Aug 21, 2013

ஜீவா ...!
“வெளிச்சத்தின் விலாசம் ஜீவா” அப்டிங்குற புத்தகத்தை கொஞ்சம் வருசத்துக்கு  முன்னாடி ஒரு புத்தகச் சந்தையில் வாங்கினேன் . ரெம்ப ஆர்வத்தோடோ , கம்யூனிச பற்று காரணமாகவோ வாங்கவில்லை . விலை ரெம்ப குறைவா இருந்துச்சு அதுனால மட்டும்தான் வாங்குனேன் .

புத்தகத்தை வாசித்ததற்கு பிறகு மிகப்பெரும் மரியாதையும் , பிரியமும் ஜீவா அய்யாவின் மேல் ஏற்பட்டது . அதற்கு முன்பு வரை அய்யாவைப் பற்றி அவ்வளவாக தெரியாது . அன்றிலிருந்து என் ஆதர்ச நாயகர் ஜீவா அவர்கள் தான் . அதன் காரணமாகத்தான் சுப்பு என்ற என் இயற் பெயருடன் ஜீவனை இணைத்துக்கொண்டு ஜீவன்சுப்பு என்கின்ற புனைப் பெயருடன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.


இன்று ஜீவா அய்யாவின் பிறந்தநாள் ...! தலைசிறந்த மனிதருக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்  , வாழ்த்துக்களும்   ....!தோழர் ஜீவாவின் கீதம் .


காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாருக் குழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா! 


குண்டிக்கொரு துண்டுமில்லை
கொல்வறுமை தாளவில்லை
ஒண்டக் குடிசையில்லை - என் தோழனே
உழைத்திளைத்துப் போனோமடா 


கோணல்மானல் திட்டங்களால்
கோடிகோடி யாயிக்குவித்தே
வீணர்சிலர் கொழுக்கக் கண்டோம் - என் தோழனே
வெஞ்சினம் பொங்குதடா!
 

மாடமாளி கையவர்க்கு
மன்னர்மகு டமவர்க்கு
வாடவறு மைநமக்கு - என் தோழனே
வந்திடில் வாழ்வதெற்கு?
 

நன்றி – இணையம்ஸ்தலத்தை நிர்வகிக்கும் திரு. பாண்டூ அவர்களுக்கு நன்றிகள் ...!நண்பரின் விவரம் தெரியவில்லை . அவருக்கும் நன்றிகள் ....!


ஜீ.....! வா ....!
நீ திரும்பி வா ...!
நீ விட்டுசென்ற
இடத்திலேயே நிற்கின்றது அனைத்தும் ...!என்றென்றும் புன்னகையுடன் ...

ஜீவன்சுப்பு .

26 comments:

 1. Replies
  1. ஆமாண்ணா நானும் படிச்சேன் .

   Delete
 2. அரசியல்னாலே சாக்கடை அசிங்கம் என்று இப்போது நினைக்கும் இளைஞர்களுக்கு ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லவேண்டும்....

  ReplyDelete
 3. இரு தளங்களின் அறிமுகத்திற்கு நன்றி... வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா...?

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்க தலைவருக்கு மிகசிறந்த அனுபவம் உள்ளது... அனுபவமே மிகச் சிறந்த ஆசான் எனும் போது தயக்கமேன் தலைவரே.... ம்ம்ம்ம் கலக்குங்கள்

   Delete
  2. @ 3D

   ஆசிரியர் னாவே நமக்கு அலர்ஜினா ...! ஸோ இப்ப வேண்டாம் .


   @ தி.கொ.போ.சீ

   //தலைவருக்கு//

   கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு , காலத்தின் கையில் அது இருக்கு ...!

   ஹி ஹி பில்டப்பு ...!

   Delete
  3. அப்படியெல்லாம் சொல்லப்படாது செல்லம்... அதெல்லாம் நீங்க ஏன் சொல்றீங்க..?

   Delete
 4. நம்மாளுங்களுக்கு சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்களின் பிறந்த நாளை தவிர வேற யார் பிறந்த நாளும் நினைவில் இருப்பதில்லை, என்னையும் சேர்த்துதான்!!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் மேடம்ஜி...!

   Delete
 5. ஜீ.....! வா ....!
  நீ திரும்பி வா ...!
  நீ விட்டுசென்ற
  இடத்திலேயே நிற்கின்றது அனைத்தும் ...!

  உண்மைதான்...

  ReplyDelete
  Replies
  1. உண்மையை வழிமொழிந்த குமாருக்கு நன்றி .

   Delete
 6. ஜீவன் க்கு காரணம் கேட்டு யாரும் முட்டு சந்துல வுட்டு அடிச்சாயின்களா என்ன :))))))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ...! யாரும் கேக்காட்டியும் வரலாறு முக்கியம் அல்லவோ ...!

   Delete
  2. இல்ல பாஸ் நம்ம பேர பாத்து , நாம பெரிய அப்பாடக்கர்னு யாரும் நெனச்சுடக்கூடாதுன்னு தான் ...!

   Delete
 7. இன்று காலையில் ஜெயா நியூசில் பார்த்தேன் ஜீவா அவர்கள் பிறந்த தினம் என்று.. அதிகம் படித்ததில்லை ஆனால் கேட்டிருக்கிறேன்.. நேர்மையான தலைவன் என்று...

  //ஜீ.....! வா ....!
  நீ திரும்பி வா ...!
  நீ விட்டுசென்ற
  இடத்திலேயே நிற்கின்றது அனைத்தும் ...!// சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தி.கொ.போ.சீ.

   Delete
  2. படித்து தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறது. புத்தகம் இருந்தால் சந்திப்பின் போது கொண்டு வரவும்.

   Delete
 8. ஜீவா அவர்களின் பாடல் பகிர்வுக்கு நன்றி.
  உங்கள் பெயர்க் காரணம் உங்களை பாராட்ட தோன்றுகிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. //கோணல்மானல் திட்டங்களால்
  கோடிகோடி யாயிக்குவித்தே
  வீணர்சிலர் கொழுக்கக் கண்டோம் - என் தோழனே
  வெஞ்சினம் பொங்குதடா! //
  அன்றிலிருந்து இன்றுவரை நிலைமை மாறாமல் இருக்கிறதே! வருத்தப்பட வேண்டிய விஷயம்.

  காதல்கடிதம் போட்டியில் வெற்றி பெற்றதற்கும், வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. * காமராஜர் ஒரு பள்ளி விழாவிற்காக ஜீவா அவர்களையும் அழைத்துச் செல்ல வந்தபோது, ஜீவாவிடமிருந்த ‌ஒரே வேட்டியும், சட்டையும் துவைத்துக் காய் போட்டிருந்ததால் அது காயும் வரை காத்திருக்க நேர்ந்ததாம்.

  * பசியின் காரணமாக மயக்கமுற்ற ஜீவாவை தோழர்கள் விழிக்கச் செய்து, ‘‘பாக்கெட்டில் பணமிருந்தும் ஏன் சாப்பிடவில்லை?’’ என்று கேட்டதற்கு, ‘‘அது கட்சியின் பணம்.’’ என்றார் ஜீவா.

  -நினைச்சுப் பாக்கவே பிரமிப்பாயிருக்கு காமராஜரையும், ஜீவா அவர்களையும் பத்தி ஒவ்வொரு செய்தி கேள்விப்படும் போதெல்லாம். அந்த மகத்தான மனிதருக்கு உங்களுடன் சேர்ந்து தலைவணங்குகிறேன் தம்பீ!

  ReplyDelete
 11. நன்றி தோழரே...

  ஜீவன்சுப்பு.. ஜீவனுள்ள மனிதர் நீங்கள். நான் தான் அந்த பாண்டூ.
  எனது பிளாக்குகள்

  http://www.pandukavi16.blogspot.in/

  http://www.thozharjeeva.blogspot.in/

  ReplyDelete
 12. நன்றி தோழரே...

  ஜீவன்சுப்பு.. ஜீவனுள்ள மனிதர் நீங்கள். நான் தான் அந்த பாண்டூ.
  எனது பிளாக்குகள்

  http://pandukavi16.blogspot.in/

  http://www.thozharjeeva.blogspot.in/

  ReplyDelete

Related Posts with Thumbnails