience ..

பேசாத வார்த்தைகள் : பெண்களும் முக அலங்காரமும்  , விளம்பர யுக்தி , கோ-ஆப்டெக்ஸ் .

கேட்டால் கிடைக்கும் – MEDICLAIM .

   ***********************************************************************************************************************************

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .




May 17, 2014

ஓஹோன்னானாம்...!





ஆனி போயி ,ஆடி போயி ஆவணி வந்தா எம்மகன் டாப்பா வாந்துடுவான்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொல்லிருக்காருன்னு களவாணி படத்தில் சரண்யாம்மா சொல்லியதைப்போலவே , முப்பத்தி ஒன்னு போயி , முப்பத்தி இரண்டும் போயி முப்பத்தி மூணுல நீ ஓஹோன்னு வருவேன்னு நம்மூரு விட்டி அய்யர் சொல்லீருக்காருடான்னு , விட்டி அய்யரிடம் ஜாதகம் பார்த்த கடந்த நான்கு வருடங்களாக அம்மா சொல்லிக்கொண்டிருந்த அந்த முப்பத்தி மூன்று இதோ இன்னிக்கு வந்திட்டு J ....!

கடந்த வருடம் ஆரம்பம் முதல் போன வாரம் வரை ஆப்ரேசன் , ஆஞ்சியோ , ஆஸ்பிட்டல்ன்னு ஒரே அலைச்சலும் , மன உளைச்சலுமாகவே போயிட்டு...! இந்த வருடம் ஓஹோன்னு இல்லாட்டியும் அய்யகோ ன்னு இல்லாமல் இருந்தாலே போதும் ஆண்டவா ...!

ஓஹோன்னானாம்...!



என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .